Thursday, July 31, 2008

குசேலன் - இதற்கு மேலும் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டுமா?

ஹைதாராபாத்: ஒகேனக்கல் விவகாரத்தில் நான் தவறாகப் பேசிவிட்டேன். இனி மீண்டும் அந்தத் தவறை திரும்பச் செய்ய மாட்டேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

நாளை ரஜினியின் குசேலன் படம் ரிலீஸ் ஆகிறது. ஆனால், ஒகேனக்கல் விவகாரத்தில் கன்னட மக்களை உதைக்க வேண்டும் என்று பேசிய ரஜினி பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டால்தான் குசேலன் படத்தை ரிலீஸ் செய்ய விடுவோம் என்று கன்னட ரக்ஷ்ன வேதிகே மற்றும் கன்னட சளுவளி வாட்டாள் பக்ஷா ஆகிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந் நிலையில் ஹைதராபாத்தில் இன்று கன்னட தொலைக்காட்சிக்கு கன்னடத்தில் பேட்டியளித்த ரஜினி,

ஒகேனக்கல் விவகாரத்துக்காக சென்னையில் நடந்த உண்ணாவிரதத்தில், பொது மக்களின் சொத்துக்களை நாசமாக்கியவர்களைத் தான் உதைக்க வேண்டும் என்று சொன்னேன். வேறு யாரையும் அப்படிச் சொல்லவில்லை.

குசேலன் படத்தை தயவுசெய்து வெளியிட அனுமதியுங்கள்.

நான் கர்நாடகத்தில் ஒரு கண்டக்டராக இருந்தேன் என்பதை இன்றும் மறக்கவில்லை.

இந்த விவகாரத்தில் நான் பாடம் கற்றுக் கொண்டுவிட்டேன். கன்னட மக்கள் எனக்கு பாடம் கற்றுத் தந்துவிட்டனர். இனி அதே தவறை திரும்பச் செய்ய
மாட்டேன்.

இனி எதி்ர்காலத்தில் யார் மனதும் புண்படாமல் பேசுவேன் என்றார்.
.......

நன்றி: தட்ஸ் தமிழ்.

இதற்கு மேலும் குசேலன் படத்தைத் தமிழர்கள் கட்டாயம் பார்க்கவேண்டுமா?
:(

சூப்பர் பல்டி ஸ்டார் வாழ்க!!!!!!!!!

குறிப்பு:
கிரி மற்றும் மற்ற ரசிகர்கள், மன்னிக்கவும்.. அவரது இன்றய பேட்டியைப் பார்த்த யாருக்கும் இந்தக் கோவம் வரத்தான் செய்யும். இதற்குப் பதில் அவர் அன்று கமல் மாதிரியே பட்டும் படாமலும் பேசியிருக்கலாம்... :((

39 comments:

இராம்/Raam said...

/தற்குப் பதில் அவர் அன்று கமல் மாதிரியே பட்டும் படாமலும் பேசியிருக்கலாம்...//

சக்கைகுத்து வைக்கிறீங்க.... :)

ஜெகதீசன் said...

மன்னிக்கவும் அர்விந்த்... :(
உங்கள் பின்னூட்டத்தை வெளியிடமுடியாது...

VIKNESHWARAN ADAKKALAM said...

எனக்கும் இந்த படத்தை பார்க்கும் ஆசை இல்லை... ரஜினி இளம் நடிகைகளோடு இப்போது நடிக்கிறார். அவரது மகள் ஒரு வயதான நடிகரோடு நடித்தால் ஏற்றுக் கொள்வாரா...

கிரி said...

//அவரது இன்றய பேட்டியைப் பார்த்த யாருக்கும் இந்தக் கோவம் வரத்தான் செய்யும்//

:-)))) கோபத்துல டென்ஷன் ஆகி நீங்க எதுவும் அறிக்கை விட்டுடாதீங்க ஹி ஹி ஹி

சின்னப் பையன் said...

//சூப்பர் பல்டி ஸ்டார் வாழ்க!!!!!!!!!//

வாழ்க...வாழ்க...!!!

ஜெகதீசன் said...

////
கிரி said...

//அவரது இன்றய பேட்டியைப் பார்த்த யாருக்கும் இந்தக் கோவம் வரத்தான் செய்யும்//

:-)))) கோபத்துல டென்ஷன் ஆகி நீங்க எதுவும் அறிக்கை விட்டுடாதீங்க ஹி ஹி ஹி

////

ஆனால் உங்களுக்கு கோவம் வந்த மாதிரித் தெரியவில்லையே.. கோபம் மட்டுமில்லை ஒரு சிறு வருத்தம் கூட... :(

rapp said...

//பதில் அவர் அன்று கமல் மாதிரியே பட்டும் படாமலும் பேசியிருக்கலாம்//

கமல் தமிழ்காரர் அதனால் அதை யாரும் பெரிதுபடுத்தி இருக்கமாட்டார்கள். ஆனால் அன்றைக்கு ரஜினி அப்படி பேசலைனா (சத்தியராஜ் சார் அப்படி பேசனத்துக்கப்புறம்) அவரோட நிலைமை என்னாகி இருக்கும். ஒரு சாதாரண நடிகரை இஷ்டத்துக்கு ஏத்திவிட்டு, அவரும் ஒரு வியாபாரிங்கரதை நாம மறந்திட்டு, சமூகப் புரட்சியாளர் கணக்கா பில்டப் செஞ்சுட்டு, அவர் நான் அதெல்லாம் இல்லைங்கறதை தெளிவுப்படுத்தும் போது ஏன் இப்படி குதிக்கனும்னு தெரியல. படங்கறது ஒரு பொழுதுபோக்கு அம்சம். அது மோசமான கருத்தை பரப்பாதவரை இது மாதிரி காரணங்களை சொல்லி திட்டறதில் அர்த்தமில்லைங்கறது என்னோட தனிப்பட்ட கருத்துங்க.

ஜெகதீசன் said...

நல்லவேளை கமெண்ட் மாடரேசன் தூக்கவில்லை....
:((

Muhammad Ismail .H, PHD., said...

"பத்த வச்சுட்டியே பரட்டை"

பரட்டையையே பத்த வச்ச ஒரு தமிழனின் குரல்(றள். ரொம்ப நன்றி.

தீரன் said...

ரஜினியின் இந்த துரோகச் செயல் வன்மையாக கண்டிக்கப்படவேண்டியது. தயவு செய்து ரஜினியின் படங்களை புறக்கணியுங்கள் தன்மானத்தமிழர்களே!

ஜெகதீசன் said...

அனானி ஒருவரின் பின்னூட்டம்...
கொஞ்சம் எடிட் செய்யப் பட்டு....

Anonymous said...

1995 - batsha:
இது காசு கொடுத்து சேர்த்த கூட்டம் இல்லை...அன்பால தானா சேர்ந்த கூட்டம்....!

2007 - Sivaji:
பன்னிங்கதான் கூட்டமா வரும்....!

1996 - during election:
ஜெயலலிதாக்கு ஒட்டு போட்டா தமிழ் நாட்டை ஆண்டவனால கூட காப்பாத்த முடியாது....!

2004 - during parliment election and film fraternity thanks giving function to jayalalith:
சகோதரி ஜெயலலிதா ஆதரவு பெற்ற கட்சிக்கு ஒட்டு போட்டேன்....!
சகோதரி ஜெயலலிதா ஒரு தைரியலக்ஷ்மி....!

2008 - hogenakkal fasting meet:
நம்ம உரிமைய தடுக்குறவங்கள உதைக்க வேண்டாமா?

2008 - kusu release:
அய்யா மன்னிச்சுடுங்க.....என் தப்பை உணர்ந்துட்டேன்....தயவு செய்ஞ்சு என் படத்தை ரிலீஸ் பண்ண அனுமதி கொடுங்க.....! ஐய்யா....அம்மா....!
******************
அனானி, ரசிகர்களைத் திட்டவேண்டாமே.. :(

rapp said...

//Anonymous said...

1995 - batsha:
இது காசு கொடுத்து சேர்த்த கூட்டம் இல்லை...அன்பால தானா சேர்ந்த கூட்டம்....!

2007 - Sivaji:
பன்னிங்கதான் கூட்டமா வரும்....!

1996 - during election:
ஜெயலலிதாக்கு ஒட்டு போட்டா தமிழ் நாட்டை ஆண்டவனால கூட காப்பாத்த முடியாது....!

2004 - during parliment election and film fraternity thanks giving function to jayalalith:
சகோதரி ஜெயலலிதா ஆதரவு பெற்ற கட்சிக்கு ஒட்டு போட்டேன்....!
சகோதரி ஜெயலலிதா ஒரு தைரியலக்ஷ்மி....!

2008 - hogenakkal fasting meet:
நம்ம உரிமைய தடுக்குறவங்கள உதைக்க வேண்டாமா?

2008 - kusu release:
அய்யா மன்னிச்சுடுங்க.....என் தப்பை உணர்ந்துட்டேன்....தயவு செய்ஞ்சு என் படத்தை ரிலீஸ் பண்ண அனுமதி கொடுங்க.....! ஐய்யா....அம்மா....!
//

:):):):):)

கிரி said...

//ஆனால் உங்களுக்கு கோவம் வந்த மாதிரித் தெரியவில்லையே.. கோபம் மட்டுமில்லை ஒரு சிறு வருத்தம் கூட... :(//

வருத்தம் இல்லாம இருக்குமா ஜெகதீசன். ரஜினி இப்படி சொன்னது கண்டிப்பா எனக்கு வருத்தம் தான்.. நான் தான் ஏற்கனவே கூறி இருக்கேனே நான் ரஜினி ரசிகன் தான் வெறியன் கிடையாது.

ராஜ நடராஜன் said...

வணக்கம். என்ன சொல்றீங்கன்னு பார்க்கலாமுன்னு வந்தேன்.

G.Ragavan said...

அதெல்லாம் பாக்க வேண்டும். அப்படி அவரு நடிச்ச படத்தப் பாத்து ஒன்னும் ஆகப் போறதில்லை.

http://gragavan.blogspot.com/2008/07/rajini-apology-kuselan.html

ஜெகதீசன் said...

//
/தற்குப் பதில் அவர் அன்று கமல் மாதிரியே பட்டும் படாமலும் பேசியிருக்கலாம்...//

சக்கைகுத்து வைக்கிறீங்க.... :)
//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இராம்/raam.

ஜெகதீசன் said...

விக்னேஸ் & ச்சின்னப் பைய்யன்..
வருகைக்கு நன்றி!
:)

ஜெகதீசன் said...

ராப், வருகைக்கு நன்றி!
//
கமல் தமிழ்காரர் அதனால் அதை யாரும் பெரிதுபடுத்தி இருக்கமாட்டார்கள். ஆனால் அன்றைக்கு ரஜினி அப்படி பேசலைனா (சத்தியராஜ் சார் அப்படி பேசனத்துக்கப்புறம்) அவரோட நிலைமை என்னாகி இருக்கும்.
//
நெய்வேலி ஊர்வலத்தில் (பாரதிராஜா சார் அவ்வளவு பேசனதுக்கப்பறம்)கலந்துகொள்ளாமல் தனிஆவர்த்தனம் செய்தபின்னும் அவர் நிலைமை இன்று வரை நல்லாத்தான இருக்கு?

//
ஒரு சாதாரண நடிகரை இஷ்டத்துக்கு ஏத்திவிட்டு, அவரும் ஒரு வியாபாரிங்கரதை நாம மறந்திட்டு, சமூகப் புரட்சியாளர் கணக்கா பில்டப் செஞ்சுட்டு, அவர் நான் அதெல்லாம் இல்லைங்கறதை தெளிவுப்படுத்தும் போது ஏன் இப்படி குதிக்கனும்னு தெரியல.
//
ஏற்றுக்கொள்கிறேன்..

//
படங்கறது ஒரு பொழுதுபோக்கு அம்சம். அது மோசமான கருத்தை பரப்பாதவரை இது மாதிரி காரணங்களை சொல்லி திட்டறதில் அர்த்தமில்லைங்கறது என்னோட தனிப்பட்ட கருத்துங்க.
//
சிவாஜி எந்த மோசமான கருத்துக்களையும் பரப்பவில்லையா?
அங்கவை சங்கவை உட்பட்ட சிவாஜி படத்தின் கருத்துக்கள் "புரட்சிச் சிந்தனைகளா"??

கோவி.கண்ணன் said...

ஜெகதீசன் ஐயர்,

யூசூன் ஜிவியில் நாளை பகல் காட்சி குசேலனுக்கு 2 டிக்கெட் வாங்கி இருக்கேன். வர்றீயளா ?

ஜெகதீசன் said...

//
Muhammad Ismail.H, PHD, said...

"பத்த வச்சுட்டியே பரட்டை"

பரட்டையையே பத்த வச்ச ஒரு தமிழனின் குரல்(றள். ரொம்ப நன்றி.

//
நன்றி முகமது இஸ்மாயில்.. :)

ஜெகதீசன் said...

//
தீரன் said...

ரஜினியின் இந்த துரோகச் செயல் வன்மையாக கண்டிக்கப்படவேண்டியது. தயவு செய்து ரஜினியின் படங்களை புறக்கணியுங்கள் தன்மானத்தமிழர்களே!
//
நன்றி தீரன்..

மதிபாலா said...

அட நீங்க வேற...இப்படியெல்லாம் சொன்னா நம்ம தமிலு மக்கலு திருந்திடுவாங்களா??? அவரு எப்ப அரசியளுக்கு வரப்போறார்ரு தவமா தவம் கெடக்கற ரசிகப்பட்டாளங்களுக்கு அதையெல்லாம் சிந்திக்க நேரமில்லை......சிந்திக்கவும் விருப்பமில்லை......!!!!!!!!!!! அவர் ஒரு சினிமா வியாபாரி....அதுக்கு தகுந்ததை செஞ்சுக்கறார்......

ஜெகதீசன் said...

//கிரி said...

//ஆனால் உங்களுக்கு கோவம் வந்த மாதிரித் தெரியவில்லையே.. கோபம் மட்டுமில்லை ஒரு சிறு வருத்தம் கூட... :(//

வருத்தம் இல்லாம இருக்குமா ஜெகதீசன். ரஜினி இப்படி சொன்னது கண்டிப்பா எனக்கு வருத்தம் தான்.. நான் தான் ஏற்கனவே கூறி இருக்கேனே நான் ரஜினி ரசிகன் தான் வெறியன் கிடையாது.

//
நன்றி கிரி... :)

சரவணகுமரன் said...

மன்னிப்பு கேக்குற அளவுக்கு இந்த படத்துல என்ன இருக்குன்னு பார்க்க கிளம்பிடுவாங்க... :-)

http://kumarankudil.blogspot.com/2008/07/blog-post_31.html

உதயம் said...

தமிழரில் சிலர் ரஜினி பைத்தியம் ,ரஜினி ஒரு காரிய பைத்தியம் . இதை நான் நூறுதடவை சொன்னாலும் ரஜினி பைத்தியத்திற்கு ஒரு தடவைகூட புரியாது.

Yogi said...

பலவருடங்களாக அவர் இதையேதான் செய்து வருகிறார். அவரை ஆதரிக்கும் கூட்டம் இருக்கும் வரை அவர் மாறமாட்டார். x-(

ஜெகதீசன் said...

//
ராஜ நடராஜன் said...

வணக்கம். என்ன சொல்றீங்கன்னு பார்க்கலாமுன்னு வந்தேன்.

//
வாங்க ராஜ நடராஜன், நான் ஒன்னுமே சொல்லலியே.... :P

Jackiesekar said...

2008 - kusu release:
அய்யா மன்னிச்சுடுங்க.....என் தப்பை உணர்ந்துட்டேன்....தயவு செய்ஞ்சு என் படத்தை ரிலீஸ் பண்ண அனுமதி கொடுங்க.....! ஐய்யா....அம்மா....!
//
i like the top line
the Ananias said "kusu" release....

உண்ணாவிரத போராட்டத்தில் சத்யராஜ் மிக சரியாக பேசினார் ஆனால் சிலர் சொல்லலாம் பொது இடத்தில் பேசும் போது நா காக்க வேண்டும் என்று, ஒரு இனம் திரும்பிய இடமெல்லாம் உதை வாங்கும் போது அந்த இனத்தை நேசிப்பவர் கோபத்தில் இப்படித்தான் பேசுவார்கள் திரு சத்யராஜ் அவர்களுக்கு என் நன்றிகள் அப்படி உங்களை எவராவது குறை கூறினாள் அவர்கள் மன நோயாளிகள் என்பேன்

regards
jackiesekar

Jackiesekar said...

ya goood and nice post jega

Anonymous said...

சென்னை உண்ணாவிரதத்தில் சத்யராஜ் பேசி உசுப்பேற்றியதால் தன்னை தமிழின பாதுகாவலனாக காட்டிக் கொள்வதற்காக ரஜினி பேசிய ஆவேசப் பேச்சை தமிழ் சமூகம் மறந்திருக்காது.

அந்தச் சம்பவம் நடந்தேறி சில மாதங்கள் மட்டுமே ஆகி இருக்கும் நிலையில் தன்னுடைய கல்லாப் பெட்டியை நிரப்புவதற்காக கன்னடர்களின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டிருக்கும் ரஜினிகாந்தின் நடவடிக்கை அரசியல்வாதிகளை விட கேவலமானது என்று பலரும் வேதனை தெரிவித்துள்ளனர்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் இந்த தமிழகமே புனிதமடைந்து விடும் என்று நம்பிக் கொண்டிருப்பவர்களுக்கு அவர் செய்திருக்கும் இந்த ஒரு சின்ன விஷயமே

அவர் எப்படிப்பட்ட கை தேர்ந்த அரசியல்வாதி என்பதை தெளிவாக்கி இருப்பதாக தமிழ் அமைப்புக்கள் ஆட்சேபம் தெரிவித்துள்ளன.

ஜெகதீசன் said...

//
G.Ragavan said...

அதெல்லாம் பாக்க வேண்டும். அப்படி அவரு நடிச்ச படத்தப் பாத்து ஒன்னும் ஆகப் போறதில்லை.

http://gragavan.blogspot.com/2008/07/rajini-apology-kuselan.html

//
வாங்க ஜீரா...
:)

ஜெகதீசன் said...

//
கோவி.கண்ணன் said...

ஜெகதீசன் ஐயர்,

யூசூன் ஜிவியில் நாளை பகல் காட்சி குசேலனுக்கு 2 டிக்கெட் வாங்கி இருக்கேன். வர்றீயளா ?
//
அய்யங்கார்வாள்,
இதெல்லாம் இப்படிப் பதிவுல கேக்கலாமா?? :(

ஜெகதீசன் said...

//
மதிபாலா said...

அட நீங்க வேற...இப்படியெல்லாம் சொன்னா நம்ம தமிலு மக்கலு திருந்திடுவாங்களா??? அவரு எப்ப அரசியளுக்கு வரப்போறார்ரு தவமா தவம் கெடக்கற ரசிகப்பட்டாளங்களுக்கு அதையெல்லாம் சிந்திக்க நேரமில்லை......சிந்திக்கவும் விருப்பமில்லை......!!!!!!!!!!! அவர் ஒரு சினிமா வியாபாரி....அதுக்கு தகுந்ததை செஞ்சுக்கறார்......
//
கருத்துக்கு நன்றி மதிபாலா!
:)

உதயம் said...

தமிழரில் சிலர் ரஜினி பைத்தியம் ,ரஜினி ஒரு காரிய பைத்தியம் . இதை நான் நூறுதடவை சொன்னாலும் ரஜினி பைத்தியத்திற்கு ( ரசிகர்களுக்கு)ஒரு தடவைகூட புரியாது.

ஜெகதீசன் said...

சரவணகுமார், உதயம். ஜாக்கிசேகர்,

கருத்துக்கு நன்றி!!
:))

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

உங்கள் ஆதங்கம் எல்லா தமிழர்களுக்கும் இல்லாமல் இருப்பது, நமது துர்பாக்கியம்.

அன்புடன்,
ஜோதிபாரதி.

உருப்புடாதது_அணிமா said...

கடைசி போனி ஆஜர் ஸார்..
(நாங்க பதிவ படிக்க மாட்டோம் ஆனா பின்னூட்டம் மட்டும் இடுவோம்))

ஜெகதீசன் said...

//
ஜோதிபாரதி said...

உங்கள் ஆதங்கம் எல்லா தமிழர்களுக்கும் இல்லாமல் இருப்பது, நமது துர்பாக்கியம்.

அன்புடன்,
ஜோதிபாரதி.

//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜோதிபாரதி..
பதிவர் சந்திப்புக்கு வற்றீங்க தான?
:)

ஜெகதீசன் said...

//
உருப்புடாதது said...

கடைசி போனி ஆஜர் ஸார்..
(நாங்க பதிவ படிக்க மாட்டோம் ஆனா பின்னூட்டம் மட்டும் இடுவோம்))
//
நீங்களும் நம்மள மாதிரிதானா?
:P