Friday, November 30, 2007

தேவதை தூங்குவதைப் பார்த்திருக்கிறீர்களா?

நீங்கள் இதற்கு முன் எப்போதாவது தேவதை தூஙகுவதைப் பார்த்திருக்கிறீர்களா?
இதுவரை பார்த்தது இல்லை எனில் இங்கு பார்த்துக்கொள்ளுங்கள்........

எங்க வீட்டு குட்டி தேவதை இப்படித் தான் தூங்குவாங்க....





தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருக்கும் போது இப்படித்தான் இருப்பாங்க!!!!



Monday, November 26, 2007

பினாங் - kek lok si -புத்த ஆலயம்























*தென்கிழக்கு ஆசியாவின் மிகப் பெரிய பௌத்த ஆலயம்.
*1890 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இன்று வரை புதிய கட்டுமானப் பணிகள்/ புதுப்பிப்புப் பணிகள் தொடர்கிறது.
*இங்குள்ள ஸ்தூபி "10000 புத்தர்களின் ஸ்தூபி(Wan Fo Pau Ta or The Pagoda of
10 000 Buddhas)" என அழைக்கப்படுகிறது.
*2002 ஆம் வருடம் Kuan Yin (Goddess of Mercy)யின் 30.2மீ உயர வெண்கலச் சிலை அமைக்கப் பட்டுள்ள்ளது
*இரு தியான மண்டபங்கள் உள்ளது(ஒன்று பழையது ஒன்று புதியது)
*புத்தரின் பிரதான சிலை புதிய மண்டபத்தில் உள்ளது.

Sunday, November 18, 2007

மாண்புமிகு வேலைக்காரர் முனியப்பர்

நான் ஆணாதிக்கவாதி இல்லைன்னு நிரூபிக்க எனக்கு வேறு வழி எதுவும் தெரியாததால் இந்தப் பதிவை இடுகிறேன். நம்ம மை ஃபிரண்ட் அக்கா "மாண்புமிகு வேலைக்காரி முனியம்மா" ன்னு ஒரு பதிவு போட்டாங்க. நானும் அதப்படித்து ரசித்து நல்லா இருக்குன்னு கமெண்ட் வேற போட்டுட்டேன்.

அப்புறமாப் பாத்தா, "இம்மாதிரி ஜோக்குகள் ஆணாதிக்கத்தின் வெளிப்பாடே" ன்னு கடுமையான கண்டனங்கள் எல்லாம் அந்தப் பதிவுக்குத் தெரிவிச்சுருக்காங்க. அந்தப் பதிவுக்கு கமெண்ட் போட்டதால எனக்கும் யாராவது "ஆணாதிக்கவாதி" பட்டம் தந்துவிடக் கூடாது என்பதற்காக சில வேலைக்காரன் ஜோக்ஸ்(நெட்ல சுட்டது தான்)...

நம்ம முனியப்பர் இப்பத்தாங்க புதுசா ஒரு வீட்டுல வேலைக்குச் சேந்துருக்கார்..
முதலாளி: என் மேசை மேல பாத்தியா ஒரு மாத தூசி படிஞ்சிருக்கும் போலத் தெரியுது?
முனியப்பர்
: அது என் தப்பு இல்ல எஜமான். நான் வேலைக்குச் சேந்தே ஒரு வாரம் தான் ஆகுது
*************
முதலாளி: தோட்டத்துச் செடிகளுக்கு எல்லாம் தண்ணி ஊத்தியாச்சா?
முனியப்பர்:
ஐயா! நல்ல மழை பெஞ்சுக்கிட்டு இருக்கு.
முதலாளி:
அதனால என்ன குடை பிடிச்சுக்கிட்டு ஊத்து!

**************
முனியப்பர் கடைல வெங்காயம் வாங்கப் போறார்....
கடைக்காரரே, ஒரு பத்து கிலோ வெங்காயம், சின்னச் சின்ன வெங்காயமாப் போடுங்க. பெருசா இருந்தா ரெம்ப கனமா இருக்கும். தூக்க முடியாது!!!!!!
*****************************
முனியப்பர் புதுசா ஒரு கடைல வேலைக்குச் சேந்துருக்கார்....
முதலாளி: என்னடா டின்ல எண்ணை குறையுது?
முனியப்பர்: டின் அடியில சின்ன ஓட்டை இருந்துருக்கு, கவனிக்காம விட்டுட்டேன்..
முதலாளி:
டேய்.. டின் மேல தான எண்ணை குறையுது. அடியில் ஓட்டைன்னு கதை விட்டு ஏமாற்றவா பாக்குற?
*****************************
ஒரு கடைக்கு நைட் வாட்ச்மேன் வேலை கேட்டுப் போறாரு நம்ம முனியப்பர்...

முதலாளி: நைட் வாட்ச்மேன் வேலை கேக்குறயே.. உனக்கு அனுபவம் இருக்கா?
முனியப்பர்:
என்ன இப்படிக் கேட்டுட்டீங்க. நைட் தூங்குறப்ப சின்னச் சத்தம் கேட்டாலும் எந்திரிச்சுருவேன்!!!

***************************************************************

நான் ஆணாதிக்கவாதி இல்லை! இல்லை! இல்லை!!!!!!!!!!!!!!

Thursday, November 15, 2007

தினமலர் சொன்னா சரியாத்தான் இருக்கும்.

விக்கிபீடியாவில் பீகாரைப் பற்றிப் பதிவாகியுள்ள ஒரு தவறான தகவலுக்கு என் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
தினமலர் ஒரு "தரமான நடுநிலை" நாளிதழ் என்பதும் அதில் வரும் செய்திகளில் எந்த ஒரு சிறு தவறும் இருக்காது என்பதும் அனைவரும் அறிந்ததுதான்.
தினமலரின் நேற்றய(நவம்பர்-14,2007) இந்த

வரம்பு மீறினாரா மேற்கு வங்க கவர்னர்?......

செய்தியில் 2004இல் பீகாரின் முதல்வர் "லாலு பிரசாத்" எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.



ஆனால் விக்கிபீடியா அப்போது முதல்வர் "ரப்ரி தேவி" என்று தவறான தகவல் தந்துள்ளது.



தினமலரின் செய்தி எந்த விதத்திலும் தவறாக இருக்கமுடியாது. எனவே விக்கிபீடியாவில் இந்தத் தகவலைத் தவறாகப் பதிவு செய்தவருக்கு என் கடுமையான கண்டனங்கள்!

ஒருவேளை உண்மையிலேயே அப்போது ரப்ரிதான் முதல்வர் எனில், அவ்வாறு நடந்ததற்கு வரலாறு தினமலரிடம் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்கவேண்டும்.(ஏற்கனவே டைம்ஸ் ஆப்பு இந்தியாவிடம் கேட்டதைப் போல்.)
********************************************
தினமலரில் நவம்பர்-13, 2007 அன்று வந்த
http://manuneedhi.blogspot.com/2007/11/blog-post_13.htm இந்த செய்தியும் முழுக்க உண்மை என்பதையும், ஒன்றைப் பத்தாகவும், பத்தை நூறாகவும் ஆக்கும் தினமலரின் "கற்பனைத் திறன்" இதில் இல்லை என்பதையும் அனைவரும் நம்புமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்...(தினமலர் சுட்டி கிடைக்கவில்லை.. அதனால் தினமலரில் இருந்து "தமிழன்" என்னும் வலைப்பதிவில் copy & past செய்திருந்த லின்க் தந்துள்ளேன்.. )
நன்றி: தமிழன், தினமலர்

Tuesday, November 13, 2007

குலக்கல்வி தொழிற்கல்வியா?

மூதறிஞர் ராஜாஜி அவர்கள் புதிய கல்விக் கொள்கையைக்(குல கல்வித் திட்டம்) கொண்டு வந்த போது, நான் பிறக்கவே இல்லை. அது பற்றி நான் அறிந்த விவரங்கள், புத்தகங்கள் மூலமாகவும், அந்தத் தலைமுறையினர் மூலமாகவும் அறிந்து கொண்டவை மட்டுமே.
இத்திட்டம் பற்றி நான் புரிந்து கொண்டது:
**தினமும் மூன்று மணி நேரம் மட்டுமே கல்வி.
**மீதி நேரம் அப்பா/குடும்பத்தினர்
செய்யும் தொழிலை கற்றுக் கொள்ளலாம், இல்லையேல் கட்டாயமில்லை, வேறு தொழிலும் பழகலாம்.

இது குறித்து வெளியாகியுள்ள பல பதிவுகளும்(இத்திட்டத்திற்கு ஆதரவானவர்கள் எழுதியதும், எதிர்ப்பவர்கள் எழுதியதும்), என் புரிதல் சரி என்பதையே உறுதி செய்கிறது.

ஆனால் திரு.ஜீவி அவர்கள் தன் மறக்கமுடியாத மதுரை நினைவுகள் -2 பதிவில்,

பள்ளிகளில் வழக்கத்தில் இருந்த கைத்தொழில்/குடியுரிமைப் பயிற்சி வகுப்புகளே, "குலக்கல்வித் திட்டம்" என்று தெரிவித்துள்ளார்.
**வாரத்தில் இரண்டு வகுப்புகள்(பீரியட்) மட்டுமே இந்த வகுப்புகள் இருக்கும்.
**இதற்கான பயிற்சி பள்ளியில் வழங்கப் படும்.
(நான் படித்த போது எங்கள்பள்ளியில் [6 முதல் 10வரை படித்த அரசு உயர்நிலைப்பள்ளியில்] விவசாய வகுப்புகளும், நீதிபோதனை வகுப்புகளும் இருந்தது. என் தம்பி படித்த நடுநிலைப் பள்ளியில் தச்சுக்கலை(க்ராப்ட்) மற்றும் நெசவு வகுப்புகள் இருந்தன. நான் 10வகுப்பு முடித்தது 1996ம் வருடம்)

ஆனால் நான் அறிந்த வரையில் ராஜாஜியின் குலக்கல்வித் திட்டத்தின் படி,
ஒரு நாளில் 3 மணி நேரம் மட்டுமே பள்ளி நடக்கும்.மீதமுள்ள நேரத்தில் தன் குடும்பத்தொழில்/ வேறு தொழில்கள் செய்துகொள்ளலாம்.
இதற்க்குப் பள்ளிகளில் எந்த வகுப்புகளும் கிடையாது. மதிப்பெண் எதுவும் கிடையாது.


திரு.ஜீவி அவர்கள் கைத்தொழில் வகுப்புகளையும், குலக்கல்வித் திட்டத்தையும் குழப்பிக்கொள்கிறாரா, அல்லது வேண்டுமென்றே தவறான ஒரு தகவலைத் தருகிறாரா என்று தெரியவில்லை.

*************************************

இனி குலக் கல்வித் திட்டம் பற்றி:
ராஜாஜி அவர்கள் முதல்வராக இருந்த போது[1952-1954] இருந்த நிதி நெருக்கடியின் காரணமாக, சுமார் 6000 பள்ளிகளை மூடிவிட்டு மீதமுள்ள பள்ளிகளில் காலை 3 மணி நேரம் ஒரு பகுதி, மாணவர்களுக்கும், மாலை 3 மணி நேரம் ஒரு பகுதி மாணவர்களுக்கும் வகுப்புகள் நடத்தத் தொடங்கப்பட்ட திட்டம் தான் இது.

மீதமுள்ள நேரம் மாணவர்கள் என்ன செய்வார்கள் என்ற கேள்வி எழுந்தபோது(மாற்றுக் கருத்து கொண்டவர்கள் எழுப்பியபோது) அவர் தெரிவித்தது தான், இந்த "குடும்பத்தினர் செய்யும் தொழிலை கற்றுக் கொள்ளலாம் இல்லையேல் கட்டாயமில்லை, வேறு தொழிலும் பழகலாம்."

இத்திட்டம் கொண்டுவரப்பட்ட நேரத்தில்:
**சில நூற்றாண்டுகளாகப் படிப்புரிமை மறுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப் பட்ட வகுப்பினரில் 70%க்கும் மேற்பட்டோர் முதல் தலைமுறையாகப் பள்ளிக்குச் செல்லத் தொடங்கியிருந்தனர்.

**முற்படுத்தப்பட்ட வகுப்பினரில் 70%க்கும் மேற்பட்டோர் பல தலைமுறைகள் கல்வி கற்று நல்ல வேலைகளில் இருந்தனர்.(அரசுப் பணிகளில்
70%க்கும் மேல் இருந்தனர்.)


இத்திட்டம் செயல்படுத்தப் பட்டிருந்தால்

**முதல் தலைமுறையாகக் கல்வி கற்கும், பெற்றோர் குலத்தொழில் புரியும் 70% மாணவர்கள், தங்கள் தந்தை செய்யும் தொழில் மட்டுமே கற்றிருக்க முடியும். கல்வியறிவற்ற தந்தைகள் அவர்களுக்கு வேறு எந்தப் பயிற்சியும் அளிக்க முடியாது. வீட்டில் பெற்றோர் எதுவும் சொல்லித்தர முடியாத நிலையில் 3 மணி நேரக் கல்வியால் அவர்கள் என்ன கற்றுக் கொண்டிருக்க முடியும்?

**முந்தய தலைமுறைகளில் இருந்து நல்ல கல்வியறிவு பெற்ற, உயர் வகுப்பினர், தன் பிள்ளைகளுக்குத் தேவையான பயிற்சிகள் தந்திருப்பர். "வெள்ளைக் காலர் பணி"களுக்குத் தேவையான அனைத்துப் பயிற்சிகளும் இவர்களுக்கு அளிக்கப் பட்டிருக்கும். இவர்களுக்கு, அந்த 3 மணி நேரக் கல்வி தவிர பல பயிற்சிகள் இவர்கள் பெற்றோர்களிடமிருந்து கிடைத்திருக்கும்.



இவ்வாறு இருக்கும்போது எப்படி முதல் தலைமுறையாகக் கல்வி கற்றவர்கள் பலதலைமுறையாக நல்லநிலையில் இருப்பவர்களிடம் போட்டியிட்டு வேலைகள் பெற்றிருக்கமுடியும்? இத்திட்டம் செயல்பட்டிருந்தால் அரசுப்பணிகள், மருத்துவம், பொறியியல் மற்றும் அனைத்துத் துறைகளிலும் முற்படுத்தப் பட்ட மக்களின் ஆதிக்கம் இன்னும் இருந்து கொண்டுதானே இருக்கும்? விவசாயி மகன் விவசாயியாகவும், துணி துவைப்பவர் மகன் துணி
துவைப்பவருமாகத் தானே இருந்திருக்க முடியும்? இத்திட்டத்தை பெரியார், காமராசர் முதல் சாதாரண மக்கள் வரை
எதிர்த்ததில் என்ன தவறு இருக்கிறது?

----------------------
ராஜாஜி அவர்களுக்கு "அப்பன் வேலையத் தான் பிள்ளை செய்யவேண்டும்" என்ற உள்நோக்கம் இல்லை என்றே வைத்துக்கொண்டாலும்,

இத்திட்டம் நிதிப் பற்றாக்குறையை சமாளிக்கக் கொண்டுவரப்பட்டது எனில்,
ராஜாஜிக்குப் பின்வந்த கர்மவீரர் காமராசரால் எப்படி
மூடப்பட்ட 6000 பள்ளிகளையும் திறந்து அதற்கு மேலும் புதிய பள்ளிகள் திறக்க முடிந்தது?
(என் அம்மா, அப்பா 10ஆம் வகுப்பு வரை படித்ததும், அவர்கள் எங்களைப் பட்டப்படிப்புகள் வரை படிக்கவைத்ததும் காமராசரால் தான். இது எனக்கு மட்டுமில்லை, என் தலைமுறையில் இருக்கும் பெரும்பாண்மையோருக்கும் இது பொருந்தும்)


பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்தவர்கள், மூன்று மணி நேரமாவது பள்ளிகளுக்கு அனுப்புவார்கள் என்பதற்காக கொண்டுவரப்பட்டதென்றால்
காமராசரால் மதிய உணவுத்திட்டத்தின் மூலம் அனைத்து மாணவர்களையும் முழுநேரமும் பள்ளிக்குக் கொண்டு வரமுடிந்ததே?

இதில் யார் சிறந்த நிர்வாகி?
6000 பள்ளிகளை மூடிய ராஜாஜியா?
இல்லை கல்விக்கண் திறந்த கர்மவீரரா?

*************************************
அடுத்த பதிவு: ராஜாஜி மூதறிஞரா?
(ஒன்று அல்லது இரண்டு வாரங்களில்)
இதுவும் ஜீவி அவர்களின் அதே பதிவில் கேட்டிருந்த கேள்விக்குப் பதில் தான்.
//
குலக்கல்விக்கு வித்திட்டவர் என்று கூசாமல் சொன்ன வாயால், அவரையே 'மூதறிஞர்' என்று எப்படிப்புகழ்பாட முடிகிறது என்பது புரியவில்லை. மூதறிஞர் என்று அவரை அழைக்கும் அளவுக்கு அவருக்கு என்ன நன்றிக்கடன் பட்டிருக்கிறார்களோ,அதுவும் தெரியவில்லை.
//
இந்த வரிகளை, ஜீவி அவர்கள் பெரிதும் மதிப்பதாகக் கூறும் பெரியார் மீதும், காமராசர் மீதும்,
குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்த மற்ற தலைவர்களின் மீதும் பரப்பப்படும் அவதூறாகவே கருதமுடிகிறது.
இதற்கு என் அடுத்த பதிவில் பதில் தருகிறேன்.



தொடர்பான சில சுட்டிகள்:
ஜீவி அவர்களின் பதிவு: http://jeeveeji.blogspot.com/2007/11/2.html
திரு அவர்களின் பதிவு: http://aalamaram.blogspot.com/2006/08/blog-post_11.html
விக்கிப்பீடியாவில்: http://en.wikipedia.org/wiki/Hereditary_Education_Policy
இதையும் பாருங்கள்: http://www.geocities.com/tamiltribune/07/1102.html