Wednesday, June 4, 2008

அக்கரைக்கு இக்கரை பச்சை..

அக்கரைக்கு இக்கரை பச்சை..
இக்கரை பச்சை என்பதால் இங்கு வா என நான் அக்கரையில்
இருந்த போது என் மீது அக்கறை உள்ள சிலர் அழைக்க
அதை ஏற்று அக்கரையில் இருந்து இக்கரைக்கு வந்தபின் சில காலம்
இக்கரை பச்சையாகவே தெரிந்தாலும் இப்போது என்னதான் இருந்தாலும் அக்கரை சொந்தக்கரை என்பதால் இக்கரையை விட
அக்கரையே பச்சையாய்த் தெரிகிறதென்றாலும்
அக்கரை திரும்பி அங்கிருந்து பார்க்கும் போது மீண்டும்
இக்கரை பச்சையாகத் தோன்றி அவசரப்பட்டு இக்கரையை விட்டு வெளியேறிவிட்டோமே என்று வருத்தப் படவேண்டியிருக்குமோ
என நினைத்து அக்கரைக்குத் திரும்புவது பற்றி முடிவெடுக்கமுடியாமல் அக்கரையை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டே
இக்கரையில் இருக்கிறேன்....
:(

குறிப்பு:

இக்கரை - சிங்கை
அக்கரை- சென்னை

(சென்னையில் இருந்தபோதும் இப்படித் தோன்றியிருக்கிறது.....
அப்போது
இக்கரை - சென்னை
அக்கரை - ஆமத்தூர்..
காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு அதனால் எங்க ஊர் எப்பவுமே எனக்கு பச்சையாகத் தான் தெரிகிறது.... :)
)

16 comments:

said...

கவிஜையா ?

முயற்சிக்கு வாழ்த்துகள் !

said...

கோவியாரே!!!!!!!!....
இது கவிஜை இல்லை....
முடிவெடுக்க முடியாமல் தினறும் என் புலம்பல் இது... அவ்வளவு தான்

பதிவு ரெம்பவே சிறியதாக இருந்ததால்
வரிகளை மடக்கி கொஞ்சம் பெரிய பதிவாக ஆக்கியிருக்கிறேன்... அவ்வளவுதான்...

said...

//காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு அதனால் எங்க ஊர் எப்பவுமே எனக்கு பச்சையாகத் தான் தெரிகிறது.... :)//


ஆபாசம் இந்த பதிவில் தலைவிரித்து ஆடுகிறது!!!

said...

ஜெகதீசன் said...
பதிவு ரெம்பவே சிறியதாக இருந்ததால்
வரிகளை மடக்கி கொஞ்சம் பெரிய பதிவாக ஆக்கியிருக்கிறேன்... அவ்வளவுதான்...//

நீங்க இன்னும் முயற்சி செய்தால் பெரும் கவிதைகளையே படைக்க முடியும்!!!

said...

//
நீங்க இன்னும் முயற்சி செய்தால் பெரும் கவிதைகளையே படைக்க முடியும்!!!
//
என்ன கோவம் என் மேல??

said...

நியாயமான பயம் தான் - நீங்க பி.ஆர். வாங்கிட்டீங்களா?

said...

//குசும்பன் said...



ஆபாசம் இந்த பதிவில் தலைவிரித்து ஆடுகிறது!!!
//

ரிப்பீட்டேய்

நானும் படித்தேன்....எல்லாம் 'பச்சையாகவே' எழுதி இருக்கிறார்.

'காக்கைக்கும் தன் குஞ்சு... காக்கை மட்டும் இழிச்சவாய் பறவையா ? புளுக்ராசில் முறையிடனும்.

said...

//
nagoreismail said...

நியாயமான பயம் தான் - நீங்க பி.ஆர். வாங்கிட்டீங்களா?

//
வருகைக்கு நன்றி இஸ்மாயில்...
இன்னும் பி.ஆர் வாங்கவில்லை...

said...

அட என்ன மாதிரியே நினைக்குறீங்களே!!!

said...

///குசும்பன் said...
//காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு அதனால் எங்க ஊர் எப்பவுமே எனக்கு பச்சையாகத் தான் தெரிகிறது.... :)//


ஆபாசம் இந்த பதிவில் தலைவிரித்து ஆடுகிறது!!!////


ரிப்பீட்டேய்....

said...

///ஜெகதீசன் said...
பதிவு ரெம்பவே சிறியதாக இருந்ததால்
வரிகளை மடக்கி கொஞ்சம் பெரிய பதிவாக ஆக்கியிருக்கிறேன்... அவ்வளவுதான்...///




அட எதுக்கு மடக்கி எழுதிகிட்டு எல்லோரும் இப்ப ஒரு வரிகூட இல்லாம பதிவு போடுறாங்க. கேட்டா ஏதோ அறிக்கைன்னு வேற சொல்லுறாங்க

said...

///குசும்பன் said...
ஜெகதீசன் said...
பதிவு ரெம்பவே சிறியதாக இருந்ததால்
வரிகளை மடக்கி கொஞ்சம் பெரிய பதிவாக ஆக்கியிருக்கிறேன்... அவ்வளவுதான்...//

நீங்க இன்னும் முயற்சி செய்தால் பெரும் கவிதைகளையே படைக்க முடியும்!!!///


நல்ல உசுப்பேத்தி விடுங்க. அப்புறம் அவரு கவிதை எழுதிட்டு வந்து ஏங்க படைக்கனும்னு கேட்டா நீங்க என்ன பண்ணுவீங்க?

said...

//
நிஜமா நல்லவன் said...

அட என்ன மாதிரியே நினைக்குறீங்களே!!!

//
வருகைக்கு நன்றி நி.ந....
நீங்களும் என்னை மாதிரியே தானா. :)

said...

//இக்கரை பச்சை என்பதால் இங்கு வா என நான் அக்கரையில்
இருந்த போது என் மீது அக்கறை உள்ள சிலர் அழைக்க
அதை ஏற்று அக்கரையில் இருந்து இக்கரைக்கு ...............//

எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம் :-)

said...

\\நீங்க பி.ஆர். வாங்கிட்டீங்களா?\\
புரியலையே

said...

"\\நீங்க பி.ஆர். வாங்கிட்டீங்களா?\\
புரியலையே"

பி.ஆர். என்றால் permanent resident அதாவது PRஆக இருந்தால் சிங்கப்பூரில் வீடு வாங்கலாம், நிரந்தரமாக தங்கலாம், அதனால் தான்
சிங்கப்பூரில் நிரந்தரவாசியாகி விட்டீர்களா? என்று கேட்டேன். நண்பர் இல்லை என்றார்.

.