Monday, April 21, 2008

இருண்ட தமிழகத்திற்கு ஒளியேற்ற வாருங்கள் அம்மா !!!

இலைக்காரன் இது குறித்துப் பதிவ போடுவார் என எதிர்பார்த்தேன். ஆனால் அவர் இதுவரை போடாததால் நானே போடுகிறேன்!இருண்ட தமிழகத்திற்கு ஒளியேற்ற வாருங்கள் அம்மா !!!
இருண்ட தமிழகத்திற்கு ஒளியேற்ற வாருங்கள் அம்மா !!!
இருண்ட தமிழகத்திற்கு ஒளியேற்ற வாருங்கள் அம்மா !!!

இது கொடநாடு எஸ்டேட்டுக்கு கோடை விடுமுறைக்காக சென்றுள்ள அம்மா அவர்கள் அங்குள்ள பிள்ளையார் கோவிலில் தீபமேற்றிய‌ கண்கொள்ளாக் காட்சி!!!.அடுத்த பௌர்ணமிக்கு
"இருண்ட இந்தியாவிற்கு ஒளியேற்ற வாருங்கள் அய்யா!!!"
என அத்வானி அவர்களை அழைத்து தீபம் ஏற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்.பின் குறிப்பு:
வலையில் யாரும் தீபம் ஏற்றி விடக் கூடாது என்பதற்காக இணையத்தில் இருந்த தீபம் படங்களை எல்லாம் எங்கோ ஒளித்து வைத்துவிட்ட திம்மிகளுக்கு கடும் கண்டனங்கள்...

இந்தப் பதிவு இலைக்காரனுக்கு சமர்ப்பணம்.

15 comments:

said...

வீட்டைக் கொளுத்தச் சொல்லாத வரை கொளுத்தலாம்..

பிரதான ஆருடக்காரன் சொன்னதை உடனே, கூச்ச நாச்சமில்லாமல் செயல்படுத்தும் அம்மாவின், திறன் பாராட்டுக்குரியது.

வெட்கம் என்பது மடமையடா,
வெட்கமின்மை ஆரியர் உடைமையடா

said...

இருண்ட தமிழகத்துக்கு இவ்வளவு காஸ்டிலியான விளக்கை அம்மாவால் தான் ஏற்ற முடியும்!

வாழ்க அம்மா !

said...

அண்ணா பார்வையில் இவர்கள் யார்?

அகில இந்திய அண்ணா தி.மு.க.வின் பொதுச்செயலாளராக இருக்கக்கூடிய செல்வி ஜெயலலிதா, அண்ணா பெயரையும், திராவிட என்ற இனப் பெயரையும் கொச்சைப்படுத்தும் காரியத்தில் கவனமாகத் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டு வருகிறார்.

இப்பொழுது சித்திரா பவுர்ணமியன்று (19.4.2008) விளக்கேற்று மாறு அறிக்கை கொடுத்துள்ளார்.
மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் தற்சமயம் தமிழ்நாடு இருளில் மூழ்கிக் கிடக்கிறது. இருள் அகன்று ஒளி பிறக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த அ.தி.மு.க.வினர் வரும் 19.4.2008 (சனிக்கிழமை) சித்ரா பவுர்ணமி நாளில் மாலை சரியாக 6.30 மணிக்கு தமிழ்நாடு முழுவதும் அவரவர் இல்லங் களிலும், வீட்டு வாசல்களிலும், தங்களுக்குச் சொந்தமான நிறுவனங்கள், வர்த்தகக் கட்டடங்களிலும், மத வழிபாட்டுத் தலங்களிலும் விளக்கேற்ற வேண்டும். தீபம் ஏற்றி வைக்கும் நேரத்தில் கழக உடன்பிறப்புகள் அனைவரும் இருண்ட தமிழகத்தில் ஒளியேற்ற வாருங்கள் அம்மா என்று முழங்கவேண்டும் - என்பதுதான் அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதாவின் அறிக்கையாகும் (11.4.2008).

ஒரு அரசியல் கட்சியின் தலைவர் விடுக்கும் அறிக்கை என்று இதனை யாரும் கருதமாட்டார்கள். ஏதோ ஒரு கோயில் பூசாரி அல்லது அர்ச்சகர் விடுக்கும் வேண்டுகோளாகத்தான் எவரும் கருதுவர்.

அரசியல் ரீதியாக அணுகவேண்டிய ஒன்றை மக்களைச் சந்தித்து பிரச்சினைகளை எடுத்து வைத்து, அரசியல் நடத்தவேண்டிய ஒன்றை - ஆஷாட பூதித்தனமாக மாற்றி, மக்களை மடமையின் பக்கம் தள்ளும் ஒருவர் முன்னாள் முதலமைச்சர் என்பதும், பெரியார், அண்ணா பெயர்களையும், திராவிட என்கிற ஆரிய எதிர்ப்பின் அடையாளத்தையும் தவறாகப் பயன்படுத்தும் ஒருவர் என்பதும் நகைப்புக்கும், வெறுப்புக்கும் உரியதாகும். அரசியல் நடத்த தம் கையில் ஏதுமற்ற கையறு நிலையில், ஆன்மீகத்திடம் சரணடைந்துவிட்டார் என்பதே இதன் பொருள். மதச்சார்பற்ற தன்மையில் ஆட்சியை நடத்திடச் சற்றும் தகுதியற்றவர் என்பதை இதன்மூலம் தனக்குத்தானே அவர் நிரூபித்துக் கொண்டுள்ளார்.
சித்ரா பவுர்ணமி இந்து மதம் புராணக் கூற்றின்படி சித்திரகுப்தன் பிறப்பாம். உலகத்தில் பிறந்த அனைவரின் நடவடிக்கைகளை கணித்துப் பதிவு செய்து யமதர்மனிடம் அளிப்பதுதான் அவன் வேலையாம்.

இதன்படி பார்த்தாலும்கூட, செல்வி ஜெயலலிதா நம்பிக்கையின் அடிப்படையில் பார்த்தாலும்கூட, செல்வி ஜெயலலிதாவின் நடவடிக்கை களை சித்ரபுத்திரன் பதிவு செய்வதாக இருந்தால், அம்மையாருக்கு ஆபத்தாகத்தான் முடியும் என்பது வெள்ளிடைமலை.

தமிழ்நாடு முழுவதும் உள்ள கட்சித் தொண்டர்களுக்கு ஒரு கட்சியின் தலைவர் கொடுத்துள்ள இந்த மூடத்தன வேலையை எதிர்க்க ஒரே ஒரு அண்ணாவின் தம்பிகூட அந்தக் கட்சியில் இல்லாது போய்விட்டார்களா? மூடத்தனத்தின் முடைநாற்றத்தை முற்றாக அழிக்கும் எத்தனை எத்தனைக் கட்டுரைக் கணைகளை அண்ணா தொடுத்திருப்பார்!

அவர் எழுதிய புராண மதங்கள் சாதாரணமானதா? நிலையும், நினைப் பும் தெரியுமா? இலட்சிய வரலாறு படித்ததுண்டா? அண்ணாவின் திராவிட நாட்டையும் காஞ்சியையும் கேள்விப்பட்ட தாவது உண்டா?

இவற்றையெல்லாம் அறியாத ஒருவர் அண்ணா பெயர் உள்ள கட்சிக்கு, அண்ணாவின் உருவம் பொறித்த கொடியை உடைய அமைப்புக்குத் தலைவரா?

அண்ணாவின் கொள்கையை ஜெயலலிதா தலைமையில் நிறை வேற்றுவோம் என்று நம்பி அக்கட்சியில் இருக்கும் தம்பிமார்கள், தோழர்கள் மறு பரிசீலனை செய்யவேண்டிய தக்க தருணம் இதுவே! ஆம் இதுவே!! இதுவேதான்!!!
இதோ அண்ணாவின் கருத்து வீச்சைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்:

நம் தேசத்திற்கு இதர தேசத்தவர்களால் ஆபத்துகள் ஏற்படுமோ என்கிற பீதி உண்டாகியிருக்கிறது. நம் தேசத்தில் உள்ள எல்லாச் சேத்திரங்களையும், நம்மையும் எந்தவிதமான ஆபத்துகளும் வரவொட் டாமல் தடுத்துக் காப்பாற்றும் பொருட்டு, ஸ்ரீரங்க சேத்திரத்தில் ஸ்ரீரங்கநாதனுக்கு, இலட்சார்ச்சனை மாசி மாதம் 29 ஆம் தேதி ஆரம்பித்து, பங்குனி 2 ஆம் தேதி 15.3.1942 முடிவடையும்படி நடத்துவ தாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது (இரண்டாம் உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம்) என்று அறிக்கை வெளிவந்தது. அதன்படி இலட்சார்ச்சனை நடக்கிறது. இந்த இலட்சார்ச்சனை மூலம் ரங்கநாதர் ஆலயத்து ஊழியர்களுக்கும், புரோகிதக் கூட்டத்துக்கும் இலாபம்தான்! ஆனால், நாட்டுக்கு என்ன இலாபம்? ஆபத்தைப் போக்க இதுவா வழி? இராபர்ட் கிளைவ் காலத்தில் இலட்சார்ச்சனை கள், அபிஷேகங்கள், ஆராதனைகள் நடத்தினோமே கண்டதென்ன?

கிளைவின் கல்லறைமீது, இந்தியாவை வென்ற வீரன் என்று பொறிக்கப்பட்டிருக்கிறது! இந்தப் பிரிட்டீஷ் வல்லரசை இன்று ஜப்பான் சில இடங்களில் தோற்கடித்தது. அர்ச்சனைகளின் பலனா? யாகம், (யாகம் செய்தா) அவை ஆத்மார்த்தத் துறையின் பணிகள் பரலோக யாத்திரைக்குப் பிறகு பலன் வேண்டிச் செய்யப்படும் பழைமைகள்.

பொன்னும், பொருளும், நேரமும், நினைப்பும் போருக்குச் செலவிட வேண்டிய நேரத்தில், இந்தப் பயங்கரமான வேளையிலே வெண் பொங்கலும், சித்ரான்னமும் உண்ண, ஒரு சாக்குக்காக இலட்சார்ச்சனை செய்யுங்கள்; ரங்கநாதர் இரட்சிப்பார் என்று புரோகிதக் கூட்டம் கூறி, மக்களின் பணத்தையும், நேரத்தையும் பாழாக்குகிறதே, இதை என்னென்பது? (திராவிட நாடு, 5.3.1942).

அண்ணா எடுத்துக்காட்டியுள்ள இலட்சார்ச்சனை என்பதற்குப் பதிலாக செல்வி ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ள விளக்கேற் றுங்கள் என்பதை பொருத்தி பார்த்து, அண்ணாவின் பார்வையிலே இந்த ஜெயலலிதா யார்? என்பதை அடையாளம் காண்பீர்!

சோர்ஸ்:விடுதலை

said...

//
TBCD said...

வீட்டைக் கொளுத்தச் சொல்லாத வரை கொளுத்தலாம்..

பிரதான ஆருடக்காரன் சொன்னதை உடனே, கூச்ச நாச்சமில்லாமல் செயல்படுத்தும் அம்மாவின், திறன் பாராட்டுக்குரியது.

வெட்கம் என்பது மடமையடா,
வெட்கமின்மை ஆரியர் உடைமையடா
//
எந்த நேரமும் தமிழக மக்களின் வாழ்வில் ஒளியேற்றுவது குறித்து மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்கும் அம்மாவின் சிந்தையில் உதித்த இந்தத் திட்டத்தை ஆருடக்காரன் சொன்னது என்று சொல்லிக் கொச்சைப் படுத்தும் உங்களுக்கு கடும் கண்டனங்கள்!!!!

said...

பிரதான ஆருடக்காரனுக்கு குசும்பு அதிகம்தான் - தமிழகத்தை இருளடைய செய்த செல்வி.செயலலிதாவை விட்டே - பிரயசித்தமாக' ஒளியேற்றச் செய்துவிட்டாரே..

said...

-- வெளி இட அல்ல --

இலைக்காரன் பதிவில் இருக்கும் சொல் நயம் இதில் இல்லாதது ஏன் ?

:)

said...

//
கோவி.கண்ணன் said...
இருண்ட தமிழகத்துக்கு இவ்வளவு காஸ்டிலியான விளக்கை அம்மாவால் தான் ஏற்ற முடியும்!

வாழ்க அம்மா !

//
அம்மான்னா சும்மாவா??? :)

said...

//
கோவி.கண்ணன் said...
-- வெளி இட அல்ல --
//
இதுல என்னங்க ரகசியம் இருக்கு? வெளியிடாமல் இருக்க?

//
இலைக்காரன் பதிவில் இருக்கும் சொல் நயம் இதில் இல்லாதது ஏன் ?

:)
//
ஏன்னா அந்தப்பதிவை எழுதுவது இலைக்காரன்... இந்தப் பதிவை எழுதியது நான்... :)
இலைக்காரன் ஒரு மலை.. நான் ஒரு மடு...

said...

கொளுத்துவதை மறந்துவிடாமல் இருக்க அம்மாவின் ஆணை!?

said...

முழுமதியைப் பார்த்துச் சிரிக்கும்
மின் மினிப் பூச்சி!

மதியை முழுமையாக இழந்துவிட்ட
விட்டில் பூச்சிகள்!

தாழ்ந்த தமிழ்கமே அண்ணா சொன்னது
இந்தத் தம்பிகளை!

said...

நன்றி வந்தியத்தேவன், பிறைநதிபுரத்தான் , உதயம் & thamizan..

said...

//ஜெகதீசன் said...
நன்றி வந்தியத்தேவன், பிறைநதிபுரத்தான் , உதயம் & thamizan..
//
ஜெகதீசன் ,
தனித்தனியாக மறுமொழி இடனும்.
ஏன் இப்படி பின்னூட்ட எண்ணிக்கையில் அக்கறையே இல்லாமல் இருக்கிறீர்கள் ?

said...

////
கோவி.கண்ணன் said...

//ஜெகதீசன் said...
நன்றி வந்தியத்தேவன், பிறைநதிபுரத்தான் , உதயம் & thamizan..
//
ஜெகதீசன் ,
தனித்தனியாக மறுமொழி இடனும்.
ஏன் இப்படி பின்னூட்ட எண்ணிக்கையில் அக்கறையே இல்லாமல் இருக்கிறீர்கள் ?

////

:)

said...

அம்மான்னா சும்மாவா
(அல்லது)
பின்னூட்டக் கயமை!

said...

:)