Wednesday, June 18, 2008

கண்ணைக் குத்தும் சாமியும், நக்சலைட் பதிவரும் - வலைக் கிசுகிசு

லேசியமாரியாத்தா, அ(டி)ப்பாவிச் சிறுமி, அறுந்த வாலு எனப் பல பெயர்களில் அறியப்படுகிறார் சிங்கையில் உயிரித் தொழில்நுட்பம் படிக்கும் பிரபல மலேசியப் பெண் பதிவர் ஒருவர். இவரைப் போலவே இவரது பல் ஒன்று சொன்னபடி கேட்காமல் மேலிருந்து கீழாக வளராமல், இடமிருந்து வலமாக வளர்ந்து விட்டதாம். இதனால் கிருமித் தொற்று ஏற்பட்டுவிட்டதாம். மருத்துவர், அந்தப் பல்லை அறுவைசிகிச்சை செய்து அகற்ற வேண்டும் (ஏம்மா, பல்லுப் பிடுங்குறதுக்கு உங்க ஊர்ல அறுவைசிகிச்சைன்னு பேரா :P ) என்று கூறிவிட்டாராம். இதனால் விரைவில் இவருக்கு அறுவை சிகிச்சை நடக்கப் போகிறதாம். இவர் விரைவில் நலமடைய வாழ்த்துவோம்..

(இவரின் சாட்டிங், தொலை/அலைபேசி அறுவைகளைத் தாங்கமுடியாத, பொய்யாக் கெட்டவர் உள்ளிட்ட சில பதிவர்கள், "இவர் விரைவில் நலமடையட்டும். ஆனால், குறைந்தது ஒரு மாதத்திற்காவது சாட்டிங் செய்யாமால், தொலை/அலை பேசாமல் இருக்கவேண்டும் என மருத்துவர் இவருக்கு அறிவுறுத்த வேண்டும் " எனக் கடவுளை வேண்டுகிறார்களாம்)

ன் பதிவில் பகுத்தறிவுக் கருத்துகளைப் பதிவிட்டுவரும் மலேசியப் பதிவர் ஒருவரின் பதிவுகளைப் பற்றி அவரது மனைவி அவரின் அம்மா, அப்பாவிடம் போட்டுக் கொடுத்துவிட்டாராம். அவரது வீட்டில் இப்போது அவருக்கு "சாமி கண்ணைக் குத்திவிடும்" எனக் கடும் எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளதாம். பதிவர் ஆடிப்போய் இருக்கிறார். யாருக்கும் தெரியாமல் இணைய மையங்களுக்கு வந்து வீட்டுக்குத் தெரிந்துவிடுமோ எனப் பயந்து பயந்து பதிவிடுகிறாராம் இப்போது...

மூத்த சிங்கைப் பதிவர் ஒருவரின் வீட்டிலும் இதே பிரச்சனையாம். என்னை
நக்சலைட்டா எனக் கேட்கிறார்கள் என பதிவர் சந்திப்பில் இவர் புலம்பினாராம். இவரது அண்ணன் இவரின் பதிவைப் படித்துவிட்டு, வீட்டில் "இவன் நக்சலைட் மாதிரி எழுதுறான்" எனப் போட்டுக் கொடுத்துவிட்டாராம். சமீபத்தில் ஊருக்குச் சென்றிருந்த அவர் வீட்டில் தங்காமல் பதிவர்களைச் சந்திக்க ஊர் ஊராகச் சுற்றியதைக் கண்டு, "நக்சலைட் ஆகீட்டயா?" எனக்கேட்டு பதிவரின் அம்மா நச்சரிக்க ஆரம்பித்துவிட்டாராம். இனிமேல் இப்படியெல்லாம் எழுதக்கூடாது என எச்சரித்து அனுப்பியிருக்கிறார்கள். வீட்டில் சமைக்கும் நேரம் தவிர எந்தநேரமும் கணிப்பொறி முன்னரே அமர்ந்திருப்பதைக் கண்டு கடுப்பில் இருக்கும் அவரது மனைவியும் தாக்குதலைத் தொடங்கியுள்ளாராம். இருமுனைத் தாக்குதலையும் சமாளித்து ஒரு நாளுக்கு 2 பதிவுகளைப் போட்டுத் தள்ளுகிறார் பதிவர். இவரால் மட்டும் எப்படித்தான் முடிகிறதோ... :P

சிங்கைப் பதிவர் சந்திப்பு குறித்துப் பதிவிட்ட பதிவர்களில் சிலருக்கு
"ஏண்டா **** * *** ***********,உன்னை மாதிரி *****
ஒண்ணா சேர்ந்து * தின்னறதுக்கு
பெயர் சந்திப்பாடா,**:( "

என ஒரு மனநோயாளியிடமிருந்து பின்னூட்டம் வந்திருக்கிறதாம். அந்த மனநோயாளியின் மனநோய் விரைவில் குணமடைய வாழ்த்துவோம்!!!

28 comments:

said...

//பதிவர் ஆடிப்போய் இருக்கிறார்.//

யோவ் ஆடுற உருவமா அது ?

நில அதிர்ச்சி வந்துடும்யா....பொய் பொய்யா சொல்ல எத்தனை பேரு கிளம்பிட்டீக.

said...

//இவரது பல் ஒன்று சொன்னபடி கேட்காமல் மேலிருந்து கீழாக வளராமல், //

தங்கச்சிக்கு பல் உடைஞ்சிடுச்சிப்பா

said...

//வீட்டில் சமைக்கும் நேரம் தவிர எந்தநேரமும் //

:) நான் தான் சமைக்கிறேன் என்று யார் சொன்னது ?

said...

பாரி.அரசு என்ற நண்பர் பட்டுக்கோட்டைக்காரர் என்றேன்...அவங்க நகசல் பாரி ன்னு புரிந்து கொண்டார்கள்.

:)

said...

//
கோவி.கண்ணன் said...

//வீட்டில் சமைக்கும் நேரம் தவிர எந்தநேரமும் //

:) நான் தான் சமைக்கிறேன் என்று யார் சொன்னது ?

//
நீங்க தான் சொன்னீங்க... :P

said...

:))

said...

அடிக்கடி பதிவு போடுறீங்களே? என்ன விஷயம்?

said...

///கோவி.கண்ணன் said...
//பதிவர் ஆடிப்போய் இருக்கிறார்.//

யோவ் ஆடுற உருவமா அது ?///


அப்ப பாடுற உருவமா இருக்குமோ?

said...

///கோவி.கண்ணன் said...
பொய் பொய்யா சொல்ல எத்தனை பேரு கிளம்பிட்டீக.///



ஆமத்தூரார் மட்டும் தான்:)

said...

ஒரு நாளைக்கு பத்து பதிவுகள் போடுறவங்க மத்தியில் இந்த மாசத்துல இதுவரைக்கும் எட்டு பதிவு போட்டுட்டு சாதனை மாதம்னு வேற சொல்லிட்டு திரியிறவங்களை என்ன செய்யலாம்?

said...

//
நிஜமா நல்லவன் said...

ஒரு நாளைக்கு பத்து பதிவுகள் போடுறவங்க மத்தியில் இந்த மாசத்துல இதுவரைக்கும் எட்டு பதிவு போட்டுட்டு சாதனை மாதம்னு வேற சொல்லிட்டு திரியிறவங்களை என்ன செய்யலாம்?

//
எத்தனை தடவைப்பா சொல்லுறது.. எனக்கிருக்கும் இடைவிடாத பணிகளுக்கிடையே என்னால இவ்வளவுதான் பதிவிடமுடியும்ன்னு...
:P

said...

///ஜெகதீசன் said...
எத்தனை தடவைப்பா சொல்லுறது.. எனக்கிருக்கும் இடைவிடாத பணிகளுக்கிடையே என்னால இவ்வளவுதான் பதிவிடமுடியும்ன்னு...
:P///



இப்போது தெளிவா புரிந்தது உங்கள் இடை விடாத பணி என்னவென்று:)

said...

:)
அன்புடன்
சிங்கை நாதன்

said...

// சாமி கண்ணைக் குத்திவிடும் //

:))))

said...

//
singainathan said...

:)
அன்புடன்
சிங்கை நாதன்

பொன்வண்டு said...

// சாமி கண்ணைக் குத்திவிடும் //

:))))

//

வாங்க பொன்வண்டு & சிங்கை நாதன்..
இப்பல்லாம் சிரிப்பான் போடுறதுக்கு எனக்குப் போட்டியா ரெம்பப் பேர் வந்துட்டாங்க.... :P

said...

//என ஒரு மனநோயாளியிடமிருந்து பின்னூட்டம் வந்திருக்கிறதாம். அந்த மனநோயாளியின் மனநோய் விரைவில் குணமடைய வாழ்த்துவோம்!!!//

விட்டுத்தள்ளுங்க... குணமடைஞ்சா என்ன குணாவா ஆனா என்ன ? யாரும் கண்டு கொள்வதில்லை.

said...

//இவரைப் போலவே இவரது பல் ஒன்று சொன்னபடி கேட்காமல் மேலிருந்து கீழாக வளராமல், இடமிருந்து வலமாக வளர்ந்து விட்டதாம்.//

ஹா ஹா ஹா ஹா ஹா ஜெகதீசன் ..நக்கலான ஆளாக தான் இருக்கீங்க. கோவி கண்ணன் கூறியதை நம்புறேன்.

//யாருக்கும் தெரியாமல் இணைய மையங்களுக்கு வந்து வீட்டுக்குத் தெரிந்துவிடுமோ எனப் பயந்து பயந்து பதிவிடுகிறாராம் இப்போது...//

:-))))))))))))))) நீங்கள் தான் பதிவுலக நிருபர் :-))))))))


//இனிமேல் இப்படியெல்லாம் எழுதக்கூடாது என எச்சரித்து அனுப்பியிருக்கிறார்கள். வீட்டில் சமைக்கும் நேரம் தவிர எந்தநேரமும் கணிப்பொறி முன்னரே அமர்ந்திருப்பதைக் கண்டு கடுப்பில் இருக்கும் அவரது மனைவியும் தாக்குதலைத் தொடங்கியுள்ளாராம். இருமுனைத் தாக்குதலையும் சமாளித்து ஒரு நாளுக்கு 2 பதிவுகளைப் போட்டுத் தள்ளுகிறார் பதிவர். இவரால் மட்டும் எப்படித்தான் முடிகிறதோ... :P//

இவரு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப வல்லவர் போல இருக்கு.

//சிங்கைப் பதிவர் சந்திப்பு குறித்துப் பதிவிட்ட பதிவர்களில் சிலருக்கு
"ஏண்டா **** * *** ***********,உன்னை மாதிரி *****
ஒண்ணா சேர்ந்து * தின்னறதுக்கு
பெயர் சந்திப்பாடா,**:( " //

அய்யய்யோ இப்படி எல்லாம் வருதா.. நல்லவேளை எனக்கு எதுவும் அப்படி வரலை..இனிமேல் ஏதாவது திட்டுற நினைப்பு இருந்தா என்னை மன்னித்து விட்டுடுங்க..நான் அப்பாவி ..நான் இனிப்பு பிடிக்காதுன்னு ஹல்வா எல்லாம் சாப்பிடலைங்க பதிவர் சந்திப்பில் ..

said...

வாங்க கிரி...
என்ன சொன்னாரு கோவியார் என்னைப் பத்தி... அவர் சொல்றதை எல்லாம் நம்பாதீங்க.. நான் ரெம்ப அப்பாவி...

//
அய்யய்யோ இப்படி எல்லாம் வருதா.. நல்லவேளை எனக்கு எதுவும் அப்படி வரலை..
//
இந்த மாதிரி கமெண்ட் வரதுக்கு நீங்க இன்னும் ரெம்ப உழைக்கனும்.... :P

said...

துர்கா விரைவில் குணமடைந்து சாட் / கால் / ஸ்க்ராப் செய்து எல்லாரையும் வதைக்க பிரார்திக்கிறேன்

said...

அடிக்கடி பதிவு போடுறீங்களே? என்ன விஷயம்?

said...

அடிக்கடி பதிவு போடுறீங்களே? என்ன விஷயம்?

said...

ஒரு நாளைக்கு பத்து பதிவுகள் போடுறவங்க மத்தியில் இந்த மாசத்துல இதுவரைக்கும் எட்டு பதிவு போட்டுட்டு சாதனை மாதம்னு வேற சொல்லிட்டு திரியிறவங்களை என்ன செய்யலாம்?

said...
This comment has been removed by the author.
said...

//கோவி.கண்ணன் said...

//வீட்டில் சமைக்கும் நேரம் தவிர எந்தநேரமும் //

:) நான் தான் சமைக்கிறேன் என்று யார் சொன்னது ?//
ஓ.. அது நீங்க தானா? என்னா ஒரு பெருந்தன்மை? எங்கள யோசிக்க கூட விடாம இப்படி வலிய வந்து வாக்குமூலம் குடுக்கும் "தோழர்" கோ.க. வாழ்க வாழ்க...

said...

//Blogger மங்களூர் சிவா said...

அடிக்கடி பதிவு போடுறீங்களே? என்ன விஷயம்?

June 18, 2008 5:39 PM
Blogger மங்களூர் சிவா said...

அடிக்கடி பதிவு போடுறீங்களே? என்ன விஷயம்?

June 18, 2008 5:39 PM
Blogger மங்களூர் சிவா said...

ஒரு நாளைக்கு பத்து பதிவுகள் போடுறவங்க மத்தியில் இந்த மாசத்துல இதுவரைக்கும் எட்டு பதிவு போட்டுட்டு சாதனை மாதம்னு வேற சொல்லிட்டு திரியிறவங்களை என்ன செய்யலாம்//

Anonymous said...

ஊமை குசும்பன்னு என்னமோ சொல்லுவாங்க.இப்போதான் அப்படிபட்ட ஊமை குசும்பனை நேரில் பார்கின்றேன்

said...
This comment has been removed by the author.
said...

/
SanJai said...

// துர்கா said...

ஊமை குசும்பன்னு என்னமோ சொல்லுவாங்க.இப்போதான் அப்படிபட்ட ஊமை குசும்பனை நேரில் பார்கின்றேன்//

குசும்பன் ஊமை இல்லையே.. நான் பல முறை போனிலும் நேரிலும் அவர் கூட பேசி இருக்கேனா? பல்ல கழட்டறதுக்கு பதில் அந்த டாக்டர் அடிப்பாவி சிறுபி மரக் கழட்டிட்டாரா? :P

ஏன்மா அடிப்பாவி சிறுமி.. ஒரு நல்ல டாக்டர் பாக்க கூடாதா? யாராவது போலி டாக்டர் கிட்ட ஆப்புரேஷன் பண்ணிகிட்டயா? :)))
/

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்