வடகரை வேலனின் - காத்திருந்த காதலி - 1
பரிசல்காரனின் - காத்திருந்த காதலி - 2
வெய்யிலானின் - காத்திருந்த காதலி - 3
கிரியின் - காத்திருந்த காதலி - 4
இந்தத் தொடரைத் தொடர அழைத்த கிரிக்கு நன்றி... (ஆனா கிரி அண்ணே..... என் மேல என்ன கோவம்??? கதையை பயங்கரமாக் குழப்பி என்கிட்டத் தந்துட்டீங்க.... இதுல நான் என்ன தொடரன்னே புரியலையே.....:( )
கிரி, கோபிக்குச் செல்லும் அவசரத்தில், வெயிலான் தொடங்கிவைத்த ஒரு தொலைபேசி அழைப்பை முடிக்காமல், கதை நாயகன், நாயகி இருவரையும் அம்போவென்று விட்டுவிட்டு கதையை மட்டும் கோபிக்குத் தூக்கிச் சென்றுவிட்டார்....:P (எனக்குக் கூடத்தான் உடனே ஆமத்தூர் போகனும் போல இருக்கு... அதுக்காக இனி கதையை அங்க கொண்டு போகமுடியாதே... :P)
வெயிலான் தொடங்கிவைத்த தொலைபேசி அழைப்புகளை முடித்துவிட்டு, கிரி தொடங்கிய அழைப்பையும் தொடரின் இப்பகுதியில் முடிக்கிறேன்..
இனி கதை
..............................
கோபி:
டேய் கா...கார்த்திக்க் ..அம்மாவின் குரல் குழறியது..
எனக்கு கலவரமாகியது..அதற்குள் கற்பனை எங்கெங்கோ ஓட..
அப்ப்ப்...பாவுக்கு ....அதற்குள் லைன் கட் ஆகியது..
இப்போது சுத்தமாக சிக்னல் இல்லை...பதட்டத்தோடு வீடு நோக்கி வண்டியை விரட்டினான்..
வழியில் மனமெல்லாம் ஒரே கவலை. கார்த்திக்கின் தந்தையும் தாயும் ஒரு விபத்தில் 10 வருடங்களுக்கு முன் இறந்ததில் இருந்து அப்பா அம்மா இல்லாத குறையே தெரியாமல் கார்த்திக்கை, சங்கரின் அப்பாவும் அம்மாவும் வளர்த்து வருகின்றனர்.
ஒரு பக்கம் சங்கருக்கு விபத்து, மறுபக்கம் அப்பாவின் உடல்நிலையும் சரியில்லை.... அப்பாவுக்கு ஒன்றும் ஆகியிருக்கக் கூடாது என வேண்டிக்கொண்டே வீட்டுக்குச் சென்றான்.
உள்ளே படுக்கையில் படுத்திருந்த அப்பாவைப் பார்த்ததும் கொஞ்சம் நிம்மதியடைந்தான். அவனைப் பார்த்ததும் படுக்கையில் இருந்து எழுந்த அப்பா, சங்கர் எப்படி இருக்கிறான்? அவனைத் தனியா விட்டுட்டு ஏன் வந்தாய் எனப் புலம்பத் தொடங்கிவிட்டார்.
கார்த்திக் எவ்வளவு சமாதானம் செய்தாலும் கேட்காமல் உடனே சங்கரைப் பார்க்கவேண்டும் என அடம் பிடிக்கத் தொடங்கிவிட்டார்..
கார்த்திக்கும் வேறு வழியில்லாமல் ரயில்வேயில் வேலைபார்க்கும் நண்பனின் உதவியுடன் தட்கலில் அன்று இரவுக்கே சென்னைக்கு இரயிலில் பயணச்சீட்டு எடுத்துவிட்டான்..
*****************************************************
சென்னை:
'இந்து' வலைத்தளத்தில் BLOG பற்றி வந்த செய்தியை படித்துக் கொண்டிருந்த கெளரியின் அப்பா, மேசை மேல் இருந்த செல்ஃபோன் திரையில் யார் கூப்பிடுவது? என திரும்பிப் பார்க்கிறார்.
Irudhayaraj calling…….
ம்ம்.. சொல்லுடா சங்கருக்கு எப்படி இருக்கு?
நேர்ல வாடா சொல்றேன்..
சரிடா... கெளரி கிட்ட எதுவும் சொல்லிடாத பயந்துடுவா.. நான் இப்ப அங்க வரேன்..
.....................
இல்லைங்க! சாப்பாடு அனுப்பி அரை மணி நேரம் தான் ஆகுது, இன்னொரு பத்து நிமிசத்துல வந்துடுவாங்க தாமதத்திற்கு மன்னித்து விடுங்க.
கெளரி, சங்கரின் அலுவலகதைத் தொடர்புகொண்டு சங்கருக்கு நடந்த விபத்தைப் பற்றி சொல்லிவிட்டு அனைத்து ஆர்டர்களையும் சரியாக அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொண்டாள்.
டாக்டர் இருதயராஜ் அறையில் இருந்து வெளியே வந்தார்..
அங்கிள் சங்கருக்கு இப்ப எப்படி இருக்கு..
ஒன்னும் பிரச்சனை இல்லைம்மா...விரைவில் சரியாகிரும்.. நீ கிளம்பு.. நான் பார்த்துக்கிறேன்.. அப்பாவும் இப்ப வந்துருவார்.
இல்ல அங்கிள் நான் இருக்கேன்... அப்பா வந்ததும் நான் கிளம்புறேன்... சங்கர் ஆபீஸ் போய் ஆர்டர் எல்லாம் சரியா டெலிவரி பண்ணுறாங்களான்னு மேற்பார்வை பார்க்கனும்.. அதனால அப்பா வந்ததும் கிளம்புறேன்..
சரிம்மா..
கெளரியின் அப்பா 10 நிமிடத்தில் வந்து சேர்ந்தார்.
நீ கிளம்பும்மா....நான் பார்த்துக்குறேன்..
சரிப்பா நான் நேரா சங்கர் ஆபீஸ் போய் ஆர்டர் எல்லாம் சரியா டெலிவரி பண்ணீட்டாங்களான்னு பார்த்துட்டு அப்படியே வீட்டுக்குக் கிளம்புறேன்..
கெளரி மருத்துவமனையை விட்டு வெளியேறிய பின்..
சொல்டா... சங்கருக்கு எப்படி இருக்கு? ரெம்ப கிரிட்டிக்கலா? எப்ப நினைவு திரும்பும்?
ம்ம்ம்...உள்ள வாடா சொல்றேன்....
என்ன சொன்னார் என்பதை டிபிசிடி தொடருவார்...
*****************************************************************
அடுத்து தொடரைத் தொடருவோருக்கு ஒரு வேண்டுகோள்...
கதையை எங்கு கொண்டு சென்றாலும் கதாநாயகன் மற்றும் கதாநாயகி (சங்கர் & கெளரி)யைச் சுற்றியே தொடருமாறு கேட்டுக்கொள்கிறேன்...
********************************************
Showing posts with label சங்கிலிக் கதை. Show all posts
Showing posts with label சங்கிலிக் கதை. Show all posts
Tuesday, July 8, 2008
Subscribe to:
Posts (Atom)


