Monday, August 4, 2008

ICCக்கு ஒரு அவசர வேண்டுகோள்!!

அன்புள்ள ஐசிசி நிர்வாகிகளுக்கு,

வணக்கம்.

உலக கிரிக்கட் வரலாற்றின் ஒரே இமயம் எங்கள் தலைவர் சச்சின் ரமேஸ் தெண்டுல்கர் என்பது தாங்கள் அறிந்ததே.

அவர் மேற்கிந்தியத்தீவுகள் அணியின் பிரயன் லாரா அவர்களின் டெஸ்ட் சாதனையை முறியடிக்க இன்னும் 96 ஓட்டங்கள் தேவைப் படுகிறது.

எனவே அவர் விரைவில் லாராவின் சாதனையை முறியடிக்கும் வகையில், விரைவில் நமீபியா அல்லது பெர்முடா அணிக்குத் தற்காலிகமாகவேனும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் தகுதி தந்து, குறைந்தது 5 போட்டிகளாவது கொண்ட டெஸ்ட் தொடரை உடனே ஏற்பாடு செய்யவேண்டும் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

தேவைப்பட்டால், இதற்காக ஒரு 100கோடி சச்சின் ரசிகர்களிடமிருந்து கையெழுத்து வாங்கித் தரவும் நான் தயாராக இருக்கிறேன்.

எனவே தயவு செய்து விரைவில் நமீபியா அல்லது பெர்முடா அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட் தொடரை ஏற்பாடு செய்து தர வேண்டுகிறேன்.

இப்படிக்கு,
சச்சின் வெறியன்.

23 comments:

said...

மீ த பர்ஸ்ட்டு...

said...

ICCla yaarukkavathu tamil padikka theriyuma?

said...

//
ILA said...

ICCla yaarukkavathu tamil padikka theriyuma?
//

:))
ஆமால்ல... யாருக்கும் தெரியாதுல்ல..
அதனால தான் பதிவு போட்டு அரை மணி நேரம் ஆகியும் இன்னும் பெர்முடா அணிக்கு டெஸ்ட் தகுதி தர நடவடிக்கை எடுக்கல போல...

சுட்டிக்காட்டியதற்கு நன்றி...
ICC க்கு ஆங்கிலத்திலும் ஒரு கடிதம் எழுதிவிடுகிறேன்...... :)))

said...

:) கலக்கல்,

மேலும் அவரது சாதனைகளை இனி பிறக்கும் ஒருவர் கூட முறியடிக்காதவரை அண்ணன் சச்சின் டெண்டுல்கருக்கு 60 வயதில் தான் ஓய்வளிக்க வேண்டும் என்பதையும் கேட்டுக் கொல்கிறோம்.
:)

said...

//அன்புள்ள ஐசிசி நிர்வாகிகளுக்கு,//

யோவ்....என்னதிது அன்புள்ள.....மரை கழன்றன்னு போடுங்கப்பா.....அங்க நடக்கிற கூத்தை எல்லாம் பார்க்கிறப்போ அப்படித்தான் தோணுது....:)

said...

நான் தான் ஐந்தாவது..

said...

நானும் முதல் மேட்சில் சச்சின் இந்த சாதனையைப்படைப்பார் என ஏங்கி எஸ்.எஸ்.சி மைதானத்திற்க்கு சென்றால் சச்சின் ஏமாற்றிவிட்டார். இறுதி டெஸ்டில் அடிக்கிறாரா எனப் பார்ப்போம். இல்லையென்றால் நீங்கள் கூறியதுபோல் ஏதாவது சின்ன அணீக்கு டெஸ்ட் அந்தஸ்து கொடுத்திடவேண்டியதுதான்.

said...

//
:) கலக்கல்,

மேலும் அவரது சாதனைகளை இனி பிறக்கும் ஒருவர் கூட முறியடிக்காதவரை அண்ணன் சச்சின் டெண்டுல்கருக்கு 60 வயதில் தான் ஓய்வளிக்க வேண்டும் என்பதையும் கேட்டுக் கொல்கிறோம்.
:)
//
வாங்க கோவியண்ணே... :)

said...

அட பாவி பெர்முடாவோடுவே 5 மேட்சா?

வெளங்கிடும்

said...

நானும் வந்துட்டேன்ல.
என் சார்பா 2 கோரிக்கைக‌ள்.
1)சச்சினுக்கு ஒவ்வொரு ஆட்டத்திலும் இரண்டு கிச்சான் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
2) மேன்டிஸ், முர‌ளீத‌ர‌ன், வாஸ் போன்ற‌ வீர‌ர்க‌ள் ச‌ச்சினுக்கு 3வ‌து டெஸ்டில் ப‌ந்துவீச‌க்கூடாது .

கிச்சான் : இரு அணிகளிலும் சம அளவில் வீரர்கள் இல்லாத போது, குறைவான வீரர்கள் உள்ள அணியில் ஒரு வீரருக்கு இருமுறை பேட் செய்ய வாய்பளிப்பது. எங்கள் கிராமத்து வழக்கம். இதை நாங்கள் கில்லி ஆட்டத்திலிருந்து, கிரிக்கெட் வரை பயன்படுத்தியுள்ளோம்.

said...

பெர்முடா கூட எல்லாம் டெஸ்ட் மேட்ச்னா, ஷேவாக் துவக்க ஆட்டக்காரராக களமிறங்க கூடாது. அப்டி இறங்குனா அம்புட்டுத்தேன். 1000 ஓட்டங்கள் குவித்த ஒரே வீரர் என்ற பெருமையை அவர் பெற்று, சச்சினின் சாதனையை பிறர் பேசமுடியாமல் செய்துவிடுவார். இதை பிசிசிஐ க்கு கோரிக்கையாக அனுப்பவும்.

said...

match india vila nadakkanum ithaiyum seerththukkungka

said...

ஏன் பெர்முடா...

ஆஸ்தேரிலியா கூட வேண்டுமானால் ஆஸ்தேரிலியாவிலேயே நடத்த வேண்டும்.

//match india vila nadakkanum ithaiyum seerththukkungka//

இந்த வருடம் ஆஸ்தேரிலியாவில் நடந்த ஆட்டங்கள் யாருக்காவது ஞாபகம் இருக்கா

ஒரு அல்லது இரண்டே ஆட்டங்களை வைத்து ஒரு வீரரின் தரத்தை மதிப்பிடும் ரசிகர்கள் இருக்கும் வரை இந்திய கிரிக்கெட்டை அந்த ஆண்டவன் வந்தாலும் காப்பாற்ற முடியாது

said...

//
ஒரு அல்லது இரண்டே ஆட்டங்களை வைத்து ஒரு வீரரின் தரத்தை மதிப்பிடும் ரசிகர்கள் இருக்கும் வரை இந்திய கிரிக்கெட்டை அந்த ஆண்டவன் வந்தாலும் காப்பாற்ற முடியாது
//
உண்மைதான்..
ஆனாலும் சச்சின்(மட்டும் ) எல்லா ஆட்டத்திலும் நன்றாக விளையாட வேண்டும் என மனம் எதிர்பார்க்கிறதே...
ஏனென்று தெரியவில்லை.... :((

said...

//ஜெகதீசன் said...
மீ த பர்ஸ்ட்டு...//

நேத்து நடந்த மாநாட்டுல தீர்மானம் நிறைவேற்றுனோம்ங்கிறதுக்காக இப்டியா உம்ம பதிவுக்கு நீரே முத பின்னூட்டத்த எழுதுறது? இது எல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்லை.

said...

//
கோவி.கண்ணன் said...

:) கலக்கல்,

மேலும் அவரது சாதனைகளை இனி பிறக்கும் ஒருவர் கூட முறியடிக்காதவரை அண்ணன் சச்சின் டெண்டுல்கருக்கு 60 வயதில் தான் ஓய்வளிக்க வேண்டும் என்பதையும் கேட்டுக் கொல்கிறோம்.
:)

//
நன்றி கோ.க..... :)

said...

////
//அன்புள்ள ஐசிசி நிர்வாகிகளுக்கு,//

யோவ்....என்னதிது அன்புள்ள.....மரை கழன்றன்னு போடுங்கப்பா.....அங்க நடக்கிற கூத்தை எல்லாம் பார்க்கிறப்போ அப்படித்தான் தோணுது....:)
////

:))))))

said...

//
ஜோ / Joe said...

நான் தான் ஐந்தாவது..
//
இல்லிங்க ஜோ... நீங்க 6வது...
:)

said...

//
குசும்பன் said...

அட பாவி பெர்முடாவோடுவே 5 மேட்சா?

வெளங்கிடும்
//
:))

said...

//
வந்தியத்தேவன் said...

நானும் முதல் மேட்சில் சச்சின் இந்த சாதனையைப்படைப்பார் என ஏங்கி எஸ்.எஸ்.சி மைதானத்திற்க்கு சென்றால் சச்சின் ஏமாற்றிவிட்டார். இறுதி டெஸ்டில் அடிக்கிறாரா எனப் பார்ப்போம். இல்லையென்றால் நீங்கள் கூறியதுபோல் ஏதாவது சின்ன அணீக்கு டெஸ்ட் அந்தஸ்து கொடுத்திடவேண்டியதுதான்.
//
ம்ம்...
இறுதி டெஸ்டில் சாதிப்பார் என நம்புவோம்.... :)

said...

@ ஜோசப்,
உங்கள் கோரிக்கைகளையும் ஐசிசிக்கு எடுத்துச் செல்வோம்....
:)

said...

@முரளிகண்ணன்,
நன்றி...
:))

said...

//ஆனாலும் சச்சின்(மட்டும் ) எல்லா ஆட்டத்திலும் நன்றாக விளையாட வேண்டும் என மனம் எதிர்பார்க்கிறதே...//
எனக்கு மட்டும்தான் இந்த'வியாதி இருக்குன்னு நினைச்சேன். உங்களுக்குமா??