Tuesday, August 5, 2008

எச்சரிக்கை! - சிங்கை சந்திப்பில் கலந்துகொண்டவர்களுக்கு

கடந்த ஞாயிறன்று சிங்கையில் பதிவர் சந்திப்பு நடந்தது தாங்கள் அனைவரும் அறிந்த செய்தியே.
சந்திப்பு இனிதே நடந்து முடிந்தது. அதில் எந்தப் பிரச்சனையும் இல்லை.

ஆனால், சந்திப்பில் ஒரு மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தீர்மானத்தை பதிவர்கள் யாரும் சரியாகச் செயல்படுத்தவில்லை என்று ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது..

அந்தத் தீர்மானம் இது தான்:
3. கலந்து கொண்ட பதிவர்களுக்கு ஒவ்வொரு பதிவரும் 'மீ த பர்ஸ்ட்' பின்னூட்டம் நிபந்தனையின்றி போடவேண்டும்.

இதைப் பதிவர்களில் பலர் செயல்படுத்தவில்லை எனத் தெரிகிறது.
அவர்களுக்கு இது கடைசி எச்சரிக்கை.. விரைவில் "மீ த ஃபர்ஸ்ட்" பின்னூட்டங்காள் போட ஆரம்பிக்குமாறு கடும் எச்சரிக்கை விடுகிறேன்.

இதை செயல் படுத்தாதவர்களுக்கு தண்டனை:

"அடுத்த சந்திப்பில் பாரி.அரசுவுடன், அவர் விரும்பும் தலைப்பில் ஒருமணி நேரம் விவாதிக்க வேண்டும்.

பாரி.அரசு மீ த ஃபர்ஸ்ட் பின்னூட்டம் போடத்தவறினால் ஒரு மணி நேரம் அவர் மௌணவிரதம் இருக்கவேண்டும். "


அதிக மீ த ஃபர்ஸ்ட் பின்னூட்டங்கள் போடுவேருக்கு அடுத்த சந்திப்பில்
"பதிவர் மைஃபிரண்ட் பின்னூட்டி விருது" வழங்கப்படும். இவ்விருது பெறுபவருக்கு அல்வா கொஞ்சம் அதிகமாகத் தரப்படும்...

குறிப்பு: பதிவு குறித்து போடப்படும் பின்னூட்டங்கள் "மீ த ஃபஸ்ட்" பின்னூட்டமாக ஏற்றுக் கொள்ளப்படாது. ஒரு பதிவில் எத்தனை பின்னூட்டங்களும் போடலாம். ஆனால் அதில் ஒன்றாவது "மீ த ஃபஸ்ட்" பின்னூட்டமாக இருக்கவேண்டும்

சூப்பர் ஸ்டார் வாழ்க!!! அவரது புகழ் ஓங்குக!!!

நன்றி

25 comments:

said...

மீ த பர்ஸ்ட் !!!

said...

முதல் பின்னூட்டம் போட்டு தீர்மானத்தைக் கட்டிக் காக்கும் ஒரே பதிவர் கோவி தான் என்பதை பதிவர் உலகுக்குக் காட்டிவிட்டேன்

said...

அடுத்த பதிவர் சந்திப்பில் குசேலன் வீடியோ கேசட் சந்திப்பில் கலந்து கொள்பவர்கள் சின்ன ரஜினி அவர்களின் கைகளால் தரப்படும். நிதி உதவி ஜெகதீசன், முதலில் பெறுபவர் பாரி.அரசு

said...

மீ த பர்ஸ்ட் !!!

said...

//அடுத்த சந்திப்பில் பாரி.அரசுவுடன், அவர் விரும்பும் தலைப்பில் ஒருமணி நேரம் விவாதிக்க வேண்டும்.//

ரொம்ப விசயம் தெரிஞ்சவரோ:))))

said...

//இவ்விருது பெறுபவருக்கு அல்வா கொஞ்சம் அதிகமாகத் தரப்படும்...//

இனி சந்திப்புக்கு வருபவர்கள் எக்ஸ்பெயரிட் டேட் பார்த்து சாப்பிடவும்

said...

நடந்த்தது ஒரு சந்திப்பு. அதுக்கு நாப்பது பதிவா? குசேலன் பதிவ விட இதான் அதிகமாயிருக்கு. என்னவோ போங்க

said...

//முரளிகண்ணன் said...
நடந்த்தது ஒரு சந்திப்பு. அதுக்கு நாப்பது பதிவா? குசேலன் பதிவ விட இதான் அதிகமாயிருக்கு. என்னவோ போங்க//

ஹா ஹா ஹா

said...

மீ டூ த பர்ஸ்ட்டு !!!

said...

மீ த பர்ஸ்ட் ( இல்லன்னு தெரியும்,இருந்தாலும் எதுக்கு வம்பு)

said...

என்னோட கணக்கை இங்க பதிவு பண்ணிக்கிறேன்.

//நடந்த்தது ஒரு சந்திப்பு. அதுக்கு நாப்பது பதிவா? குசேலன் பதிவ விட இதான் அதிகமாயிருக்கு. என்னவோ போங்க//

அது!!!!

சிங்கை பதிவர் கூட்டத்தின் வெற்றியை பறை சாற்றும் பின்னூட்டம்!!

said...

இது தெரியாம “ஜோசப்ப்பால்ராஜ்” பதிவில் போட்டுட்டேனே!!

said...

//
வடுவூர் குமார் said...

இது தெரியாம “ஜோசப்ப்பால்ராஜ்” பதிவில் போட்டுட்டேனே!!

//
:)
இங்கயும் போடுங்க...
அப்பத்தான் மைப்பிரண்ட் விருது கிடைக்கும்.... :)

said...

//
விஜய் ஆனந்த் said...

மீ டூ த பர்ஸ்ட்டு !!!
//
:))
நீங்களும் உங்க கணக்கை ஆரம்பிச்சுட்டீங்க....

said...

//
குசும்பன் said...

மீ த பர்ஸ்ட் !!!
//
வாய்யா குசும்பா... ஆனா விருதும் அல்வாவும் சிங்கைப் பதிவர்களுக்கு மட்டுந்தான்... :P

said...

@கிரி,
ஹா ஹா ஹா வையெல்லாம் கணக்கில் எடுத்துக்க முடியாது...

@முகவை மைந்தன்,
உங்க கணக்கில் ஒரு மதிப்பெண் சேர்க்கப்பட்டுவிட்டது...
:)

said...

//
மீ த பர்ஸ்ட் ( இல்லன்னு தெரியும்,இருந்தாலும் எதுக்கு வம்பு)
//
உங்க கணக்கிலும் சேர்ந்துவிட்டது ஒரு மதிப்பெண்...:P

said...

மீ த பர்ஸ்ட் !!!

said...

மீ NOT த பர்ஸ்ட் !!!

said...

Me 20th?

said...

teli kaanparansing மூலம் kalanthu கொள்ளும் pathivarkaLuku enthap parisum illaiyaa?

said...

tamil font problem

I'll kummify later..

where is my PARTNER Venpu?

said...

//
பரிசல்காரன் said...

teli kaanparansing மூலம் kalanthu கொள்ளும் pathivarkaLuku enthap parisum illaiyaa?

//
உங்கள் கோரிக்கை குறித்து அடுத்த சந்திப்பில் விவாதித்து முடிவு எடுக்கப்படும்..
ஆனால் மனந்தளராமல் பின்னூட்டுங்கள்...

கட்டாயம் அல்வா teli kaanparansing மூலமாகவே அனுப்பப் படும்.... :)

said...

//
பரிசல்காரன் said...

tamil font problem

I'll kummify later..
//
பரிசல்,
கும்மிக்கு ஏது மொழி??
ஆங்கிலத்திலேயே கும்மலாம்...
:)

said...

//பரிசல்,
கும்மிக்கு ஏது மொழி??
ஆங்கிலத்திலேயே கும்மலாம்...:)//

கலக்கல் ஜெகதீசன்! கும்மிப் பதிவர் குழு ஒண்ணு துவங்கி அதுக்கு நீங்க தான் தலைமை தாங்கணும். ஆனா, தலைவர்னு யாரும் கிடையாது, சொல்லிப்புட்டேன்.