Friday, August 29, 2008

வெற்றி தரும் பெயர் சோதிடம்.

பெயரில் என்ன இருக்கிறது ...நம்ம கிட்டதான் எல்லாம் இருக்கு..என்னும் அறிவாளிகள்..இத்தனை படிக்க வேண்டாம்..கண்ணீரில் வாழும் ,துன்பத்தில் தவிக்கும் ஒரு சகோதரனுக்காவது.. இந்த கலை உபயோகமானால் ..மகிழ்ச்சி.

இந்தக் கலையை நான் என் குருஜி ஸ்ரீஸ்ரீஸ்ரீ.ராமஷ்ஷதீஸ்வராநந்தாஸ்வாமிகள் அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டேன்.

உதாரணமாக பெயரின் முதல் எழுத்தோ அல்லது மூன்றாவது எழுத்தோ அல்லது நான்கு மற்றும் ஐந்தாவது எழுத்துக்களோ கீழ்க்கண்ட எழுத்துக்களில் ஒன்றாக இருந்தால் அவர்களின் வாழ்க்கை மிகவும் சிரமமானதாக இருக்கும்...

அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ,க்,க,கா,கி,கீ,கு,கூ,கெ,கே,கை,கொ,கோ,கௌ,ங்,ங,ஙா,ஙி,ஙீ,ஙு,ஙூ,ஙெ,ஙே,ஙை,ஙொ,ஙோ,ஙௌ,
ச்,ச,சா,சி,சீ,சு,சூ,செ,சே,சை,சொ,சோ,சௌ.ஞ்,ஞ,ஞா,ஞி,ஞீ,ஞு,ஞூ,ஞெ,ஞே,ஞை,ஞொ,ஞோ,ஞௌ,
ட்,ட,டா,டி,டீ,டு,டூ,டெ,டே,டை,டொ,டோ,டௌ,ண்,ண,ணா,ணி,ணீ,ணு,ணூ,ணெ,ணே,ணை,ணொ,ணோ,ணௌ,
த்,த,தா,தி,தீ,து,தூ,தெ,தே,தை,தொ,தோ,தௌ,ந்,ந,நா,நி,நீ,நு,நூ,நெ,நே,நை,நொ,நோ,நௌ,
ப்,ப,பா,பி,பீ,பு,பூ,பெ,பே,பை,பொ,போ,பௌ,ம்,ம,மா,மி,மீ,மு,மூ,மெ,மே,மை,மொ,மோ,மௌ,
ய்,ய,யா,யி,யீ,யு,யூ,யெ,யே,யை,யொ,யோ,யௌ,ர்,ர,ரா,ரி,ரீ,ரு,ரூ,ரெ,ரே,ரை,ரொ,ரோ,ரௌ,
ல்,ல,லா,லி,லீ,லு,லூ,லெ,லே,லை,லொ,லோ,லௌ,வ்,வ,வா,வி,வீ,வு,வூ,வெ,வே,வை,வொ,வோ,வௌ,
ழ்,ழ,ழா,ழி,ழீ,ழு,ழூ,ழெ,ழே,ழை,ழொ,ழோ,ழௌ,ள்,ள,ளா,ளி,ளீ,ளு,ளூ,ளெ,ளே,ளை,ளொ,ளோ,ளௌ,
ற்,ற,றா,றி,றீ,று,றூ,றெ,றே,றை,றொ,றோ,றௌ,ன்,ன,னா,னி,னீ,னு,னூ,னெ,னே,னை,னொ,னோ,னௌ.

இதற்குப் பதில் இந்த இடங்களில் வேறு எழுத்துக்களைப் போட்டு பெயரைக் கொஞ்சம் மாற்றினால் போதும், உங்கள் வாழ்க்கை வளமானதாக மாறும்..

உங்கள் பெயர் இது போல் இருந்தால் உடனே என்னை அனுகவும்.. உங்கள் பெயரில் தகுந்த மாற்றங்களைச் செய்து தருகிறேன்..

இதற்கு எந்தக் கட்டணமும் இல்லை. ஏனக்கு தட்சணையாக ரூ.12071 மட்டும் தந்தால் போதும்...

எடுத்துக்காட்டாக நான் மாற்றி வைத்த பெயர்கள்:
கோ.கண்ணன் : கோவி.கண்ணன்
அரவிந்த் : டி.பி.சி.டி
சரவணவேல் :குசும்பன்.

விரைவில் வந்து பெயரை மாற்றிக்கொள்ளுங்கள்!!! என் சேவையைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்

7 comments:

said...

அண்ணே அந்த 12071 ஈஎம்ஐ ல மாசா மாசம் கட்டலாமா??? அப்பிடினா ஜெகதீசன் அப்படிங்கிற பேரை வேற எதாச்சுமா மாத்திருங்க !!

said...

ஜெகதீசன் கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் உண்மை புரியும்

இப்ப உதாரணத்துக்கு

'ஜெய' லலிதா ன்னு எடுத்துக் கொள்ளுங்கள்,ஜெய என்றால் வெற்றி அதனால் தான் அந்த அம்மா வெற்றிபெற்றாங்க

'விஜய்' - விஜய் என்றாலும் வெற்றிதான்.

விஜயகுமார் ஏன் அந்த அளவுக்கு வெற்றிபெறலைன்னு கேட்கப்படாது. முகராசியும் இருக்கு. பையன் வெற்றிபெறனும் என்று தான்

விஜய் அருணாக்கி இருக்கிறார்
விஜய டி ராஜேந்தர் ரகசியம் இப்ப புரியுதா ?

இதெல்லாம் தமிழ்நாட்டு அகில உலக வெற்றி ஒன்றின் பற்றிய ரகசியம் சொல்கிறேன் கேளுங்க
மைக்ரோசாப்ட் விண்டோஸ் இதை ஆங்கிலத்தில் எழுதி பாருங்க

Microsoft 'WIN'dows ன்னு வரும், பலர் திரும்ப திரும்ப இந்த ''WIN'dows சொல்லிச் சொல்லி அதன் அதிர்வில் தான் பில்கேட்ஸ் பணக்கார கேட்ஸ்சாக மாறினார்.

சும்மாச் சொல்லவில்லை சீரியசாகச் சொல்றேன். நாளைக்கே நல்ல நாளாகப் பார்த்து நம்ம நண்பர்களுக்கெல்லாம் விஜய சேர்த்துவிடுவோம். விஜய் ஆனந்த் பெயரிலேயே விஜய் இருக்கிறது, இன்னொரு விஜய் அல்லது ஜெய போட்டு ஜெய விஜய ஆனந்த் என்று மாற்றினால் மாபெரும் வெற்றிவீரராக வருவார்.

:)

said...

நீங்க என்ன விஜய் டிவி'ல நைட் வருவாரே, அவருக்கு போட்டியா?

said...

ஜெகதீசனில் 'ஜெ' இருக்குல்ல... அதுனால நீங்க கெலிச்சிடுவீங்க!

said...

ஒண்ணும் சொல்றதுக்கில்ல...

வாயடைச்சுப்போய் நிக்கறேன்..

கட்டணம் இல்லாமலேயே எனக்கு பெயர் மாற்றித்தந்த கோவியார் வாழ்க!! வாழ்க!!!

ஜெகதீசன்..ஒரே ஒரு உதாரணத்தோட நிறுத்திட்டீங்களே...சரியா பு. த. செ. வி....இன்னும் நாலஞ்சு உதாரணங்களோடு...

said...

ஆமாம் பெயர் மாற்றம் செய்தப் பிறகு எங்கள் வீட்டில் தேனாறு, பாலாறு ஓடுகிறது..ஊருக்கே பால் எங்கள் வீட்டிலிருந்து தான் போகிறதென்றால் பார்த்துக்கோங்களேன். என் பெயரை மாற்றியதற்கு நான் என்றென்றும் ஸ்ரீஸ்ரீஸ்ரீலஸ்ரீஸ்ரீஸ்ரீ ஜெகதீசனாருக்கு கடமைப்பட்டுள்ளேன்.

ஃஃஃஃஃஃ

ஜெகதீசனாரே, இதை உங்க பதிவில் விளம்பரத்திற்கு பயன்படுத்திக்கலாம்...கூடவே, என் பங்கை தனியாக ஒதுக்கி வைத்து அனுப்பி வைக்கவும்..

said...

என் பெயரை பேராலஜி படி மாற்றிக் கொடுங்கள் உங்களுக்கு ரூ.12071 என்ன ,
Rs.12,07,10000000 X 0 =?
டிடியாகவோ,செக்காகவோ அனுப்பிவைக்கிறேன்