Wednesday, August 6, 2008

ஒக்கேனக்கல் கர்நாடகத்துக்கே சொந்தம்!

ஒக்கேனக்கல் கர்நாடகத்தின் ஒருங்கினைந்த பகுதி என்று கர்நாடக மின்துறை அமைச்சர் ஈசுவரப்பா தெரிவித்துள்ளார்..
(செய்தி இங்கே: http://www.dailythanthi.com/article.asp?NewsID=430299&disdate=8/6/2008&advt=1 )
~~~~~~~~~~~~~~~~~

ஆம்! ஒக்கேனக்கல் கர்நாடகத்துக்கே சொந்தம்...

ஒக்கேனக்கல் மட்டுமல்ல நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி மாவட்டங்கள் முழுவதுமே கர்நாடகாவுக்கே சொந்தம்!

அதுபோல் வேலூர், காஞ்சிபுரம்,திருவள்ளூர், சென்னை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள் ஆந்திராவுக்கே!

கோவை, தேனி, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் முழுமையும் கேரளாவுக்கே சொந்தம்.

நாகை, கடலூர், பெரம்பலூர், அரியலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள் புதுவைக்கு உரிமையானவை!

(விரும்பினால் ஒரிசாவும், கோவாவும் கூட ஆளுக்கு 3 மாவட்டங்களைக் கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம்...)

எனவே மத்திய அரசு தலையிட்டு இந்த மாநிலங்களுக்கு விரைவில் நியாயம் கிடைக்க ஆவன செய்யவேண்டும்..

31 comments:

said...

மீ த ஃபர்ஸ்ட் (அல்லது)
பின்னூட்ட எடியூரப்பாத்தனம்.

said...

\\கோவை, தேனி, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் முழுமையும் கேரளாவுக்கே சொந்தம்\\
appo neenga inime malayalamanam thukku ezuthuunga.

me the seconddu

said...

புதுடெல்லி, ஆக.6-

"ஒகேனக்கல் கர்நாடகத்தின் ஒருங்கிணைந்த பகுதி'' என்று அந்த மாநிலத்தின் மந்திரி கூறினார்.

கூட்டு குடிநீர் திட்டம்

தமிழ்நாட்டில் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக தமிழக அரசு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை தொடங்கி அதனை செயல்படுத்தும் பணியை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், டெல்லியில் நடைபெற்ற அனைத்து மாநில மின்துறை மந்திரிகள் மாநாட்டில் கர்நாடக மின்துறை மந்திரி ஈசுவரப்பா கலந்து கொண்டார். பின்னர், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், ஒகேனக்கல் திட்டம் தொடர்பாக கர்நாடக அரசின் அணுகுமுறை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது நிருபர்களுக்கு பதில் அளித்து, ஈசுவரப்பா கூறியதாவது:-

தமிழக அரசு தாக்கல் செய்யவில்லை

ஒகேனக்கல் குடிநீர் திட்டப்படி தமிழ்நாட்டுக்கு 1.4 டி.எம்.சி. தண்ணீர் வழங்க மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கினாலும், கூட்டுக் குடிநீர் தொடர்பான எந்த விவரங்களையும் தமிழக அரசு இன்று வரை நதிநீர் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யவில்லை.

காவிரி நதிநீரைப் பகிர்ந்து கொள்ளும் விவகாரத்தில் தீர்ப்பாயம் வழங்கிய இறுதித் தீர்ப்பை எதிர்த்து இரு மாநில அரசுகளும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளன. எனவே இடையில் செயல்படுத்தும் ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு, தமிழக அரசை அனுமதிக்கக் கூடாது.

கர்நாடகத்துக்கு சொந்தம்

ஒகேனக்கல் கர்நாடகாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதற்கு ஆதாரமாக அப்பகுதியில் வசிக்கும் ஏராளமான குடும்பங்களுக்கும் கர்நாடகாவில்தான் வாக்களிக்கும் உரிமை உள்ளது.

அவர்களுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் வறுமைகோட்டுக்குக் கீழ் வாழும் பிரிவினருக்கான அடையாள அட்டையும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஒகேனக்கல்லில் வசிக்கும் பெரும்பான்மையானோர் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

அனுமதிக்கக் கூடாது

காவிரி நதிநீர் தீர்ப்பாயம் ஏற்கனவே, வழங்கியுள்ள இறுதி தீர்ப்பை எதிர்த்து இரண்டு மாநில அரசுகளும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளன.

அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் வரை 2 மாநிலங்களும் எந்தவொரு குடிநீர் திட்டத்தையும் செயல்படுத்தக் கூடாது.

அதனால்தான் தமிழ்நாட்டில் ஒகேனக்கல் திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று நாங்கள் மத்திய அரசை கோருகிறோம். இல்லையென்றால் இரண்டு மாநில அரசுகளும் மிகப்பெரிய பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.

அழைத்துப் பேசவேண்டும்

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக, தேவைப்பட்டால் தமிழக, கர்நாடக மாநில முதல்-மந்திரிகளை மத்திய அரசு அழைத்துப் பேசவேண்டும்.

மேற்கண்டவாறு ஈசுவரப்பா கூறினார்.

- இதுதான் தினத்தந்தியில் இருந்தது

said...

//
முரளிகண்ணன் said...

\\கோவை, தேனி, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் முழுமையும் கேரளாவுக்கே சொந்தம்\\
appo neenga inime malayalamanam thukku ezuthuunga.
//
:)))

said...

கோவி அண்ணே,
முதல் வரி மட்டும் தான் தினத்தந்தியின் செய்தி...
மற்றதெல்லாம் மத்திய அரசுக்கு என் வேண்டுகோள்... கர்நாடகத்துக்கு நியாயம் கிடைப்பதற்காக... :P

said...

வந்துட்டேன்...

சரி அப்டியே ராமேஸ்வரம், ராமநாதபுரம் கோடியக்கரைய எல்லாம் இலங்கைக்கு குடுத்துருவோம். நமக்கு எதுக்கு தமிழ்நாடு ஒரு பேரு வேண்டிக்கிடக்கு.

Anonymous said...

//ஜோசப் பால்ராஜ் said...
வந்துட்டேன்...

சரி அப்டியே ராமேஸ்வரம், ராமநாதபுரம் கோடியக்கரைய எல்லாம் இலங்கைக்கு குடுத்துருவோம். நமக்கு எதுக்கு தமிழ்நாடு ஒரு பேரு வேண்டிக்கிடக்கு.//

அது ஏற்கனவே கொடுத்தாச்சு. இலங்கை கடற்படை தன் சொந்த மக்கள்போல்தான் மீனவர்களைச் சுடுகின்றதே.

said...

//ஜெகதீசன் said...
கோவி அண்ணே,
முதல் வரி மட்டும் தான் தினத்தந்தியின் செய்தி...
மற்றதெல்லாம் மத்திய அரசுக்கு என் வேண்டுகோள்... கர்நாடகத்துக்கு நியாயம் கிடைப்பதற்காக... :P
//

அது தெரியுங்கண்ணா, தினத்தந்தி தளத்துக்கு தனியாக FONT தரவிரக்கம் செய்யனும், நான் அந்த சுட்டிக்குச் சென்ற போது அந்த பக்கத்தை படிக்க முடியவில்லை அதனால் தான் சுரதா http://www.suratha.com/reader.htm மூலமாக எழுத்துரு மாற்றி இங்கு போட்டேன்.

உங்கள் சேவைக்கு நன்றிங்கண்ணா...
தொடரட்டும் உங்கள் சேவை!!!
:)
ஒரு நினைவூட்டல்: நீங்க இன்னும் மீ த பர்ஸ்ட் பின்னூட்டம் போடவில்லை.... :P

said...

//ஒரு நினைவூட்டல்: நீங்க இன்னும் மீ த பர்ஸ்ட் பின்னூட்டம் போடவில்லை.... :P//

வாய்ப்புக் கொடுக்காமல் நீங்களே போட்டுக் கொண்டு என்னை ஏன் வைகிறீர்கள், மீத 10த்

said...

//
ஜோசப் பால்ராஜ் said...

வந்துட்டேன்...

சரி அப்டியே ராமேஸ்வரம், ராமநாதபுரம் கோடியக்கரைய எல்லாம் இலங்கைக்கு குடுத்துருவோம். நமக்கு எதுக்கு தமிழ்நாடு ஒரு பேரு வேண்டிக்கிடக்கு.

//
அட... இதுகூட நல்லாத்தான் இருக்கு...
:P

Anonymous said...

//காவிரி நதிநீரைப் பகிர்ந்து கொள்ளும் விவகாரத்தில் தீர்ப்பாயம் வழங்கிய இறுதித் தீர்ப்பை எதிர்த்து இரு மாநில அரசுகளும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளன. எனவே இடையில் செயல்படுத்தும் ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு, தமிழக அரசை அனுமதிக்கக் கூடாது.//

ஒரே ஒப்பந்தத்தின் கீழ் கருநாடகா பெங்களுர் குடிநீர் திட்டத்தை செயல்படுத்தி பத்தாண்டுகளாக பயன்படுத்தி வருகிறதே?
காவிரிப் பிரச்சினை நீதிமன்றத்தில் இருக்கிறதென்றால் அத்திட்டம் மட்டும் எப்படி செயல்படுத்தப்பட்டது?

கேக்கிறவன் கெணப்பயலா இருந்தா ...........
வேணாம்! இதுக்குமேல நல்லா வாயில வந்துரும்.

said...

உங்க அடுத்த பதிவில் நாட்டின் வரைபடத்தை போட்டு மாநிலங்களை முறைப்படி ஸ்ரீ லங்கா பாகிஸ்தான் பங்களாதேஷ் சீனா மற்றும் நேபாளத்துக்கு பிரித்து கொடுப்பீர்கள் என்று நினைக்கிறேன்:)

said...

அட இதுவாவது பரவாயில்லை.. அவன் சொல்றதை எதிர்த்து எதாவது நடவடிக்கை எடுப்பாங்கன்றீங்களா? சும்மா ஒரு அறிக்கை மட்டும் விடுவானுங்க. அவ்ளோதான்...

said...

//
Anonymous said...

//காவிரி நதிநீரைப் பகிர்ந்து கொள்ளும் விவகாரத்தில் தீர்ப்பாயம் வழங்கிய இறுதித் தீர்ப்பை எதிர்த்து இரு மாநில அரசுகளும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளன. எனவே இடையில் செயல்படுத்தும் ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு, தமிழக அரசை அனுமதிக்கக் கூடாது.//

ஒரே ஒப்பந்தத்தின் கீழ் கருநாடகா பெங்களுர் குடிநீர் திட்டத்தை செயல்படுத்தி பத்தாண்டுகளாக பயன்படுத்தி வருகிறதே?
காவிரிப் பிரச்சினை நீதிமன்றத்தில் இருக்கிறதென்றால் அத்திட்டம் மட்டும் எப்படி செயல்படுத்தப்பட்டது?

கேக்கிறவன் கெணப்பயலா இருந்தா ...........
வேணாம்! இதுக்குமேல நல்லா வாயில வந்துரும்.

//
கருத்துக்கு நன்றி அனானி...

said...

//
நிஜமா நல்லவன் said...

உங்க அடுத்த பதிவில் நாட்டின் வரைபடத்தை போட்டு மாநிலங்களை முறைப்படி ஸ்ரீ லங்கா பாகிஸ்தான் பங்களாதேஷ் சீனா மற்றும் நேபாளத்துக்கு பிரித்து கொடுப்பீர்கள் என்று நினைக்கிறேன்:)

//
நல்ல யோசனை... அது சரி, பர்மா என்னங்க பாவம் செஞ்சது.. அதுக்கும் கொஞ்ச்சம் தந்துருவோம்...
:)

said...

மீ த 17th பஷ்ட்ட்டூ!!!

said...

இந்த கர்நாடக அரசியல்வாதிங்களுக்கு வேற வேலயே இல்லயா?? சும்மா ஒருத்தர் மாறி ஒருத்தர், போற போக்குல எதயாவது கொளுத்தி போட்டுட்டு போயிட்டிருக்காங்க..ஹ்ம்ம்ம்ம்...எல்லாம் நம்ம அரசியல்வாதிங்களச்சொல்லனும்...

said...

அட விடுங்கப்பா. குசேலன் படம் வெள்ளி விழா காணவேண்டும். இளிச்சவாய் தமிழன் தலீவரு நமக்காக sound விடுவார் என்று படம் பார்க்க செல்வான். கன்னடர்கள் ரஜினி தங்களின் காலில் விழுந்துவிட்டார் என்று படம் பார்க்க செல்வான். ஆக மொத்தம் இந்த பிரச்சனை இன்னும் சில மாதங்கள் நீடிக்கும்.

said...

வரைபடத்தைப் பார்த்தா இந்த ஆளுக இஸ்ரேல் போய் மொஸாட்கிட்ட தனிப்பயிற்சி எடுத்தமாதிரியில்ல பேசிக்கிறாங்க!

said...

வாங்க விஜய் ஆனந்த் & வெண்தாடிதாசன்,
நன்றி..
:)

said...

பதிவை விட கோவி கண்ணன் அவர்களின் பின்னூட்டம் பெரிதாக இருப்பது...பின்னூட்ட கோல்மால்தனம்.

said...

அப்ப என் மாவட்டம் எந்த நாட்டை சேர்ந்தது?

தஞ்சாவூர். திருச்சி

said...

//
குசும்பன் said...

அப்ப என் மாவட்டம் எந்த நாட்டை சேர்ந்தது?

தஞ்சாவூர். திருச்சி

//
தஞ்சை, திருச்சி மாவட்டங்கள் ஒருங்கிணைந்த தமிழ்நாட்டின் பகுதிகளாக இருக்கும்.. தமிழ் நாட்டில் இந்த இரு மாவட்டங்கள் இருக்கும்.(அதுவும் ஒரிசாவோ கோவாவோ இம்மாவட்டங்கள் வேண்டும் எனக் கேட்காதவரை...)
:)

said...

நன்றி ஜெகா எங்க ஊர் கடலுரை பான்டியில் சேர்த்தீர்களே அதற்க்கு உங்களுக்கு நன்றி ஐயா

said...

பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் "குளோபல் வார்மிங்" பற்றிய

விழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார

விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.

உலகின் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்

ஒன்றுபடுவோம்
போராடுவோம்
தியாகம் செய்வோம்

இறுதி வெற்றி நமதே

மனிதம் காப்போம்
மானுடம் காப்போம்.

இயற்கை அன்னையை வணங்கி மகிழ்வோம்.

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

said...

//
jackiesekar said...

நன்றி ஜெகா எங்க ஊர் கடலுரை பான்டியில் சேர்த்தீர்களே அதற்க்கு உங்களுக்கு நன்றி ஐயா

//
வருகைக்கு நன்றி சேகர்... :)

said...

நல்ல வேளை எங்க ஊர் எந்த மாநிலத்தின் எல்லையிலும் இல்லை... தப்பித்தோம் :)

அச்சச்சோ ஆனா இலங்கை, இராமநாதபுரம் எங்களுக்குத்தான் சொந்தம்னு சொன்னா என்ன பண்றது???ம்ம்??? :(

said...

90% சதவீதம் தமிழர்கள் இருக்கும் கோலார் மற்றும் கணிசமான அளவில் தமிழர்கள் இருக்கும் பெங்களூர், குடகுப் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்கக் குரல் கொடுக்குமாறு அண்ணன் ஜெகதீசன் தலைமையில் சிங்கையில் ஒரு பதிவர் மாநாடு நடத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். :)

said...

//பொன்வண்டு said...
90% சதவீதம் தமிழர்கள் இருக்கும் கோலார் மற்றும் கணிசமான அளவில் தமிழர்கள் இருக்கும் பெங்களூர், குடகுப் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்கக் குரல் கொடுக்குமாறு அண்ணன் ஜெகதீசன் தலைமையில் சிங்கையில் ஒரு பதிவர் மாநாடு நடத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். :)//

இதை நான் வழி மொழிகிறேன் ......ஆனா என்னை மாநாட்டுக்கு கூப்பிட கூடாது.....நான் வேலைக்கு போகணும்:)

said...

/////
பொன்வண்டு said...

90% சதவீதம் தமிழர்கள் இருக்கும் கோலார் மற்றும் கணிசமான அளவில் தமிழர்கள் இருக்கும் பெங்களூர், குடகுப் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்கக் குரல் கொடுக்குமாறு அண்ணன் ஜெகதீசன் தலைமையில் சிங்கையில் ஒரு பதிவர் மாநாடு நடத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். :)
August 7, 2008 3:18 PM
/////////
/////////
நிஜமா நல்லவன் said...

//பொன்வண்டு said...
90% சதவீதம் தமிழர்கள் இருக்கும் கோலார் மற்றும் கணிசமான அளவில் தமிழர்கள் இருக்கும் பெங்களூர், குடகுப் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்கக் குரல் கொடுக்குமாறு அண்ணன் ஜெகதீசன் தலைமையில் சிங்கையில் ஒரு பதிவர் மாநாடு நடத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். :)//

இதை நான் வழி மொழிகிறேன் ......ஆனா என்னை மாநாட்டுக்கு கூப்பிட கூடாது.....நான் வேலைக்கு போகணும்:)
////////

தமிழர்கள் இந்தமாதிரிப் பேசினால் அதற்குப் பெயர் பிரிவினைவாதம், தேசத்துரோகம்... பிரிவினைவாதத்தைத் தூண்டும் உங்கள் இருவருக்கும் கடும் கண்டனங்கள்!!!