Friday, May 23, 2008

கீழவெண்மணியும் சில சந்தேகங்களும்

பெரியாரை எதிர்ப்பவர்களால், அவர் குறித்து வைக்கப்படும் முக்கிய குற்றச்சாட்டுகளில் முக்கியமான ஒரு குற்றச்சாட்டு :
தலித்துகளுக்கும், பார்ப்பணரல்லாத மற்ற உயர்சாதியினரிடையே மோதல் வந்தால் பெரியாரின் அனுதாபம் உயர்சாதியினரிடமே இருக்கிறது.
கீழவெண்மணி மோதலைப் பெரியார் கண்டுகொள்ளவில்லைஎன்பதே இதற்கு எடுத்துக்காட்டு .

ஆம், பெரியாரின் ஒரு அறிக்கை தவிர அது குறித்து அவர் எதுவும் செய்யவில்லை என அறிகிறேன்.(இதற்கு மேல் எதாவது அவர் செய்திருந்தால்/போராடியிருந்தால் அது குறித்து தெரியப்படுத்தவும்..).

ஆனால், அதே நேரத்தில் தமிழகத்தின்(இந்தியாவின்) முக்கியத் தலைவராக இருந்த மூதறிஞர் என்ன செய்தார்? கீழவெண்மணி அவரது சுயசரிதை உட்பட எங்கும் அவர் இம்மோதலில் தலித்துகளுக்கு ஆதரவாக எதுவும் செய்ததாக இல்லை.

பெரியார் இம்மோதலில் கண்டுகொள்ளாமல் இருந்தது பெரும் தவறு தான்.. ஆனால் ராஜாஜி கண்டுகொள்ளாமல் இருந்தது மட்டும் சரியா?

இல்லை, அவரது சாதியினர் மற்றவர்களைத் தீண்டத்தகாதவர்களாக நடத்துவது எப்படி சரியோ, அதேபோல உயர்சாதியினார் தலித்துகளைக் கொடுமைப் படுத்துவதும் சரியே என்று நினைத்துவிட்டாரா?

இம்மோதலுக்கு எதிராக ராஜாஜி போராடியிருந்தால் யாராவது எனக்கு அது குறித்த தரவுகள் இருந்தால் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

4 comments:

said...

please ask your question to Mr.Dondu he give right answer.

puduvai siva.

said...

உங்கள் ஆலோசனைக்கு நன்றி சிவா...

said...

முதலில் பெரியார் வெண்மணிச்சம்பவத்தைக் கண்டுகொள்ளாமலிருந்தார் என்று சொல்வது தவறு. வெண்மணிச் சம்பவம் நடந்த அன்றே 'நினைக்கவே நெஞ்சு நடுங்குகிறது' என்று அறிக்கைவிடுத்தார். ஆனால் அவர் வெண்மணிச்சம்பவத்தையொட்டி விடுத்த இரண்டு அறிக்கைகளும் வெண்மணிச்சம்பவம் குறித்த பெரியாரின் அணுகுமுறைகளும் நிச்சயமாக விவாதத்துக்குரியவை என்பதில் அய்யமில்லை. அதுகுறித்துக் குறைந்தபட்சம் விவாதித்திருக்கிறேன். காண்க. http://sugunadiwakar.blogspot.com/2007/10/blog-post_09.html

ஆனால் அதற்காக நீங்கள் சொல்வதுபோல 'தலித்துகளுக்கும், பார்ப்பணரல்லாத மற்ற உயர்சாதியினரிடையே மோதல் வந்தால் பெரியாரின் அனுதாபம் உயர்சாதியினரிடமே இருக்கிறது' என்று ஒட்டுமொத்தமாக ஊத்திமூடுவது வரலாற்றுக்கு இழைக்கும் அநீதி. முதுகுளத்தூர் கலவரம் உள்ளிட்டுப் பல பிரச்சினைகளில் தலித்துக்களுக்கும் தலித்தல்லாதாருக்கும் நடந்த மோதலில் பெரியார் தலித்துக்களையே ஆதரித்தார்.

said...

//
ஆனால் அதற்காக நீங்கள் சொல்வதுபோல 'தலித்துகளுக்கும், பார்ப்பணரல்லாத மற்ற உயர்சாதியினரிடையே மோதல் வந்தால் பெரியாரின் அனுதாபம் உயர்சாதியினரிடமே இருக்கிறது' என்று ஒட்டுமொத்தமாக ஊத்திமூடுவது வரலாற்றுக்கு இழைக்கும் அநீதி. முதுகுளத்தூர் கலவரம் உள்ளிட்டுப் பல பிரச்சினைகளில் தலித்துக்களுக்கும் தலித்தல்லாதாருக்கும் நடந்த மோதலில் பெரியார் தலித்துக்களையே ஆதரித்தார்.
//
விளக்கங்களுக்கு நன்றி....

மேலே இருப்பது என் கருத்து இல்லை.... அது இந்த வாரக் கேள்வி பதில் பதிவில் டோண்டு அவர்களின் பதில்.
என் சந்தேகம், இச்சம்பவத்தின் போது ராஜாஜி என்ன செய்தார் என்பதே....