Friday, November 28, 2008

நிசா புயல் - புரட்சித்தலைவியின் அறிக்கையும் கலைஞரின் கேள்வி பதிலும்..

புரட்சித் தலைவியின் போராட்ட அறிக்கை:

புயலை திசை திருப்பவும் மழையை நிறுத்தவும் எந்த நடவடிக்கையும் எடுக்காத மைனாரிட்டி திமுக ஆட்சிக்கு எதிராக தமிழகமெங்கும் அதிமுகவினர் போராட வேண்டும் என புரட்சித் தலைவி ஜெ.ஜெயலலிதா கட்டளையிட்டுள்ளார். சென்னையில் இன்று நடக்கும் போராட்டத்துக்கு புரட்சித் தலைவி ஜெ.ஜெயலலிதா தலைமை தாங்குகிறார்.

கலைஞரின் கேள்வி பதில் அறிக்கை:

புயலை திசைதிருப்பவும் மழையை நிறுத்தவும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அம்மையார் குறை கூறியுள்ளாரே?

அம்மையாரின் ஆட்சிகாலத்தில் வந்த புயல்களுடன் நிசாவை ஒப்பிட்டுப் பார்த்தால் உண்மை தெரியும்.
நாங்கள் எடுத்த நடவடிக்கைகள் காரணமாகவே இந்தப் புயல் ஒரு வாரத்திற்குள் கரையைக் கடந்துள்ளது..

1993 ஆம் ஆண்டு அம்மையார் ஆட்சியில் இருந்த போது வந்த புயல் 9 நாட்களும், 2003 ல் வந்த புயல் 8 நாட்களும் நீடித்தது.

ஆனால் கழக ஆட்சியில் 1972 ஆம் ஆண்டில் வந்த புயலை 3 நாட்களிலும், 1989 ஆம் ஆண்டு வந்த புயலை 2 நாட்களிலும் கட்டுப் படுத்தினோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்

இதிலிருந்தே தெரிகிறது நாங்கள் எவ்வளவு சிறப்பாக நடவடிக்கைகள் எடுத்திருக்கிறோம் என்பது.

இதையெல்லாம், புரட்சிப்"புயலை" தனது கூட்டணியிலேயே வைத்துக்கொண்டு அம்மையார் பேசுவது தான் வேடிக்கையிலும் வேடிக்கை!

அத்துடன், அம்மையாரின் ஆட்சியில் எதிர்காலத்தில் புயலை நிறுத்த எந்தவிதத் தொலைநோக்கு முயற்சிகளும் செய்யவில்லை என்பதே தற்போதைய புயலுக்கு முக்கியக் காரணம்!

18 comments:

said...

:-)))...

said...

அப்பாடா நிஷா வந்து உன்னைய பதிவு எழுத வச்சிட்டாள்
:)

said...

//புயலை திசைதிருப்பவும் மழையை நிறுத்தவும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அம்மையார் குறை கூறியுள்ளாரே?//


பிழை இருக்கிறது "புரட்சிப் புயல்" என்றிருக்க வேண்டும்.

said...

//அம்மையாரின் ஆட்சிகாலத்தில் வந்த புயல்களுடன் நிசாவை ஒப்பிட்டுப் பார்த்தால் உண்மை தெரியும்.
நாங்கள் எடுத்த நடவடிக்கைகள் காரணமாகவே இந்தப் புயல் ஒரு வாரத்திற்குள் கரையைக் கடந்துள்ளது..//

ஆம். சேது சமுத்திரக் கப்பல் இப்ப தோண்டுவதை நிறுத்தி விட்டு, புயலை மறைப்பதற்குப் பயன் படுத்துகிறார்கள்.

said...

//1993 ஆம் ஆண்டு அம்மையார் ஆட்சியில் இருந்த போது வந்த புயல் 9 நாட்களும், 2003 ல் வந்த புயல் 8 நாட்களும் நீடித்தது.

ஆனால் கழக ஆட்சியில் 1972 ஆம் ஆண்டில் வந்த புயலை 3 நாட்களிலும், 1989 ஆம் ஆண்டு வந்த புயலை 2 நாட்களிலும் கட்டுப் படுத்தினோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்

இதிலிருந்தே தெரிகிறது நாங்கள் எவ்வளவு சிறப்பாக நடவடிக்கைகள் எடுத்திருக்கிறோம் என்பது.

இதையெல்லாம், புரட்சிப்"புயலை" தனது கூட்டணியிலேயே வைத்துக்கொண்டு அம்மையார் பேசுவது தான் வேடிக்கையிலும் வேடிக்கை!

அத்துடன், அம்மையாரின் ஆட்சியில் எதிர்காலத்தில் புயலை நிறுத்த எந்தவிதத் தொலைநோக்கு முயற்சிகளும் செய்யவில்லை என்பதே தற்போதைய புயலுக்கு முக்கியக் காரணம்!
//
இருப்பினும் புரட்சிப் புயலுக்குப் போட்டியாக எங்கள் கட்சியில் வைகைப் புயலை இறக்கலாம் என்றிருக்கிறோம்.

சூடான இடுகைக்குச் செல்ல வாழ்த்துக்கள்!

said...

கழக ஆட்சிக்கு களங்கம் உண்டாக்கும் விதத்தில் புயலை ஏவி விட்டதே அம்மையார் தான், இதை நாடு பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. மக்களுக்கு உண்மைகள் தெரியும் என்று தலைவர் கூறியதை மறைத்த ஜெகதீசனைக் கண்டித்து மங்களூர் சிவா தலை "மை" சிறிது வழித்து மங்களூர் பெங்களுக்கு கண்மைத்தீட்டும் போராட்டம் நடத்த உத்தேசித்துள்ளோம். தலைவர் மங்களூரார் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்

said...

:))

said...

:))))

said...

மனிதச்சங்கிலியை குழப்ப மழையை ஏவிவிட்டது அம்மையார் தான் நான் பிரதம மந்திரியை சந்திப்பதை தடுக்க புயலை ஏவி விட்டிருக்கிறார் ... ஆனால் எமது கழக உறுப்பினர் அதனை வெற்றிகரமாய் திசை திருப்பி விட்டனர்.

said...

//ஆனால் கழக ஆட்சியில் 1972 ஆம் ஆண்டில் வந்த புயலை 3 நாட்களிலும், 1989 ஆம் ஆண்டு வந்த புயலை 2 நாட்களிலும் கட்டுப் படுத்தினோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்///

ஹி ஹி ஹி ஹி.........


உண்மையா இருக்குமோ? ( அப்பாவி தமிழன் )

said...

90 களில் புயலைக் கட்டுப் படுத்திக் கொண்டிருந்த போது கறுப்புத் தோணி ஒன்று பார்த்ததாகப் பொறணி சொல்கிறார்கள். அது கறுப்புத் தோணி இல்லை அய்யா! தோணியில இருந்தவர் கறுப்புத் துண்டு போட்டிருக்கிறார் அவ்வளவுதான் என்று அம்மணி சொல்கிறார்.

said...

//90 களில் புயலைக் கட்டுப் படுத்திக் கொண்டிருந்த போது கறுப்புத் தோணி ஒன்று பார்த்ததாகப் பொறணி சொல்கிறார்கள். அது கறுப்புத் தோணி இல்லை அய்யா! தோணியில இருந்தவர் கறுப்புத் துண்டு போட்டிருக்கிறார் அவ்வளவுதான் என்று அம்மணி சொல்கிறார்.//

பின்னர் அது புரட்சிப் புயல் என்று வகைப்படுத்தினார்கள்(இப்ப உள்ள நிஷா புயல் மாதிரி)

said...

பின்னூட்டமிட்டவர்களுக்கு நன்றி
அல்லது
பின்னூட்டக் கயமை

said...

:))))))

said...

அம்மா போராட்டத்துக்கு எந்த காரணமும் இல்லைன்னா, நீ சொன்னதையெல்லாம் சொன்னாலும் சொல்லுவாங்க. ஆனா மும்பை தாக்குதல் புண்ணியத்துல அம்மா இப்ப செண்ட்ரல் பாலிட்டிக்ஸ் பண்ணிக்கிட்டு இருக்காங்க.

said...

எங்க ரொம்ப நாளா காணவில்லை என்று பார்த்தன்..புயலையும் சேர்த்து கூட்டிக் கொண்டு வந்திருக்கிறியள்..

said...

இது திட்டமிட்ட சதி! அம்மாவின் ஆட்சியின் போது மழை வேண்டி செய்த யாகங்களாலேயே அதிக நாட்கள் புயல் நீடித்து மழை பெய்து மக்களின் வறுமை நீங்கியது. இப்போதைய மைனாரிட்டி திம்மிகளின் ஆட்சியில் புயல் கூட நான்கு நாட்கள் நீடிக்க இயலவில்லை. புயலை நிலைபெறச் செய்ய ஏதும் நடவடிக்கை எடுக்காத மைனாரிட்டி அரசைக் கண்டிக்கிறோம்.

வாழ்க அம்மாவின் புகழ்! வளர்க அவரது சேவைகள்! வீழ்க திம்மிகள்!

said...

சூடான இடுகையில் உங்கள் பதிவு.