Monday, June 9, 2008

ஏர்இந்தியா எக்ஸ்பிரஸில் தமிழ்!!!!!!




அதிசயம் ஆனால் உண்மை!!! ஏர் இந்தியா எக்ஸ்பிரஸில் தமிழையும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்!!!!!!

இந்த முறை ஊருக்குச் சென்றபோதும், திரும்பியபோதும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸில் பயணித்தேன்... முதலில் எல்லாம் சரியாகத்தான் இருந்தது.. வழக்கம்போல ஆங்கிலம் மற்றும் இந்தியில் பாதுகாப்பு வழிமுறைகள் எல்லாம்...

ஒரு அரை மணி நேரம் கழித்து திடீரென்று மேலிருந்து ஒரு டீவி முளைத்தது.. அங்கு தான் தமிழ்.... ஆமாங்க தமிழ்ப்படம் போட்டாங்க... அதிரடி நாயகன் சுந்தர்சி யின் வீராப்பூ படம் போட்டாங்க... முதல் 5 நிமிடம் சத்தத்துடன் படம் ஓடியது... திடீருன்னு சத்தம் நின்று போனது... அப்புறம் பாத்தா அந்தப்பக்கத்துல இருந்து விமாணப் பணிப்பெண் அத்தை (ஏர் இந்தியா இப்பல்லாம் மாறிடுச்சி... பணிப்பெண்கள் 50 வயது பாட்டிகள் இல்லை... அதுக்கு பதில் 40 வயது அத்தைகள்... :) ) headphone எடுத்துட்டு வந்தாங்க ஒரு தட்டில்....


ஒரு headphone 2 சிங்கப்பூர் வெள்ளி அல்லது ஒரு அமெரிக்க வெள்ளி அல்லது 50 ரூபாயாம்.... ஹிஹிஹி..... அந்த மட்டமான headphone விக்கிறதுக்குத்தான் தமிழ்ப்படம் போட்டாங்க போல...

ஆனாலும் அவங்க யாருக்குமே தெரியலை வீராப்பூ, வேல்(திரும்ப வந்தப்ப போட்டாங்க) மாதிரி மட்டமான படங்களுக்காக எல்லாம் நம்மாளுங்க யாரும் 50 ரூபாய் தந்து headphone வாங்கமாட்டாங்கன்னு..... :)) ஒரு 2 அல்லது 3 பேர் தவிர வேற யாருமே வாங்கலை.....


சென்னையில் இருந்து மதுரை சென்ற பாரமவுண்ட் விமானத்தில் அப்படியே தலைகீழாக இருந்தது.... தமிழிலும் அறிவிப்புகள்.. கனிவுடனும், சிரிப்புடனும் பணிப்பெண்கள்.. 1/2 மணிநேரப் பயனம் என்றாலும் இனிய அனுபவம்.. நல்ல உணவுடன்.

நான் சென்ற அதே விமானத்தில் முதல்வர் கலைஞரும் வந்திருக்கிறார், விமானநிலைய விரிவாக்கப் பணிகளுக்கு அடிக்கல் நட்டும் விழாவிற்காக.. ஆனால் இதனால் மற்ற பயணிகளுக்கு சிறிதும் இடைஞ்சல் இல்லாமல் பார்த்துக் கொண்டார்கள்.. விமானம் நின்ற பின் ஒரு 5 நிமிடம் தாமதமாக விமானத்தில் இருந்து வெளியெறுமாறு கேட்டுக் கொண்டார்கள். இதைத் தவிர ஒரு சிறு சிரமம் கூட மற்ற பயணிகளுக்கு ஏற்படவில்லை.. நல்ல சேவை..

அரசு விமான நிறுவனங்களின் சேவை எப்போது இதுபோல் மாறுமோ தெரியவில்லை.... :(

18 comments:

said...

ஆகாயத்தில் பறக்க வேண்டுமென்றால் ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டாமோ!?

ஆங்கிலமும் தெரியாமல், 'இந்தி' தேசியத்தின் இந்தி புரியாமல் உம்மையெல்லாம் யாரய்யா விமானம் ஏறச்சொன்னது.

இருந்தாலும் உமக்கு எகத்தாளம் அதிகமாகிவிட்டது... 'தமிழில் அறிவித்தார்கள்...' என்று கனவு வேறு காண்கிறாய்... :))

said...

//மதுரை சென்ற பாரமவுண்ட் விமானத்தில் அப்படியே தலைகீழாக இருந்தது.... தமிழிலும் அறிவிப்புகள்..//

கலைஞருக்காக கண்துடைப்பாக இருக்கும்.

நான் சென்ற சிங்கை - சென்னை விமானத்தில் 'ஐசி பாஞ்ச் பாஞ்ச் பாஞ்ச்' என்று இந்தியில் விளித்தார்கள்.

அதுமட்டுமல்ல உள்நாட்டு விமானத்தைத்தான் சிங்கை - சென்னைக்கு ஓட்டுகிறார்கள், இருபக்கமும் மூன்று மூன்று இருக்கைகள் உடைய மொத்தம் 150 இருக்கைகள் வரை கொண்ட விமானம். இடையிடையே சில இருக்கைகளில் ஆள் இல்லை. அருகில் சென்று பார்த்த போது அந்த சீட்டுகள் பழுதுபட்டு இருப்பதால் யாருக்கும் ஒதுக்கப்படவில்லை என்று தெரிந்தது.

பணிப்பெண்கள் பாட்டிகளாக இருந்தாலும் ஆகாயத்தில் பீர் கேனை அவர்கள் திறந்து கொடுக்கும் போது பயணிகள் பலருக்கு கிக்காகத் தான் இருக்கு.
:)

said...

//
கலைஞருக்காக கண்துடைப்பாக இருக்கும்.
//
இல்லை... திரும்ப வரும்போதும் இருந்தது தமிழ் அறிவிப்புகள் பாரமவுண்ட்டில்...

//
பணிப்பெண்கள் பாட்டிகளாக இருந்தாலும் ஆகாயத்தில் பீர் கேனை அவர்கள் திறந்து கொடுக்கும் போது பயணிகள் பலருக்கு கிக்காகத் தான் இருக்கு.
:)
//
நான் பீர் குடிப்பதில்லையே.. அப்படியே இருந்தாலும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸில் அதெல்லாம் கிடையாது...வெறும் புளி சாதம் மட்டும் தான்... :)
Bar சர்விஸ் இருக்கிறதாம்.. ஆனால் துட்டு கொடுத்து வாங்கவேண்டும்.. அதுவும் ஒரு பெக் தான் தராங்க.. பக்கத்தில் இருந்தவர் அடுத்து ஒரு பெக் கேட்டதற்கு.. sorry.. Bar is closed ன்னு அத்தை சொல்லீட்டாங்க...
அவரு கடுப்பாகி கொண்டுவந்திருந்த டியூட்டி ப்ரீ பாட்டிலை உடைத்துக் குடிக்க ஆரம்பித்து விட்டார்...

said...

//
பாரி.அரசு said...

ஆகாயத்தில் பறக்க வேண்டுமென்றால் ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டாமோ!?

ஆங்கிலமும் தெரியாமல், 'இந்தி' தேசியத்தின் இந்தி புரியாமல் உம்மையெல்லாம் யாரய்யா விமானம் ஏறச்சொன்னது.
//

உண்மை தானுங்க... அடுத்த தடவை போறதுக்கு முன்னாடி இந்தி கத்துக்கிறேன்.... :P

//
இருந்தாலும் உமக்கு எகத்தாளம் அதிகமாகிவிட்டது... 'தமிழில் அறிவித்தார்கள்...' என்று கனவு வேறு காண்கிறாய்... :)
//
அண்ணே... பாரமவுண்ட் ஏர்வேஸில் உண்மையிலேயே தமிழ் அறிவிப்புகள் இருந்தது..
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸில் தமிழ்ப் படமும் போட்டார்கள்...
:))

said...

//ஒரு அரை மணி நேரம் கழித்து திடீரென்று மேலிருந்து ஒரு டீவி முளைத்தது//

ஹீ ஹீ ஹி

//ஏர் இந்தியா இப்பல்லாம் மாறிடுச்சி... பணிப்பெண்கள் 50 வயது பாட்டிகள் இல்லை... அதுக்கு பதில் 40 வயது அத்தைகள்... :) //

:-)))))))))))

//ஹிஹிஹி..... அந்த மட்டமான headphone விக்கிறதுக்குத்தான் தமிழ்ப்படம் போட்டாங்க போல...//

எப்படி எல்லாம் யோசிக்கறாங்கப்பா?

//ஒரு 2 அல்லது 3 பேர் தவிர வேற யாருமே வாங்கலை.....//

ரொம்ப நொந்து போனவங்க போல இருக்கு... இல்லைனாலும் பணம்னா நாம்தான் வாங்க மாட்டோம்ல ..இலவசம்னா வாங்கப்பூ

//சென்னையில் இருந்து மதுரை சென்ற பாரமவுண்ட் விமானத்தில் அப்படியே தலைகீழாக இருந்தது.... தமிழிலும் அறிவிப்புகள்.. கனிவுடனும், சிரிப்புடனும் பணிப்பெண்கள்.. 1/2 மணிநேரப் பயனம் என்றாலும் இனிய அனுபவம்.. நல்ல உணவுடன்//

உள்ளே என்ன நடந்தது? உண்மைய சொல்லுங்க ;-)

//நான் சென்ற அதே விமானத்தில் முதல்வர் கலைஞரும் வந்திருக்கிறார், விமானநிலைய விரிவாக்கப் பணிகளுக்கு அடிக்கல் நட்டும் விழாவிற்காக.. ஆனால் இதனால் மற்ற பயணிகளுக்கு சிறிதும் இடைஞ்சல் இல்லாமல் பார்த்துக் கொண்டார்கள்.. விமானம் நின்ற பின் ஒரு 5 நிமிடம் தாமதமாக விமானத்தில் இருந்து வெளியெறுமாறு கேட்டுக் கொண்டார்கள். இதைத் தவிர ஒரு சிறு சிரமம் கூட மற்ற பயணிகளுக்கு ஏற்படவில்லை.. //

ஒரு வேளை கலைஞர் வந்ததால இருக்குமோ? எதுக்கும் அடுத்த முறை போகும் போது கவனித்து பாருங்க :-)))

//அரசு விமான நிறுவனங்களின் சேவை எப்போது இதுபோல் மாறுமோ தெரியவில்லை.... :(//

ஹீ ஹீ இன்னுமா நம்பிட்டு இருக்கீங்க..ஜெகதீசன் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவரு போல இருக்கே :-)

கோவி.கண்ணன் said...
பணிப்பெண்கள் பாட்டிகளாக இருந்தாலும் ஆகாயத்தில் பீர் கேனை அவர்கள் திறந்து கொடுக்கும் போது பயணிகள் பலருக்கு கிக்காகத் தான் இருக்கு.
:)//

இப்படி சொல்றத பார்த்தா எனக்கு கோவி கண்ணன் மேல சந்தேகம் வருது :-)))))))))))))))))))))

said...

//பக்கத்தில் இருந்தவர் அடுத்து ஒரு பெக் கேட்டதற்கு.. sorry.. Bar is closed ன்னு அத்தை சொல்லீட்டாங்க...
அவரு கடுப்பாகி கொண்டுவந்திருந்த டியூட்டி ப்ரீ பாட்டிலை உடைத்துக் குடிக்க ஆரம்பித்து விட்டார்...//

ஹா ஹா ஹா

said...

வாங்க கிரி...
////
//நான் சென்ற அதே விமானத்தில் முதல்வர் கலைஞரும் வந்திருக்கிறார், விமானநிலைய விரிவாக்கப் பணிகளுக்கு அடிக்கல் நட்டும் விழாவிற்காக.. ஆனால் இதனால் மற்ற பயணிகளுக்கு சிறிதும் இடைஞ்சல் இல்லாமல் பார்த்துக் கொண்டார்கள்.. விமானம் நின்ற பின் ஒரு 5 நிமிடம் தாமதமாக விமானத்தில் இருந்து வெளியெறுமாறு கேட்டுக் கொண்டார்கள். இதைத் தவிர ஒரு சிறு சிரமம் கூட மற்ற பயணிகளுக்கு ஏற்படவில்லை.. //

ஒரு வேளை கலைஞர் வந்ததால இருக்குமோ? எதுக்கும் அடுத்த முறை போகும் போது கவனித்து பாருங்க :-)))
////
இல்லை கிரி..நான் மதுரையில் இருந்து சென்னை திரும்பியபோதும் அதே அளவு சிறந்த சேவை இருந்தது...

5 நிமிடம் தாமதமாக வெளியேறச் சொன்னது மட்டுமே கலைஞருக்காக..
மற்றபடி எந்தத் தொந்தரவும் மற்ற பயனிகளுக்கு இல்லை..

said...

//இப்படி சொல்றத பார்த்தா எனக்கு கோவி கண்ணன் மேல சந்தேகம் வருது :-)))))))))))))))))))))//


கிரி நம்புங்க...புலிப்பால் கேனை அவர்கள் நுறைபொங்க உடைத்துத் தரும் போது பயணிகளுக்கு ஏற்படும் கிக்கைப் பார்க்கனுமே. என் அருகில் இருந்தவர் 2 கேன் வாங்கினார். நீங்க ஏன் வாங்கவில்லை என்று என்னிடம் கேட்டார், நான் குடிப்பதில்லை என்றேன். பரவாயில்லை வாங்குங்க, நாங்கெல்லாம் எதுக்கு இருக்கோம், என்று அவர் சொன்னபிறகு வாங்கிக் கொடுக்காமல் இருக்க முடியவில்லை.
:)

said...

இந்த சேவையை அறிமுகப்படுத்திய போது தமிழில் படம் போட்டார்கள். எனக்கு உற்சாகம் கரை புரண்டோடியது. நானும் ஒரு தலைக்கட்டி ஒலிப்பானை (Head phone -க்கு சரியா வருமா) வாங்கினேன். 'தமிழ்படம் போடுறாங்க'னு சத்தம் போட்டு கத்தணும் போல இருந்தது.

பின்னர் இந்த வானூர்திகளில் பயணம் செய்யவில்லை. சென்றவர்களும், இப்போது படம் போடுவதில்லை என்று சொன்னார்கள். மீண்டும் தமிழில் படம் காட்டப்படுவது மகிழ்ச்சியே.

மலேசியாவில் இருந்து கிளம்பும் ஏர் ஏசியா விமானங்களில் தமிழ் அறிவிப்பு உண்டு. சிங்கப்பூர் ஏர்லைன்சு விமானங்களில் தமிழ் மற்றும் இந்தியில் 20 பாடல்கள் ஒலிவங்கியில் இருக்கும். கேட்டுக்கொள்ளலாம். சில விமானங்களில் தமிழ்ப் படங்களும் உண்டு.

said...

//
கிரி நம்புங்க...புலிப்பால் கேனை அவர்கள் நுறைபொங்க உடைத்துத் தரும் போது பயணிகளுக்கு ஏற்படும் கிக்கைப் பார்க்கனுமே. என் அருகில் இருந்தவர் 2 கேன் வாங்கினார். நீங்க ஏன் வாங்கவில்லை என்று என்னிடம் கேட்டார், நான் குடிப்பதில்லை என்றேன். பரவாயில்லை வாங்குங்க, நாங்கெல்லாம் எதுக்கு இருக்கோம், என்று அவர் சொன்னபிறகு வாங்கிக் கொடுக்காமல் இருக்க முடியவில்லை.
:)
//
நீங்க வாங்கி பக்கத்துல் இருந்தவர் கிட்ட கொடுத்துட்டீங்க.. இந்தை நாங்க நம்பனும்?? :P

said...

//
கிரி said...

//பக்கத்தில் இருந்தவர் அடுத்து ஒரு பெக் கேட்டதற்கு.. sorry.. Bar is closed ன்னு அத்தை சொல்லீட்டாங்க...
அவரு கடுப்பாகி கொண்டுவந்திருந்த டியூட்டி ப்ரீ பாட்டிலை உடைத்துக் குடிக்க ஆரம்பித்து விட்டார்...//

ஹா ஹா ஹா

//

நீங்க சிரிக்கிறீங்க்... ஆனா அதுக்கு அடுத்து போதைல அவர் உளறினதையும், பணிப்பெண்ணுக்குத் தந்த அர்ச்சனைகளையும் பக்கத்தில் இருந்து கேட்டுட்டு இருந்தது நானில்ல..... :((

said...

//கிரி நம்புங்க...புலிப்பால் கேனை அவர்கள் நுறைபொங்க உடைத்துத் தரும் போது பயணிகளுக்கு ஏற்படும் கிக்கைப் பார்க்கனுமே//

ஹா ஹா ஹா கோவி கண்ணன் நான் அதை சொல்லலை, பாட்டியை பார்த்து கிக் வந்ததுன்னு சொன்னது உங்களுக்கா இல்ல மத்தவங்களுக்கான்னு .. ஹீ ஹி சும்மா டமாசு கோவிச்சுக்காதீங்க.

//நாங்கெல்லாம் எதுக்கு இருக்கோம், என்று அவர் சொன்னபிறகு வாங்கிக் கொடுக்காமல் இருக்க முடியவில்லை.//

எங்க போனாலும் இந்த பக்கத்துல உட்கார்ந்து இருப்பவங்க இம்சை தாங்கமுடியலைப்பா...கொசு மருந்து அடித்து தொரத்துங்கப்பா :-))))

said...

//நீங்க வாங்கி பக்கத்துல் இருந்தவர் கிட்ட கொடுத்துட்டீங்க.. இந்தை நாங்க நம்பனும்?? :P//

ஹீ ஹீ ஹீ எனக்கு தெரியாதுப்பா இதை பற்றி..ஜெகதீசன் என்கிட்டே என்ன விசயம்னு தனியா சொல்லுங்க.. என்ன???? :-)))

//நீங்க சிரிக்கிறீங்க்... ஆனா அதுக்கு அடுத்து போதைல அவர் உளறினதையும், பணிப்பெண்ணுக்குத் தந்த அர்ச்சனைகளையும் பக்கத்தில் இருந்து கேட்டுட்டு இருந்தது நானில்ல..... :((//

என்னங்க பண்ணுறது ..இந்த கொடுமையை எல்லாம் அனுபவித்து தான் தீரவேண்டி உள்ளது. நம்ம பகுதியில் உள்ள பணிப்பெண்கள் ரொம்ப பாவம்.

said...

பின்னூட்ட ஏர் இந்தியாத்தனம்!
:)

நான் பதிவு போடுறப்ப மட்டும் எல்லாரும் போடுறாங்க... ஒரு மணி நேரத்துக்குள்ள தமிழ்மண் முகப்புல இருந்து வெளியேறிடுது... :(

said...

தமிழ் நகரங்களை இணைக்கும் விமானங்களில் தமிழ் கையாளப்பட வேண்டும் என்ற பதிவின் கருப்பொருளோட உடன்படறேன்.

ஆனா, விமானப் பணிப்பெண் பாட்டியாவோ அத்தையாவோ இருக்கக் கூடாதுன்னு உணர்த்தும் தொனியை வன்மையாகக் கண்டிக்கறேன். உடல்நல ரீதியாக அவர்களால் சாத்தியப்படும் வரை, எந்தப் பணியையும் எவருக்கும் செய்யும் உரிமை உண்டு. வனப்போடும் இளமையோடும் (ஜொள்ளத்தகுந்தவர்களாக) உள்ளவர்கள்தான் விமானப் பணிப்பெண்களா இருக்கணும்ங்கிறது இந்திய வலதுசாரி ஊடகங்கள் பரப்பும் நச்சுக் கருத்து. பெண்ணை போகப்பொருளாகக் கருதும் மனநிலையிலிருந்து எழுந்த இந்தக் கருத்தை நீங்களும் (மேலும் பலரும்) எதிரொலிப்பது வருத்தமான செய்தி.

British Airwaysஇல் வயதான பணிப்பெண்களைப் பார்த்திருக்கிறேன். அவங்களை யாரும் எள்ளலுடன் பார்க்கவில்லை, மற்றும் அவர்கள் மீது மதிப்பும் மரியாதையும் ஏற்படும் சூழல்தான் அங்கு நிலவியது. அதே போன்று நம் சூழலிலும் வயதான விமானப் பணிப்பெண்களை மதிப்போடு குறிப்பிடலாம் (குறிப்பிட வேண்டும்).

said...

Voice on Wings, பதிவின் மையக் கருத்துடன் உடன்படுவதற்கு நன்றி!
பணிப் பெண்கள் குறித்த உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.. நன்றி

said...

//நான் பதிவு போடுறப்ப மட்டும் எல்லாரும் போடுறாங்க... ஒரு மணி நேரத்துக்குள்ள தமிழ்மண் முகப்புல இருந்து வெளியேறிடுது... :(
//

அதுனால என்னங்க சூடான இடுகையில் வந்துடுச்சுல்ல :-))) கலக்குங்க

said...

//
அதுனால என்னங்க சூடான இடுகையில் வந்துடுச்சுல்ல :-))) கலக்குங்க
//
:))))))