Monday, October 22, 2007

லக்கிலுக் VS இலைக்காரன்

VSவலையுலகில் அஇஅதிமுக வின் கொள்கை பரப்புச் செயலாலராகவும், 80 கோடி இந்துக்களின் குரலை ஒலிப்பவராகவும் திகழ்பவர், ஸ்ரீராம பக்தரான ஸ்ரீமான். இலைக்காரன் என்பவர். இவர் அம்மாவின் புகழைப் பரப்ப நடத்தும் வலைப்பூ "அம்மான்னா சும்மாவா"

திமுகவின் கொ.ப.செ யாகத் திகழ்பவர் திரு.லக்கிலுக் அவர்கள். இவர் நடத்தும் வலைப்பூ "சும்மா டைம்பாஸ் மச்சி". மேலும் டாக்டர் கலைஞர் உட்பட பல வலைப்பூக்களில் உறுப்பினராகவும் உள்ளார்.

பதிவுலகில் நீண்ட நாட்களாக நடந்து கொண்டிருக்கும் விவாதம் லக்கிலுக்கும் இலைக்காரரும் ஒரே பதிவரா இல்லையா என்பது தான்.
இது குறித்து பல புகார்கள் வந்ததை அடுத்து வலையுலக புலனாய்வு அமைப்பான BBI(Bureau of Blogging Invistigation) தனது புலனாய்வைத் தொடங்கியது.

புலனாய்வின் முடிவில் இருவரும் வெவ்வேறு பதிவர்கள் என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் BBIக்குக் கிடைத்துள்ளன. பதிவர்களைப் பற்றிய விவரங்களைப் பாதுகாப்பது BBI யின் கடமை என்பதால் இது குறித்த ஆதாரங்களை வெளியிட முடியாது.

இந்தப் புலனாய்வின் போது அதிர்ச்சிகரமான பல உண்மைகளை BBI கண்டுபிடித்துள்ளது. அது குறித்த BBI யின் அறிக்கை கீழே.

*****************************************


இலைக்காரரின் பதிவு அதிமுக மற்றும் பல இந்து அமைப்புகளைக் கிண்டல் செய்வதற்காக நடத்தப்படும் வலைப்பூ என்பது பல பதிவர்களின் கருத்து. இந்த விசாரனையின் போது அது உண்மையல்ல என்று தெரியவந்துள்ளது.

அதிமுக, இந்து அமைப்புகள் மற்றும் ஸ்ரீராமர் ஆகியோரைக் கிண்டல் செய்யும் படியாக சில பதிவுகளை எழுதி அதன் மூலம் திராவிடப் பதிவர்களைத் தன் பதிவை வாசிக்க வைக்கிறார். பின் திம்மிகள் என்று இவர் அன்புடன் அழைக்கும் திராவிடப் பதிவர்களைத் தன் வலையில் விழ வைத்து தன் கட்சியில் சேர்த்து விடுகிறார்.

இதற்கு நல்ல உதாரணம் திராவிடப் பதிவர் என்று அறியப்பட்ட லக்கிலுக் அவர்களின் சமீபத்திய மாற்றங்கள். அவரது கடைசிப் பதிவில் கூட இதைப் பார்க்கலாம்.
அடுத்த உதாரணம் பகுத்தறிவுப் பதிவர் கோவி.கண்ணன் அவர்கள். புரட்ச்சிதலைவி பற்றிய இவரது கடைசி சில பதிவுகளைப் பார்ப்பவர்களுக்குப் புரியும். இவர்கள் இருவரும் இலைக்காரன் பதிவில் அடிக்கடி பின்னூட்டம் இடுபவர்கள் அனைவரும் அறிந்தது தான்.

சமீபத்தில் இலைக்காரனுக்கு உதவியாக ஒரு "சாணக்கியன்" என்னும் புதிய பதிவர் ஒருவரும் வந்துள்ளார். இவரும் இலையாரின் வழியில் இந்து அமைப்புகளைக் கிண்டல் செய்து சில பதிவுகளை வெளியிட்டு, ஒரு திராவிடப் பதிவர் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். ஆனால் உண்மையில் இவரும் இலைக்காரனுடன் இணைந்து 80 கோடி இந்துக்களுக்காகக் குரல் கொடுக்க வந்துள்ள ஒரு பதிவரே ஆவார்.(கோவியார் கூட சமீபத்தில் இலைக்காரரின் வழிகாட்டுதலின் படி, இந்தப் பதிவில் பின்னூட்டியிருக்கிறார்.)

இவர்களின் வலையில் விழாமல் ஜாக்கிரதையாக இருக்கும்படி அனைத்துப் பதிவர்களையும் BBI கேட்டுக்கொள்கிறது.


*****************************************

டிஸ்கி1: சிறிது நாட்களாக "நீங்கள் தான் இலைக்காரனா?" என்று லக்கிலுக்கைக் கேட்பவர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டதாம். அதனால் இது போன்ற ஒரு பதிவு இட்டால், இனிமேல் என் ஒவ்வொரு பதிவிலும் 10 பின்னூட்டங்கள் இடுவதாக லக்கி வாக்களித்துள்ளார். அதனால் தான் நான் இந்தப் பதிவை இட்டுள்ளேன். அதை அவர் செயல்படுத்துவார் என நம்புகிறேன்.
(இலைக்காரன் எழுதுவது போன்று ஒரு பதிவு எழுதினால், அங்கு கூட யாரும் வந்து "நீங்கள் தான் இலைக்காரனா" என்று நேரடியாக லக்கியை கேட்கவில்லையாம்...)

டிஸ்கி2: இது சீரியஸ் பதிவு என்பதால் கோவி.கண்ணன், லக்கிலுக் மற்றும்/அல்லது இலைக்காரன் ஆகியோர் தங்களைக் கலாய்ப்பதாகத் தப்பாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள் என நம்புகிறேன்.

டிஸ்கி3: இது லக்கிலுக் அவர்களின் சீரியஸ் பதிவைப் போல மிகவும் நீளமான பதிவாகிவிட்டதால், இன்னும் இருக்கும் பல டிஸ்கிகளைத் தனிப் பதிவாகத் தருகிறேன்.

23 comments:

said...

//லக்கிலுக் மற்றும்/அல்லது இலைக்காரன் //

அல்லது மற்றும் என்றால் என்ன எனக்கு தமிழ் புரியல...
:))

said...

லக்கி இலைக்காரனாக இருக்க சான்சே இல்லை. இலைக்காரன் வலைப்புவில் இரண்டு சொற்கள் இருக்கின்றன.

"அம்மான்னா சும்மாவா" இரட்டை இலைபோல் இரண்டே சொற்களில் வைத்திருக்கிறார்

லக்கியின் வலைப்பூவில் மூன்று சொற்கள் இருக்கின்றன. தி மு க என்பது போம் சும்மை டைம்பாஸ் மச்சி - என்று வைத்திருக்கிறார்

இதிலிருந்தே தெரியவில்லையா ? இருவரும் வேறு வேறு !

said...

//அல்லது மற்றும் என்றால் என்ன எனக்கு தமிழ் புரியல...
:))
//
கோவி.கண்ணன் அவர்களே,
நீங்கதான அந்த டிஸ்கி யப் போடச் சொன்னீங்க....
அதுக்கு நீங்க சொன்ன அர்த்தத்தையும் கீழ போட்டுவிடுகிறேன்.

1கோவி.கண்ணன், லக்கிலுக் மற்றும் இலைக்காரன்

2கோவி.கண்ணன், லக்கிலுக் அல்லது இலைக்காரன்(அதாவது லக்கிலுக்காகிய இலைக்காரன்)

இது இரண்டில் எது பிடித்தாலும் அதை எடுத்துக்கொள்ளவும்.

said...

//சமீபத்தில் இலைக்காரனுக்கு உதவியாக ஒரு "சாணக்கியன்" என்னும் புதிய பதிவர் ஒருவரும் வந்துள்ளார். இவரும் இலையாரின் வழியில் இந்து அமைப்புகளைக் கிண்டல் செய்து சில பதிவுகளை வெளியிட்டு, ஒரு திராவிடப் பதிவர் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். //

என்னை போய் "திராவிட பதிவர் போன்று" எனகை கூறி மனதை புண் படுதிவிட்டீர்களே. என் பதிவின் நோக்கத்கை நான் எனது இரண்டாவது பதிவில் தெளிவாக கூறி விட்டேன்.

http://newaryan.blogspot.com/2007/10/blog-post_13.html

80 கோடி இந்துக்களுக்கு பனிவிடை புரியும் அடியவர்க்கு அடியேன் நான்.

said...

//
லக்கி இலைக்காரனாக இருக்க சான்சே இல்லை
//
அதைத்தான் நானும் சொல்லி யிருக்கிறேன்.

said...

//2கோவி.கண்ணன், லக்கிலுக் அல்லது இலைக்காரன்(அதாவது லக்கிலுக்காகிய இலைக்காரன்)//

லக்கிலுக் அல்லது இலைக்காரன் அல்லது சாணக்கியன் என்று கூற மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
ஏனென்றால் இலைக்காரன் ஒரு இலட்சுமனன் என்றால் நான் ஒரு சாதாரன சேவை செய்யும் அனுமன் அல்லது ஜடாயு

said...

//
80 கோடி இந்துக்களுக்கு பனிவிடை புரியும் அடியவர்க்கு அடியேன் நான்.
//
நானும் அதைத்தானே சொல்லியிருக்கிறேன்.. உங்கள் வலையில் திராவிடப் பதிவர்களை விழ வைப்பதற்காகத்தானே நீங்கள் இந்துக்களைக் கேலி செய்வது போல எழுதி வருகிறீர்கள்...

நீங்கள் அனுப்பிய பதிவைப் படித்தேன்.. பின்னூட்டங்களைப் பார்க்க "கேள்வியும் நானே, பதிலும் நானே" போல் தெரிகிறதே?

Anonymous said...

w

said...

//நீங்கள் அனுப்பிய பதிவைப் படித்தேன்.. பின்னூட்டங்களைப் பார்க்க "கேள்வியும் நானே, பதிலும் நானே" போல் தெரிகிறதே?//


அய்யோ கோவி.கண்ணன் சத்தியமாய் நான் இல்லீங்க.

said...

//
அய்யோ கோவி.கண்ணன் சத்தியமாய் நான் இல்லீங்க.
//
நான் நீங்க கோவி.கண்ணன் ன்னு சொல்லவே இல்லையே...

said...

//"கேள்வியும் நானே, பதிலும் நானே" போல் தெரிகிறதே?//

கேள்வி எழுதியது யார் என்று தயவு செய்து மீண்டும் ஒரு முறை பார்க்கவும்

said...

நான் தான் ஒரிஜினல் லக்கிலுக். என் பதிவ இலைக்காரன் கைப்பற்றி விட்டார். அவர் போட்ட பதிவு தான் "விலங்குகளின் மதம் எது?" யாராவது என் பத்வை அவரிடமிருந்து காப்பாத்துங்க...........

said...

சூழ்ச்சிக்கார கயவர்கள் நிறைந்த இந்த தமிழ்மணத்தில், வேலையற்ற இணைய பயணிகள் பைத்தியம் பொறாமை பிடித்து இப்படி உளறிக்கொண்டிருப்பது சகஜம்தான். நம் நல்ல இணைய சமுதாயத்திற்கு பல லக்கிலுக்குகளும், இலைக்காரர்களும் அவசியம் தேவையே.

இவர்கள் இருவர்கள் போராட்டமும் நியாயமான போராட்டமே.

சீரிய புலணாய்வுகள் நடத்தி எங்களை குழப்பத்திலிருந்து காப்பாற்றி பாதுகாப்பான செய்தி கொடுத்த பி.பி.ஐ சேவைகள் எங்களுக்கு தொடர்ந்து தேவை.

இதே போல், ஓசை செல்லாவும் தியாகுவும் ஒன்றா?

வி.சபேசனும் தமிழச்சியும் ஒன்றா?

அசுரனும் செல்வனும் ஒன்றா?

போன்றவர்களை தீர விசாரித்து எங்களது சந்தேகங்களை பி.பி.ஐ தீர்த்து வைக்கும் என நம்புகிறோம்.

நன்றி பி.பி.ஐ பொறுப்பாளர் திரு.ஜெகதீசன் அவர்களே.

said...

//
கேள்வி எழுதியது யார் என்று தயவு செய்து மீண்டும் ஒரு முறை பார்க்கவும்
//
நான் தான் ஏற்கனவே சொன்னேனே.. இலைக்காரன் தான் கோவியாரை உங்கள் பதிவில் இது போலப் பின்னூட்டமிடச் சொன்னார் என்று.(இலைக்காரரும் நீங்களும் நண்பர்கள் தானே??).

said...

மாசிலா அவர்களே,
வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி.
எனக்கும் BBI க்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அவர்களுக்கு சொந்தமாக வலைப்பதிவு இல்லாததால் இந்த செய்தியை இங்கு வெளியிடுமாறு கேட்டுக்கொண்டார்கள்...
எதற்கும் உங்கள் புகாரை contact@BBI.org என்னும் முகவரிக்கு மின் அஞ்சல் செய்யவும்.(குறைந்தது 1000 புகார்கள் வந்தால் தான் அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள்).

said...

//.(இலைக்காரரும் நீங்களும் நண்பர்கள் தானே??).//

அம்மாவின் புகழ் பாடும் யாருக்கும் நான் நண்பன் தான்

said...

சாணக்கியருக்கும், இலைக்காரருக்கும் தார்மீக ஆதரவாக 'பெண்ணென்றும் பாராமல் திம்மிகள் மம்மியை கும்முவதை' தடுக்கவே அவர்களுக்கு பின்னூட்ட கயமை செய்தேன். மற்றபடி இலைக்கரார் / சாணக்கியர் யார் என்பது தெரியாது. இதுபற்றி வெள்ளை அறிக்கை தயாரித்து எனது நிலையை தெளிவு படுத்த உள்ளேன்.

said...

அய்யா எனக்கு ஒரு உன்மை தெரிஞ்சாகனும்...

அந்தப் பதிவு சிங்கை நேரத்திலே ரீலீஸ் ஆகிறதாமே...

அப்ப இலைக்காரன் சிங்கையில் இருக்கும் பதிவரா.

அப்படி சிங்கை பதிவரென்றால்...

கோவியாரா..?

ஜெகதீசனாரா..?

(அப்பாடி ஏதோ என்னால ஆன சமுக சேவை...)

said...

//
சாணக்கியருக்கும், இலைக்காரருக்கும் தார்மீக ஆதரவாக 'பெண்ணென்றும் பாராமல் திம்மிகள் மம்மியை கும்முவதை' தடுக்கவே அவர்களுக்கு பின்னூட்ட கயமை செய்தேன். மற்றபடி இலைக்கரார் / சாணக்கியர் யார் என்பது தெரியாது. இதுபற்றி வெள்ளை அறிக்கை தயாரித்து எனது நிலையை தெளிவு படுத்த உள்ளேன்.
//
நானும் இதற்காகத்தான் பின்னூட்டக் கயமை ஆதரவை அவர்களின் பதிவுகளுக்குத் தந்தேன்..

said...

tbcd அவர்களே,
இலைக்காரன் நான் இல்லை.
கோவியாரா இல்லையா என்பதை அவரது வெள்ளை அறிக்கையைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்...

said...

ஜெகதீசன்!
இதில் எது உள்குத்து :) என்று சொல்லவே இல்லையே:)

said...

//
பாரி.அரசு said...
ஜெகதீசன்!
இதில் எது உள்குத்து :) என்று சொல்லவே இல்லையே:)

//
பாரி.அரசு அவர்களே,
வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி.
(யப்பா சாமி..முதல்ல இலைக்காரன் பதிவுக்குப் போறத நிப்பாட்டனும். யார் comment போட்டாலும் இப்படித்தான் பதில் போடமுடியுது...)

பதிவை எனக்கு அனுப்பி வெளியிடச் சொன்னவர் எது உள்குத்து என்பதை சொல்லவில்லை.. அவரிடம் கேட்டுச் சொல்கிறேன்...

said...

லக்கி ஒகே கொ ப செ கரெக்ட்...

அதென்ன இலைக்காரரு ??? அவரு கொ ப சே வா??

அவரு என்ன அழகா அம்மாவ நக்கல் பன்றாரு.. காமடி பன்னிட்டு இருக்காரு.. அவரை போயி... நீங்க
கொ ப சே ...

இலக்காரர வெச்சு காமெடி கீமடி பன்னலயே????