Saturday, August 2, 2008

குசேலன் - ஒரு மாறுபட்ட பார்வை!நல்ல சினிமா விரும்பிகளுக்காகவும் தன்னால் ஒரு படம் கொடுக்க முடியும் என சூப்பர்ஸ்டார் ரஜினி நிரூபித்திருக்கும் படம் குசேலன்.

ரஜினியின் தரமான படங்கள் எனப் பட்டியல் போடுபவர்கள் தாராளமாய் இந்தப் படத்துக்கு முதலிடம் கொடுக்கலாம்.

மலையாள ரீமேக்காக இருந்தாலும், குசேலனை தன் சிறந்த படமாகச் சொல்லி மார்த் தட்டிக் கொள்ளலாம் இயக்குநர் பி.வாசு.
-நன்றி: தட்ஸ்தமிழ்
**************************************இனி குசேலன் என் பார்வையில்:

* சூப்பர்ஸ்டார் தான் சூப்பர்ஸ்டார் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். உச்ச நடிகரின் நடிப்பு ஒவ்வொரு படத்திலும் உச்சமடைந்து கொண்டே இருக்கிறது. சுந்தர்ராஜனுக்கு அவர் தரும் பதில்கள் ஒவ்வொன்றும் கலக்கல்!

* நயன்தாரா வழக்கம்போலக் கலக்கியுள்ளார். விஜய் டீவி தனக்குத் தந்த விருதுக்குத் (most entertainer)தகுதியானவர் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். படத்துக்குப் படம் இவரது நடிப்பு மெருகேறி வருகிறது.

* பசுபதி - வெயில் படத்திற்குப் பின் மீண்டும் ஒருமுறை கலக்கியிருக்கிறார். ஏழை சவரத் தொழிலாளியாக வாழ்ந்துகாட்டியுள்ளார். ரஜினியும் பசுபதியும் சந்திக்கும் காட்சியில் நடிப்பில் ஒருவரை ஒருவர் மிஞ்சியுள்ளனர்.

* மீனா வறுமையிலும் செம்மையாக, கணவனுக்கு ஏற்ற மனைவியாக, அப்படியே புராணகால சுசீலையின் மறு உருவமாக வாழ்ந்து காட்டியுள்ளார்.
(சுசீலையைப் பற்றி அறியாதவர்கள் இங்கு கிளிக்கி அவரைப் பற்றித் தெரிந்துகொள்ளவும்)

* வடிவேலு, சந்தானம், சந்தானபாரதி மற்றும் லிவிங்ஸ்டன் & கோவின் நகைச்சுவைகள் வயிறு குலுங்கச் சிரிக்கவைக்கின்றன. ஆபாசம், இரட்டை அர்த்தம் ஏதும் இல்லாத அருமையான நகைச்சுவை!

* சில காட்சிகளே வந்தாலும் கலக்கிச் சென்றிருக்கிறார் பிரபு.

* ஒவ்வொரு நடிகரும் போட்டி போட்டுக்கொண்டு வாழ்ந்திருக்கின்றனர்.

* அருமையான படத்தை மேலும் சிறப்பாக்கும் பாடல்களும் இசையும்.

மொத்தத்தில் ஒரு கலக்கலான படம். குறைந்தது 4 முறையாவது பார்க்கலாம்..

**********************************

குறிப்புகள் சில:

1. இவ்வளவு அருமையான படத்தினைக் குறை கூறி வரும் விமர்சனங்களைப் பார்க்கும் போது, ரஜினி மீதான அவர்களின் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியே தெரிகிறது.

2. மக்கள் வலையுலகில் வரும் விமர்சனங்களை நம்பாமல், தட்ஸ்தமிழ் போன்ற நல்ல தளங்கள், குமுதம் போன்ற நல்ல இதழ்களில் வரும் விமர்சனங்களை மட்டும் நம்பி, பெருவாரியாத் திரையரங்கிற்குச் சென்று படத்தை ரசித்து மாபெரும் வெற்றியடையச் செய்யவேண்டும் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

3. சூப்பர்ஸ்டாரின் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு தருவோர் தமிழ் மக்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்தமுறை ஐதராபாத்தில் தந்த பேட்டியில் மேலும் அதிக வியர்வைத்துளிகள் சிந்திவிட்டதால், கொஞ்சம் அதிகமாகப் போட்டு ஒன்றரைப் பவுன் தங்கக்காசாகத் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்...

4. படத்தைப் பார்த்துத் தான் விமர்சனம் எழுதினாயா என்று என்னைப் பார்த்துக் கேள்வி கேட்போருக்கு, என் ஒரே பதில் :
படம் பார்த்துத்தான் திரை விமர்சனம் எழுதவேண்டும் என்று எந்த விதியும் சொல்லவில்லை!

**********************************

என் ஒருவருட வலையுலக வாழ்வில் நான் எழுதிய முதல் திரைவிமர்சனம் இது. எனவே இதை பரிசல்காரனின் "முதல்" தொடர்விளையாட்டிற்கு என் இடுகையாக அறிவிக்கிறேன்..

42 comments:

said...

ரஜினி வாழ்க!!!

said...

வாழ்த்துக்கள்...

உங்கள் உயிர் தப்பியதில் எனக்கு மகிழ்ச்சியே...

said...

//படம் பார்த்துத்தான் திரை விமர்சனம் எழுதவேண்டும் என்று எந்த விதியும் சொல்லவில்லை!//

சரியாதான் கிளம்பி இருக்காங்க...

said...

//குசேலனை தன் சிறந்த படமாகச் சொல்லி மார்த் தட்டிக் கொள்ளலாம் இயக்குநர் பி.வாசு.
///

கூலிக்கு மார் அடிக்கிறது என்று சொல்வாங்களே அது இதுதானா?

said...

//நயன்தாரா வழக்கம்போலக் கலக்கியுள்ளார்.//

நயன்தாரா வழக்கம் போலக் கழட்டியுள்ளார் அப்படிதானே வரவேண்டும்.

said...

//என் ஒருவருட வலையுலக வாழ்வில் நான் எழுதிய முதல் திரைவிமர்சனம் இது. எனவே இதை பரிசல்காரனின் "முதல்" தொடர்விளையாட்டிற்கு என் இடுகையாக அறிவிக்கிறேன்.. //

உங்க 'டேர்ன்' இன்னும் வரலை... அதுக்குள்ள இப்படி குசும்பு செய்ய கூடாது... இதை ஏற்க வேண்டாமென பரிசலுக்கு கடிதம் ஒன்று போட்டு இருக்கேன்... நாளை பஞ்சாயத்து கூட்டப்படும்...

said...

//ஏழை சவரத் தொழிலாளியாக வாழ்ந்துகாட்டியுள்ளார். ரஜினியும் பசுபதியும் சந்திக்கும் காட்சியில் நடிப்பில் ஒருவரை ஒருவர் மிஞ்சியுள்ளனர்.//

ரசிகர்களை மிதிச்சும் உள்ளனர்:((((

said...

//வடிவேலு, சந்தானம், சந்தானபாரதி மற்றும் லிவிங்ஸ்டன் & கோவின் நகைச்சுவைகள் வயிறு குலுங்கச் சிரிக்கவைக்கின்றன. ஆபாசம், இரட்டை அர்த்தம் ஏதும் இல்லாத அருமையான நகைச்சுவை!//

அடங்கொப்புரன இதுக்கு மேல நகைச்சுவை ஏதும் இல்லை... இதை எழுதினவன் கைய முறிக்கனும்!!!

said...

//கொஞ்சம் அதிகமாகப் போட்டு ஒன்றரைப் பவும் தங்கக்காசாகத் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்...
//

ஹி ஹி ஹி சூப்பருங்கோ!!!

said...

//மீனா மறு உருவமாக வாழ்ந்து காட்டியுள்ளார்.//

மீனா காட்டவில்லை நயன்தாராதான் காட்டி இருக்கிறார்

said...

திரை விமர்சனம் எழுதவேண்டும் என்று எந்த விதியும் சொல்லவில்லை!//

இருக்கட்டும் இருக்கட்டும்

said...

//குசேலன் - இதற்கு மேலும் இந்தப் படத்தைப் பார்க்க வே... // (நேற்றய இடுகை)

ஐயா நல்லாத்தேன் கலாய்க்கிறீங்க, எப்படியோ நல்லாயிருந்தா சரி

said...

//
ஸயீத் said...

//குசேலன் - இதற்கு மேலும் இந்தப் படத்தைப் பார்க்க வே... // (நேற்றய இடுகை)

ஐயா நல்லாத்தேன் கலாய்க்கிறீங்க, எப்படியோ நல்லாயிருந்தா சரி

//
ஹிஹிஹி... அது நேத்து... இது இன்னைக்கு..
:P

said...

குறிப்புகளில் 4 வது பாயிண்ட் அருமை.

said...

/
TBCD said...

வாழ்த்துக்கள்...

உங்கள் உயிர் தப்பியதில் எனக்கு மகிழ்ச்சியே...
/

ரிப்பீட்டேய்ய்ய்

said...

/
குசும்பன் said...

//நயன்தாரா வழக்கம்போலக் கலக்கியுள்ளார்.//

நயன்தாரா வழக்கம் போலக் கழட்டியுள்ளார் அப்படிதானே வரவேண்டும்.
/

இப்பிடி சொல்லி சொல்லியே படத்த பாக்க வெச்சிருவீங்க போல இருக்கே

:((((

said...

/
குசும்பன் said...

//வடிவேலு, சந்தானம், சந்தானபாரதி மற்றும் லிவிங்ஸ்டன் & கோவின் நகைச்சுவைகள் வயிறு குலுங்கச் சிரிக்கவைக்கின்றன. ஆபாசம், இரட்டை அர்த்தம் ஏதும் இல்லாத அருமையான நகைச்சுவை!//

அடங்கொப்புரன இதுக்கு மேல நகைச்சுவை ஏதும் இல்லை... இதை எழுதினவன் கைய முறிக்கனும்!!!
/

:)))))))))))))))
மே ஐ எல்ப் யு குசும்ப்ஸ்???

said...

:)

said...

படம் பாக்காமலே உங்களுக்கு இப்படி ஆயிட்டுதே! அடக்கடவுளே!

said...

//படத்தைப் பார்த்துத் தான் விமர்சனம் எழுதினாயா என்று என்னைப் பார்த்துக் கேள்வி கேட்போருக்கு, என் ஒரே பதில் :
படம் பார்த்துத்தான் திரை விமர்சனம் எழுதவேண்டும் என்று எந்த விதியும் சொல்லவில்லை!//

அதானே பார்த்தேன்! பார்த்திருந்தா கிழிஞ்சிருக்குமில்ல...

said...

//என் ஒருவருட வலையுலக வாழ்வில் நான் எழுதிய முதல் திரைவிமர்சனம் இது. எனவே இதை பரிசல்காரனின் "முதல்" தொடர்விளையாட்டிற்கு என் இடுகையாக அறிவிக்கிறேன்..//

அதையே கடைசி விமர்சமனவாவும் அறிவிச்சுடுங்க.

இவ்வளவு ஜூப்பரான படத்துக்கு விமர்சனம் எழுத வெச்ச பாவத்தை வேற என்னை சுமக்க வெச்சுட்டீங்க!

said...

சூப்பர், கலக்கல் :):):)

said...

காலைல தமிழ்மணம் திறந்து முதல் பதிவே இப்படி வயிறு குலுங்க சிரிக்க வைக்குதே. அந்த மனுஷன் பாவம்யா. விட்டுடாதீங்க:))

said...

//ஜெகதீசன் said...
ரஜினி வாழ்க!!!//

பின்னூட்ட கயமைத்தனமா? நீங்களும் வாழ்க!

said...

தட்ஸ் தமிழ் வாழ்வாங்கு வாழ்க!

said...

குமுதம் கன்னாபின்னான்னு வாழ்க!

said...

//VIKNESHWARAN said...
//படம் பார்த்துத்தான் திரை விமர்சனம் எழுதவேண்டும் என்று எந்த விதியும் சொல்லவில்லை!//

சரியாதான் கிளம்பி இருக்காங்க...//

அவரு கிளம்பி ஒரு வருஷம் ஆகுதுங்க:)

said...

//TBCD said...
வாழ்த்துக்கள்...

உங்கள் உயிர் தப்பியதில் எனக்கு மகிழ்ச்சியே...//நீங்க சொல்லுறத பார்த்தா உங்களுக்கு வேண்டியவங்க நிறைய பேரு பாடு ரொம்ப கஷ்டம் போல தெரியுதே:))

said...

///குசும்பன் said...
//குசேலனை தன் சிறந்த படமாகச் சொல்லி மார்த் தட்டிக் கொள்ளலாம் இயக்குநர் பி.வாசு.
///

கூலிக்கு மார் அடிக்கிறது என்று சொல்வாங்களே அது இதுதானா?//

தெரிஞ்சிகிட்டே தெரியாத மாதிரி கேக்குறதில் உங்களை மிஞ்ச ஆளே இல்லைங்க குசும்ஸ்:)

said...

///குசும்பன் said...
//நயன்தாரா வழக்கம்போலக் கலக்கியுள்ளார்.//

நயன்தாரா வழக்கம் போலக் கழட்டியுள்ளார் அப்படிதானே வரவேண்டும்.//

இதை நான் கடுமையா ஆட்சேபிக்கிறேன். உடுப்பு போட்டா தானே கழட்ட முடியும். அவங்க போடுறதே த்தூ...சாரி டூ பீஸ் தானே? அப்புறம் என்னத்த கழட்டுனாங்க?????

said...

///VIKNESHWARAN said...
//என் ஒருவருட வலையுலக வாழ்வில் நான் எழுதிய முதல் திரைவிமர்சனம் இது. எனவே இதை பரிசல்காரனின் "முதல்" தொடர்விளையாட்டிற்கு என் இடுகையாக அறிவிக்கிறேன்.. //

உங்க 'டேர்ன்' இன்னும் வரலை... அதுக்குள்ள இப்படி குசும்பு செய்ய கூடாது... இதை ஏற்க வேண்டாமென பரிசலுக்கு கடிதம் ஒன்று போட்டு இருக்கேன்... நாளை பஞ்சாயத்து கூட்டப்படும்...//

ரொம்ப ஓவரா அலும்பு பண்ணுறாரு. பஞ்சாயத்த கூட்டி நல்ல தீர்ப்பு சொல்லுங்க நாட்டாம:)

said...

//குசும்பன் said...
//ஏழை சவரத் தொழிலாளியாக வாழ்ந்துகாட்டியுள்ளார். ரஜினியும் பசுபதியும் சந்திக்கும் காட்சியில் நடிப்பில் ஒருவரை ஒருவர் மிஞ்சியுள்ளனர்.//

ரசிகர்களை மிதிச்சும் உள்ளனர்:((((//

நீங்க மிதிபட்ட வலி இன்னும் மிச்சம் இருக்கு போல. ஐயோ பாவம். வீட்டிலும் அடி வாங்கி அங்க போயும் மிதி வாங்க.....ரொம்ப கஷ்டமா குசும்பரே:)

said...

//குசும்பன் said...
//வடிவேலு, சந்தானம், சந்தானபாரதி மற்றும் லிவிங்ஸ்டன் & கோவின் நகைச்சுவைகள் வயிறு குலுங்கச் சிரிக்கவைக்கின்றன. ஆபாசம், இரட்டை அர்த்தம் ஏதும் இல்லாத அருமையான நகைச்சுவை!//

அடங்கொப்புரன இதுக்கு மேல நகைச்சுவை ஏதும் இல்லை... இதை எழுதினவன் கைய முறிக்கனும்!!!//

குசும்பரே எனக்கும் கோவம் கோவமா வருது.. இன்னைக்கு உலக பொது மன்னிப்பு தினமாம். அதனால மன்னிச்சு விட்டுடுவோம்:))

said...

//குசும்பன் said...
//கொஞ்சம் அதிகமாகப் போட்டு ஒன்றரைப் பவும் தங்கக்காசாகத் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்...
//

ஹி ஹி ஹி சூப்பருங்கோ!!!//

இதுதாங்க ஆமத்தூர் டச்....சூப்பர்!!

said...

//மீனா மறு உருவமாக வாழ்ந்து காட்டியுள்ளார்.//அய்யய்யோ...மீனா பேயா நடிச்சி இருக்காங்களா?????

said...

//மங்களூர் சிவா said...
குறிப்புகளில் 4 வது பாயிண்ட் அருமை.//

வந்துட்டாரு....பாய்ண்டர் சிவா:)

said...

//rapp said...
சூப்பர், கலக்கல் :):):)//

ஆஹா ...அக்கா சொல்லிட்டாங்க....அப்ப சரியா தான் இருக்கும்:)

said...

////மங்களூர் சிவா said...
/
குசும்பன் said...

//நயன்தாரா வழக்கம்போலக் கலக்கியுள்ளார்.//

நயன்தாரா வழக்கம் போலக் கழட்டியுள்ளார் அப்படிதானே வரவேண்டும்.
/

இப்பிடி சொல்லி சொல்லியே படத்த பாக்க வெச்சிருவீங்க போல இருக்கே

:((((///

யோவ்....இருப்பா அவசரப்படாத...சத்யம் வந்தவுடனே பாரு.....ஏவாள் ரேஞ்சுல நடிச்சு இருக்காங்களாம்:)

said...

//பரிசல்காரன் said...
//படத்தைப் பார்த்துத் தான் விமர்சனம் எழுதினாயா என்று என்னைப் பார்த்துக் கேள்வி கேட்போருக்கு, என் ஒரே பதில் :
படம் பார்த்துத்தான் திரை விமர்சனம் எழுதவேண்டும் என்று எந்த விதியும் சொல்லவில்லை!//

அதானே பார்த்தேன்! பார்த்திருந்தா கிழிஞ்சிருக்குமில்ல...//

பரிசல் அண்ணே உங்க நிலைமை புரியுது. என்னோட அனுதாபங்கள் அண்ணே:(

said...

///பரிசல்காரன் said...
//என் ஒருவருட வலையுலக வாழ்வில் நான் எழுதிய முதல் திரைவிமர்சனம் இது. எனவே இதை பரிசல்காரனின் "முதல்" தொடர்விளையாட்டிற்கு என் இடுகையாக அறிவிக்கிறேன்..//

அதையே கடைசி விமர்சமனவாவும் அறிவிச்சுடுங்க.

இவ்வளவு ஜூப்பரான படத்துக்கு விமர்சனம் எழுத வெச்ச பாவத்தை வேற என்னை சுமக்க வெச்சுட்டீங்க!//

பரிசல் அண்ணே உங்க பரிசலில் ஆளுங்களை தான் ஏத்திட்டு போவீங்கன்னு பார்த்தா பாவ மூட்டைகளையுமா?

said...

கிர்ர்ர்ர்ர்....
பின்னூட்டங்களில் கூட ரஜினி மீதான காழ்ப்புணர்ச்சியே தெரிகிறது...
ஒரு நல்ல படத்தைப் பற்றி உங்க்ளால் இப்படியெல்லாம் எப்படிப் பேசமுடிகிறது என்றுதான் தெரியவில்லை...

எல்லாரும் ரெம்பவே கும்மிவிட்டதால் தனித்தனியாக பதில் சொல்ல முடியவில்லை...

பின்னூட்டிய அனைவருக்கும் நன்றி...

said...

குசேலன் ஒரு மாறுபட்ட பார்வை - இந்தத் தலைப்போட அர்த்தம் பதிவப் படிச்சதுக்கப்புறம்தான் தெர்து! :-)