Sunday, August 10, 2008

நன்றி மற்றும் குசேலன் நல்லாத்தான இருக்கு?

நன்றி:
குசேலனைப் பார்க்கவேண்டுமா? என நான் இட்ட இடுகைக்கு என்னைத் திட்டி வந்த பின்னூட்டங்கள் மட்டும் குறைந்தது 50 இருக்கும்.

கிரியைத் திட்டி வந்த பின்ன்னூட்டத்தை மட்டுறுத்தியதை எதிர்த்து என்னைத் திட்டி வந்த பின்னூட்டங்களின் எண்ணிக்கை 25ஐத் தாண்டும்.. என்னை மட்டுமல்ல என் மனைவியையும்(?) சேர்த்துத் திட்டிப் பின்னூட்டங்கள் வந்தது. (என்னைப் பாராட்டியவருக்கு ஒரு தகவல்: எனக்கு இன்னும் திருமணம் ஆகலை..:P )
என்னைத் திட்டிப் பின்னூட்டம் போட்டவருக்கு/போட்டவர்களுக்கு நன்றி!!!
_________________________________________________________________
குசேலன் நல்லாத்தான இருக்கு?



"ரஜினி வாட்டாள் நாகராஜிடம் மன்னிப்போ வருத்தமோ தெரிவிக்கவில்லை." என்று கிரி அவர்கள் தெளிவாக விளக்கிய பின் தான் ரஜினி மீது எந்தத் தப்பும் இல்லை எனப் புரிந்தது. அவரது விளக்கத்தை ஏற்று குசேலன் பார்ப்பதில்லை என்ற முடிவை மாற்றிக் கொண்டு 75 ஆண்டு தமிழ்சினிமாவின் மிகச் சிறந்த திரைப்படமான "குசேலன்" படத்தைப் பார்த்தேன்.

லக்கிலுக், பரிசல்காரன், கோவி.கண்ணன் மற்றும் பலர் ரஜினி மீதான தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாகவே குசேலன் படம் நன்றாக இல்லை என எழுதியுள்ளனர் என்பது படத்தைப் பார்த்தபின் தான் தெரிந்தது. இவர்களுக்கெல்லாம் ஒரு வேண்டுகோள் ஒரு சிறந்த படத்தைப் பற்றி இப்படியெல்லாம் எழுத உங்களுக்கு எப்படி மனது வந்தது?

இந்தப் படம் சூப்பர்ஸ்டாரின் தலைசிறந்த படங்களில் ஒன்று. P.வாசு இயக்கிய படங்களில் இதுவே சிறந்தது. ஒரு படத்தில் இதைவிட என்ன இருக்க்வேண்டும் எனத் தெரியவில்லை. :(

என்னைப் பொருத்தவரை இது ஒரு நல்ல படம். மூன்று மணிநேரம் கவலைகளை மறந்து ரசிக்க ஏற்ற படம்.
படத்தைப் பார்த்த பின்னும் சொல்கிறேன், குசேலன் குறித்த என் இந்த இடுகையில் எந்த மாற்றமும் இல்லை :
http://jegadeesangurusamy.blogspot.com/2008/08/blog-post_5893.html
சூப்பர் ஸ்டாரின் படம் எப்போதும் நன்றாகத்தான் இருக்கும் என்பதை நம்பி படம் பார்க்காமலேயே நான் எழுதிய விமர்சனம் அப்படியே உண்மையாக உள்ளது. படம் மிகவும் அருமை.

லக்கி, பரிசல் போன்ற கமல் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள், கமல் ரசிகன் என்ற கண்ணாடியைக் கழற்றி வைத்துவிட்டு, ஒரு நடுநிலையாளராக, மறுபடியும் இந்தப் படத்தைப் போய்ப் பாருங்கள். அப்போது தெரியும் எவ்வளவு நல்ல படம் என்பது.

மீண்டும் ஒரு முறை சொல்கிறேன்...
குசேலன் மிகச் சிறந்த படம். அனைவரும் தவறாமல் பார்க்கவும்..

குசேலன் நல்லாத்தான இருக்கு? ஆனா ஏன் எல்லாரும் நல்லா இல்லைன்னு சொல்றாங்க?
ஒன்னுமே புரியலை...

பின் குறிப்பு:
1. நான் குருவி, அழகிய தமிழ்மகன், திருப்பதி, பரமசிவன் போன்ற படங்களைப் பார்த்தபோதும் எனக்கு இப்படித் தான் தோன்றியது.. "படம் நல்லாத்தான இருக்கு? ஏன் எல்லோரும் நல்லா இல்லைன்னு சொல்றாங்க?" :P

2. படத்திற்கும் பதிவுக்க்கும் எந்த சம்மந்தமும் இல்லை!

19 comments:

said...

ஹா...ஹா...ஹா....அண்ணே முடியல.....போதும் விட்டுங்க

said...

டிஸ்கி 2 மூலம் நீங்க என்ன சொல்ல வர்றீங்க? அதை தெளிவா விளக்கி இன்னொரு பதிவு இடுமாறு கேட்டுக்கொள்கிறேன்!

said...

//என்னை மட்டுமல்ல என் மனைவியையும்(?) சேர்த்துத் திட்டிப் பின்னூட்டங்கள் வந்தது.//

ஏங்க மனைவி உங்களுக்கு வருவதற்கு முன்னாடியே கேள்விக்குறி ஆக்குறீங்களே?....என்ன கொடுமை இது?

said...

//
நிஜமா நல்லவன் said...

டிஸ்கி 2 மூலம் நீங்க என்ன சொல்ல வர்றீங்க? அதை தெளிவா விளக்கி இன்னொரு பதிவு இடுமாறு கேட்டுக்கொள்கிறேன்!

//
இதுல என்னய்யா புரியல உமக்கு?
"குசேலன்" திரைக்காவியம் பற்றிய இந்தப் பதிவுக்கும் மேலே இருக்கும் "ரம்பம்" படத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை... :P

டிஸ்கி1, தெளிவாப் புரிஞ்சதுல்ல... அது போதும்.. :P

said...

//1. நான் குருவி, அழகிய தமிழ்மகன், திருப்பதி, பரமசிவன் போன்ற படங்களைப் பார்த்தபோதும் எனக்கு இப்படித் தான் தோன்றியது.. "படம் நல்லாத்தான இருக்கு? ஏன் எல்லோரும் நல்லா இல்லைன்னு சொல்றாங்க?" :ப//

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுதல்..... மாத்த முடியாது அண்ணே...விட்டுடுங்க:)

said...

அண்ணே! உங்க கருத்து நல்லா இருக்கு... அனைவரும் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டிய திரை காவியம் தான் குசேலன்... நான் பதிவு போட்டாலும் இதே லேபிளில் குசேலனை உயர்த்தி பதிவிடுவேன்.

said...

நீங்க சொன்னா சரி :-))))

said...

//
கிரி said...

நீங்க சொன்னா சரி :-))))

//
நான் சொல்லலைன்னாலும் சரிதான்...
:P

said...

//"படம் நல்லாத்தான இருக்கு? ஏன் எல்லோரும் நல்லா இல்லைன்னு சொல்றாங்க?"//
அதானே !! உங்களோட பதிவும் நல்லாத்தேன் இருந்துச்சு..ஏன் எல்லாரும் திட்றாங்க ..

said...

//
ஜீவன் said...

//"படம் நல்லாத்தான இருக்கு? ஏன் எல்லோரும் நல்லா இல்லைன்னு சொல்றாங்க?"//
அதானே !! உங்களோட பதிவும் நல்லாத்தேன் இருந்துச்சு..ஏன் எல்லாரும் திட்றாங்க ..

//
அதுதாங்க ஜீவன், எனக்கும் ஒன்னுமே புரியமாட்டேன்னுது.... :P

said...

லக்கியும், பரிசலும் போட்டு இருப்பது பவர் கிளாஸ் அதை கழட்டிட்டு எப்படி படம் பார்ப்பது:((((

said...

//குசும்பன் said...
லக்கியும், பரிசலும் போட்டு இருப்பது பவர் கிளாஸ் அதை கழட்டிட்டு எப்படி படம் பார்ப்பது:((((

August 10, 2008 12:26 PM
//

மறுக்காச் சொல்லேய்ய்ய்ய்.......

said...

//(என்னைப் பாராட்டியவருக்கு ஒரு தகவல்: எனக்கு இன்னும் திருமணம் ஆகலை..:P )//

சந்தடி சாக்குல அண்ணன் அடிச்சி விடரார்.. இத நாங்க நம்பனுமாம்ல :P..

ரஜினியின் தீவிர ரசிகர் ஜக்தீஷ் வாழ்க வாழ்க.. :))

said...

//
SanJai said...

//(என்னைப் பாராட்டியவருக்கு ஒரு தகவல்: எனக்கு இன்னும் திருமணம் ஆகலை..:P )//

சந்தடி சாக்குல அண்ணன் அடிச்சி விடரார்.. இத நாங்க நம்பனுமாம்ல :P..

ரஜினியின் தீவிர ரசிகர் ஜக்தீஷ் வாழ்க வாழ்க.. :))

//
:)))
வாங்க சஞ்சய்.... என்ன நெம்ப நாளா ஆளையே காணோம்?

said...

என்ன பன்றது தல? கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம வேல எல்லாம் பாக்க வேண்டி இருக்கு. :( அதான் ஆன்லைன் வர முடியறதில்ல. :(

said...

//என்னை மட்டுமல்ல என் மனைவியையும்(?) சேர்த்துத் திட்டிப் பின்னூட்டங்கள் வந்தது//


ஒலக கொடுமை இது !
அடப்பாவிகளா ஜெகதீசனுக்கு இன்னும் கல்யாணமே ஆகலைய்யா.......!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

said...

//
குசும்பன் said...

லக்கியும், பரிசலும் போட்டு இருப்பது பவர் கிளாஸ் அதை கழட்டிட்டு எப்படி படம் பார்ப்பது:((((

//
கண்ணாடியக் கழட்டீட்டுப் பார்த்தாத் தான் படம் நல்லாருக்குன்னு சொல்லமுடியுமின்னா... கண்ணாடியைக் கழட்டுறதுல தப்பில்லை.. அது பவர் கிளாஸா இருந்தாலும்.... :P

said...

இப்படி 'வாழ்த்தி' வந்த பின்னூட்டங்களை வெளியிட்டு எண்ணிக்கையை 'கூட்டிக்'கொள்ள பின்னூட்ட மேம்போக்காளர்... (இருங்க மூச்சு வாங்குது) அண்ணன் ஜேக் வாழ்க!

//எனக்கு இன்னும் திருமணம் ஆகலை..:P )//

அண்ணன் என்ன சொல்ல வர்றாருன்னு புரிஞ்சிருக்குமே;-)

said...

குசேலன் பிரமாதம்
குசேலன் அருமை.
குசேலன் சூப்பர் டூப்பர்
kuselan the great