Monday, March 24, 2008

அன்புள்ள அனானிக்கு

நீ தொடர்ந்து போட்டு வரும் பின்னூட்டங்களுக்கு நன்றி!
உன் பைத்தியம் முற்றும் முன் நல்ல மருத்துவரைப் பார்க்கவும்....


இந்தப் பின்னூட்டத்தை எத்தனை முறை போட்டாலும் நான் வெளியிட மாட்டேன்...

Anonymous has left a new comment on your post ....

So what Jagadeesan.How *************************** like you?Get lost you bastard.


வேறு எதாவது முயற்சித்துப் பார்க்கவும்...

கொஞ்சம் அரசு நிலமாம்...

நம்ம கேப்டன் விசயகாந்த் அய்யாவுக்கு, 28 ஏக்கர் நிலம் கொஞ்சம் அரசு நிலமாம்....
நான் மொத்தமாக வாங்கிய நிலத்தில் சிறிது அரசு நிலம் இருந்துள்ளது. அதை எடுத்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டேன். நான் ஆக்கிமிப்பு ஏதும் செய்யவில்லை என தேமுதிக தலைவர் விஜய்காந்த் கூறினார்.

மதுராந்தகம் அருகே விஜயகாந்த் 28 ஏக்கர் வரை அரசு நிலத்தை 'ஸ்வாகா' செய்துவிட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து அவர் போட்டிருந்த வேலிகளை பிடுங்கி எறிந்துவிட்டு நிலத்தை மீட்டனர் அதிகாரிகள். இதைத் தான் கொஞ்சம் அரசு நிலம் என்று கூறியுள்ளார் விஜய்காந்த்.

அந்த நிலத்திற்கான பத்திர பதிவின் போது அரசு நிலம் இருப்பதை யாரும் கூறவில்லை. இப்போது பிரச்சினையை ஏற்படுத்துகிறார்கள்.

http://thatstamil.oneindia.in/news/2008/03/24/tn-vijaykanth-accepts-encroaching-govt-land.html


பொதுவா எல்லாரும் 1 ஏக்கர் நிலம் வாங்கினாலும், அதைப் பற்றி முழுதாக விசாரித்துத் தான்
வாங்குவாங்க.. இவர் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் வாங்கும்போது விசாரிக்காம வாங்கீட்டாருன்னு சொல்லுவாராம், இதை எல்லாரும் நம்பவேண்டுமாம்...

அது சரி, ஊர்ல இவர் தவிர வேறு யாரும் அரசு நிலத்தை ஆக்ரமிப்பு செய்யவில்லையா என்ன? அரசின் கண்ணுக்கு இவரோட ஆக்ரமிப்பு மட்டும் தெரிவதேன்? இதே போல அதிரடியாய் மற்ற எல்லாரிடமும் இருக்கும் புறம்போக்கு நிலங்களையும் மீட்கலாமே?

புனிதப் போராட்டம்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் வரை புனித போராட்டம் தொடரும்.

இரு நடிகர்கள் கட்சி ஆரம்பித்திருக்கிறார்கள் அடிக்கடி மு.க. ஸ்டாலின் கூறுகிறார். எங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்கிறார். அவருக்கு நான் சொல்லிக் கொள்வது, அவரது தந்தை சினிமாவிற்கு கதை, வசனம் எழுதியவர் தானே.

இனிமேல் எங்களுக்கு கட்சி ஆரம்பிக்க தகுதி என்ன இருக்கிறது என்று கேட்பதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இதெல்லாம் நம்ம அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் அண்ணன் திருவாய் மலர்ந்தருளியது.

இங்க http://thatstamil.oneindia.in/news/2008/03/24/tn-sarathkumar-ridicules-stalin.html


விசயகாந்துக்காவது ஒரு இடம் கிடைத்தது, உங்களுக்கு அதுவும் கிடைக்காமப் போயிடப் போகுது....

Friday, March 21, 2008

கோவி. கண்ணன் அண்ணா.... வாழ்த்துக்கள்!!!!

கோவி.கண்ணன் அண்ணா நீங்க மீண்டும் வந்ததுக்கு வாழ்த்துக்கள்!!! கருத்துச் சொல்வதில் உங்கள் பழய வேகத்தைத் தொடருங்கள்..............

உங்களை மீண்டும் வரவைத்த கேஆர்எஸ், ரத்னேஷ் சார், டிபிசிடி அண்ணா, தெலுங்குக்காரார், மலையாளக்காரர், கன்னடக்காரர்,............,................... எல்லாருக்கும் நன்றி!!!!!!!

இவர்கள் எல்லாரையும் விட உங்களைச் சீண்டிவிட்டு மீண்டும் எழுத வைத்தவருக்கும் நன்றி!!!!!!!!!!!!!!!!!

Monday, March 17, 2008

கடைசி பதிவு என்பது எப்போதும் எழுதப்பட்டு இருக்காது

"கடைசி பதிவு என்பது எப்போதும் எழுதப்பட்டு இருக்காது" என்று திரு ரத்னேஷ் அவர்கள் கோவி.கண்ணன் அவர்களுக்கு மின் அஞ்சல் செய்திருந்தார். அவரது சொல், எனது பதிவில் 2089ஆம் ஆண்டு வரை மட்டுமாவது பலிக்கிறதா என்று பார்க்கிறேன். மனக்கட்டுப்பாடு இருக்கவேண்டும். முயற்சி செய்கிறேன்.

ஆறு மாதங்கள் பதிவு எழுதியதில் நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். அவர்கள் எல்லோருக்கும் எனது நன்றி. குறிப்பாக பதிவர் அ, ஆ, இ, ஈ, உ, ஊ கியோரை மிகவும் நேசிக்கிறேன். கூகுள் சாட் லிஸ்டில் இருந்து தொடர்ந்து என்னுடன் உரையாடும் மற்ற நண்பர்களுக்கும் நன்றி.

தொடர்ந்து எழுதியது மிகுந்த அயர்ச்சியைக் கொடுத்துவிட்டது. மீண்டும் 2090ல் எழுதவருவேன். அதற்குள் நல்ல மாற்றங்கள் எனக்குள் ஏற்பட்டு இருக்கும். மற்றபடி பதிவெழுதும் எனது அனைத்து நண்பர்களின் இடுகைகளையும் வழக்கம்போல இரவு 12மணிவரை விழித்திருந்து படித்து கட்டாயம் என் கருத்துக்களைப் பின்னூட்டமாக இடுவேன்.(வேற என்ன ":)" என் கருத்து...)

நண்பர் டிபிசிடி அவர்கள், இதுவரை நான் எழுதிக் கிழித்த பதிவுகள் ஒவ்வொன்றையும் படித்து நான் மீண்டும் வரும்வரை எனக்குத் தொடர்ந்து பின்னூட்டமிட்டு, என் பதிவைத் தமிழ்மணத்தில் தொடர்ந்து வர வைப்பார் என நம்புகிறேன். அப்படியே அவர் பதிவில் ஏதாவது ஒரு மூலையில் இடம் இருந்தால் என் படத்தைக் கட்டம் கட்டிப் போட்டு, மீண்டும் என்னை எழுதவர அழைப்பார் என நம்புகிறேன்.....

நல்லது பதிவு நண்பர்களே. அழுகாச்சி பின்னூட்டங்கள் இங்கு தேவைதான்!!!
(அதிகம் அழுகை வரும்படியாகப் பின்னூட்டம் இடுபவர்களுக்குத் தக்க பரிசு அளிக்கப் படும்...)


அன்புடன்..
ஜெகதீசன்.

பி.கு: இந்தப் பதிவு யாரையாவது தாக்கி(கலாய்த்து) எழுதப்பட்ட பதிவு என்று நினைத்து, யாராவது எனக்கு ப்ரெளனீஸ் புள்ளிகள் தந்தால் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன்!!!

Sunday, March 9, 2008

புரியல்ல, தயவு'ச்' செய்து விளக்கவும்...

அன்பின் டி.பி.சி.டி அய்யா அவர்கள் சமூகத்திற்கு, உங்களின் அண்மைய பதிவுகள் என்னைப் வியப்படைய வைக்கின்றன. உங்களுக்கு என் வாழ்த்துக்கள்!!!

உங்கள் தமிழார்வத்தை நான் பாராட்டுகிறேன். நானும் இனிமேல் என் பதிவுகளில்(எப்போதாவது எழுதினால்... :) ) தமிழ் தவிர மற்ற மொழி சொற்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க முடிவு செய்திருக்கிறேன்..அப்படியே உங்களுக்கு ஒரு சிறு விண்ணப்பம்...

இனி வரும் பதிவுகளில் ஒற்று எங்கு மிகும், எங்கு மிகாது எனக் கவனித்து எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன்....

உங்கள் பதிவுகளில் தவறாக ஒற்று மிகுந்துள்ள/ மிகாத சில இடங்கள்:


என்பதுப் போலவும் (என்பது போலவும்)
என்றுச் சொல்ல (என்று சொல்ல)
கலைஞரை சாடியவர்(கலைஞரைச் சாடியவர்)
.......
........


க, ச, த, ப - ஒற்று மிகாத இடங்கள்


1) அகர ஈற்றுப் பெயரெச்சம்
தின்றன காளைகள்

2) வினைமுற்று தொடர்
வாழ்க திலகர்

3) எட்டாம் வேற்றுமை, விளிவேற்றுமை
அம்மா கொடு

4) று, து, டு, - ஈற்றெழுத்து எனின் மிகாது
சென்று கண்டான்(வந்து, கண்டு)

5) ஆ, ஏ, ஓ, யா - வினா முன் மிகாது
ராமனா செய்தான்


முழுதும் பார்க்க:http://www.thamizham.net/innov/innov155.htm


(பின் குறிப்பு: இது மொக்கை மட்டுமே... :) )

Sunday, March 2, 2008

உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்1!!

19 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா தென்ஆப்ரிக்காவை 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்று கோப்பையைத் தட்டிச் சென்றது...

இந்திய வீரர்களுக்கு வாழ்த்துக்கள்!!!!!
:) :) :) :) :) :) :) :) :) :) :)

டிஸ்கி: தலைப்பில் இருந்த எழுத்துப் பிழைக்கு மன்னிக்கவும்... திருத்திவிட்டேன்..