Wednesday, December 31, 2008

2008 ஐப் பின்னோக்கி

இன்று 2008 இன் இறுதி நாள்... பதிவர்களில் பலர் 2008 ஆம் ஆண்டைப் பின்னோக்கிப் பார்த்து இடுகைகளை எழுதியுள்ளனர்....

என் பங்குக்கு நானும் 2008 ஐப் பின்னோக்கிப் பார்த்தேன்... அது தான் இந்த இடுகை...
நான் பார்த்ததை நீங்களும் பாருங்களேன்...

Monday, December 8, 2008

ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் - ஒரு அலசல்

டெல்லி:

நமது தேர்தல் முறை சரியில்லை என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப் பட்டுள்ளது. 40% ஓட்டுக்கள் பெற்ற கட்சி இருக்கும் போது 39% ஓட்டுக்கள் மட்டுமே பெற்ற காங்கிரஸ் ஆட்சிக்கு வருவது கேலிக்கூத்தானது. நமது தேர்தல் முறையை உடனே மாற்றியாகவேண்டும்!

(ஓட்டு சதவீதம் உலகின் ஒரே நடுநிலைத் தொலைக்காட்சியான சன் தொலைக்காட்சியின் செய்திகளில் சொல்லப்பட்டது. சரியா என நான் வேறு எங்கும் பார்த்து உறுதிப்படுத்த வில்லை)

மத்தியப் பிரதேசம்:

தேர்தல் முழுக்க முழுக்க நியாயமாக நடந்துள்ளது!
ஜெய் ஸ்ரீராம்!!!

ராஜஸ்தான்:

இங்கு தேர்தல் நியாகயமாக நடக்கவில்லை. மத்தியில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ், இங்கு வெற்றிபெற அரசு அதிகாரத்தை முழுமையாகப் பயன்படுத்தியும் மிகவும் சிரமப்பட்டே வெற்றி பெற முடிந்திருக்கிறது.

சட்டீஸ்கர்:

காங்கிரஸ் தனது ஆட்சி அதிகாரத்தை முழுமையாகப் பயன்படுத்தியும், அதையெல்லாம் தாண்டி பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது!

மிசோரம்:

No Comments!

ஜெய் ஸ்ரீராம்!
இலைக்காரன் வாழ்க!
மோடிஜீ வாழ்க!
விரைவில் ராமராஜியம் அமையும்!!!!!!!

Wednesday, December 3, 2008

விஜயகாந்த்திடம் ஆட்சியைக் கொடுப்போம்!

அசாதாரண தருணங்களில் அசாதாரண நடவடிக்கைகள் தேவைப்படுகிறது. அதுவும் அசாதாரண தலைமையின் கீழ் அது நடந்தால்தான் அவை சாத்தியமாகும்.

மீண்டும் ஒருமுறை இந்திய அரசியல் தலைமை நமக்கு தோல்வியைக் கொடுத்துள்ளது. இரு முனைகளில் நாம் இப்போது நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டிருக்கிறோரம். ஒன்று தீவிரவாதம், இன்னொன்று பொருளாதாரம்.

பெருகி வரும் தீவிரவாதத் தாக்குதல்களால் இந்தியாவின் உலகளாவிய பொருளாதார வாய்ப்புகள் சிதறிப் போகும் வாய்ப்புள்ளது. இந்தியாவின் வளர்ச்சி தடைபட்டால், லட்சக்கணக்கான இந்தியர்களின் கனவுகள் தவிடுபொடியாகும் அபாயம் உள்ளது.

இந்த நிலையை நாம் தாண்டி வர வேண்டும் என்றால், மிகப் பெரிய மாற்றம் தேவைப்படுகிறது.

மேல் மட்டத்திலிருந்து இந்த மாற்றம் நிகழ வேண்டும். புதிய அரசியல் சக்தியை உருவாக்கும் வல்லமை நம்மிடம் இல்லை. அதற்கான வசதியும் இல்லை. அதற்கு பல ஆண்டுகளாகும்.

நமக்கு இப்போது என்ன தேவையென்றால், என்.எஸ்.ஜி. வீரர்களைப் போல அதிரடியான ஒரு நடவடிக்கை. மும்பை தாக்குதலில் போலீஸார் லத்தியுடன் தடுமாறிக் கொண்டிருந்தபோது மின்னலென வந்து, தீவிரவாதிகளுடன் கடுமையாக சண்டையிட்டு அனைத்தையும் காலி செய்து விட்டு ஹோட்டல்களை திருப்பிக் கொடுத்து விட்டுப் போனார்களே, அதுபோல, ஒரு விரைவான அதிரடியான மாற்றம் தேவை.

அதைச் செய்ய சரியான நபர் விஜயகாந்த் மட்டுமே. விஜயகாந்த் இங்கேயே இருக்கிறார், உடனடியாகவும் கிடைப்பார். இந்த மாற்றத்திற்காக நாம் பல ஆண்டுகள் காத்திருக்கத் தேவையில்லை.

இந்தியாவின் ஜனநாயகத்தில் 3 முக்கிய குழப்பங்கள் அல்லது பிரச்சினைகள் உள்ளன. ஒன்று அரசியல்வாதிகள். அரசியல் துறையை முற்றிலும் தூய்மைப்படுத்த வேண்டியுள்ளது.

2வது அதிகாரவர்க்கம். பிரிட்டிஷ் காலத்து ரூல்ஸ் அன்ட் ரெகுலேஷன்களுடன் உலவிக் கொண்டிருக்கும் அதிகாரவர்க்கத்துப் போக்கை மூட்டை கட்டி வைக்க வேண்டும் அல்லது கலைத்துப் போட வேண்டும்.

3வது கல்விக்கு அதிக முதலீடு. இது நடந்தால் நிச்சயம் நல்லவர்களை அரசியலுக்குத் தேர்ந்தெடுக்கும் பக்குவம் கொண்ட பலரை நம்மால் உருவாக்க முடியும்.

இந்த இடத்தில்தான் விஜயகாந்த்தை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். அவரிடம் ஐந்து ஆண்டுகள் நாட்டை ஒப்படைக்கலாம். அந்தக் காலத்தை அவரும், அவரது டீமும் திறமையாக பயன்படுத்தி, சிறந்த கொள்கைகள், சிறந்த நிறுவனங்கள், சிறந்த அடிப்படைக் கட்டமைப்பு, சிறந்த ஆட்சி ஆகியவற்றைத் தருவார்கள். நிச்சயம் இது ஒரு நல்ல மாற்றமாக இருக்கும்.

விஜயகாந்த் தலைமையிலான அரசு வந்தால் ..

- தேசிய பாதுகாப்பு சிறப்பாக இருக்கும்.

- அடிப்படைக் கட்டமைப்பு உலகத் தரத்திற்கு மாறும். நல்ல சாலைகள், அதி வேக ரயில்கள், மின் உற்பத்தி ஆலைகள் எல்லாமே சிறப்பாக மாறும்.

- தரமான கல்விக்கு வழி பிறக்கும்.

- கல்வி நிறுவனங்கள் நேர்மையாகவும், சிறந்த தரத்துடனும் விளங்கும்.

- 6000 புதிய நகரங்கள் உருவாகும்.

வித்தியாசமான சிந்தனைகளும், விவேகமான தீர்மானங்களும்தான் இப்போதைய முக்கிய தேவை.

பாஜகவும், காங்கிரஸும் தங்களது மோதல்களை மறந்து, விஜயகாந்த்தயும், 300 தரமான எம்.பிக்களையும் நாடாளுமன்றத்திற்கு அனுப்ப முன்வர வேண்டும்.

ராகுல் காந்தியும், நரேந்திர மோடியும், மாயாவதியும் 2014ம் ஆண்டு வரை காத்திருக்கட்டும், பரவாயில்லை. அதற்குள் விஜயகாந்த் தலைமையில் நாடு விஸ்வரூப வளர்ச்சியைக் கண்டிருக்கும். அவர்களுக்கு அது வசதியான இந்தியாவாகவும் இருக்கும். எனவே அவர்கள் காத்திருக்கலாம்.

இது நிச்சயம் சாத்தியமானதல்ல என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் மும்பையில் நடந்து என்ன. யாரும் எதிர்பாராத புதிய வகை தீவிரவாதத் தாக்குதல். எனவே விஜயகாந்த் பிரதமர் என்பதும் சாத்தியமாகக் கூடியதுதான்.

பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடிய, தீர்வுகளுடன் இருக்கக் கூடிய ஒரு தலைமையிடம் நமது நாட்டை சில காலம் ஒப்படைப்போம். நமக்காக பாடுபடக் கூடிய ஒருவரிடம் ஒப்படைப்போம்.

இந்தியாவை கடந்த 60 ஆண்டுகளாக அரசியல்வாதிகளிடம் கொடுத்து விட்டோம். அடுத்த 5 ஆண்டுக்கு விஜயகாந்திடம் கொடுக்கலாமே.

முன்பு வெள்ளையர்களின் ஆட்சியிலிருந்து இந்தியா விடுபட வேண்டும் என்பதற்காக ஒரு தனி மனிதரின் பின்னால் நமது நாட்டு மக்கள் அணி திரண்டார்கள். ஒற்றுமையுடன், ஒரே குரலில் உரத்து முழக்கமிட்டார்கள். அதேபோன்ற தருணம் இப்போதும் வந்துள்ளது.

சாதனைகளை மட்டுமே சொந்தமாக வைத்திருக்கும் விஜயகாந்த் நம்மிடம் உள்ளார் என்பதே பலமான விஷயம். எனவே அவரிடம் ஆட்சியைக் கொடுப்போம். புதிய இந்தியாவை சேர்ந்து உருவாக்குவோம்!!

குறிப்புகள்:
இந்தப் பதிவுக்கும், ராஜேஷ் ஜெயின் எழுதி தட்ஸ்தமிழ் மொழிபெயர்த்துள்ள அதிமுக்கியமான இந்தக் கட்டுரைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை!
http://thatstamil.oneindia.in/news/2008/12/02/india-needs-ratan-tata-as-prime-minister-for-5-yea.html


2. அப்படி என்ன சாதித்தார் கேப்டன் என்று கேட்போர், தலைவரின் படங்களை இதுவரை பார்க்காதவர்களாகவே இருக்கமுடியும்..
இருப்பினும் அவர்களுக்காக , கேப்டனின் சாதனைகள் லக்கிலுக்கின் பதிவிலிருந்து:

>>>>>இடி விழுந்தவன் கூட பிழைத்துக் கொண்டதுண்டு. கேப்டனின் அடிவாங்கியவன் பிழைத்ததில்லை.

>>>>>தாயகம் படத்தில் கூட பாகிஸ்தான் தீவிரவாதிகளை அடக்க கடலூர் மாவட்டத்தில் மீனவராக வாழ்ந்துகொண்டிருந்த கேப்டனை தான் கூப்பிட்டார்கள்.நாட்டைக் காக்க மஞ்சப்பையோடு கிளம்பிய கேப்டன் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஏகே47 போன்ற நவீன ஆயுதங்களோடு போரிட்டபோதும் தன்னுடைய இரு கால்களாலேயே எட்டி உதைத்து அவர்களை துரத்தியடித்தார்.

>>>>>நரசிம்மா படத்திலும் கூட நாடெங்கும் நாசவேலை நடத்த திட்டமிட்டிருந்த தீவிரவாதிகளை தன்னுடைய அக்னிப் பார்வையாலேயே அழித்தார். பல படங்களிலும் பாகிஸ்தான் தீவிரவாதிகளை அடக்கிய அனுபவம் கேப்டனுக்கு உண்டு.

.......
...
முழுப் பதிவு இங்கே: http://www.luckylookonline.com/2008/12/blog-post.html

Friday, November 28, 2008

நிசா புயல் - புரட்சித்தலைவியின் அறிக்கையும் கலைஞரின் கேள்வி பதிலும்..

புரட்சித் தலைவியின் போராட்ட அறிக்கை:

புயலை திசை திருப்பவும் மழையை நிறுத்தவும் எந்த நடவடிக்கையும் எடுக்காத மைனாரிட்டி திமுக ஆட்சிக்கு எதிராக தமிழகமெங்கும் அதிமுகவினர் போராட வேண்டும் என புரட்சித் தலைவி ஜெ.ஜெயலலிதா கட்டளையிட்டுள்ளார். சென்னையில் இன்று நடக்கும் போராட்டத்துக்கு புரட்சித் தலைவி ஜெ.ஜெயலலிதா தலைமை தாங்குகிறார்.

கலைஞரின் கேள்வி பதில் அறிக்கை:

புயலை திசைதிருப்பவும் மழையை நிறுத்தவும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அம்மையார் குறை கூறியுள்ளாரே?

அம்மையாரின் ஆட்சிகாலத்தில் வந்த புயல்களுடன் நிசாவை ஒப்பிட்டுப் பார்த்தால் உண்மை தெரியும்.
நாங்கள் எடுத்த நடவடிக்கைகள் காரணமாகவே இந்தப் புயல் ஒரு வாரத்திற்குள் கரையைக் கடந்துள்ளது..

1993 ஆம் ஆண்டு அம்மையார் ஆட்சியில் இருந்த போது வந்த புயல் 9 நாட்களும், 2003 ல் வந்த புயல் 8 நாட்களும் நீடித்தது.

ஆனால் கழக ஆட்சியில் 1972 ஆம் ஆண்டில் வந்த புயலை 3 நாட்களிலும், 1989 ஆம் ஆண்டு வந்த புயலை 2 நாட்களிலும் கட்டுப் படுத்தினோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்

இதிலிருந்தே தெரிகிறது நாங்கள் எவ்வளவு சிறப்பாக நடவடிக்கைகள் எடுத்திருக்கிறோம் என்பது.

இதையெல்லாம், புரட்சிப்"புயலை" தனது கூட்டணியிலேயே வைத்துக்கொண்டு அம்மையார் பேசுவது தான் வேடிக்கையிலும் வேடிக்கை!

அத்துடன், அம்மையாரின் ஆட்சியில் எதிர்காலத்தில் புயலை நிறுத்த எந்தவிதத் தொலைநோக்கு முயற்சிகளும் செய்யவில்லை என்பதே தற்போதைய புயலுக்கு முக்கியக் காரணம்!

Monday, September 29, 2008

நுண்ணரசியல் -3 பில்ஸ்பெரி ரொட்டி

பில்ஸ்பெரி ரொட்டி - செய்முறை



தேவையான பொருட்கள்:
பில்ஸ்பெரி ரெடிமேட் ரொட்டி - 3


வடு மாங்காய் ஊறுகாய் - தேவையான அளவு

செய்முறை:

ப்ரீஸரில் இருந்து 3 ரொட்டிகளை எடுத்து ஒரு 30 நொடிகள் வெளியே வைக்கவும்.

மைக்ரவேவ் அவனை ஆன் செய்து
ஒரு ரொட்டி எனில் 20 நொடி
2 ரொட்டி எனில் 30 நொடி
3 ரொட்டி எனில் 45 நொடி
4 ரொட்டி எனில் 60 நொடி
செட் செய்து ரொட்டிகளை உள்ளே வைக்கவும்.


மைக்ரவேவ் அவனில் கீகீ என்று சத்தம் வந்ததும் அவனை ஆப் செய்துவிட்டு ரொட்டியை வெளியே எடுக்கவும்.

தேவையான அளவு வடுமாங்காய் ஊறுகாயை பாட்டிலில் இருந்து எடுத்து தட்டில் போட்டுக்கொள்ளவும்.


வேற என்ன... டீவி ல சூப்பர் சிங்கர் வைச்சிப் பாத்துக்கிட்டே சாப்பிடுங்க!

குறிப்புகள் சில:

இந்த இடுகையை யார் வேண்டுமானாலும் மீள் பதிவு செய்து கொள்ளலாம். மீள் பதிவு செய்வோர் தயவு செய்து எங்கும் என் பெயரையோ அல்லது இந்த இடுகைக்கான தொடுப்பையோ சேர்த்துவிட வேண்டாம்..

இந்தக் ரொட்டியை யார் வேண்டுமானாலும் செய்து பார்க்கலாம். ஆனால் செய்யத் தொடங்கும் முன் இங்கு வந்து நன்றி சொல்லிப் பின்னூட்டமிட்டுச் செல்லவேண்டும்

நீங்கள் சமைத்த ரொட்டி நன்றாக இருந்தால் அதற்குறிய பாராட்டுக்கள் அனைத்தும் எனக்கே. ஆனால் நன்றாக இல்லையெனில், அதற்கு நான் பொறுப்பல்ல. அதற்கான பொறுப்பை நீங்கள் அல்லது பில்ஸ்பெரி நிறுவனம் ஏற்றுக்கொள்ளவேண்டும்!

இந்த இடுகையில் இருக்கும் நுண்ணரசியல் என்ன என்பதைக் கண்டுபிடிப்போருக்கு ஒரு மாதத்திற்குத் தேவையான பில்ஸ்பெரி ரொட்டி வித் வடுமாங்காய் ஊறுகாய் பரிசாக வழங்கப் படும்.

Sunday, September 28, 2008

காளான் குழம்பு! - செய்முறை

காளான் குழம்பு! - செய்முறை

தேவையான பொருட்கள்:

சிறிது சிறிதாக அல்லது நடுத்தரமாக அல்லது பெரிதாக வெட்டிய காளான் - 1பாக்கட்.


பொடிப் பொடியாக நறுக்கிய தக்காளி - 2


பொடிப் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1


நறுக்கிய வெள்ளைப்பூண்டு -1


மிளகாய்ப் பொடி அல்லது மீன் மசாலா அல்லது கோழி மசாலா - தேவையான அளவு


மக்காச்சோள எண்ணை - தேவையான அளவு


உப்பு, கறிவேப்பிலை, மஞ்சள்பொடி - தேவையான அளவு

செய்முறை
குக்கரில்(ப்ரஸ்ஸர் பேனின் விசில் தேடி எடுக்கமுடிந்தால் ப்ரஸ்ஸர் பேன் பயன்படுத்தலாம்) கொஞ்சம் எண்ணை விட்டு ஸ்டவ்வில் வைக்கவும்.

எண்ணெய் சூடானதும், கடுகு தாளிக்கவும். கடுகு வெடித்து முடிந்ததும் கறிவேப்பிலை போடவும்.

கறிவேப்பிலை வெடித்து முடித்ததும் வெங்காயம் போட்டு வதக்கவும்.


வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், தக்காளி சேர்த்து வதக்கவும்.


தக்காளி வதங்கியதும் காளான் சேர்த்து ஒரு 2 நிமிடம் வதக்கவும்.
பின் மிளகாய்ப்பொடி, மஞ்சள், உப்பு சேர்த்து மசால் வாசம் போகும்வரை வதக்கவும்.

மசால் வாசம் போகும்வரை வதக்கியதும், 1/2 டம்ளர் நீர் சேர்த்து குக்கரை மூடி, 3 விசில் வரும் வரை வைக்கவும்.


இடைப்பட்ட நேரத்தில் எலக்ட்ரிக் குக்கரில் 1 டம்ளர் அரிசி வைக்கவும்.

3 விசில் வந்ததும் ஸ்ட்டவ்வை அனைத்துவிட்டு, ஆவி முழுதும் வெளியேறும் வரை காத்திருந்து குக்கரைத் திறந்தால் காளான் குழம்பு தயார்.



சோறு தயாராக எப்படியும் ஒரு 15 நிமிடம் ஆகும்.. அதற்குள் குளித்து முடித்துவிட்டு வந்துவிடவும்.

இன்று மாலை முஸ்தபாவில் வாங்கப் போகும் பில்ஸ்பெரி ரெடிமேட் சப்பாத்திக்கும் இந்தக் குழம்பு நன்றாக இருக்கும்!

குறிப்புகள் சில:

குழம்பு நன்றாக இருந்தால் 2 நாட்கள் வைத்திருந்து சாப்பிடவும். நன்றாக இல்லையெனில், கோவியார், பாரி.அரசு போன்ற நல்லவர்களைக் கூப்பிட்டு சாப்பாடு போட்டு உடனே குழம்பைக் காலி செய்துவிடவும்.

இந்த இடுகையை யார் வேண்டுமானாலும் மீள் பதிவு செய்து கொள்ளலாம். மீள் பதிவு செய்வோர் தயவு செய்து எங்கும் என் பெயரையோ அல்லது இந்த இடுகைக்கான தொடுப்பையோ சேர்த்துவிட வேண்டாம்..

இந்தக் குழம்பை யார் வேண்டுமானாலும் செய்து பார்க்கலாம். ஆனால் செய்யத் தொடங்கும் முன் இங்கு வந்து நன்றி சொல்லிப் பின்னூட்டமிட்டுச் செல்லவேண்டும்

நீங்கள் சமைத்த குழம்பு நன்றாக இருந்தால் அதற்குறிய பாராட்டுக்கள் அனைத்தும் எனக்கே. ஆனால் நன்றாக இல்லையெனில், அது உங்களின் கவனக்குறைவால் மட்டுமே இருக்கும். எனவே விழும் திட்டுக்கள் அனைத்தும் உங்களுக்கே!

இந்த இடுகையில் இருக்கும் நுண்ணரசியல் என்ன என்பதைக் கண்டுபிடிப்போருக்கு ஒரு மாதத்திற்குத் தேவையான காளான் குழம்பு பரிசாக வழங்கப் படும்.

Saturday, September 27, 2008

முட்டைக்கோஸ் சாம்பார்! - செய்முறை

முட்டைக்கோஸ் சாம்பார்

தேவையான பொருட்கள்:

துவரம்பருப்பு
- அம்மா ஊருக்குப் போகும் முன் வாங்கி வைத்ததில் மீதமுள்ள 1/2 டம்ளர்.
முட்டைக்கோஸ் - போன வாரம் fired-rice க்கு வாங்கிய முட்டைக்கோஸில் மீதமுள்ளது.(சிறியதாக வெட்டி வைக்கவும்)
தக்காளி -2(சிறியதாக நறுக்கி வைக்கவும்)
சின்ன வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது)
கடுகு (வீட்டில் உளுந்தம் பருப்பு இருந்தால் அதுவும்) - தேவையான அளவு
கறிவேப்பிலை - தேவையான அளவு
எண்ணை - தேவையான அளவு
மஞ்சள் பொடி - தேவையான அளவு
உப்பு - எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு(சோறு ஆக்கும்போது உப்பு போடாவிட்டால், குழம்பில் அதிக உப்பு சேர்க்கனும்)
சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி
_____________________________


செய்முறை:

பருப்பையும் முட்டைக்கோஸையும் நன்கு கழுவி, மஞ்சள் சேர்த்து, குக்கரில் 2 டம்பளர் தண்ணீர் சேர்த்து 3 விசில் வரும்வரை வேக வைக்கவும்.(பொங்காமல் இருக்க 2 சொட்டு நல்லெண்ணை சேர்க்கனும்ன்னுறது எல்லாருக்கும் தெரியும் என்பதால் அதை நான் சொல்லவில்லை..)

பருப்பு வேகும் சமயத்தில் தக்காளி, வெங்காயம் எல்லாம் வெட்டி வைத்துக்கொள்ளவும்.
வானலியில் தேவையான எண்ணை விட்டு எண்ணை காய்ந்ததும் கடுகு போட்டுத் தாளிக்கவும். கடுகு வெடித்து முடிந்ததும் கரிவேப்பிலை, வெங்காயம் போட்டு வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமாக வறுபட்டதும், தக்காளி சேர்த்து வதக்கவும்.

தக்காளி நன்கு வதங்கியதும், குக்கரில் இருக்கும் பருப்பு -முட்டைக்கோசை அப்படியே நீருடன் எடுத்து வானலியில் ஊற்றவும்.

உப்பு, சாம்பார் பொடி(fridgeல் இருக்கும் சாம்பார், மீன், கோழி மசாலாக்களில் எது சாம்பார் மசாலா என்று சரியாகப் பார்த்து எடுக்கவும்) சேர்த்து நன்கு கலக்கவும்.

இதை அப்படியே ஒரு 10 நிமிடம் ஸ்டவ்வை ஸ்லிம்மில் வைத்துக் கொதிக்கவிடவும்.

சாம்பார் கொதித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் பருப்பு வைத்த குக்கர், காய்கறி வெட்டிய தட்டு, கத்தி, நேற்று இரவு சாப்பிட்ட தட்டு அனைத்தையும் கழுவிக் காய வைக்கவும்.

ஒகே.... சாம்பார் ரெடி.


சாம்பார் தயாரானதும் ஒரு டம்ளர் அரிசி எடுத்து கழுவி, டம்ளர் தண்ணீர் சேர்த்து, குக்கர் பாத்திரத்தின் வெளிப்புறத்தை கைலி அல்லது துண்டின் உதவியுடன் நன்கு துடைத்து எலக்ட்ரிக் குக்கரில் வைத்து குக்கரை ஆன் செய்யவும்.

சோறு தயாராக ஒரு 20 நிமிடம் ஆகும். அந்த நேரத்தில் சமையலறையைச் சுத்தம் செய்து, நேற்று இரவு சாப்பிட்ட சாப்பாட்டு பொட்டலம் மற்றும் மற்ற குப்பைகளை எடுத்து குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு வந்து குளித்து விட்டு வரவும்.

குளித்து விட்டு வந்தால் சோறு தயாராக இருக்கும். குக்கரை ஆப் செய்துவிட்டு சாப்பிட ஆரம்பிக்கவும்!


தொட்டுக்கொள்வதற்கு முந்தாநாள் இரவு சப்பாத்திக்கு வைத்த தக்காளித் தொக்கை சுடவைத்து வைத்துக் கொள்ளவும்.

குறிப்புகள் சில:
இந்த இடுகையை யார் வேண்டுமானாலும் மீள் பதிவு செய்து கொள்ளலாம். மீள் பதிவு செய்வோர் தயவு செய்து எங்கும் என் பெயரையோ அல்லது இந்த இடுகைக்கான தொடுப்பையோ சேர்த்துவிட வேண்டாம்..

இந்தக் குழம்பை யார் வேண்டுமானாலும் செய்து பார்க்கலாம். ஆனால் செய்யத் தொடங்கும் முன் இங்கு வந்து நன்றி சொல்லிப் பின்னூட்டமிட்டுச் செல்லவேண்டும்

நீங்கள் சமைத்த குழம்பு நன்றாக இருந்தால் அதற்குறிய பாராட்டுக்கள் அனைத்தும் எனக்கே. ஆனால் நன்றாக இல்லையெனில், அது உங்களின் கவனக்குறைவால் மட்டுமே இருக்கும். எனவே விழும் திட்டுக்கள் அனைத்தும் உங்களுக்கே!

இந்த இடுகையில் இருக்கும் நுண்ணரசியல் என்ன என்பதைக் கண்டுபிடிப்போருக்கு ஒரு மாதத்திற்குத் தேவையான முட்டைக்கோஸ் சாம்பார் பரிசாக வழங்கப் படும்.

Monday, September 15, 2008

விட்டுக்கொடுக்கிறேன் அல்லது முடியல அல்லது வெற்றி முக்கியமல்ல, பங்கேற்பே முக்கியம்!

எனக்கும் போட்டோகிராப்பிக்கும் ரெம்ப தூரம்... நம்ம ஜீவ்ஸ் அண்ணாச்சி வற்புறுத்தலால், முதல் சுற்றின் கடைசி நாளில் ஒரு படத்தைப் போட்டிக்கு அனுப்பினேன்... என் கெட்ட நேரம் அதுவும் இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகிவிட்டது.... :((

நானும் 20 நாளா என் மொபைலைத் தூக்கீட்டு அலையுறேன்.. ஆனால் ஒரு படமும் கிடைக்கலை.. :(((
அதனால் யாராவது வெல்லட்டும் என விட்டுக் கொடுக்கிறேன்!
போட்டியில் வெல்வது முக்கியமல்ல! பங்கேற்பதே முக்கியம் என்பதால் என் படத்தைப் போட்டிக்கு அனுப்புகிறேன்.....(ஹிஹிஹி... ஜெயிக்க முடியாதவங்க எல்லாம் இதைத்தான் சொல்வாங்க. :p)

இது போட்டிக்கு:

ரஃபேல்ஸ் சிலை.. சிங்கை நதிக்கரையில்



இதெல்லாம் சும்மா உங்க பார்வைக்கு:


சன்டெக் சிட்டியின் Fountain of wealth
சிங்கை நதிக்கரையில்.....







செங்காங் - LRT Track.



பூகிஸ் ஸ்ட்ரீட்டின் பின்புறத் தெரு ஒன்றில்



பூகிஸ் அருகில்... எந்த்க் கட்டிடம் எனத் தெரியவில்லை....

என் மொபைலில் எடுத்த panoramic படங்கள்:




ஆர்ச்சர்ட் சாலை - நி-யான்-சிட்டி

Friday, August 29, 2008

வெற்றி தரும் பெயர் சோதிடம்.

பெயரில் என்ன இருக்கிறது ...நம்ம கிட்டதான் எல்லாம் இருக்கு..என்னும் அறிவாளிகள்..இத்தனை படிக்க வேண்டாம்..கண்ணீரில் வாழும் ,துன்பத்தில் தவிக்கும் ஒரு சகோதரனுக்காவது.. இந்த கலை உபயோகமானால் ..மகிழ்ச்சி.

இந்தக் கலையை நான் என் குருஜி ஸ்ரீஸ்ரீஸ்ரீ.ராமஷ்ஷதீஸ்வராநந்தாஸ்வாமிகள் அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டேன்.

உதாரணமாக பெயரின் முதல் எழுத்தோ அல்லது மூன்றாவது எழுத்தோ அல்லது நான்கு மற்றும் ஐந்தாவது எழுத்துக்களோ கீழ்க்கண்ட எழுத்துக்களில் ஒன்றாக இருந்தால் அவர்களின் வாழ்க்கை மிகவும் சிரமமானதாக இருக்கும்...

அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ,க்,க,கா,கி,கீ,கு,கூ,கெ,கே,கை,கொ,கோ,கௌ,ங்,ங,ஙா,ஙி,ஙீ,ஙு,ஙூ,ஙெ,ஙே,ஙை,ஙொ,ஙோ,ஙௌ,
ச்,ச,சா,சி,சீ,சு,சூ,செ,சே,சை,சொ,சோ,சௌ.ஞ்,ஞ,ஞா,ஞி,ஞீ,ஞு,ஞூ,ஞெ,ஞே,ஞை,ஞொ,ஞோ,ஞௌ,
ட்,ட,டா,டி,டீ,டு,டூ,டெ,டே,டை,டொ,டோ,டௌ,ண்,ண,ணா,ணி,ணீ,ணு,ணூ,ணெ,ணே,ணை,ணொ,ணோ,ணௌ,
த்,த,தா,தி,தீ,து,தூ,தெ,தே,தை,தொ,தோ,தௌ,ந்,ந,நா,நி,நீ,நு,நூ,நெ,நே,நை,நொ,நோ,நௌ,
ப்,ப,பா,பி,பீ,பு,பூ,பெ,பே,பை,பொ,போ,பௌ,ம்,ம,மா,மி,மீ,மு,மூ,மெ,மே,மை,மொ,மோ,மௌ,
ய்,ய,யா,யி,யீ,யு,யூ,யெ,யே,யை,யொ,யோ,யௌ,ர்,ர,ரா,ரி,ரீ,ரு,ரூ,ரெ,ரே,ரை,ரொ,ரோ,ரௌ,
ல்,ல,லா,லி,லீ,லு,லூ,லெ,லே,லை,லொ,லோ,லௌ,வ்,வ,வா,வி,வீ,வு,வூ,வெ,வே,வை,வொ,வோ,வௌ,
ழ்,ழ,ழா,ழி,ழீ,ழு,ழூ,ழெ,ழே,ழை,ழொ,ழோ,ழௌ,ள்,ள,ளா,ளி,ளீ,ளு,ளூ,ளெ,ளே,ளை,ளொ,ளோ,ளௌ,
ற்,ற,றா,றி,றீ,று,றூ,றெ,றே,றை,றொ,றோ,றௌ,ன்,ன,னா,னி,னீ,னு,னூ,னெ,னே,னை,னொ,னோ,னௌ.

இதற்குப் பதில் இந்த இடங்களில் வேறு எழுத்துக்களைப் போட்டு பெயரைக் கொஞ்சம் மாற்றினால் போதும், உங்கள் வாழ்க்கை வளமானதாக மாறும்..

உங்கள் பெயர் இது போல் இருந்தால் உடனே என்னை அனுகவும்.. உங்கள் பெயரில் தகுந்த மாற்றங்களைச் செய்து தருகிறேன்..

இதற்கு எந்தக் கட்டணமும் இல்லை. ஏனக்கு தட்சணையாக ரூ.12071 மட்டும் தந்தால் போதும்...

எடுத்துக்காட்டாக நான் மாற்றி வைத்த பெயர்கள்:
கோ.கண்ணன் : கோவி.கண்ணன்
அரவிந்த் : டி.பி.சி.டி
சரவணவேல் :குசும்பன்.

விரைவில் வந்து பெயரை மாற்றிக்கொள்ளுங்கள்!!! என் சேவையைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்

Wednesday, August 27, 2008

பழகிட்டு இருக்கேன்.......

Singapore Land Tower & Chevron House

Asian Civilizations Museum


Esplanade



Esplanade


பழகிட்டு இருக்கேன்.. பிடிச்சிருந்தா மதிப்பு மிக்க பொழுதுபோக்கா வைத்துக்கொள்வேன்.. பிடிக்கலைன்னாலும் பரவாயில்லை, பொழுதுபோக்கா வைத்துக்கொள்வேன்.... :P

நேரமிருந்தால் படங்களுக்கு விமர்ச்சனம் தரவும்......

Friday, August 22, 2008

அய்யகோ!! நாட்டை முன்னேறவிடாமல் தடுக்கும் இட ஒதுக்கீடு!

உகாண்டாவைப் பாருங்கள்! உருகுவேயைப் பாருங்கள்! நைஜீரியாவைப் பாருங்கள்!! அங்கெல்லாம் இட ஒதுக்கீடா இருக்கிறது?

என்ன கொடுமை இது? ஒரு கல்வி நிலையத்தில் சேர உயர் சாதிக்கு ஒரு மதிப்பெண், தாழ்த்த பட்டவருக்கு தனி மதிப்பெண்? இதனால் எத்தனை திறமையுள்ளவர்கள் பாதிக்கப் படுகின்றனர்?

இப்படி இட ஒதுக்கீட்டில் வந்த திம்மிகளால் தான் SBI யிலும் இந்தியன் வங்கியிலும் யாரும் வாடிக்கையாளர்களுக்கு சரியான மரியாதை கிடைப்பதில்லை!

பாருங்கள்.. ஐஐடி களில் எவ்வளவு இடம் நிரப்பப் படாமல் இருக்கிறது என்று..இப்போது கட்-ஆப் மதிப்பெண் குறைக்கப் போகிறார்களாம்...ஆண்டு முழுவதும் உயிரை கொடுத்து படித்த மாணவர்கள் 90 சதவிதம் மதிப்பெண் வைத்திருந்தாலும், மிதமுள்ள இருக்கைகளை அவர்களுக்கு தர மாட்டார்களாம்.

வாருங்கள் அனைவரும் சேர்ந்து போராடி இட ஒதுக்கீட்டை ஒழிப்போம்! நாட்டை முன்னேற்றுவோம்!!

குறிச்சொற்கள் : இட ஒதுக்கீடு, உளறல், இந்தியா, அரசியல், உளறல், உச்ச நீதிமன்றம், ஐஐடி, SBI, நிசமாவே புதுப் பதிவர்,ப்ளிச்சிங் பவுடர் உயர் ஜாதி, சமுதயம், பிற்படுத்தப் பட்டோர், இன்ன பிற

பதிவுக்குச் சம்மந்தமில்லாத ஒரு சுட்டி: http://bleachingpowder.blogspot.com/2008/08/blog-post_21.html

அய்யகோ!! நாட்டை முன்னேறவிடாமல் தடுக்கும் இட ஒதுக்கீடு!

உகாண்டாவைப் பாருங்கள்! உருகுவேயைப் பாருங்கள்! நைஜீரியாவைப் பாருங்கள்!! அங்கெல்லாம் இட ஒதுக்கீடா இருக்கிறது?

என்ன கொடுமை இது? ஒரு கல்வி நிலையத்தில் சேர உயர் சாதிக்கு ஒரு மதிப்பெண், தாழ்த்த பட்டவருக்கு தனி மதிப்பெண்? இதனால் எத்தனை திறமையுள்ளவர்கள் பாதிக்கப் படுகின்றனர்?

இப்படி இட ஒதுக்கீட்டில் வந்த திம்மிகளால் தான் SBI யிலும் இந்தியன் வங்கியிலும் யாரும் வாடிக்கையாளர்களுக்கு சரியான மரியாதை கிடைப்பதில்லை!

பாருங்கள்.. ஐஐடி களில் எவ்வளவு இடம் நிரப்பப் படாமல் இருக்கிறது என்று..இப்போது கட்-ஆப் மதிப்பெண் குறைக்கப் போகிறார்களாம்...ஆண்டு முழுவதும் உயிரை கொடுத்து படித்த மாணவர்கள் 90 சதவிதம் மதிப்பெண் வைத்திருந்தாலும், மிதமுள்ள இருக்கைகளை அவர்களுக்கு தர மாட்டார்களாம்.

வாருங்கள் அனைவரும் சேர்ந்து போராடி இட ஒதுக்கீட்டை ஒழிப்போம்! நாட்டை முன்னேற்றுவோம்!!

குறிச்சொற்கள் : இட ஒதுக்கீடு, உளறல், இந்தியா, அரசியல், உளறல், உச்ச நீதிமன்றம், ஐஐடி, SBI, நிசமாவே புதுப் பதிவர்,ப்ளிச்சிங் பவுடர் உயர் ஜாதி, சமுதயம், பிற்படுத்தப் பட்டோர், இன்ன பிற

பதிவுக்குச் சம்மந்தமில்லாத ஒரு சுட்டி: http://bleachingpowder.blogspot.com/2008/08/blog-post_21.html

நான் ரெம்ப பிசி!!!!!!!!

Friday, August 15, 2008

PIT - நானும் வாரேன்






இதுல எதாவது தேறுதான்னு பார்த்துச் சொல்லுங்களேன்...

எனக்கு முதலாவது ஓரளவுக்குப் பரவாயில்லாமல் இருப்பது போல் தோன்றுகிறது..

இன்னும் ஒரு 10 மணி நேரம் இருக்கு.. அதுக்குள்ள யாராவது சொல்லுங்களேன்.. எந்தப் படத்தைப் போட்டிக்கு அனுப்பலாம் என்று....


**********************************
முதல் படத்தை போட்டிக்கு அறிவிக்கிறேன்...

PIT மெகா போட்டி : http://photography-in-tamil.blogspot.com/2008/07/pit.html

Thursday, August 14, 2008

பகீரங்கமாக ஒரு எச்சரிக்கைக் கடிதம்!

அன்புள்ள பதிவர்கள் சமூகத்திற்கு,

நீங்கள் அனைவரும் நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன்.

தமிழ்ப் பதிவுலகில் இந்தவாரம் கடிதம் மற்றும் உணவக வாரம் என்பது தாங்கள் அனைவரும் அறிந்ததே.. இது வரை கடிதம் மற்றும் உணவக வாரம் சிறப்பாகவே சென்று கொண்டிருக்கிறது.

மொத்தமுள்ள 7823 தமிழ்ப் பதிவர்களில் இது வரை 7620 பேர் "பகீரங்கக் கடிதம்" எழுதிவிட்டனர்; 6521 பேர் உணவகப் பதிவு போட்டுவிட்டனர். இது குசேலன்(6200) மற்றும் தசாவதார(6123) வாரங்களை விட நல்ல முன்னேற்றம் தான்.

ஆனால் சென்ற வாரங்களைப் போல இப்போது விட்டுவிடப்போவதில்லை. பதிவர்கள் அனைவரும் கட்டாயம் உணவக மற்றும் கடிதப் பதிவுகள் கட்டாயம் எழுதிட வேண்டும். எழுதாதவர்களுக்குக் கடும் தண்டனை வழங்கப் படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தக் கடிதத்தைக் கடைசி எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு இன்னும் "பகீரங்கக் கடிதம்" எழுதாத 203 பேரும், உணவகப் பதிவு போடாத 1202 பேரும் உடனடியாகப் பதிவுகளைப் போடவேண்டும். இல்லையேல் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரும்..

ஒன்றுக்கு மேற்பட்ட உணவகப் பதிவுகளை எழுதிக் குவித்துவரும் கோவியார் போன்றோர், உணவகப் பதிவுகளை நிறுத்திவிட்டு, கடிதப் பதிவு ஒன்றாவது எழுதுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்..

வாருங்கள் பதிவர்களே கடித மற்றும் உணவகப் பதிவு வாரத்தை மாபெரும் வெற்றியடையச் செய்வோம்!!!

இப்படிக்கு,
தலைமை, தமிழ்ப் பதிவர்கள் கழகம்.
(நமது கழகத்திற்குத் தலைவர் கிடையாது.... தலைமை மட்டுமே!!)

குறிப்பு:
இது தமிழ்ப் பதிவர்கள் கழகத்தின் தலைமையிடம் இருந்து எனக்கு வந்த மின் அஞ்சல். இதை என் பதிவில் இட்டு அனைவருக்கும் பகீரங்கமாகத் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டேன். எனவே இக் கடிதத்திற்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இதில் இருக்கும் கருத்துக்கள் (?) கழகத்தின் கருத்துக்களே!!

Tuesday, August 12, 2008

வாருங்கள் மென்பொருள் அடிமைகளே - தோரியத்தில் இருந்து மின்சாரம் எடுப்போம்!


public class ElectricityFromThorium{
private List<Thorium232> thorium232List;
public ElectricityFromThorium(){
thorium232List = new ArrayList<Thorium232>();
}
public ElectricityFromThorium(List<Thorium232> thorium232List){
this.thorium232List = thorium232List;
}

public void addThorium232(Thorium232 th232){
thorium232List.add(th232);
}
Public List<Uranium233> getUraniumList(){
List<Uranium233> ur233Lst = new ArrayList<Uranium233>();
For(Thorium232 tr233 : thorium232List){
Ur233Lst.add(getUraniumFromThorium(tr233));
}

}
private Uranium233 getUraniumFromThorium(Thorium232 th232){
Neutron neutron = Neutron.getInstance();
Thorium233 th233 = getTh233(th232, neutron);
Map<String, Object> paMap = getProtactinium233AndElectron(th233);
Protactinium233 pa233 = paMap.get(“pa233”);
Map<String, Object> urMap = getUranium233AndElectron(pa233);
Uranium233 ur233 = urMap.get(“ur233”);
return ur233;
}
...........
.........
........
..........
}


வாருங்கள் மென்பொருள் அடிமைகளே!! இன்னும் எத்தனை நாள் தான் அடிமைகளாக இருப்பது நாம்? விலங்குகளை உடைத்தெறிந்து விட்டு வாருங்கள்... இந்தியாவுக்குத் தோரியத்தில் இருந்து மின்சாரம் எடுத்துத் தருவோம்!!

மேலே இருப்பது தோரியத்தில் இருந்து மின்சாரம் எடுக்க நான் எழுதிய மென்பொருள். இந்த மென்பொருள் நன்றாக வேலை செய்கிறது. இது இன்னும் சோதனை அளவில் இருக்கிறது. இதில் இன்னும் பல மாற்றங்கள் செய்யவேண்டியிருக்கிறது. வாருங்கள் நாம் அனைவரும் இணைந்து இந்த மென்பொருளைச் செய்து முடிப்போம்!

இந்த மென்பொருளை நேற்று சோதித்துப் பார்த்தேன். நன்றாக வேலை செய்கிறது. நேற்று முழுதும் என்வீட்டுக் குளியலறைக்கு இந்த மென்பொருளில் இருந்து வந்த மின்சாரத்தை மட்டுமே பயன்படுத்தினேன்....

பின் குறிப்பு:
இந்தப் பதிவு ஏன்னு புரியாதவங்க இந்தச் சுட்டிகளை எல்லாம் படித்துப் பாருங்கள்:
>> இந்தியா – விற்பனைக்கு!
>> மென்பொருள் வல்லுனர்கள் அமெரிக்காவின் அடிமைகளா?
>> மென்பொருள் துறை/வல்லுனர்கள் என்றால் சாருநிவேதிதா போன்றவர்களுக்கு இளப்பமா?
>> சாரு நிவேதிதாவுக்கு சில கேள்விகள்!

இந்தப் பதிவுக்கு குறிச்சொற்கள்:
சாரு நிவேதிதா, மென்பொருள், இந்தியா, உளரல், போதை, பீச், சுண்டல், கோணல், சாரு, மோரு, அடிமை, தோரியம், மின்சாரம், கூடங்குளம்,..........

Sunday, August 10, 2008

நன்றி மற்றும் குசேலன் நல்லாத்தான இருக்கு?

நன்றி:
குசேலனைப் பார்க்கவேண்டுமா? என நான் இட்ட இடுகைக்கு என்னைத் திட்டி வந்த பின்னூட்டங்கள் மட்டும் குறைந்தது 50 இருக்கும்.

கிரியைத் திட்டி வந்த பின்ன்னூட்டத்தை மட்டுறுத்தியதை எதிர்த்து என்னைத் திட்டி வந்த பின்னூட்டங்களின் எண்ணிக்கை 25ஐத் தாண்டும்.. என்னை மட்டுமல்ல என் மனைவியையும்(?) சேர்த்துத் திட்டிப் பின்னூட்டங்கள் வந்தது. (என்னைப் பாராட்டியவருக்கு ஒரு தகவல்: எனக்கு இன்னும் திருமணம் ஆகலை..:P )
என்னைத் திட்டிப் பின்னூட்டம் போட்டவருக்கு/போட்டவர்களுக்கு நன்றி!!!
_________________________________________________________________
குசேலன் நல்லாத்தான இருக்கு?



"ரஜினி வாட்டாள் நாகராஜிடம் மன்னிப்போ வருத்தமோ தெரிவிக்கவில்லை." என்று கிரி அவர்கள் தெளிவாக விளக்கிய பின் தான் ரஜினி மீது எந்தத் தப்பும் இல்லை எனப் புரிந்தது. அவரது விளக்கத்தை ஏற்று குசேலன் பார்ப்பதில்லை என்ற முடிவை மாற்றிக் கொண்டு 75 ஆண்டு தமிழ்சினிமாவின் மிகச் சிறந்த திரைப்படமான "குசேலன்" படத்தைப் பார்த்தேன்.

லக்கிலுக், பரிசல்காரன், கோவி.கண்ணன் மற்றும் பலர் ரஜினி மீதான தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாகவே குசேலன் படம் நன்றாக இல்லை என எழுதியுள்ளனர் என்பது படத்தைப் பார்த்தபின் தான் தெரிந்தது. இவர்களுக்கெல்லாம் ஒரு வேண்டுகோள் ஒரு சிறந்த படத்தைப் பற்றி இப்படியெல்லாம் எழுத உங்களுக்கு எப்படி மனது வந்தது?

இந்தப் படம் சூப்பர்ஸ்டாரின் தலைசிறந்த படங்களில் ஒன்று. P.வாசு இயக்கிய படங்களில் இதுவே சிறந்தது. ஒரு படத்தில் இதைவிட என்ன இருக்க்வேண்டும் எனத் தெரியவில்லை. :(

என்னைப் பொருத்தவரை இது ஒரு நல்ல படம். மூன்று மணிநேரம் கவலைகளை மறந்து ரசிக்க ஏற்ற படம்.
படத்தைப் பார்த்த பின்னும் சொல்கிறேன், குசேலன் குறித்த என் இந்த இடுகையில் எந்த மாற்றமும் இல்லை :
http://jegadeesangurusamy.blogspot.com/2008/08/blog-post_5893.html
சூப்பர் ஸ்டாரின் படம் எப்போதும் நன்றாகத்தான் இருக்கும் என்பதை நம்பி படம் பார்க்காமலேயே நான் எழுதிய விமர்சனம் அப்படியே உண்மையாக உள்ளது. படம் மிகவும் அருமை.

லக்கி, பரிசல் போன்ற கமல் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள், கமல் ரசிகன் என்ற கண்ணாடியைக் கழற்றி வைத்துவிட்டு, ஒரு நடுநிலையாளராக, மறுபடியும் இந்தப் படத்தைப் போய்ப் பாருங்கள். அப்போது தெரியும் எவ்வளவு நல்ல படம் என்பது.

மீண்டும் ஒரு முறை சொல்கிறேன்...
குசேலன் மிகச் சிறந்த படம். அனைவரும் தவறாமல் பார்க்கவும்..

குசேலன் நல்லாத்தான இருக்கு? ஆனா ஏன் எல்லாரும் நல்லா இல்லைன்னு சொல்றாங்க?
ஒன்னுமே புரியலை...

பின் குறிப்பு:
1. நான் குருவி, அழகிய தமிழ்மகன், திருப்பதி, பரமசிவன் போன்ற படங்களைப் பார்த்தபோதும் எனக்கு இப்படித் தான் தோன்றியது.. "படம் நல்லாத்தான இருக்கு? ஏன் எல்லோரும் நல்லா இல்லைன்னு சொல்றாங்க?" :P

2. படத்திற்கும் பதிவுக்க்கும் எந்த சம்மந்தமும் இல்லை!

Saturday, August 9, 2008

துர்காவின் மோசடி - KRS க்கு நியாயம் தேவை!

இந்தப் படத்தைப் பாருங்க அவருடைய மோசடி தெரியும்...


ஏன் இந்த மோசடின்னு கேட்டுப் பின்னூட்டமிட்டால் அந்தப் பின்னூட்டத்தையும் மட்டுறுத்துகிறார்.. நீங்களே அவரிடம் நியாயத்தைக் கேளுங்கள்...

இவர் செப்டம்பரில் இடப்போகும் இடுகைக்கு நிஜமா நல்லவன் ஆகஸ்ட்டிலேயே பின்னூட்டமிடுகிறாராம்... :P அந்தக் கூத்தை இங்கு பாருங்கள்:


KRS சின் பிறந்தநாள் செப்டம்பர், 9ம் தேதியா இல்லை ஆகஸ்ட், 9ம் தேதியா என்று அனைவரும் குழம்பவேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் இந்தக் குழப்பத்தை ஏற்படுத்துகிறார் துர்கா....

Wednesday, August 6, 2008

ஒக்கேனக்கல் கர்நாடகத்துக்கே சொந்தம்!

ஒக்கேனக்கல் கர்நாடகத்தின் ஒருங்கினைந்த பகுதி என்று கர்நாடக மின்துறை அமைச்சர் ஈசுவரப்பா தெரிவித்துள்ளார்..
(செய்தி இங்கே: http://www.dailythanthi.com/article.asp?NewsID=430299&disdate=8/6/2008&advt=1 )
~~~~~~~~~~~~~~~~~


ஆம்! ஒக்கேனக்கல் கர்நாடகத்துக்கே சொந்தம்...

ஒக்கேனக்கல் மட்டுமல்ல நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி மாவட்டங்கள் முழுவதுமே கர்நாடகாவுக்கே சொந்தம்!

அதுபோல் வேலூர், காஞ்சிபுரம்,திருவள்ளூர், சென்னை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள் ஆந்திராவுக்கே!

கோவை, தேனி, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் முழுமையும் கேரளாவுக்கே சொந்தம்.

நாகை, கடலூர், பெரம்பலூர், அரியலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள் புதுவைக்கு உரிமையானவை!

(விரும்பினால் ஒரிசாவும், கோவாவும் கூட ஆளுக்கு 3 மாவட்டங்களைக் கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம்...)

எனவே மத்திய அரசு தலையிட்டு இந்த மாநிலங்களுக்கு விரைவில் நியாயம் கிடைக்க ஆவன செய்யவேண்டும்..

Tuesday, August 5, 2008

எச்சரிக்கை! - சிங்கை சந்திப்பில் கலந்துகொண்டவர்களுக்கு

கடந்த ஞாயிறன்று சிங்கையில் பதிவர் சந்திப்பு நடந்தது தாங்கள் அனைவரும் அறிந்த செய்தியே.
சந்திப்பு இனிதே நடந்து முடிந்தது. அதில் எந்தப் பிரச்சனையும் இல்லை.

ஆனால், சந்திப்பில் ஒரு மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தீர்மானத்தை பதிவர்கள் யாரும் சரியாகச் செயல்படுத்தவில்லை என்று ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது..

அந்தத் தீர்மானம் இது தான்:
3. கலந்து கொண்ட பதிவர்களுக்கு ஒவ்வொரு பதிவரும் 'மீ த பர்ஸ்ட்' பின்னூட்டம் நிபந்தனையின்றி போடவேண்டும்.

இதைப் பதிவர்களில் பலர் செயல்படுத்தவில்லை எனத் தெரிகிறது.
அவர்களுக்கு இது கடைசி எச்சரிக்கை.. விரைவில் "மீ த ஃபர்ஸ்ட்" பின்னூட்டங்காள் போட ஆரம்பிக்குமாறு கடும் எச்சரிக்கை விடுகிறேன்.

இதை செயல் படுத்தாதவர்களுக்கு தண்டனை:

"அடுத்த சந்திப்பில் பாரி.அரசுவுடன், அவர் விரும்பும் தலைப்பில் ஒருமணி நேரம் விவாதிக்க வேண்டும்.

பாரி.அரசு மீ த ஃபர்ஸ்ட் பின்னூட்டம் போடத்தவறினால் ஒரு மணி நேரம் அவர் மௌணவிரதம் இருக்கவேண்டும். "


அதிக மீ த ஃபர்ஸ்ட் பின்னூட்டங்கள் போடுவேருக்கு அடுத்த சந்திப்பில்
"பதிவர் மைஃபிரண்ட் பின்னூட்டி விருது" வழங்கப்படும். இவ்விருது பெறுபவருக்கு அல்வா கொஞ்சம் அதிகமாகத் தரப்படும்...

குறிப்பு: பதிவு குறித்து போடப்படும் பின்னூட்டங்கள் "மீ த ஃபஸ்ட்" பின்னூட்டமாக ஏற்றுக் கொள்ளப்படாது. ஒரு பதிவில் எத்தனை பின்னூட்டங்களும் போடலாம். ஆனால் அதில் ஒன்றாவது "மீ த ஃபஸ்ட்" பின்னூட்டமாக இருக்கவேண்டும்

சூப்பர் ஸ்டார் வாழ்க!!! அவரது புகழ் ஓங்குக!!!

நன்றி

Monday, August 4, 2008

Urgent requestu to ICC - in English (Thanks to ILA) :)

இன்று காலை ICC க்கு ஒரு கடிதம் தமிழில் எழுதினேன். இந்த மரமண்டைக்கு ICC நிர்வாகிகள் யாருக்கும் தமிழ் தெரியாது என்ற உண்மை தெரியாமல் போய்விட்டது. அதனால் நான் மனு கொடுத்து 4 மணி நேரம் ஆகியும் இன்னும் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்ல.

நம்ம இளா சொல்லித்தான் அவங்களுக்கு தமிழ் தெரியாது என்ற விசயமே தெரியவந்தது.

ஆனால் எனக்கு ஆங்கிலம் சரியாத் தெரியாது என்பதால் ஆங்கிலம் நன்கு தெரிந்த ஒரு மொழிபெயர்ப்பாளரிடம் பதிவைக் கொடுத்து மொழிபெயர்த்துத் தரச்சொன்னேன். இதோ இது தான் அவர் மொழிபெயர்த்துத் தந்தது. அந்த மொழிபெயர்ப்பாளருக்கு மிக்க நன்றி!


Dear ICC officersulu,
world crickettu history's only himalaya our leader Sachin Ramesh Tendulkaru is you know.

he westindies teams brain laralu test recordu break 96 runus only more requiredu,

so, he quickly lara's recordu broke, qucikly to Namibia or Permuda team give test statusu and arrange a test seriesu having atleastu 5 test matchesu, i requestu you.

if requiredu, for this one 100crore sachin fans signatureu i am ready to get for this.

so pleasu arange a test series againstu Namibia or Permuda teamu.

by,
sachin veriyan

இந்த ப்ளாக்கர் சரியாவே வேலை செய்ய மாட்டேன்னுதுங்க.. அவரு எவ்வளவு பெரிய மொழிபெயர்ப்பாளர். அவரது ஆங்கிலத்தில் spellingu mistakeu எதுவுமே இருக்காது. ஆனால் இந்த ப்ளாக்கர் அங்கங்க சிகப்புக் கோடு போட்டு spellingu mistakeu(இதுக்குக் கூட சிகப்புக் கோடு போடுதுங்க.:(. ) இருக்குன்னு சொல்லுதுங்க.... என்ன கொடுமை இது?

ICCக்கு ஒரு அவசர வேண்டுகோள்!!



அன்புள்ள ஐசிசி நிர்வாகிகளுக்கு,

வணக்கம்.

உலக கிரிக்கட் வரலாற்றின் ஒரே இமயம் எங்கள் தலைவர் சச்சின் ரமேஸ் தெண்டுல்கர் என்பது தாங்கள் அறிந்ததே.

அவர் மேற்கிந்தியத்தீவுகள் அணியின் பிரயன் லாரா அவர்களின் டெஸ்ட் சாதனையை முறியடிக்க இன்னும் 96 ஓட்டங்கள் தேவைப் படுகிறது.

எனவே அவர் விரைவில் லாராவின் சாதனையை முறியடிக்கும் வகையில், விரைவில் நமீபியா அல்லது பெர்முடா அணிக்குத் தற்காலிகமாகவேனும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் தகுதி தந்து, குறைந்தது 5 போட்டிகளாவது கொண்ட டெஸ்ட் தொடரை உடனே ஏற்பாடு செய்யவேண்டும் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

தேவைப்பட்டால், இதற்காக ஒரு 100கோடி சச்சின் ரசிகர்களிடமிருந்து கையெழுத்து வாங்கித் தரவும் நான் தயாராக இருக்கிறேன்.

எனவே தயவு செய்து விரைவில் நமீபியா அல்லது பெர்முடா அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட் தொடரை ஏற்பாடு செய்து தர வேண்டுகிறேன்.

இப்படிக்கு,
சச்சின் வெறியன்.

Sunday, August 3, 2008

குசேலன் - முதல் நாள் முதல் காட்சி - காணொளி

குசேலன் - முதல் நாள் முதல் காட்சி - காணொளி



குசேலனின் புண்ணியத்தில் முதல் காணொளிப் பதிவும் போட்டுவிட்டேன்...... :)

நன்றி: indiainteracts.com

Saturday, August 2, 2008

குசேலன் - ஒரு மாறுபட்ட பார்வை!



நல்ல சினிமா விரும்பிகளுக்காகவும் தன்னால் ஒரு படம் கொடுக்க முடியும் என சூப்பர்ஸ்டார் ரஜினி நிரூபித்திருக்கும் படம் குசேலன்.

ரஜினியின் தரமான படங்கள் எனப் பட்டியல் போடுபவர்கள் தாராளமாய் இந்தப் படத்துக்கு முதலிடம் கொடுக்கலாம்.

மலையாள ரீமேக்காக இருந்தாலும், குசேலனை தன் சிறந்த படமாகச் சொல்லி மார்த் தட்டிக் கொள்ளலாம் இயக்குநர் பி.வாசு.
-நன்றி: தட்ஸ்தமிழ்
**************************************



இனி குசேலன் என் பார்வையில்:

* சூப்பர்ஸ்டார் தான் சூப்பர்ஸ்டார் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். உச்ச நடிகரின் நடிப்பு ஒவ்வொரு படத்திலும் உச்சமடைந்து கொண்டே இருக்கிறது. சுந்தர்ராஜனுக்கு அவர் தரும் பதில்கள் ஒவ்வொன்றும் கலக்கல்!

* நயன்தாரா வழக்கம்போலக் கலக்கியுள்ளார். விஜய் டீவி தனக்குத் தந்த விருதுக்குத் (most entertainer)தகுதியானவர் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். படத்துக்குப் படம் இவரது நடிப்பு மெருகேறி வருகிறது.

* பசுபதி - வெயில் படத்திற்குப் பின் மீண்டும் ஒருமுறை கலக்கியிருக்கிறார். ஏழை சவரத் தொழிலாளியாக வாழ்ந்துகாட்டியுள்ளார். ரஜினியும் பசுபதியும் சந்திக்கும் காட்சியில் நடிப்பில் ஒருவரை ஒருவர் மிஞ்சியுள்ளனர்.

* மீனா வறுமையிலும் செம்மையாக, கணவனுக்கு ஏற்ற மனைவியாக, அப்படியே புராணகால சுசீலையின் மறு உருவமாக வாழ்ந்து காட்டியுள்ளார்.
(சுசீலையைப் பற்றி அறியாதவர்கள் இங்கு கிளிக்கி அவரைப் பற்றித் தெரிந்துகொள்ளவும்)

* வடிவேலு, சந்தானம், சந்தானபாரதி மற்றும் லிவிங்ஸ்டன் & கோவின் நகைச்சுவைகள் வயிறு குலுங்கச் சிரிக்கவைக்கின்றன. ஆபாசம், இரட்டை அர்த்தம் ஏதும் இல்லாத அருமையான நகைச்சுவை!

* சில காட்சிகளே வந்தாலும் கலக்கிச் சென்றிருக்கிறார் பிரபு.

* ஒவ்வொரு நடிகரும் போட்டி போட்டுக்கொண்டு வாழ்ந்திருக்கின்றனர்.

* அருமையான படத்தை மேலும் சிறப்பாக்கும் பாடல்களும் இசையும்.

மொத்தத்தில் ஒரு கலக்கலான படம். குறைந்தது 4 முறையாவது பார்க்கலாம்..

**********************************

குறிப்புகள் சில:

1. இவ்வளவு அருமையான படத்தினைக் குறை கூறி வரும் விமர்சனங்களைப் பார்க்கும் போது, ரஜினி மீதான அவர்களின் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியே தெரிகிறது.

2. மக்கள் வலையுலகில் வரும் விமர்சனங்களை நம்பாமல், தட்ஸ்தமிழ் போன்ற நல்ல தளங்கள், குமுதம் போன்ற நல்ல இதழ்களில் வரும் விமர்சனங்களை மட்டும் நம்பி, பெருவாரியாத் திரையரங்கிற்குச் சென்று படத்தை ரசித்து மாபெரும் வெற்றியடையச் செய்யவேண்டும் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

3. சூப்பர்ஸ்டாரின் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு தருவோர் தமிழ் மக்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்தமுறை ஐதராபாத்தில் தந்த பேட்டியில் மேலும் அதிக வியர்வைத்துளிகள் சிந்திவிட்டதால், கொஞ்சம் அதிகமாகப் போட்டு ஒன்றரைப் பவுன் தங்கக்காசாகத் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்...

4. படத்தைப் பார்த்துத் தான் விமர்சனம் எழுதினாயா என்று என்னைப் பார்த்துக் கேள்வி கேட்போருக்கு, என் ஒரே பதில் :
படம் பார்த்துத்தான் திரை விமர்சனம் எழுதவேண்டும் என்று எந்த விதியும் சொல்லவில்லை!

**********************************

என் ஒருவருட வலையுலக வாழ்வில் நான் எழுதிய முதல் திரைவிமர்சனம் இது. எனவே இதை பரிசல்காரனின் "முதல்" தொடர்விளையாட்டிற்கு என் இடுகையாக அறிவிக்கிறேன்..

Friday, August 1, 2008

இந்த மாதம் குசேலன் மாதம்!



இந்தப் படத்துக்கு விளக்கம் தேவையில்லை!!!
:)

Thursday, July 31, 2008

குசேலன் - இதற்கு மேலும் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டுமா?

ஹைதாராபாத்: ஒகேனக்கல் விவகாரத்தில் நான் தவறாகப் பேசிவிட்டேன். இனி மீண்டும் அந்தத் தவறை திரும்பச் செய்ய மாட்டேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

நாளை ரஜினியின் குசேலன் படம் ரிலீஸ் ஆகிறது. ஆனால், ஒகேனக்கல் விவகாரத்தில் கன்னட மக்களை உதைக்க வேண்டும் என்று பேசிய ரஜினி பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டால்தான் குசேலன் படத்தை ரிலீஸ் செய்ய விடுவோம் என்று கன்னட ரக்ஷ்ன வேதிகே மற்றும் கன்னட சளுவளி வாட்டாள் பக்ஷா ஆகிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந் நிலையில் ஹைதராபாத்தில் இன்று கன்னட தொலைக்காட்சிக்கு கன்னடத்தில் பேட்டியளித்த ரஜினி,

ஒகேனக்கல் விவகாரத்துக்காக சென்னையில் நடந்த உண்ணாவிரதத்தில், பொது மக்களின் சொத்துக்களை நாசமாக்கியவர்களைத் தான் உதைக்க வேண்டும் என்று சொன்னேன். வேறு யாரையும் அப்படிச் சொல்லவில்லை.

குசேலன் படத்தை தயவுசெய்து வெளியிட அனுமதியுங்கள்.

நான் கர்நாடகத்தில் ஒரு கண்டக்டராக இருந்தேன் என்பதை இன்றும் மறக்கவில்லை.

இந்த விவகாரத்தில் நான் பாடம் கற்றுக் கொண்டுவிட்டேன். கன்னட மக்கள் எனக்கு பாடம் கற்றுத் தந்துவிட்டனர். இனி அதே தவறை திரும்பச் செய்ய
மாட்டேன்.

இனி எதி்ர்காலத்தில் யார் மனதும் புண்படாமல் பேசுவேன் என்றார்.
.......

நன்றி: தட்ஸ் தமிழ்.

இதற்கு மேலும் குசேலன் படத்தைத் தமிழர்கள் கட்டாயம் பார்க்கவேண்டுமா?
:(


சூப்பர் பல்டி ஸ்டார் வாழ்க!!!!!!!!!

குறிப்பு:
கிரி மற்றும் மற்ற ரசிகர்கள், மன்னிக்கவும்.. அவரது இன்றய பேட்டியைப் பார்த்த யாருக்கும் இந்தக் கோவம் வரத்தான் செய்யும். இதற்குப் பதில் அவர் அன்று கமல் மாதிரியே பட்டும் படாமலும் பேசியிருக்கலாம்... :((

Wednesday, July 30, 2008

குசேலன்! - சின்ன ரஜினி "கிரி" அவர்களுக்காக!!

இந்த இடுகை சின்னக்கோடம்பாக்கத்தின் சிங்கம், சின்ன ரஜினி "கிரி" அவர்களுக்காக!!
விரைவில் குசேலன் வெளிவரவுள்ளதால் அனைவரையும் பற்றிக்கொண்டுள்ள குசேலன் பரபரப்பு என்னையும் தொற்றிக்கொண்டுவிட்டதால், குசேலன் ஜோதியில் கலந்துகொள்ள என் முதல் குசேலன் இடுகை!!!!!!
***************************

குசேலனின் இயற்பெயர் சுதாமா. இவர் ஏழ்மையின் காரணமாக எந்நேரமும் கந்தலாடைகளையே அணிந்திருந்ததால் இவருக்குக் குசேலன் என்ற பட்டப் பெயர் வந்தது. அனைவரும் இவரைக் குசேலன் என்றே அழைத்து வந்தனர்.

சாந்தீபனி முனிவரிடம் கண்ணன், குசேலன் இருவரும் கல்வி கற்றனர். அப்போதிருந்து இருவரும் நல்ல நண்பர்கள்.

இவரது மனைவி சுசீலை. இவர்களுக்கு 27 குழந்தைகள். இவரது குடும்பத்தில் வறுமை தாண்டவமாடியது. தினந்தோரும் காட்டிற்குச் சென்று குசேலர் தானியங்கள் சேகரித்து எடுத்து வருவார். அதை வைத்து கஞ்சி சமைத்து குழந்தைகளுக்குத் தருவார். அது அவர்களுக்குக் கால் வயிற்றுக்குக் கூட இருக்காது.

குழந்தைகளின் பசியைப் பொறுக்காத சுசீலை, குசேலரிடம் கண்ணனிடம் சென்று உதவி கேட்குமாறு வேண்டினாள். குசேலரும் வேறு வழியின்றி ஒத்துக்கொண்டார்.

அன்றிலிருந்து அடுத்த சில நாட்கள் குசேலர் காட்டிலிருந்து சேகரித்துவரும் தானியத்தில் தன் பகுதியை அப்படியே சேகரித்து வைத்தாள் சுசீலை. அந்தத் தானியங்கள் கொண்டு கண்ணனுக்குத் தர, அவல் தயார்செய்து குசேலனிடம் தந்து அனுப்பினாள்.

பல மலைகளும் பல கடல்களும் கடந்து துவாரகை சென்றடைந்தார் குசேலர். குசேலர் வந்த செய்தி கேட்டு ஓடோடி வந்து வரவேற்று உபச்சாரம் செய்தார். குசேலன் தான் கொண்டு வந்த அவலை அவருக்குத் தந்தார். ஒரு பிடி அவலை எடுத்து கண்ணன் சுவைத்தார். அந்த ஒரு பிடி அவலுக்கே குசேலனுக்கு உலகம் கொள்ளாத செல்வம் சேர்ந்துவிட்டது.

கண்ணனிடம் உதவி கேக்க மனமின்றி, கண்ண்னிடம் கேட்காமலேயே விடைபெற்றுத் திரும்பினார். அவர் அவரது ஊருக்குத் திரும்பும் வழியில் திடீரென்று அவரது கந்தலாடைகள் விலையுயர்ந்த ஆடையாக மாறியது. உடலெங்கும் நகைகள் பளபளத்தன. கிழிந்த வஸ்திரம் பட்டு வஸ்திரமானது.
அவரது குடிசை இருந்த இடத்தில் மாளிகை இருந்தது. அந்த மாளிகையில் சுசீலை அவரை வரவேற்றார்.

இவ்வளவு செல்வத்தைப் பார்த்து குசேலருக்கு உள்ளுற ஒரு பயம் வந்தது. ஒரு நாள் யாரும் இல்லாத வேளையிலே, ஒர் அறையில் நுழைந்து இறைவனை மனமுருக வேண்டினார்.

திருமால் குசேலரின் முன் காட்சியளித்தார். குசேலன் அவரிடம், "செல்வத்தைக் காட்டி என் சிந்தையை மயக்காதே. செல்வம் எனக்கு வேண்டாம். உன் திருவடியே வேண்டும்" என வேண்டினார்.

இதற்கு திருமால், "குசேலா! செல்வத்தைப் பழிக்காதே. உன்னைப் போன்றோர் எந்த நிலையிலும் என்னை மறக்க மாட்டார்கள். மன்னுலகில் சில் காலம் மகிழ்ச்சியுடன் இருந்துவிட்டு ஒரு நாள் என் திருவடிகளை அடைவாயாக!" என்று வரமளித்து மறைந்தார்.

அவ்வாறே குசேலர் சிலகாலம் செல்வத்தோடும், ஆண்டவனை மறவாச் சிந்தையோடும் வாழ்ந்திருந்து ஒருநாள் இவ்வுலக வாழ்வு நீத்து திருமாலின் திருவடி சேர்ந்தார்.
*****************************************
இதுதான் குசேலனின் கதை!!!!
நன்றி : குசேலர் கதை (ஆசிரியர்: அசுரதாசன்.)
(ஹிஹிஹி... இதுக்காக நூலகம் சென்று சிறுவர்கதையெல்லாம் தேடி இந்தப் புத்தகத்தை எடுத்தேன்....)

*****************************************

Monday, July 28, 2008

உருகுவேயில் பாரி.அரசு ஏன் நேசனல் பார்டியை ஆதரிக்கிறார்?

சிங்கையில் இந்த வார இறுதியில் நடக்கவிருக்கும் பதிவர் சந்திப்பில், சென்ற சந்திப்பில் எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்த பதிவர் பாரி.அரசு அவர்கள்,
உருகுவேயில் தான் ஏன் எப்போதும் எதிர்க்கட்சியான நேசனல் பார்டியை மட்டுமே ஆதரிக்கிறார் என்பது குறித்து ஒரு 4 மணி நேரம் சிற்றுரையாற்றுவார்.

பின் கோவியார் ஆளும் ப்ராட் ப்ரண்ட்டைத் தான் ஏன் ஆதரிக்கிறார் என்பது குறித்தும் பேசவிருக்கிறார்....

பதிவர் ஜீவன் "ஒயின் பாட்டிலைத் திறப்பது எப்படி?" என்பது குறித்து விளக்கலாம் என்றும் தெரிகிறது...

சின்னக்கோடம்பாக்கம் கிரியும் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார்...

சிங்கை நாதன் அவரது பதிவு எது என்பதை இந்த சந்திப்பில் வெளிப்படுத்தப் போகிறாராம்...

ஜோசப் பால்ராஜ் மற்றும் கோவி.கண்ணன் ஏற்பாடு செய்துள்ள இந்த சந்திப்பிற்குப் பதிவர்கள் அனைவரும் பெருந்திரளாகத் திரண்டு வந்து கலந்துகொள்ளவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்!!

இடம் : Ang Mo Kio Town Garden West (அங்-மோ-கியோ நூலகம் எதிரில்)
நாள் : 2008, ஆகஸ்ட்3, ஞாயிற்றுக் கிழமை,
மாலை 4:30 முதல் எல்லேருக்கும் எப்பேது கிளம்பவேண்டும் என்று
தோன்றுகிறதோ அப்போது வரை

எப்படி வருவது?: அங்-மோ-கியோ பேருந்து நிலையத்தில் இருந்து
பேருந்து எண் 86இல் நான்காவது/ஐந்தாவது நிறுத்தம்.

சந்திப்பு குறித்த ஜோசப் பால்ராஜின் இடுகை : http://maraneri.blogspot.com/2008/07/blog-post_3707.html

கோவியாரின் இடுகை:
http://govikannan.blogspot.com/2008/07/blog-post_18.html

Thursday, July 24, 2008

தட்ஸ்தமிழ் கும்மி!!!

வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப்போகும்!!!
தட்ஸ்தமிழ் வாசகர் கருத்துக்களைப் படியுங்கள்! வாய்விட்டுச் சிரியுங்கள்!!!
இது "ரசினி ரசிகன்" என்ற பெயரில் வெளியாகியிருக்கும் ஒரு கருத்து:

பதிவு செய்தவர்: ரசினி ரசிகன் பதிவு நேரம்: 24 Jul 2008 02:09 am

தலைவர் ரஜினி வாய்ஸ் கொடுத்ததால்தான் காங்கிரஸ் அரசு தப்பியது. அமெரிக்க தேர்தலில் வாய்ஸ் கொடுக்கச் சொல்லி ஒபாமா ஆல்மேல் ஆல்விடுகிறார். நேரில்வந்து ஆசி வாங்க மெக்கெய்ன் வரப்போகிறார். இந்த ஒலகமே தலைவர் ரசினியாலதான் சுத்துது.

http://thatstamil.oneindia.in/news/2008/07/23/india-to-begin-lobbying-among-nsg-nations.html#cmntTop

இது ஏறத்தாழ தட்ஸ்தமிழின் எல்லாச் செய்திகளிலும் பதியப்பட்டுள்ளது.... :P

தட்ஸ்தமிழின் கருத்துச்சுதந்திரம் வாழ்க!!!!
"வாசகர் கருத்துகளை" சிறப்பான வகையில் மட்டுறுத்தும் தட்ஸ்தமிழுக்கு வாழ்த்துக்கள்!!!
:)))

Wednesday, July 23, 2008

மன்மோகன் அரசின் கோமாளிக் கூத்து

மன்மோகன் அரசின் கோமாளிக் கூத்து.
ஆண்டனோ மொய்னோவின் பிடியில் இந்திய ஜனநாயகம்.
மன்மோகன்சிங் ஏன் ராஜினாமா செய்யவேண்டும்?
மன்மோகன்சிங் ஏன் ராஜினாமா செய்யக்கூடாது?
சதிசெய்யும் பா.ஜ.க.
அத்வானி ரொம்ப ஒழுங்கா?
பிரதமர் கொத்தடிமையா?
மக்களை ஏமாற்றும் மத்திய அரசு..
விலைபோகாத பா.ஜ.க கடமை வீரர்கள்!!!!
மாயாவதியை மிரட்டும் சி.பி.ஐ
.....
.........
.............
........
.....
இப்படி வரப்போகும் நூற்றுக்கணக்கான இடுகைகளுக்காகக் காத்திருங்கள்!!!!!!

பின்னூட்டிகள் கவலைப் படவேண்டாம்.. நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான இடுகைகளுக்கான பின்னூட்டங்கள், பின்னூட்ட மென்பொருளில் சேர்க்கப்பட்டுள்ளது...
ஏற்கனவே பயனர் கணக்கு வைத்திருப்போர் இந்தப் புதிய வெளியீட்டை, கீழ்க்கண்ட முகவரியில் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்...
https://dubakoor.com/commentstemplate420.4.2.0/download.html

புதிய பயனர்கள் இங்கு பதிவு செய்துகொள்ளலாம்...
https://dubakoor.com/register.htm

குறிப்பு: மேலே உள்ள தலைப்புகளில் சிலவற்றை மண்டபத்தில் எனக்கு எழுதித் தந்தவருக்கு நன்றி!!!

Wednesday, July 9, 2008

பெண் = பிரச்சனைகள் - பாரி.அரசுவின் ஆணாதிக்க சிந்தனை!!!

நேற்று காலை பாரி.அரசு ஒரு forwarded email அனுப்பினார். ஏன்ய்யா பழைய mail எல்லாம் forward பண்ணுறீங்கன்னு கேட்டா, "எந்த email அனுப்பினாலும் ஏற்கனவே வந்துவிட்டது என்று சொல்வோரை என்ன செய்யலாம்?" ன்னு திட்டுறார்... எனவே எல்லாருக்கும் சொல்லிக்கிறேன்.. அந்த மெயில் இதுவரை எனக்கு வரவில்லை.. பாரி. அரசுதான் எனக்கு அனுப்பினார்..
***************
இதோ அவர் அனுப்பிய emailஇல் இருந்த படம்:



இதை அனைவருக்கும் forward செய்து கொண்டிருக்கும் பாரி.அரசுவின் ஆணாதிக்க சிந்தனைக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்!!!

நீங்களும் உங்கள் கண்டனங்களைப் பின்னூட்டத்தில் தெரிவிகுமாறு கேட்டுக் கொள்கிறேன்!!!

Tuesday, July 8, 2008

காத்திருந்த காதலி-5

வடகரை வேலனின் - காத்திருந்த காதலி - 1
பரிசல்காரனின் - காத்திருந்த காதலி - 2
வெய்யிலானின் - காத்திருந்த காதலி - 3
கிரியின் - காத்திருந்த காதலி - 4

இந்தத் தொடரைத் தொடர அழைத்த கிரிக்கு நன்றி... (ஆனா கிரி அண்ணே..... என் மேல என்ன கோவம்??? கதையை பயங்கரமாக் குழப்பி என்கிட்டத் தந்துட்டீங்க.... இதுல நான் என்ன தொடரன்னே புரியலையே.....:( )

கிரி, கோபிக்குச் செல்லும் அவசரத்தில், வெயிலான் தொடங்கிவைத்த ஒரு தொலைபேசி அழைப்பை முடிக்காமல், கதை நாயகன், நாயகி இருவரையும் அம்போவென்று விட்டுவிட்டு கதையை மட்டும் கோபிக்குத் தூக்கிச் சென்றுவிட்டார்....:P (எனக்குக் கூடத்தான் உடனே ஆமத்தூர் போகனும் போல இருக்கு... அதுக்காக இனி கதையை அங்க கொண்டு போகமுடியாதே... :P)

வெயிலான் தொடங்கிவைத்த தொலைபேசி அழைப்புகளை முடித்துவிட்டு, கிரி தொடங்கிய அழைப்பையும் தொடரின் இப்பகுதியில் முடிக்கிறேன்..

இனி கதை
..............................
கோபி:
டேய் கா...கார்த்திக்க் ..அம்மாவின் குரல் குழறியது..
எனக்கு கலவரமாகியது..அதற்குள் கற்பனை எங்கெங்கோ ஓட..
அப்ப்ப்...பாவுக்கு ....அதற்குள் லைன் கட் ஆகியது..
இப்போது சுத்தமாக சிக்னல் இல்லை...பதட்டத்தோடு வீடு நோக்கி வண்டியை விரட்டினான்..

வழியில் மனமெல்லாம் ஒரே கவலை. கார்த்திக்கின் தந்தையும் தாயும் ஒரு விபத்தில் 10 வருடங்களுக்கு முன் இறந்ததில் இருந்து அப்பா அம்மா இல்லாத குறையே தெரியாமல் கார்த்திக்கை, சங்கரின் அப்பாவும் அம்மாவும் வளர்த்து வருகின்றனர்.

ஒரு பக்கம் சங்கருக்கு விபத்து, மறுபக்கம் அப்பாவின் உடல்நிலையும் சரியில்லை.... அப்பாவுக்கு ஒன்றும் ஆகியிருக்கக் கூடாது என வேண்டிக்கொண்டே வீட்டுக்குச் சென்றான்.

உள்ளே படுக்கையில் படுத்திருந்த அப்பாவைப் பார்த்ததும் கொஞ்சம் நிம்மதியடைந்தான். அவனைப் பார்த்ததும் படுக்கையில் இருந்து எழுந்த அப்பா, சங்கர் எப்படி இருக்கிறான்? அவனைத் தனியா விட்டுட்டு ஏன் வந்தாய் எனப் புலம்பத் தொடங்கிவிட்டார்.

கார்த்திக் எவ்வளவு சமாதானம் செய்தாலும் கேட்காமல் உடனே சங்கரைப் பார்க்கவேண்டும் என அடம் பிடிக்கத் தொடங்கிவிட்டார்..
கார்த்திக்கும் வேறு வழியில்லாமல் ரயில்வேயில் வேலைபார்க்கும் நண்பனின் உதவியுடன் தட்கலில் அன்று இரவுக்கே சென்னைக்கு இரயிலில் பயணச்சீட்டு எடுத்துவிட்டான்..
*****************************************************
சென்னை:
'இந்து' வலைத்தளத்தில் BLOG பற்றி வந்த செய்தியை படித்துக் கொண்டிருந்த கெளரியின் அப்பா, மேசை மேல் இருந்த செல்ஃபோன் திரையில் யார் கூப்பிடுவது? என திரும்பிப் பார்க்கிறார்.

Irudhayaraj calling…….

ம்ம்.. சொல்லுடா சங்கருக்கு எப்படி இருக்கு?
நேர்ல வாடா சொல்றேன்..
சரிடா... கெளரி கிட்ட எதுவும் சொல்லிடாத பயந்துடுவா.. நான் இப்ப அங்க வரேன்..
.....................

இல்லைங்க! சாப்பாடு அனுப்பி அரை மணி நேரம் தான் ஆகுது, இன்னொரு பத்து நிமிசத்துல வந்துடுவாங்க தாமதத்திற்கு மன்னித்து விடுங்க.
கெளரி, சங்கரின் அலுவலகதைத் தொடர்புகொண்டு சங்கருக்கு நடந்த விபத்தைப் பற்றி சொல்லிவிட்டு அனைத்து ஆர்டர்களையும் சரியாக அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொண்டாள்.

டாக்டர் இருதயராஜ் அறையில் இருந்து வெளியே வந்தார்..
அங்கிள் சங்கருக்கு இப்ப எப்படி இருக்கு..
ஒன்னும் பிரச்சனை இல்லைம்மா...விரைவில் சரியாகிரும்.. நீ கிளம்பு.. நான் பார்த்துக்கிறேன்.. அப்பாவும் இப்ப வந்துருவார்.
இல்ல அங்கிள் நான் இருக்கேன்... அப்பா வந்ததும் நான் கிளம்புறேன்... சங்கர் ஆபீஸ் போய் ஆர்டர் எல்லாம் சரியா டெலிவரி பண்ணுறாங்களான்னு மேற்பார்வை பார்க்கனும்.. அதனால அப்பா வந்ததும் கிளம்புறேன்..
சரிம்மா..

கெளரியின் அப்பா 10 நிமிடத்தில் வந்து சேர்ந்தார்.
நீ கிளம்பும்மா....நான் பார்த்துக்குறேன்..
சரிப்பா நான் நேரா சங்கர் ஆபீஸ் போய் ஆர்டர் எல்லாம் சரியா டெலிவரி பண்ணீட்டாங்களான்னு பார்த்துட்டு அப்படியே வீட்டுக்குக் கிளம்புறேன்..

கெளரி மருத்துவமனையை விட்டு வெளியேறிய பின்..

சொல்டா... சங்கருக்கு எப்படி இருக்கு? ரெம்ப கிரிட்டிக்கலா? எப்ப நினைவு திரும்பும்?
ம்ம்ம்...உள்ள வாடா சொல்றேன்....

என்ன சொன்னார் என்பதை டிபிசிடி தொடருவார்...

*****************************************************************

அடுத்து தொடரைத் தொடருவோருக்கு ஒரு வேண்டுகோள்...
கதையை எங்கு கொண்டு சென்றாலும் கதாநாயகன் மற்றும் கதாநாயகி (சங்கர் & கெளரி)யைச் சுற்றியே தொடருமாறு கேட்டுக்கொள்கிறேன்...

********************************************

Monday, July 7, 2008

கோவியாருக்கு ஒரு கேள்வி!!

நானும் ஒரு தொடர் விளையாட்டு ஆரம்பிக்கப் போறேன்!!!!!!

இதற்கான விதிமுறைகள்:

1. யாராவது ஒரு பதிவருக்கு ஒரு கேள்வி கேட்க வேண்டும்.

2. கேள்வி அறிவியல் பூர்வமாகவும், அறிவுப் பூர்வமானதாகவும் இருக்க வேண்டும்.(எ.கா: கீழே நான் கேட்டிருக்கும் கேள்வி.)

3. இரண்டு நாட்களுக்குள் பதில் அளித்துவிட்டு, பிடித்த அல்லது பிடிக்காத ஒரு பதிவரிடம் கேள்வி கேட்கவேண்டும்

4. ஒரு கேள்வி மட்டுமே கேட்கவேண்டும்.

5. இந்தச் சங்கிலித் தொடர் தொடங்கிய இடத்திற்கு மீண்டும் வரக்கூடாது... (அதாவது என்னிடம் யாரும் கேள்வி கேட்கக் கூடாது.. :) )

6. கேள்வி எந்த அளவுக்கு அறிவுப் பூர்வமாக இருக்கிறதோ அந்த அளவு பதிலும் அறிவுப் பூர்வமாக இருக்க வேண்டும்

7. பதில் விரிவானதாகவும், 50 வரிகளுக்குக் குறையாமலும் இருக்க வேண்டும்..

இனி கோவி.கண்ணனுக்கு நான் கேட்கும் அறிவியல் பூர்வமான/ அறிவுப் பூர்வமான கேள்வி:

காக்காவை நாம காக்கான்னு கூப்பிடுவதால், காக்கா "கா கா" ன்னு கத்துதா இல்லை, காக்கா "கா கா" ன்னு கத்துறதால, நாம காக்காவை காக்கா ன்னு கூப்பிடுறோமா?


பாக்கியராஜ் பதில் சொல்லமுடியாத இந்தக் கேள்விக்கு அண்ணன் என்ன பதில் சொல்றாருன்னு பார்ப்போம்...

கோவியாரே, விரைவில் பதில் சொல்லிவிட்டு யாரிடமாவது அடுத்த கேள்வியைக் கேளுங்கள்..

Saturday, July 5, 2008

இது ஒரு தொடர்கதை -1


இது ஒரு தொடர்கதை -1














தொடரும்.

Thursday, June 26, 2008

பின்னூட்ட டெம்ப்ளேட்டுகள் விற்பனைக்கு!!!!

தினந்தோறும் வெளியாகும் நூற்றுக்கணக்கான பதிவுகளுக்குப் பின்னூட்ட முடியாமல் திணறும் பதிவர்களில் ஒருவரா நீங்கள்? இதோ உங்களுக்காகவே இந்த சேவை!!!

அன்மையில் வெளியான தசாவதார விமர்ச்சனப் பதிவுகளுக்குப் என்ன பின்னூட்டுவதென்றே தெரியாமல் பல பதிவுகளுக்கு நான் பின்னூட்டவில்லை. இந்த நிலை வேறு யாருக்கும் இனி வராமல் இருக்க என்ன செய்யவேண்டும் என இரவு பகலாக சிந்தித்ததில் உருவானதே இந்த "பின்னூட்ட டெம்ப்ளேட் மென்பொருள்!!"

  • சிரிப்பான் பின்னூட்ட டெம்ப்ளேட்டுகள்

  • திரைப்பட விமர்ச்சனங்களுக்கான டெம்ப்ளேட்டுகள்
    • படத்தினைத் திட்டி வெளிவரும் பதிவுகளை ஆதரிக்கும் பின்னூட்ட டெம்ப்ளேட்டுகள்.

    • படத்தினைத் திட்டி வெளிவரும் பதிவுகளை எதிர்க்கும் பின்னூட்ட டெம்ப்ளேட்டுகள்.

    • படத்தினைப் பாராட்டி வெளிவரும் பதிவுகளை ஆதரிக்கும் பின்னூட்ட டெம்ளேட்டுகள்.

    • படத்தினைப் பாராட்டி வெளிவரும் பதிவுகளை எதிர்க்கும் பின்னூட்ட டெம்ப்ளேட்டுகள்

  • திமுக, அதிமுக உட்பட அனைத்துக் கட்சிகளையும் ஆதரித்து/எதிர்த்து வரும் பதிவுகளுக்கு ஆதரவான/எதிரான பின்னூட்ட டெம்ப்ளேட்டுகள்

  • சிறு கதைகளுக்கான பின்னூட்ட டெம்ளேட்டுகள்

  • தொடர்கதைகளுக்கான பின்னூட்ட டெம்ப்ளேட்டுகள்

  • கவிதைகளுக்கான பின்னூட்ட டெம்ப்ளேட்டுகள்

  • கவுஜைகளுக்கான பின்னூட்ட டெம்ப்ளேட்டுகள்

  • கவிதை/கவுஜை மாதிரிகளுக்கான பின்னூட்ட டெம்ப்ளேட்டுகள்

  • இறை மறுப்பு ஆதரவு/ எதிர்ப்புப் பதிவுகளுக்கான பின்னூட்ட டெம்ப்ளேட்டுகள்

  • ஆரிய/திராவிடப் பதிவுகளுக்கான பின்னூட்ட டெம்ப்ளேட்டுகள்.

  • பின்னூட்ட பாலா/பாலச்சந்தர் பின்னூட்ட டெம்ப்ளேட்டுகள்

  • கேள்வி பதில் பதிவுகளுக்கான கேள்விப் பின்னூட்ட டெம்ப்ளேட்டுகள்

  • ஸ்டார் பதிவர்களின் பதிவுகளுக்கான பின்னூட்ட டெம்ப்ளேட்டுகள

உட்பட 1970 வகைப் பதிவுகளுக்கான 13452587 பின்னூட்ட டெம்ப்ளேட்டுகளை இந்த மென்பொருள் வழங்குகிறது.


இந்த மென்பொருளின் விலை 1234 சிங்கை வெள்ளிகள் மட்டுமே!! ஏதேனும் முக்கிய நிகழ்ச்சிகள் (எ.கா : குசேலன் வெளியீடு) நடக்கும்போது அதற்கான சிறப்புப் பின்னூட்டங்களும் இம்மென்பொருளை வாங்குவோருக்கு இலவசமாய் அளிக்கப்படும்..


இந்த மென்பொருளை வாங்க விரும்புவோர் SG$1234 காசோலை அல்லது வரவோலை அல்லது உங்களுக்குப் பிடித்த ஏதோ ஒரு ஓலையாக கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும். உடனே உங்களுக்கு இந்த மென்பொருள் அஞ்சலில் அனுப்பப்படும்.


முகவரி:

பின்னூட்ட சேவை மையம்,

#123-12345,

1456,சிங்கப்பூர் முதல் குறுக்குச்சந்து,

சிங்கப்பூர் பிரதான சாலை,

சிங்கப்பூர் -12345678.


குறைந்த அளவு குறுந்தகடுகளே இருப்பதால் விரைவில் அனுகவும்!!!!


இந்த மென்பொருளை வாங்குவோர் தங்களுக்குக் கீழ் 2 பேரை சேர்த்தால் 25% பணம் திரும்பக் கிடைத்துவிடும். அந்த இரண்டு பேர் அவர்களுக்குக் கீழ் தலா இரண்டு பேரை சேர்த்தால் மேலும் ஒரு 12.5% பணம் திரும்பக் கிடைத்துவிடும். இப்படியே உங்களுக்கீழ் 12345 பேரை சேர்க்கும் போது நீங்கள் கோடீஸ்வரர் ஆகிவிடலாம்... விரைவில் இத் திட்டத்தில் சேர்ந்தால் விரைவில் கோடீஸ்வரர் ஆகலாம்... முந்துவீர்!!!!!!!

குறிப்பு:
இந்தப் பின்னூட்ட மென்பொருள் மூலம் போடப் படும் பின்னூட்டங்கள் பின்னூட்டிகளின் கருத்துக்களாகவே பதிவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த டெம்ப்ளேட் மூலம் போடப்படும் பின்னூட்டங்களுக்கு நிர்வாகம் பொறுப்பேற்காது!!! பின்னூட்டிகள் பின்னூட்டத்தைப் போடும் முன் சரிபார்த்துக் கொள்ளவும்!!!

Saturday, June 21, 2008

ஆத்தா கோபத்தில் இருந்து தப்பிப்பது எப்படி?

மலேசிய மாரியாத்தாவின் உக்கிரப் பார்வை என்பக்கம் திரும்பியுள்ளது..

எப்படித் தப்புவது என்றே தெரியவில்லை. யாராவது உதவுங்கள். ஆத்தாவின் கோபத்தில் இருந்து தப்ப என்ன செய்யவேண்டும் என யாராவது பரிகாரம் சொல்லுங்கள்.

நடந்தது என்ன?
வேற ஒன்னும் இல்லைங்க.. மலேசிய மாரியாத்தாவுக்கு பல்லைப் பிடுங்க அறுவை சிகிச்ச்சை நடக்கப்போகுதாம். அவங்க விரைவில் நலம் பெற வாழ்த்துக்களைத் தெரிவித்தேன். அந்தப் பதிவில் அப்படியே அவரது அருமை பெருமைகளை எல்லாம் கொஞ்சம் பாராட்டி எழுதியிருந்தேன். அவ்வளவுதான். இதுக்குப் போய் கோபப்பட்டு அலைபேசியில் காய்ச்சி எடுத்துட்டாங்க..

அவ்வளவுதான் முடிஞ்சதுன்னு நினைச்சா.. அங்க வந்து சிவாவும், நல்லவரும் இன்னும் சிலரும் கும்ம ஆரம்பிச்சாங்க... அதுக்கு வேற திட்டு.. என் அலைபேசியே அழுதுவிட்டது...

இது போதாதுன்னு இன்னும் 2 புல்லுருவிகள் இதை வைத்துப் பதிவிட்டு மேலும் கோபத்தை அதிகரிக்க வைத்துவிட்டனர்..

இதுல பாரி.அரசு இருக்காரே..... பதிவு போட்டு நம்ம முன்னோரையே கேவலப் படுத்தீட்டார்..

அண்ணே, எனக்கு அடுத்த வாரம் ஆப்புரேசன். அதுக்கு முன்னாடி தோசை வாங்கித்தாங்கன்னு ஆசையா தங்கச்சி கேட்டா, அதை வச்சுக் கும்மிப் பதிவு போடுறாரு கோவி... :(.. இதுல அவர் வருடக்கணக்கா தடை செய்து வச்சிருந்த அனானி/அதர் ஆப்சனைக் கூட கும்மிக்காக திறந்துவிடுறார்... இப்ப சொல்லுங்க ஆத்தாவுக்கு கோபம் கூடுமா.. கூடாதா? கோபம் கூடுது.. ஆனா எல்லாக் கோபமும் என்மேல தான் வருது அவங்களுக்கு...

எவ்வளவு கோவமுன்னா, ஊர்ல உலகத்துல இருக்குற எல்லாருக்கும் அனுப்பின அந்தப் பல்லு புகைப்படத்தைக் கூட எனக்கு அனுப்பல..... :(

இதுல அங்க போய் கும்மி அடிக்குறவங்க வேற..

அங்க விழுற ஒவ்வொரு கும்மிக்கும் இங்க எனக்குத் திட்டு.. கேட்டா, நான் தான் முதல்ல பதிவு போட்டு ஆரம்பிச்சு வைச்சேனாம்.. ஒரு வாழ்த்து சொன்னது இவ்வளவு பெரிய குத்தமா? :(

வலிக்குது காது. எவ்வளவு தான் திட்டு வாங்குறது... திட்டு வாங்கிக்கிட்டே சிரிக்கிறமாதிரி எவ்வளவு நேரம் தான் நடிக்கமுடியும்?

யாராவது சொல்லுங்களேன்... எப்படித் தப்பிக்கிறது ஆத்தாவின் உக்கிரப் பார்வையில் இருந்து? ஜோகூர் ஆத்தாவுக்கு கூழ் காய்ச்சி ஊற்றக் கூட தயார்.(ரவா தோசை தான் வேணுமின்னா அதுக்கும் தயார்...)

ஆத்தா அப்பாவிச் சிறுவனை மன்னித்து அருள் புரிவாயாக..... :P

மீண்டும் சொல்லிக்கிறேன்... அறுவை சிகிச்சை முடிந்து


இப்படி இருந்த துர்காவை


இப்படி ஆக்கீட்டாங்க எல்லாரும் சேர்ந்து... :(