Thursday, July 31, 2008

குசேலன் - இதற்கு மேலும் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டுமா?

ஹைதாராபாத்: ஒகேனக்கல் விவகாரத்தில் நான் தவறாகப் பேசிவிட்டேன். இனி மீண்டும் அந்தத் தவறை திரும்பச் செய்ய மாட்டேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

நாளை ரஜினியின் குசேலன் படம் ரிலீஸ் ஆகிறது. ஆனால், ஒகேனக்கல் விவகாரத்தில் கன்னட மக்களை உதைக்க வேண்டும் என்று பேசிய ரஜினி பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டால்தான் குசேலன் படத்தை ரிலீஸ் செய்ய விடுவோம் என்று கன்னட ரக்ஷ்ன வேதிகே மற்றும் கன்னட சளுவளி வாட்டாள் பக்ஷா ஆகிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந் நிலையில் ஹைதராபாத்தில் இன்று கன்னட தொலைக்காட்சிக்கு கன்னடத்தில் பேட்டியளித்த ரஜினி,

ஒகேனக்கல் விவகாரத்துக்காக சென்னையில் நடந்த உண்ணாவிரதத்தில், பொது மக்களின் சொத்துக்களை நாசமாக்கியவர்களைத் தான் உதைக்க வேண்டும் என்று சொன்னேன். வேறு யாரையும் அப்படிச் சொல்லவில்லை.

குசேலன் படத்தை தயவுசெய்து வெளியிட அனுமதியுங்கள்.

நான் கர்நாடகத்தில் ஒரு கண்டக்டராக இருந்தேன் என்பதை இன்றும் மறக்கவில்லை.

இந்த விவகாரத்தில் நான் பாடம் கற்றுக் கொண்டுவிட்டேன். கன்னட மக்கள் எனக்கு பாடம் கற்றுத் தந்துவிட்டனர். இனி அதே தவறை திரும்பச் செய்ய
மாட்டேன்.

இனி எதி்ர்காலத்தில் யார் மனதும் புண்படாமல் பேசுவேன் என்றார்.
.......

நன்றி: தட்ஸ் தமிழ்.

இதற்கு மேலும் குசேலன் படத்தைத் தமிழர்கள் கட்டாயம் பார்க்கவேண்டுமா?
:(


சூப்பர் பல்டி ஸ்டார் வாழ்க!!!!!!!!!

குறிப்பு:
கிரி மற்றும் மற்ற ரசிகர்கள், மன்னிக்கவும்.. அவரது இன்றய பேட்டியைப் பார்த்த யாருக்கும் இந்தக் கோவம் வரத்தான் செய்யும். இதற்குப் பதில் அவர் அன்று கமல் மாதிரியே பட்டும் படாமலும் பேசியிருக்கலாம்... :((

Wednesday, July 30, 2008

குசேலன்! - சின்ன ரஜினி "கிரி" அவர்களுக்காக!!

இந்த இடுகை சின்னக்கோடம்பாக்கத்தின் சிங்கம், சின்ன ரஜினி "கிரி" அவர்களுக்காக!!
விரைவில் குசேலன் வெளிவரவுள்ளதால் அனைவரையும் பற்றிக்கொண்டுள்ள குசேலன் பரபரப்பு என்னையும் தொற்றிக்கொண்டுவிட்டதால், குசேலன் ஜோதியில் கலந்துகொள்ள என் முதல் குசேலன் இடுகை!!!!!!
***************************

குசேலனின் இயற்பெயர் சுதாமா. இவர் ஏழ்மையின் காரணமாக எந்நேரமும் கந்தலாடைகளையே அணிந்திருந்ததால் இவருக்குக் குசேலன் என்ற பட்டப் பெயர் வந்தது. அனைவரும் இவரைக் குசேலன் என்றே அழைத்து வந்தனர்.

சாந்தீபனி முனிவரிடம் கண்ணன், குசேலன் இருவரும் கல்வி கற்றனர். அப்போதிருந்து இருவரும் நல்ல நண்பர்கள்.

இவரது மனைவி சுசீலை. இவர்களுக்கு 27 குழந்தைகள். இவரது குடும்பத்தில் வறுமை தாண்டவமாடியது. தினந்தோரும் காட்டிற்குச் சென்று குசேலர் தானியங்கள் சேகரித்து எடுத்து வருவார். அதை வைத்து கஞ்சி சமைத்து குழந்தைகளுக்குத் தருவார். அது அவர்களுக்குக் கால் வயிற்றுக்குக் கூட இருக்காது.

குழந்தைகளின் பசியைப் பொறுக்காத சுசீலை, குசேலரிடம் கண்ணனிடம் சென்று உதவி கேட்குமாறு வேண்டினாள். குசேலரும் வேறு வழியின்றி ஒத்துக்கொண்டார்.

அன்றிலிருந்து அடுத்த சில நாட்கள் குசேலர் காட்டிலிருந்து சேகரித்துவரும் தானியத்தில் தன் பகுதியை அப்படியே சேகரித்து வைத்தாள் சுசீலை. அந்தத் தானியங்கள் கொண்டு கண்ணனுக்குத் தர, அவல் தயார்செய்து குசேலனிடம் தந்து அனுப்பினாள்.

பல மலைகளும் பல கடல்களும் கடந்து துவாரகை சென்றடைந்தார் குசேலர். குசேலர் வந்த செய்தி கேட்டு ஓடோடி வந்து வரவேற்று உபச்சாரம் செய்தார். குசேலன் தான் கொண்டு வந்த அவலை அவருக்குத் தந்தார். ஒரு பிடி அவலை எடுத்து கண்ணன் சுவைத்தார். அந்த ஒரு பிடி அவலுக்கே குசேலனுக்கு உலகம் கொள்ளாத செல்வம் சேர்ந்துவிட்டது.

கண்ணனிடம் உதவி கேக்க மனமின்றி, கண்ண்னிடம் கேட்காமலேயே விடைபெற்றுத் திரும்பினார். அவர் அவரது ஊருக்குத் திரும்பும் வழியில் திடீரென்று அவரது கந்தலாடைகள் விலையுயர்ந்த ஆடையாக மாறியது. உடலெங்கும் நகைகள் பளபளத்தன. கிழிந்த வஸ்திரம் பட்டு வஸ்திரமானது.
அவரது குடிசை இருந்த இடத்தில் மாளிகை இருந்தது. அந்த மாளிகையில் சுசீலை அவரை வரவேற்றார்.

இவ்வளவு செல்வத்தைப் பார்த்து குசேலருக்கு உள்ளுற ஒரு பயம் வந்தது. ஒரு நாள் யாரும் இல்லாத வேளையிலே, ஒர் அறையில் நுழைந்து இறைவனை மனமுருக வேண்டினார்.

திருமால் குசேலரின் முன் காட்சியளித்தார். குசேலன் அவரிடம், "செல்வத்தைக் காட்டி என் சிந்தையை மயக்காதே. செல்வம் எனக்கு வேண்டாம். உன் திருவடியே வேண்டும்" என வேண்டினார்.

இதற்கு திருமால், "குசேலா! செல்வத்தைப் பழிக்காதே. உன்னைப் போன்றோர் எந்த நிலையிலும் என்னை மறக்க மாட்டார்கள். மன்னுலகில் சில் காலம் மகிழ்ச்சியுடன் இருந்துவிட்டு ஒரு நாள் என் திருவடிகளை அடைவாயாக!" என்று வரமளித்து மறைந்தார்.

அவ்வாறே குசேலர் சிலகாலம் செல்வத்தோடும், ஆண்டவனை மறவாச் சிந்தையோடும் வாழ்ந்திருந்து ஒருநாள் இவ்வுலக வாழ்வு நீத்து திருமாலின் திருவடி சேர்ந்தார்.
*****************************************
இதுதான் குசேலனின் கதை!!!!
நன்றி : குசேலர் கதை (ஆசிரியர்: அசுரதாசன்.)
(ஹிஹிஹி... இதுக்காக நூலகம் சென்று சிறுவர்கதையெல்லாம் தேடி இந்தப் புத்தகத்தை எடுத்தேன்....)

*****************************************

Monday, July 28, 2008

உருகுவேயில் பாரி.அரசு ஏன் நேசனல் பார்டியை ஆதரிக்கிறார்?

சிங்கையில் இந்த வார இறுதியில் நடக்கவிருக்கும் பதிவர் சந்திப்பில், சென்ற சந்திப்பில் எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்த பதிவர் பாரி.அரசு அவர்கள்,
உருகுவேயில் தான் ஏன் எப்போதும் எதிர்க்கட்சியான நேசனல் பார்டியை மட்டுமே ஆதரிக்கிறார் என்பது குறித்து ஒரு 4 மணி நேரம் சிற்றுரையாற்றுவார்.

பின் கோவியார் ஆளும் ப்ராட் ப்ரண்ட்டைத் தான் ஏன் ஆதரிக்கிறார் என்பது குறித்தும் பேசவிருக்கிறார்....

பதிவர் ஜீவன் "ஒயின் பாட்டிலைத் திறப்பது எப்படி?" என்பது குறித்து விளக்கலாம் என்றும் தெரிகிறது...

சின்னக்கோடம்பாக்கம் கிரியும் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார்...

சிங்கை நாதன் அவரது பதிவு எது என்பதை இந்த சந்திப்பில் வெளிப்படுத்தப் போகிறாராம்...

ஜோசப் பால்ராஜ் மற்றும் கோவி.கண்ணன் ஏற்பாடு செய்துள்ள இந்த சந்திப்பிற்குப் பதிவர்கள் அனைவரும் பெருந்திரளாகத் திரண்டு வந்து கலந்துகொள்ளவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்!!

இடம் : Ang Mo Kio Town Garden West (அங்-மோ-கியோ நூலகம் எதிரில்)
நாள் : 2008, ஆகஸ்ட்3, ஞாயிற்றுக் கிழமை,
மாலை 4:30 முதல் எல்லேருக்கும் எப்பேது கிளம்பவேண்டும் என்று
தோன்றுகிறதோ அப்போது வரை

எப்படி வருவது?: அங்-மோ-கியோ பேருந்து நிலையத்தில் இருந்து
பேருந்து எண் 86இல் நான்காவது/ஐந்தாவது நிறுத்தம்.

சந்திப்பு குறித்த ஜோசப் பால்ராஜின் இடுகை : http://maraneri.blogspot.com/2008/07/blog-post_3707.html

கோவியாரின் இடுகை:
http://govikannan.blogspot.com/2008/07/blog-post_18.html

Thursday, July 24, 2008

தட்ஸ்தமிழ் கும்மி!!!

வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப்போகும்!!!
தட்ஸ்தமிழ் வாசகர் கருத்துக்களைப் படியுங்கள்! வாய்விட்டுச் சிரியுங்கள்!!!
இது "ரசினி ரசிகன்" என்ற பெயரில் வெளியாகியிருக்கும் ஒரு கருத்து:

பதிவு செய்தவர்: ரசினி ரசிகன் பதிவு நேரம்: 24 Jul 2008 02:09 am

தலைவர் ரஜினி வாய்ஸ் கொடுத்ததால்தான் காங்கிரஸ் அரசு தப்பியது. அமெரிக்க தேர்தலில் வாய்ஸ் கொடுக்கச் சொல்லி ஒபாமா ஆல்மேல் ஆல்விடுகிறார். நேரில்வந்து ஆசி வாங்க மெக்கெய்ன் வரப்போகிறார். இந்த ஒலகமே தலைவர் ரசினியாலதான் சுத்துது.

http://thatstamil.oneindia.in/news/2008/07/23/india-to-begin-lobbying-among-nsg-nations.html#cmntTop

இது ஏறத்தாழ தட்ஸ்தமிழின் எல்லாச் செய்திகளிலும் பதியப்பட்டுள்ளது.... :P

தட்ஸ்தமிழின் கருத்துச்சுதந்திரம் வாழ்க!!!!
"வாசகர் கருத்துகளை" சிறப்பான வகையில் மட்டுறுத்தும் தட்ஸ்தமிழுக்கு வாழ்த்துக்கள்!!!
:)))

Wednesday, July 23, 2008

மன்மோகன் அரசின் கோமாளிக் கூத்து

மன்மோகன் அரசின் கோமாளிக் கூத்து.
ஆண்டனோ மொய்னோவின் பிடியில் இந்திய ஜனநாயகம்.
மன்மோகன்சிங் ஏன் ராஜினாமா செய்யவேண்டும்?
மன்மோகன்சிங் ஏன் ராஜினாமா செய்யக்கூடாது?
சதிசெய்யும் பா.ஜ.க.
அத்வானி ரொம்ப ஒழுங்கா?
பிரதமர் கொத்தடிமையா?
மக்களை ஏமாற்றும் மத்திய அரசு..
விலைபோகாத பா.ஜ.க கடமை வீரர்கள்!!!!
மாயாவதியை மிரட்டும் சி.பி.ஐ
.....
.........
.............
........
.....
இப்படி வரப்போகும் நூற்றுக்கணக்கான இடுகைகளுக்காகக் காத்திருங்கள்!!!!!!

பின்னூட்டிகள் கவலைப் படவேண்டாம்.. நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான இடுகைகளுக்கான பின்னூட்டங்கள், பின்னூட்ட மென்பொருளில் சேர்க்கப்பட்டுள்ளது...
ஏற்கனவே பயனர் கணக்கு வைத்திருப்போர் இந்தப் புதிய வெளியீட்டை, கீழ்க்கண்ட முகவரியில் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்...
https://dubakoor.com/commentstemplate420.4.2.0/download.html

புதிய பயனர்கள் இங்கு பதிவு செய்துகொள்ளலாம்...
https://dubakoor.com/register.htm

குறிப்பு: மேலே உள்ள தலைப்புகளில் சிலவற்றை மண்டபத்தில் எனக்கு எழுதித் தந்தவருக்கு நன்றி!!!

Wednesday, July 9, 2008

பெண் = பிரச்சனைகள் - பாரி.அரசுவின் ஆணாதிக்க சிந்தனை!!!

நேற்று காலை பாரி.அரசு ஒரு forwarded email அனுப்பினார். ஏன்ய்யா பழைய mail எல்லாம் forward பண்ணுறீங்கன்னு கேட்டா, "எந்த email அனுப்பினாலும் ஏற்கனவே வந்துவிட்டது என்று சொல்வோரை என்ன செய்யலாம்?" ன்னு திட்டுறார்... எனவே எல்லாருக்கும் சொல்லிக்கிறேன்.. அந்த மெயில் இதுவரை எனக்கு வரவில்லை.. பாரி. அரசுதான் எனக்கு அனுப்பினார்..
***************
இதோ அவர் அனுப்பிய emailஇல் இருந்த படம்:இதை அனைவருக்கும் forward செய்து கொண்டிருக்கும் பாரி.அரசுவின் ஆணாதிக்க சிந்தனைக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்!!!

நீங்களும் உங்கள் கண்டனங்களைப் பின்னூட்டத்தில் தெரிவிகுமாறு கேட்டுக் கொள்கிறேன்!!!

Tuesday, July 8, 2008

காத்திருந்த காதலி-5

வடகரை வேலனின் - காத்திருந்த காதலி - 1
பரிசல்காரனின் - காத்திருந்த காதலி - 2
வெய்யிலானின் - காத்திருந்த காதலி - 3
கிரியின் - காத்திருந்த காதலி - 4

இந்தத் தொடரைத் தொடர அழைத்த கிரிக்கு நன்றி... (ஆனா கிரி அண்ணே..... என் மேல என்ன கோவம்??? கதையை பயங்கரமாக் குழப்பி என்கிட்டத் தந்துட்டீங்க.... இதுல நான் என்ன தொடரன்னே புரியலையே.....:( )

கிரி, கோபிக்குச் செல்லும் அவசரத்தில், வெயிலான் தொடங்கிவைத்த ஒரு தொலைபேசி அழைப்பை முடிக்காமல், கதை நாயகன், நாயகி இருவரையும் அம்போவென்று விட்டுவிட்டு கதையை மட்டும் கோபிக்குத் தூக்கிச் சென்றுவிட்டார்....:P (எனக்குக் கூடத்தான் உடனே ஆமத்தூர் போகனும் போல இருக்கு... அதுக்காக இனி கதையை அங்க கொண்டு போகமுடியாதே... :P)

வெயிலான் தொடங்கிவைத்த தொலைபேசி அழைப்புகளை முடித்துவிட்டு, கிரி தொடங்கிய அழைப்பையும் தொடரின் இப்பகுதியில் முடிக்கிறேன்..

இனி கதை
..............................
கோபி:
டேய் கா...கார்த்திக்க் ..அம்மாவின் குரல் குழறியது..
எனக்கு கலவரமாகியது..அதற்குள் கற்பனை எங்கெங்கோ ஓட..
அப்ப்ப்...பாவுக்கு ....அதற்குள் லைன் கட் ஆகியது..
இப்போது சுத்தமாக சிக்னல் இல்லை...பதட்டத்தோடு வீடு நோக்கி வண்டியை விரட்டினான்..

வழியில் மனமெல்லாம் ஒரே கவலை. கார்த்திக்கின் தந்தையும் தாயும் ஒரு விபத்தில் 10 வருடங்களுக்கு முன் இறந்ததில் இருந்து அப்பா அம்மா இல்லாத குறையே தெரியாமல் கார்த்திக்கை, சங்கரின் அப்பாவும் அம்மாவும் வளர்த்து வருகின்றனர்.

ஒரு பக்கம் சங்கருக்கு விபத்து, மறுபக்கம் அப்பாவின் உடல்நிலையும் சரியில்லை.... அப்பாவுக்கு ஒன்றும் ஆகியிருக்கக் கூடாது என வேண்டிக்கொண்டே வீட்டுக்குச் சென்றான்.

உள்ளே படுக்கையில் படுத்திருந்த அப்பாவைப் பார்த்ததும் கொஞ்சம் நிம்மதியடைந்தான். அவனைப் பார்த்ததும் படுக்கையில் இருந்து எழுந்த அப்பா, சங்கர் எப்படி இருக்கிறான்? அவனைத் தனியா விட்டுட்டு ஏன் வந்தாய் எனப் புலம்பத் தொடங்கிவிட்டார்.

கார்த்திக் எவ்வளவு சமாதானம் செய்தாலும் கேட்காமல் உடனே சங்கரைப் பார்க்கவேண்டும் என அடம் பிடிக்கத் தொடங்கிவிட்டார்..
கார்த்திக்கும் வேறு வழியில்லாமல் ரயில்வேயில் வேலைபார்க்கும் நண்பனின் உதவியுடன் தட்கலில் அன்று இரவுக்கே சென்னைக்கு இரயிலில் பயணச்சீட்டு எடுத்துவிட்டான்..
*****************************************************
சென்னை:
'இந்து' வலைத்தளத்தில் BLOG பற்றி வந்த செய்தியை படித்துக் கொண்டிருந்த கெளரியின் அப்பா, மேசை மேல் இருந்த செல்ஃபோன் திரையில் யார் கூப்பிடுவது? என திரும்பிப் பார்க்கிறார்.

Irudhayaraj calling…….

ம்ம்.. சொல்லுடா சங்கருக்கு எப்படி இருக்கு?
நேர்ல வாடா சொல்றேன்..
சரிடா... கெளரி கிட்ட எதுவும் சொல்லிடாத பயந்துடுவா.. நான் இப்ப அங்க வரேன்..
.....................

இல்லைங்க! சாப்பாடு அனுப்பி அரை மணி நேரம் தான் ஆகுது, இன்னொரு பத்து நிமிசத்துல வந்துடுவாங்க தாமதத்திற்கு மன்னித்து விடுங்க.
கெளரி, சங்கரின் அலுவலகதைத் தொடர்புகொண்டு சங்கருக்கு நடந்த விபத்தைப் பற்றி சொல்லிவிட்டு அனைத்து ஆர்டர்களையும் சரியாக அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொண்டாள்.

டாக்டர் இருதயராஜ் அறையில் இருந்து வெளியே வந்தார்..
அங்கிள் சங்கருக்கு இப்ப எப்படி இருக்கு..
ஒன்னும் பிரச்சனை இல்லைம்மா...விரைவில் சரியாகிரும்.. நீ கிளம்பு.. நான் பார்த்துக்கிறேன்.. அப்பாவும் இப்ப வந்துருவார்.
இல்ல அங்கிள் நான் இருக்கேன்... அப்பா வந்ததும் நான் கிளம்புறேன்... சங்கர் ஆபீஸ் போய் ஆர்டர் எல்லாம் சரியா டெலிவரி பண்ணுறாங்களான்னு மேற்பார்வை பார்க்கனும்.. அதனால அப்பா வந்ததும் கிளம்புறேன்..
சரிம்மா..

கெளரியின் அப்பா 10 நிமிடத்தில் வந்து சேர்ந்தார்.
நீ கிளம்பும்மா....நான் பார்த்துக்குறேன்..
சரிப்பா நான் நேரா சங்கர் ஆபீஸ் போய் ஆர்டர் எல்லாம் சரியா டெலிவரி பண்ணீட்டாங்களான்னு பார்த்துட்டு அப்படியே வீட்டுக்குக் கிளம்புறேன்..

கெளரி மருத்துவமனையை விட்டு வெளியேறிய பின்..

சொல்டா... சங்கருக்கு எப்படி இருக்கு? ரெம்ப கிரிட்டிக்கலா? எப்ப நினைவு திரும்பும்?
ம்ம்ம்...உள்ள வாடா சொல்றேன்....

என்ன சொன்னார் என்பதை டிபிசிடி தொடருவார்...

*****************************************************************

அடுத்து தொடரைத் தொடருவோருக்கு ஒரு வேண்டுகோள்...
கதையை எங்கு கொண்டு சென்றாலும் கதாநாயகன் மற்றும் கதாநாயகி (சங்கர் & கெளரி)யைச் சுற்றியே தொடருமாறு கேட்டுக்கொள்கிறேன்...

********************************************

Monday, July 7, 2008

கோவியாருக்கு ஒரு கேள்வி!!

நானும் ஒரு தொடர் விளையாட்டு ஆரம்பிக்கப் போறேன்!!!!!!

இதற்கான விதிமுறைகள்:

1. யாராவது ஒரு பதிவருக்கு ஒரு கேள்வி கேட்க வேண்டும்.

2. கேள்வி அறிவியல் பூர்வமாகவும், அறிவுப் பூர்வமானதாகவும் இருக்க வேண்டும்.(எ.கா: கீழே நான் கேட்டிருக்கும் கேள்வி.)

3. இரண்டு நாட்களுக்குள் பதில் அளித்துவிட்டு, பிடித்த அல்லது பிடிக்காத ஒரு பதிவரிடம் கேள்வி கேட்கவேண்டும்

4. ஒரு கேள்வி மட்டுமே கேட்கவேண்டும்.

5. இந்தச் சங்கிலித் தொடர் தொடங்கிய இடத்திற்கு மீண்டும் வரக்கூடாது... (அதாவது என்னிடம் யாரும் கேள்வி கேட்கக் கூடாது.. :) )

6. கேள்வி எந்த அளவுக்கு அறிவுப் பூர்வமாக இருக்கிறதோ அந்த அளவு பதிலும் அறிவுப் பூர்வமாக இருக்க வேண்டும்

7. பதில் விரிவானதாகவும், 50 வரிகளுக்குக் குறையாமலும் இருக்க வேண்டும்..

இனி கோவி.கண்ணனுக்கு நான் கேட்கும் அறிவியல் பூர்வமான/ அறிவுப் பூர்வமான கேள்வி:

காக்காவை நாம காக்கான்னு கூப்பிடுவதால், காக்கா "கா கா" ன்னு கத்துதா இல்லை, காக்கா "கா கா" ன்னு கத்துறதால, நாம காக்காவை காக்கா ன்னு கூப்பிடுறோமா?


பாக்கியராஜ் பதில் சொல்லமுடியாத இந்தக் கேள்விக்கு அண்ணன் என்ன பதில் சொல்றாருன்னு பார்ப்போம்...

கோவியாரே, விரைவில் பதில் சொல்லிவிட்டு யாரிடமாவது அடுத்த கேள்வியைக் கேளுங்கள்..

Saturday, July 5, 2008

இது ஒரு தொடர்கதை -1


இது ஒரு தொடர்கதை -1


தொடரும்.