Tuesday, July 8, 2008

காத்திருந்த காதலி-5

வடகரை வேலனின் - காத்திருந்த காதலி - 1
பரிசல்காரனின் - காத்திருந்த காதலி - 2
வெய்யிலானின் - காத்திருந்த காதலி - 3
கிரியின் - காத்திருந்த காதலி - 4

இந்தத் தொடரைத் தொடர அழைத்த கிரிக்கு நன்றி... (ஆனா கிரி அண்ணே..... என் மேல என்ன கோவம்??? கதையை பயங்கரமாக் குழப்பி என்கிட்டத் தந்துட்டீங்க.... இதுல நான் என்ன தொடரன்னே புரியலையே.....:( )

கிரி, கோபிக்குச் செல்லும் அவசரத்தில், வெயிலான் தொடங்கிவைத்த ஒரு தொலைபேசி அழைப்பை முடிக்காமல், கதை நாயகன், நாயகி இருவரையும் அம்போவென்று விட்டுவிட்டு கதையை மட்டும் கோபிக்குத் தூக்கிச் சென்றுவிட்டார்....:P (எனக்குக் கூடத்தான் உடனே ஆமத்தூர் போகனும் போல இருக்கு... அதுக்காக இனி கதையை அங்க கொண்டு போகமுடியாதே... :P)

வெயிலான் தொடங்கிவைத்த தொலைபேசி அழைப்புகளை முடித்துவிட்டு, கிரி தொடங்கிய அழைப்பையும் தொடரின் இப்பகுதியில் முடிக்கிறேன்..

இனி கதை
..............................
கோபி:
டேய் கா...கார்த்திக்க் ..அம்மாவின் குரல் குழறியது..
எனக்கு கலவரமாகியது..அதற்குள் கற்பனை எங்கெங்கோ ஓட..
அப்ப்ப்...பாவுக்கு ....அதற்குள் லைன் கட் ஆகியது..
இப்போது சுத்தமாக சிக்னல் இல்லை...பதட்டத்தோடு வீடு நோக்கி வண்டியை விரட்டினான்..

வழியில் மனமெல்லாம் ஒரே கவலை. கார்த்திக்கின் தந்தையும் தாயும் ஒரு விபத்தில் 10 வருடங்களுக்கு முன் இறந்ததில் இருந்து அப்பா அம்மா இல்லாத குறையே தெரியாமல் கார்த்திக்கை, சங்கரின் அப்பாவும் அம்மாவும் வளர்த்து வருகின்றனர்.

ஒரு பக்கம் சங்கருக்கு விபத்து, மறுபக்கம் அப்பாவின் உடல்நிலையும் சரியில்லை.... அப்பாவுக்கு ஒன்றும் ஆகியிருக்கக் கூடாது என வேண்டிக்கொண்டே வீட்டுக்குச் சென்றான்.

உள்ளே படுக்கையில் படுத்திருந்த அப்பாவைப் பார்த்ததும் கொஞ்சம் நிம்மதியடைந்தான். அவனைப் பார்த்ததும் படுக்கையில் இருந்து எழுந்த அப்பா, சங்கர் எப்படி இருக்கிறான்? அவனைத் தனியா விட்டுட்டு ஏன் வந்தாய் எனப் புலம்பத் தொடங்கிவிட்டார்.

கார்த்திக் எவ்வளவு சமாதானம் செய்தாலும் கேட்காமல் உடனே சங்கரைப் பார்க்கவேண்டும் என அடம் பிடிக்கத் தொடங்கிவிட்டார்..
கார்த்திக்கும் வேறு வழியில்லாமல் ரயில்வேயில் வேலைபார்க்கும் நண்பனின் உதவியுடன் தட்கலில் அன்று இரவுக்கே சென்னைக்கு இரயிலில் பயணச்சீட்டு எடுத்துவிட்டான்..
*****************************************************
சென்னை:
'இந்து' வலைத்தளத்தில் BLOG பற்றி வந்த செய்தியை படித்துக் கொண்டிருந்த கெளரியின் அப்பா, மேசை மேல் இருந்த செல்ஃபோன் திரையில் யார் கூப்பிடுவது? என திரும்பிப் பார்க்கிறார்.

Irudhayaraj calling…….

ம்ம்.. சொல்லுடா சங்கருக்கு எப்படி இருக்கு?
நேர்ல வாடா சொல்றேன்..
சரிடா... கெளரி கிட்ட எதுவும் சொல்லிடாத பயந்துடுவா.. நான் இப்ப அங்க வரேன்..
.....................

இல்லைங்க! சாப்பாடு அனுப்பி அரை மணி நேரம் தான் ஆகுது, இன்னொரு பத்து நிமிசத்துல வந்துடுவாங்க தாமதத்திற்கு மன்னித்து விடுங்க.
கெளரி, சங்கரின் அலுவலகதைத் தொடர்புகொண்டு சங்கருக்கு நடந்த விபத்தைப் பற்றி சொல்லிவிட்டு அனைத்து ஆர்டர்களையும் சரியாக அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொண்டாள்.

டாக்டர் இருதயராஜ் அறையில் இருந்து வெளியே வந்தார்..
அங்கிள் சங்கருக்கு இப்ப எப்படி இருக்கு..
ஒன்னும் பிரச்சனை இல்லைம்மா...விரைவில் சரியாகிரும்.. நீ கிளம்பு.. நான் பார்த்துக்கிறேன்.. அப்பாவும் இப்ப வந்துருவார்.
இல்ல அங்கிள் நான் இருக்கேன்... அப்பா வந்ததும் நான் கிளம்புறேன்... சங்கர் ஆபீஸ் போய் ஆர்டர் எல்லாம் சரியா டெலிவரி பண்ணுறாங்களான்னு மேற்பார்வை பார்க்கனும்.. அதனால அப்பா வந்ததும் கிளம்புறேன்..
சரிம்மா..

கெளரியின் அப்பா 10 நிமிடத்தில் வந்து சேர்ந்தார்.
நீ கிளம்பும்மா....நான் பார்த்துக்குறேன்..
சரிப்பா நான் நேரா சங்கர் ஆபீஸ் போய் ஆர்டர் எல்லாம் சரியா டெலிவரி பண்ணீட்டாங்களான்னு பார்த்துட்டு அப்படியே வீட்டுக்குக் கிளம்புறேன்..

கெளரி மருத்துவமனையை விட்டு வெளியேறிய பின்..

சொல்டா... சங்கருக்கு எப்படி இருக்கு? ரெம்ப கிரிட்டிக்கலா? எப்ப நினைவு திரும்பும்?
ம்ம்ம்...உள்ள வாடா சொல்றேன்....

என்ன சொன்னார் என்பதை டிபிசிடி தொடருவார்...

*****************************************************************

அடுத்து தொடரைத் தொடருவோருக்கு ஒரு வேண்டுகோள்...
கதையை எங்கு கொண்டு சென்றாலும் கதாநாயகன் மற்றும் கதாநாயகி (சங்கர் & கெளரி)யைச் சுற்றியே தொடருமாறு கேட்டுக்கொள்கிறேன்...

********************************************

18 comments:

Anonymous said...

ஜெகன்,

ஓரளவுக்குச் சரிபண்ணீட்டீங்க.

இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம்.

இருந்தாலும், தொடர்கதையோட இலக்கணமே, கடைசி வரில ஒரு ச்ஸ்பென்ஸோட முடிக்கிறதுதான்.

இனிமேல் வருபவர்கள் செய்வார்கள்.

வாங்க tbcd, தொடருங்கள்.

said...

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

ஒரு ரணகளமே நடந்து இருக்கு ...

//கிரி, கோபிக்குச் செல்லும் அவசரத்தில், வெயிலான் தொடங்கிவைத்த ஒரு தொலைபேசி அழைப்பை முடிக்காமல்//

இதுல தாங்க சொதப்பிட்டேன் ஐ மீன் குழப்பம் ஆகிட்டேன்..:-))))

//சொல்டா... சங்கருக்கு எப்படி இருக்கு? ரெம்ப கிரிட்டிக்கலா? எப்ப நினைவு திரும்பும்?
ம்ம்ம்...உள்ள வாடா சொல்றேன்//

ஜெகதீசன் நம்ம கதைய படிக்கிறவங்க "வேற" ஹாஸ்பிடல் போகாம இருந்தா சரி ஹி ஹி ஹி

//அடுத்து தொடரைத் தொடருவோருக்கு ஒரு வேண்டுகோள்...
கதையை எங்கு கொண்டு சென்றாலும் கதாநாயகன் மற்றும் கதாநாயகி (சங்கர் & கெளரி)யைச் சுற்றியே தொடருமாறு கேட்டுக்கொள்கிறேன்//

அதே மாதிரி சும்மா எல்லோரையும் ஹாஸ்பிடல் க்கு அனுப்பி சீரியஸ் ஆக்க கூடாதுன்னு கேட்டுக்கிறேன் ஹி ஹி ஹி

அப்புறம் காத்திருந்த காதலிக்கு பதிலா.."காத்திருந்த ஹாஸ்பிடல்" னு மாத்த வேண்டியது தான் ஹா ஹா ஹா ஹா

said...

:)

காத்திருந்த காதலி ....

ஏன் காத்திருந்தாங்க ?

said...

ஆஹா சின்னதா இருந்தாலும் நல்லாவே இருக்கு..கதை நன்றாக தொடர வாழ்துக்கள் :)

said...

//
வடகரை வேலன் said...

ஜெகன்,

ஓரளவுக்குச் சரிபண்ணீட்டீங்க.

இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம்.

இருந்தாலும், தொடர்கதையோட இலக்கணமே, கடைசி வரில ஒரு ச்ஸ்பென்ஸோட முடிக்கிறதுதான்.

இனிமேல் வருபவர்கள் செய்வார்கள்.

வாங்க tbcd, தொடருங்கள்.
//
வாங்க வேலன்.. நன்றி..
இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம் தான்.. ஆனால் என்ன எழுதன்னே ஒன்னும் புரியலை.. :(
எனக்கு தொடர்விளையாட்டும் புதுசு.. கதையும் புதுசு...

said...

வாங்க கிரி..
//
அதே மாதிரி சும்மா எல்லோரையும் ஹாஸ்பிடல் க்கு அனுப்பி சீரியஸ் ஆக்க கூடாதுன்னு கேட்டுக்கிறேன் ஹி ஹி ஹி

அப்புறம் காத்திருந்த காதலிக்கு பதிலா.."காத்திருந்த ஹாஸ்பிடல்" னு மாத்த வேண்டியது தான் ஹா ஹா ஹா ஹா
//
அடுத்து வருவோர் நாயகனை விரைவில் ஹாஸ்பிட்டலில் இருந்து டிஸ்சார்ஜ் பண்ணி கோபிக்கு ஓய்வெடுக்க (கோடநாட்டுக்கு அல்ல :P ) கூட்டிப் போனால் நல்லா இருக்கும்...

said...

//
Ramya Ramani said...

ஆஹா சின்னதா இருந்தாலும் நல்லாவே இருக்கு..கதை நன்றாக தொடர வாழ்துக்கள் :)

//
வாங்க ரம்யா...நன்றி

நானே உண்மைத் தமிழன் பதிவு அளவுக்கு பெரிசா ஒரு பதிவு போட்டுடேன் ன்னு மகிழ்ச்சியா இருந்தா.. கதை சிறியதா இருக்குன்னு சொல்லீட்டீங்க.... :P

Anonymous said...

எல்லாத்தையும் சரி பண்ணி, குறுகிய நேரத்தில் நல்லா எழுதியிருக்கீங்க ஜெகதீசன்!

தாயகத்திலிருந்து திரும்பிய தலைவர் டிபிசிடி என்ன பண்ண காத்திட்டிருக்காரோ?

// நானே உண்மைத் தமிழன் பதிவு அளவுக்கு பெரிசா ஒரு பதிவு போட்டுடேன் ன்னு மகிழ்ச்சியா இருந்தா.. கதை சிறியதா இருக்குன்னு சொல்லீட்டீங்க //

ஒரு முழ நீளத்துக்கு கதை எழுதீட்டு....
உண்மைத்தமிழன் மாதிரியா?
உண்மைத்தமிழனுக்கு விசயம் தெரிஞ்சா, வந்து உதைப்பார் :)

said...

//வெயிலான் said...
எல்லாத்தையும் சரி பண்ணி//

:-(((((((((

said...

//
Blogger கோவி.கண்ணன் said...

:)

காத்திருந்த காதலி ....

ஏன் காத்திருந்தாங்க ?
//

தெரியலையேங்க.. :P
இதுவரை 5 பகுதி முடிந்துவிட்டது.. ஆனால் நாயகி நாயகனிடம் ஒரே ஒரு முறை தான் அதுவும் தொலைபேசியில் தான் பேசியிருக்கிறார்... :P

said...

எங்கள எல்லாம் எப்படியாவது haspital அனுப்புறது என்ன முடிவுல இருக்கீங்க சரி நடத்துங்க நடத்துங்க

said...

உள்ளேன் ஐயா...

said...

தொடர் கதைன்னா ஒவ்வொரு பகுதியும் டென்ஷனோட சஸ்பென்ஸோடதான் தொடரணுமா என்ன?

!?

said...

சிறப்பான 'டிங்கரிங்' வொர்க். ஜெகா எங்கே ஏதாவது வொர்க் ஷாப் பில் வேலை செய்கிறாரா.? யாராவது கொஞ்சம் ரொமான்ஸ் கொண்டுவாங்கப்பா, காதல் கதைதானே இது.!

said...

//
வெயிலான் said...

எல்லாத்தையும் சரி பண்ணி, குறுகிய நேரத்தில் நல்லா எழுதியிருக்கீங்க ஜெகதீசன்!

தாயகத்திலிருந்து திரும்பிய தலைவர் டிபிசிடி என்ன பண்ண காத்திட்டிருக்காரோ?
//
நன்றி வெயிலான்!!
டிபிசிடி... கலக்கிடுவார்.. விரைவில் மருத்துவமனையிலிருந்து கதையை வெளியே எடுத்து வந்துவிடுவார்... :P

said...

//
TBCD said...

உள்ளேன் ஐயா...
//
அதெல்லாம் இருக்கட்டும்... கதையை எழுதுங்க
:P

said...

//
நாமக்கல் சிபி said...

தொடர் கதைன்னா ஒவ்வொரு பகுதியும் டென்ஷனோட சஸ்பென்ஸோடதான் தொடரணுமா என்ன?

!?
//
அதான?? அப்படித் தான் இருக்கனுமா என்ன?

said...

வாங்க Thamira... நன்றி

//
யாராவது கொஞ்சம் ரொமான்ஸ் கொண்டுவாங்கப்பா, காதல் கதைதானே இது.!
//
வழிமொழிகிறேன்ன்ன்ன்ன்ன்ன்!!!
:P