Thursday, August 14, 2008

பகீரங்கமாக ஒரு எச்சரிக்கைக் கடிதம்!

அன்புள்ள பதிவர்கள் சமூகத்திற்கு,

நீங்கள் அனைவரும் நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன்.

தமிழ்ப் பதிவுலகில் இந்தவாரம் கடிதம் மற்றும் உணவக வாரம் என்பது தாங்கள் அனைவரும் அறிந்ததே.. இது வரை கடிதம் மற்றும் உணவக வாரம் சிறப்பாகவே சென்று கொண்டிருக்கிறது.

மொத்தமுள்ள 7823 தமிழ்ப் பதிவர்களில் இது வரை 7620 பேர் "பகீரங்கக் கடிதம்" எழுதிவிட்டனர்; 6521 பேர் உணவகப் பதிவு போட்டுவிட்டனர். இது குசேலன்(6200) மற்றும் தசாவதார(6123) வாரங்களை விட நல்ல முன்னேற்றம் தான்.

ஆனால் சென்ற வாரங்களைப் போல இப்போது விட்டுவிடப்போவதில்லை. பதிவர்கள் அனைவரும் கட்டாயம் உணவக மற்றும் கடிதப் பதிவுகள் கட்டாயம் எழுதிட வேண்டும். எழுதாதவர்களுக்குக் கடும் தண்டனை வழங்கப் படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தக் கடிதத்தைக் கடைசி எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு இன்னும் "பகீரங்கக் கடிதம்" எழுதாத 203 பேரும், உணவகப் பதிவு போடாத 1202 பேரும் உடனடியாகப் பதிவுகளைப் போடவேண்டும். இல்லையேல் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரும்..

ஒன்றுக்கு மேற்பட்ட உணவகப் பதிவுகளை எழுதிக் குவித்துவரும் கோவியார் போன்றோர், உணவகப் பதிவுகளை நிறுத்திவிட்டு, கடிதப் பதிவு ஒன்றாவது எழுதுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்..

வாருங்கள் பதிவர்களே கடித மற்றும் உணவகப் பதிவு வாரத்தை மாபெரும் வெற்றியடையச் செய்வோம்!!!

இப்படிக்கு,
தலைமை, தமிழ்ப் பதிவர்கள் கழகம்.
(நமது கழகத்திற்குத் தலைவர் கிடையாது.... தலைமை மட்டுமே!!)

குறிப்பு:
இது தமிழ்ப் பதிவர்கள் கழகத்தின் தலைமையிடம் இருந்து எனக்கு வந்த மின் அஞ்சல். இதை என் பதிவில் இட்டு அனைவருக்கும் பகீரங்கமாகத் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டேன். எனவே இக் கடிதத்திற்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இதில் இருக்கும் கருத்துக்கள் (?) கழகத்தின் கருத்துக்களே!!

42 comments:

said...

மீ த பஸ்ட்டு...

said...

//ஒன்றுக்கு மேற்பட்ட உணவகப் பதிவுகளை எழுதிக் குவித்துவரும் கோவியார் போன்றோர், உணவகப் பதிவுகளை நிறுத்திவிட்டு, கடிதப் பதிவு ஒன்றாவது எழுதுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்..//

இது ஆகறதில்லே :)

கடிதம்னா என்ன ? எனக்கு எழுதத் தெரியாதே !

//ஜெகதீசன் said...
மீ த பஸ்ட்டு...

August 14, 2008 11:49 AM
//

இதெல்லாம் நெம்ப ஓவரு சொல்லிப்புட்டேன். நீ யே பதிவை போட்டுட்டு, நீயே மீ த பஸ்டு பின்னூட்ட்ம ?

நாங்கெல்லாம் ?

மஞ்சுளானந்த் said...

பிச்சிபுடுவேன் பிச்சி

கரிசல்காரன் said...

நான் இனிமே பதிவு எழுதமாட்டேன். (இன்னிக்கு மட்டும்)

ரட்சன் said...

நான் போடுவது மட்டும் மொக்கை இல்லை

நிழலான் said...

இதெல்லாம் நல்லா இல்லே

said...

நேத்து கேப்டன் படம் பாத்தீங்களா ? புள்ளி விவரமாக அடுக்குறீங்களே ?

said...

நான் கடிதம், மற்றும் சமையல் பதிவை ஒன்றாகவே எழுதி விட்டேன் என்பதை இங்கு ஆதாரத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

பட ஆதாரம்

புரிந்துணர்வுடன் கூடிய ஒத்துழைப்புக்கு நன்றி!

said...

பதிவு என்றால் என்ன? ஏன் இங்கே எல்லோரும் கூத்தடிக்கிறீர்கள்? பதிவர்கள் அனைவரும் விக்கியின் பதிவை படித்து திருந்தும் படி கேட்டுக்கொள்கிறேன்

நிஜமா வல்லவன் said...

மீ த டென்த்

said...

ஒரு ஆள் குட்டிக்கரனம் போட்டால் போதும் எல்லோரும் கூடவே குட்டிக்கரனம் போடுகிறீர்கள். விக்கியை பார்த்து திருந்துங்கள். அவர் மட்டும்தான் பதிவுலக மாணிக்கம்.

ஏபிசிடி said...

தெரியல தயவு செய்து சொல்லி தொலைக்கவும்

ஒரு தமிழனின் அழு குரல்(றள்) said...

மீ த பெஸ்ட்

காரி.அரசு said...

என்னைய்யா நடக்குது இங்கே ?

கோவி.அண்ணன் said...

பயங்கர 'கடி'தமாக இருக்கே !

நரி said...

மனசாட்சிப்படி போட்ட பதிவா இது ?
தலைவர் படத்துக்கு இது பரவாயில்லை

நாமக்கல் கபி said...

கலாய்பது மகிழ்ச்சி, கலாய்த்துவிட்டு உண்

லக்கி அவுட்லுக் said...

ஜெகதீசன் ஐயர்வாள்,
நன்னா அடிச்சு ஆடுறேள்

said...

அண்ணே... விக்கி அண்ணே..
கை வலிக்குது.. பின்னூட்டம் வெளியிட்டு வெளியிட்டு.... போதும் விட்டுருங்க....
:P

பசும்பன் said...

//நீங்கள் அனைவரும் நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன்.//

இதுமாதிரி பதிவு வந்தால் நலமா இருப்பதா ?

பாமாயில்யன் said...

பகிரங்கத்துக்கே பகிரங்கமா ?

தமிழ் ஐயா பார்ட் 2 said...

அதிகம் பணிச் சுமை இல்லாத அஞ்சல் நிபுணன் தனது இல்லக் கிழத்திக்குத் தேவையில்லாத காதல் கடிதம் எழுதியதை யாரும் செய்யாதீர்கள்.

தமிழ் ஐயா பார்ட் 2 said...

அதிகம் பணிச் சுமை இல்லாத அஞ்சல் நிபுணன் தனது இல்லக் கிழத்திக்குத் தேவையில்லாத காதல் கடிதம் எழுதியதை யாரும் செய்யாதீர்கள்.

said...

பதிவர் சந்திப்புல பூனை மாதிரி இருந்தது நீங்களா ? :)

said...

// ஜோ / Joe said...
பதிவர் சந்திப்புல பூனை மாதிரி இருந்தது நீங்களா ? :)//

எந்த எலியை பிக்க போனிங்க

said...

எனக்கும் அனானியாக வந்த பின்னூட்டங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இது குசேலன் படத்தின் மீது சத்தியம்.

said...

கொஞ்சம் அவகாசம் குடுங்க தல, ஒரு மணிநேரத்துக்குள்ள வந்துடுறேன்.

said...

ஒருவழியா நானும் என் கடமையை நிறைவேற்றிட்டேன். கொஞ்ச நேரம் தூங்கிட்டு வர்ரேன்.

said...

//
ஜோசப் பால்ராஜ் said...

ஒருவழியா நானும் என் கடமையை நிறைவேற்றிட்டேன். கொஞ்ச நேரம் தூங்கிட்டு வர்ரேன்.

//
ஒரு கடமை தான் நிறைவேற்றீருக்கீங்க...
இன்னொன்னு மிச்சம் இருக்கிறது...
எழுந்த்து வந்ததும் அதையும் முடிச்சிருங்க... :)

said...

// VIKNESHWARAN said...

எனக்கும் அனானியாக வந்த பின்னூட்டங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இது குசேலன் படத்தின் மீது சத்தியம்.//

யோவ்... ஏற்கனவே அந்தப் படம் செத்து சுண்ணாம்பாகியிருக்கு. இது நீ வேற பொய் சத்தியம் பண்ற!!

said...

பின்னூட்டத்தை வெளியிட்டாத்தானே
“மீ த எத்தனையாவது-ன்னு தெரியும்?

நான் பாட்டுக்கு, மீ த 31ன்னு போட்டு தப்பாப் போட்டுட்டேன்னு எனக்கு கடிதம் எழுதறதுக்கா?

said...

//
ஜோ / Joe said...

பதிவர் சந்திப்புல பூனை மாதிரி இருந்தது நீங்களா ? :)

//
வாங்க ஜோ... :)
அன்று வந்திருந்தது நானில்லை.. என்னுடைய போலி... :P

said...

//ஜோ / Joe said...
பதிவர் சந்திப்புல பூனை மாதிரி இருந்தது நீங்களா ? :)//

இப்பவாவது தெரிஞ்சுதே:)

said...

ஜெகதீசன் said...
//
ஜோ / Joe said...

பதிவர் சந்திப்புல பூனை மாதிரி இருந்தது நீங்களா ? :)//

புலியை பார்த்து பூனை என்று சொல்வது யாரு?

said...

///குசும்பன் said...
ஜெகதீசன் said...
//
ஜோ / Joe said...

பதிவர் சந்திப்புல பூனை மாதிரி இருந்தது நீங்களா ? :)//

புலியை பார்த்து பூனை என்று சொல்வது யாரு?///


பிறரையும் தன்னைப்போல் நினைப்பவரா இருக்கும்:)

said...

:)))

said...

கொடுமையப்பா..
ஜெகதீசனை கண்டிச்சு நான் பதிவு போடலாம் என்று இருக்கிறன்...

said...
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்

said...

//ஜெகதீசன் said...

மீ த பஸ்ட்டு..//

இது போங்கு ஆட்டம். :)

said...

படுத்துறாங்க.. (சிறப்பு வாரங்களைத்தான் சொல்கிறேன்)(இதுக்கு யாராவது அடிக்க வராமல் இருந்தால் சரிதான்)

said...

/எழுதாதவர்களுக்குக் கடும் தண்டனை வழங்கப் படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்//

கடும் தண்டனை என்னன்னு சொல்லாமலேயே எச்சரிக்கை எச்சரிக்கை-ன்னா, குசும்பன் வந்து ஏதாச்சும் கும்மிறப் போறாரு ஜெகா! :)

என்ன தண்டனை-ன்னு சொல்லிருங்க.
கோவி அண்ணா பதிவுக்கு தொடர்ந்து ஒரு வருஷம் பின்னூட்டம் போடணும்! அதானே! :))))

said...

//
kannabiran, RAVI SHANKAR (KRS) said...

/எழுதாதவர்களுக்குக் கடும் தண்டனை வழங்கப் படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்//

கடும் தண்டனை என்னன்னு சொல்லாமலேயே எச்சரிக்கை எச்சரிக்கை-ன்னா, குசும்பன் வந்து ஏதாச்சும் கும்மிறப் போறாரு ஜெகா! :)

என்ன தண்டனை-ன்னு சொல்லிருங்க.
கோவி அண்ணா பதிவுக்கு தொடர்ந்து ஒரு வருஷம் பின்னூட்டம் போடணும்! அதானே! :))))

//
இவ்வளவு சின்ன தண்டனை எல்லாம் தரக்கூடாதுங்க..
மாரியாத்தா கூட தினமும் 2 மணி நேரம் சாட்டிங், 1/2 மணி நேரம் போன்ல பேசனும்...
:P