Friday, May 23, 2008

கீழவெண்மணியும் சில சந்தேகங்களும்

பெரியாரை எதிர்ப்பவர்களால், அவர் குறித்து வைக்கப்படும் முக்கிய குற்றச்சாட்டுகளில் முக்கியமான ஒரு குற்றச்சாட்டு :
தலித்துகளுக்கும், பார்ப்பணரல்லாத மற்ற உயர்சாதியினரிடையே மோதல் வந்தால் பெரியாரின் அனுதாபம் உயர்சாதியினரிடமே இருக்கிறது.
கீழவெண்மணி மோதலைப் பெரியார் கண்டுகொள்ளவில்லைஎன்பதே இதற்கு எடுத்துக்காட்டு .

ஆம், பெரியாரின் ஒரு அறிக்கை தவிர அது குறித்து அவர் எதுவும் செய்யவில்லை என அறிகிறேன்.(இதற்கு மேல் எதாவது அவர் செய்திருந்தால்/போராடியிருந்தால் அது குறித்து தெரியப்படுத்தவும்..).

ஆனால், அதே நேரத்தில் தமிழகத்தின்(இந்தியாவின்) முக்கியத் தலைவராக இருந்த மூதறிஞர் என்ன செய்தார்? கீழவெண்மணி அவரது சுயசரிதை உட்பட எங்கும் அவர் இம்மோதலில் தலித்துகளுக்கு ஆதரவாக எதுவும் செய்ததாக இல்லை.

பெரியார் இம்மோதலில் கண்டுகொள்ளாமல் இருந்தது பெரும் தவறு தான்.. ஆனால் ராஜாஜி கண்டுகொள்ளாமல் இருந்தது மட்டும் சரியா?

இல்லை, அவரது சாதியினர் மற்றவர்களைத் தீண்டத்தகாதவர்களாக நடத்துவது எப்படி சரியோ, அதேபோல உயர்சாதியினார் தலித்துகளைக் கொடுமைப் படுத்துவதும் சரியே என்று நினைத்துவிட்டாரா?

இம்மோதலுக்கு எதிராக ராஜாஜி போராடியிருந்தால் யாராவது எனக்கு அது குறித்த தரவுகள் இருந்தால் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.