Saturday, September 27, 2008

முட்டைக்கோஸ் சாம்பார்! - செய்முறை

முட்டைக்கோஸ் சாம்பார்

தேவையான பொருட்கள்:

துவரம்பருப்பு
- அம்மா ஊருக்குப் போகும் முன் வாங்கி வைத்ததில் மீதமுள்ள 1/2 டம்ளர்.
முட்டைக்கோஸ் - போன வாரம் fired-rice க்கு வாங்கிய முட்டைக்கோஸில் மீதமுள்ளது.(சிறியதாக வெட்டி வைக்கவும்)
தக்காளி -2(சிறியதாக நறுக்கி வைக்கவும்)
சின்ன வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது)
கடுகு (வீட்டில் உளுந்தம் பருப்பு இருந்தால் அதுவும்) - தேவையான அளவு
கறிவேப்பிலை - தேவையான அளவு
எண்ணை - தேவையான அளவு
மஞ்சள் பொடி - தேவையான அளவு
உப்பு - எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு(சோறு ஆக்கும்போது உப்பு போடாவிட்டால், குழம்பில் அதிக உப்பு சேர்க்கனும்)
சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி
_____________________________


செய்முறை:

பருப்பையும் முட்டைக்கோஸையும் நன்கு கழுவி, மஞ்சள் சேர்த்து, குக்கரில் 2 டம்பளர் தண்ணீர் சேர்த்து 3 விசில் வரும்வரை வேக வைக்கவும்.(பொங்காமல் இருக்க 2 சொட்டு நல்லெண்ணை சேர்க்கனும்ன்னுறது எல்லாருக்கும் தெரியும் என்பதால் அதை நான் சொல்லவில்லை..)

பருப்பு வேகும் சமயத்தில் தக்காளி, வெங்காயம் எல்லாம் வெட்டி வைத்துக்கொள்ளவும்.
வானலியில் தேவையான எண்ணை விட்டு எண்ணை காய்ந்ததும் கடுகு போட்டுத் தாளிக்கவும். கடுகு வெடித்து முடிந்ததும் கரிவேப்பிலை, வெங்காயம் போட்டு வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமாக வறுபட்டதும், தக்காளி சேர்த்து வதக்கவும்.

தக்காளி நன்கு வதங்கியதும், குக்கரில் இருக்கும் பருப்பு -முட்டைக்கோசை அப்படியே நீருடன் எடுத்து வானலியில் ஊற்றவும்.

உப்பு, சாம்பார் பொடி(fridgeல் இருக்கும் சாம்பார், மீன், கோழி மசாலாக்களில் எது சாம்பார் மசாலா என்று சரியாகப் பார்த்து எடுக்கவும்) சேர்த்து நன்கு கலக்கவும்.

இதை அப்படியே ஒரு 10 நிமிடம் ஸ்டவ்வை ஸ்லிம்மில் வைத்துக் கொதிக்கவிடவும்.

சாம்பார் கொதித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் பருப்பு வைத்த குக்கர், காய்கறி வெட்டிய தட்டு, கத்தி, நேற்று இரவு சாப்பிட்ட தட்டு அனைத்தையும் கழுவிக் காய வைக்கவும்.

ஒகே.... சாம்பார் ரெடி.


சாம்பார் தயாரானதும் ஒரு டம்ளர் அரிசி எடுத்து கழுவி, டம்ளர் தண்ணீர் சேர்த்து, குக்கர் பாத்திரத்தின் வெளிப்புறத்தை கைலி அல்லது துண்டின் உதவியுடன் நன்கு துடைத்து எலக்ட்ரிக் குக்கரில் வைத்து குக்கரை ஆன் செய்யவும்.

சோறு தயாராக ஒரு 20 நிமிடம் ஆகும். அந்த நேரத்தில் சமையலறையைச் சுத்தம் செய்து, நேற்று இரவு சாப்பிட்ட சாப்பாட்டு பொட்டலம் மற்றும் மற்ற குப்பைகளை எடுத்து குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு வந்து குளித்து விட்டு வரவும்.

குளித்து விட்டு வந்தால் சோறு தயாராக இருக்கும். குக்கரை ஆப் செய்துவிட்டு சாப்பிட ஆரம்பிக்கவும்!


தொட்டுக்கொள்வதற்கு முந்தாநாள் இரவு சப்பாத்திக்கு வைத்த தக்காளித் தொக்கை சுடவைத்து வைத்துக் கொள்ளவும்.

குறிப்புகள் சில:
இந்த இடுகையை யார் வேண்டுமானாலும் மீள் பதிவு செய்து கொள்ளலாம். மீள் பதிவு செய்வோர் தயவு செய்து எங்கும் என் பெயரையோ அல்லது இந்த இடுகைக்கான தொடுப்பையோ சேர்த்துவிட வேண்டாம்..

இந்தக் குழம்பை யார் வேண்டுமானாலும் செய்து பார்க்கலாம். ஆனால் செய்யத் தொடங்கும் முன் இங்கு வந்து நன்றி சொல்லிப் பின்னூட்டமிட்டுச் செல்லவேண்டும்

நீங்கள் சமைத்த குழம்பு நன்றாக இருந்தால் அதற்குறிய பாராட்டுக்கள் அனைத்தும் எனக்கே. ஆனால் நன்றாக இல்லையெனில், அது உங்களின் கவனக்குறைவால் மட்டுமே இருக்கும். எனவே விழும் திட்டுக்கள் அனைத்தும் உங்களுக்கே!

இந்த இடுகையில் இருக்கும் நுண்ணரசியல் என்ன என்பதைக் கண்டுபிடிப்போருக்கு ஒரு மாதத்திற்குத் தேவையான முட்டைக்கோஸ் சாம்பார் பரிசாக வழங்கப் படும்.

35 comments:

said...

சமைச்சி இப்பதான் ஒரு வாய் சாதம் வச்சேன் லேசா தலை சுத்துது....

said...

ஐயோ.... யாராவது அம்புலென்ஸ்கு போன் போடுங்க....

said...

காப்பாத்துங்க காப்பாத்துங்க.....

said...

மீ த பஸ்ட்டூ

said...

பஸ்டாமே பஸ்ட்டு...

said...

நாலாவதா வந்துபுட்டு பேச்ச பாரு...

said...

மாடெரேஷன் நஹி...

said...

சிங்கை வந்திருக்கும் மனைவிக்கு நல்ல சமையல் செய்து தரமுடியாமல் தினமும் திட்டு & அடி வாங்கிக்கொண்டிருக்கும் நிஜமா நல்லவனுக்கு இந்த இடுகையை சமர்ப்பிக்கிறேன்!

said...

உங்கள் சமயலை ட்ரை பண்ணியதால் எங்கள் வீட்டு ரேடியோ கோவிந்தா ஆகி விட்டது. புது ரேடியோ வாங்கி அனுப்பவும்.

said...

வீட்டில் இருக்கும் ' மணம்' போதாதுன்னு இருக்கலாமே...... முட்டைக்கோஸைக் குக்கரில் பருப்புகூடச் சேர்த்துச் சமைக்கணுமா?


தாளிச்சபிறகு சும்மா வாணலியில் சேர்த்தாலே போதும். மூணு நிமிசத்துக்குமேல் முட்டைக்கோஸை வதக்கினால்....... ' மணம்' வீட்டைத் தூக்கிட்டுப்போயிரும் yuck

said...

வாங்க துளசிம்மா....

அப்படி ஒன்னும் ரெம்ப வாடை அடிக்கலையே... (ஒரு வேளை நான் சமைச்சது முட்டைக்கோஸ் இல்லையோ? :P)

said...

ஜெகதீசனுங்களா?
வணக்கமுங்க!
தனியா இருந்தா இப்படித்தான் தினமும் முட்டைகோஸ் சாம்பார் சாப்பிடனும்.(வயிறு உப்பிக்கொள்ளும் காஸ்த்ரிக் பிரச்சனை கொடுக்கும் அய்யா)
காலாகலத்துல ஒரு கால்கட்டு போட்டுகிட்டா...? ஒரு மேக்கி மீ யாவது கிடைக்கும்.
செய்முறை: கொஞ்சம் கடினம்.(உப்பு தேவையில்லை) கொஞ்சம் கஷ்டப்பட்டு வெந்நீர் வைத்து அதில் மேக்கியைப் போட்டால் மேக்கி மீ ரெடி.(நன்றி: அஜினோமோட்டோ)

said...

//
இந்த இடுகையில் இருக்கும் நுன்னரசியல் என்ன என்பதைக் கண்டுபிடிப்போருக்கு ஒரு மாதத்திற்குத் தேவையான முட்டைக்கோஸ் சாம்பார் பரிசாக வழங்கப் படும்.
//

நல்லவேளை அந்த நுண்ணரசியல நான் கண்டுபிடிக்கல. தப்பிச்சன்டா சாமீ..!!!!!!!!!

said...

இந்த இடுகையை அறிவியல்/தொழில் நுட்பத்தில் வகைப்படுத்தியது மிகப்பெரிய அநியாயம்.(கபில் சிபல் கவனத்திற்கு)

said...

//
ஜோதிபாரதி said...

இந்த இடுகையை அறிவியல்/தொழில் நுட்பத்தில் வகைப்படுத்தியது மிகப்பெரிய அநியாயம்.(கபில் சிபல் கவனத்திற்கு)

//
நவீனத் தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ப்ரஸ்ட்டீஜ் குக்கர், எலக்ட்ரிக் குக்கர், கேஸ் ஸ்ட்டவ் உட்பட்ட பொருட்கள் சாம்பார் வைக்கப் பயன்படுத்தப் பட்டிருப்பதால் இதை அறிவியல்/தொழில்நுட்பத்தில் வகைப்படுத்தியதில் எந்தத் தவறும் இல்லை!!!
:P

said...

//
இந்தக் குழம்பை யார் வேண்டுமானாலும் செய்து பார்க்கலாம். ஆனால் செய்யத் தொடங்கும் முன் இங்கு வந்து நன்றி சொல்லிப் பின்னூட்டமிட்டுச் செல்லவேண்டும்
//

இந்தக் குழம்பை யார் வேண்டுமானாலும் சாப்பிட்டுப் பார்க்கலாம். ஆனால் சாப்பிடத் தொடங்கும் முன் இங்கு வந்து என் சாவுக்கு ஜெகதீசனே காரணம் என்று சொல்லிப் பின்னூட்டமிட்டுச் செல்லவேண்டும்

said...

//ஜெகதீசன் said...
//
ஜோதிபாரதி said...

இந்த இடுகையை அறிவியல்/தொழில் நுட்பத்தில் வகைப்படுத்தியது மிகப்பெரிய அநியாயம்.(கபில் சிபல் கவனத்திற்கு)

//
நவீனத் தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ப்ரஸ்ட்டீஜ் குக்கர், எலக்ட்ரிக் குக்கர், கேஸ் ஸ்ட்டவ் உட்பட்ட பொருட்கள் சாம்பார் வைக்கப் பயன்படுத்தப் பட்டிருப்பதால் இதை அறிவியல்/தொழில்நுட்பத்தில் வகைப்படுத்தியதில் எந்தத் தவறும் இல்லை!!!
:P//

ஓ ஹோ! அப்படி வர்றியளா?
அப்ப நீங்கள் போடும் எல்லா இடுகைகளும் அறிவியல் தொழில் நுட்பத்தில் தான் வரணும். ஏன்னா இன்டெல், ஏ.எம்.டி போன்ற PROCESSOR பயன்படுத்துகின்ற கணினி வழியாத்தான் எல்லா இடுகைகளையும் போடுறிய என்று நினைக்கிறேன். (இது தொழில் நுட்பம் இல்லன்னு சொல்லமாட்டிய)

தமிழ்மணத்துல சமையல் குறிப்பு/சமையல் என்றொரு காலம் இருக்குங்களே.

எப்படியோ இந்த இடுகை சூடாகட்டும்.

said...

/கரிவேப்பிலை - தேவையான அளவு/


என்னதிது???? கரிவேப்பிலை???????? அடுப்புக்கரியா????? இல்லை நிலக்கரியா????

said...

/முட்டைக்கோஸ் - போன வாரம் fired-rice க்கு வாங்கிய முட்டைக்கோஸில் மீதமுள்ளது./


Fried-rice செய்முறை பதிவு போடாததை சங்கம் வன்மையாக கண்டிக்கிறது....:)

said...

/(வீட்டில் உளுந்தம் பருப்பு இருந்தால் அதுவும்)/

உளுத்தம் பருப்பு கொஞ்சம் உளுத்து போய் இருந்தா சேர்க்கலாமா?

said...

//
நிஜமா நல்லவன் said...

/முட்டைக்கோஸ் - போன வாரம் fired-rice க்கு வாங்கிய முட்டைக்கோஸில் மீதமுள்ளது./


Fried-rice செய்முறை பதிவு போடாததை சங்கம் வன்மையாக கண்டிக்கிறது....:)

//
அடுத்த வாரம் சாம்பாருக்கு வாங்கும் முட்டைக்கோஸ் மீதமாகும்போது Fried-rice செய்முறை பதிவு போடப்படும்!

said...

பதிவை எடிட் செய்ததையும் சங்கம் மிக வன்மையாக கண்டிக்கிறது....:)

said...

/எண்ணை - தேவையான அளவு/


வெறுமனே எண்ணைன்னு சொன்னா எப்படி?????? வேப்பெண்ணை விளக்கெண்ணை ரேஞ்சுல யாரும் ட்ரை பண்ணிட போறாங்க...:)

said...

தோழர் நிஜமா நல்லவன் அண்ணன் அவர்களே,
டைம் கீப்பப் பண்ணப் பழகிக்கோங்க... 3:30 க்கெல்லாம் கும்ம வந்துவிடுவேன்னு சொல்லீட்டு 4:45க்கு வந்துருக்கீங்க.... இது நல்லா இல்லை.

said...

/முட்டைக்கோசை அப்படியே நீருடன் எடுத்து வானொலியில் ஊற்றவும்./


யோவ்...யாருமேல கோவம்???? வானொலில ஏன் ஊத்தணும்?????? ஒரு வேளை கானா பிரபா மேல கோவமா????? வேண்டாம் அண்ணே அவரு ரொம்ப நல்லவரு....:)

said...

/இந்த இடுகையில் இருக்கும் நுண்ணரசியல் என்ன என்பதைக் கண்டுபிடிப்போருக்கு ஒரு மாதத்திற்குத் தேவையான முட்டைக்கோஸ் சாம்பார் பரிசாக வழங்கப் படும்./

:))))))))))))))))))

said...

ஜெகு, இது என்ன விபரீத முயற்சி?
நான் இந்த‌ விளையாட்டுக்கு வ‌ர‌ல‌.
நீங்க‌ சொல்ற‌ இந்த‌ குக்க‌ர், அது இது எல்ல‌ம் என்னான்னே தெரிய‌ல‌, அது எல்லாம் எப்டியிருக்கும் ஜெகு ? என்னாது இது சுத்த‌மா புரியாத‌ விச‌ய‌த்த எல்லாம் எழுதியிருக்கீங்க‌?

said...

//
ஜோசப் பால்ராஜ் said...

ஜெகு, இது என்ன விபரீத முயற்சி?
நான் இந்த‌ விளையாட்டுக்கு வ‌ர‌ல‌.
நீங்க‌ சொல்ற‌ இந்த‌ குக்க‌ர், அது இது எல்ல‌ம் என்னான்னே தெரிய‌ல‌, அது எல்லாம் எப்டியிருக்கும் ஜெகு ? என்னாது இது சுத்த‌மா புரியாத‌ விச‌ய‌த்த எல்லாம் எழுதியிருக்கீங்க‌?
//
ஜோசப் அண்ணே வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

said...

நாளைக்கு வீட்டுக்கு வா, உனக்கு இதைச் செய்து போட்டு சரியாக வருதான்னு பார்க்கிறேன்

said...

முட்டை கோசை Java programming மூலம் செய்தனீங்களோ எண்டு பார்க்க உள்ள வந்தா (அதிலையும் அறிவியலாம்) உள்ள ஒரு விபரீத முயற்சி...

ஆபிஸுக்கு MC எடுப்பதுக்கு ஜெகதீஸன் செய்த சதிவேலை இது..

said...

அண்ணிக்கு வேலை மிச்சம்.. :)

said...

//இந்த இடுகையில் இருக்கும் நுண்ணரசியல் என்ன என்பதைக் கண்டுபிடிப்போருக்கு ஒரு மாதத்திற்குத் தேவையான முட்டைக்கோஸ் சாம்பார் பரிசாக வழங்கப் படும்.
//
ஏன் சமைச்சது ரொம்பவே மிஞ்சிடுத்து போல.. இல்ல யாராலையுமே சாப்பிட முடியலியா ?

Anonymous said...

//அப்படி ஒன்னும் ரெம்ப வாடை அடிக்கலையே... (ஒரு வேளை நான் சமைச்சது முட்டைக்கோஸ் இல்லையோ? :P)///


கிகிகி இது வேறா??!!

Anonymous said...

//சமைச்சி இப்பதான் ஒரு வாய் சாதம் வச்சேன் லேசா தலை சுத்துது....//

இதெல்லாம் படிச்சமா, பின்னோட்டம் போட்டமா என இருக்கணும் விக்கி..கிகிகி

Anonymous said...

//முட்டைக்கோஸ் - போன வாரம் fired-rice க்கு வாங்கிய முட்டைக்கோஸில் மீதமுள்ளது.(சிறியதாக வெட்டி வைக்கவும்)//

fried rice தெரியும்..அது என்ன fired rice அண்ணா :)

நீங்க சமைத்த சோறு சாப்பிட்டு யாராச்சும் உங்கள fire பண்ண வந்துட்டாங்களா?