Sunday, October 7, 2007

சத்ரு சம்ஹார யாகம்.....

உங்கள் எதிரிகளை அழிக்க வேண்டுமா? வாங்க சத்ரு சம்ஹார யாகம் நடத்துவோம்...



""சத்ரு சம்ஹார யாகம்' பலமா நடந்துண்டு இருக் கறது ஓய்... அதனால தான் சென்னைக்கு வர முடியலை...!'' என்று பேச்சை துவக்கினார் குப்பண்ணா.

""அது என்ன சத்ரு சம்சார யாகம்ன்னு சொல்லும் வே...'' என்று கேட்டார் பெரியசாமி அண்ணாச்சி.

""வம்பா போச்சு ஓய்... சத்ரு சம்சார யாகம் இல்லை... "சத்ரு சம்ஹார யாகம்'ன்னு சொன்னேன்... அதாவது எதிரிகளை அழிக்கற யாகம்... நடக்கறது எங்கே தெரியுமோ... ஊட்டி மலையில... இப்ப புரியறதா...'' என்றார் குப்பண்ணா.

""புரியுது... அந்த யாகம் நடத்தினா என்ன நடக்கும் வே...'' என்று கேட்டார் அண்ணாச்சி.

""போன ஜூன் மாசம் யாகம் நடந்தப்ப, அறிவாலயத் தலைவர் குடும்பத்துல பிரச்னை வந்து பெரும் பிளவு ஏற்பட்டது... சில நாளைக்கு முன்னால நடத்திய யாகத்தால சுப்ரீம் கோர்ட்ல கெட்ட பெயர் வந்தது... அதனால, சென்னைக்கு திரும்பறதா இருந்த புரோகிராமை "கேன்சல்' பண்ணிட்டு யாகத்தை திரும்ப "ஸ்டார்ட்' பண்ணச் சொல்லிட்டாங்க... யாகத்தை மேலும் தீவிரப்படுத்தி நடத்திண்டிருக்கா ஓய்...'' என்றார் குப்பண்ணா.

(தினமலர், அக்டோபர்-7-2007)


இதைப் பார்த்து சிரிப்பதா? கோவப்படுவதா? இல்லை இவர்களைப் பார்த்து வருத்தப் படுவதா?

நீங்களும் இங்க போயி படிச்சு சிரிங்க...

8 comments:

Anonymous said...

இதே போல் ஒரு யாகத்தை நடத்தி தேர்தலில் வெற்றி பெற்றிருக்கலாமே??

said...

என்ன கொடுமைங்க இது.... ஒருத்தனை அழிக்கனும்னா அதுக்கு தெய்வம் உதவும்னு நம்பி தெய்வத்தை அவமதிக்கிறதுக்கு இவங்கள என்னதான் செய்றது? என்னவோ போங்க. தான் வாழ யாகம் செஞ்சா அத சரிங்கலான். ஆனா அடுத்தவன் அழியிறதுக்கு யாகமா!!!!!!

said...

வைக்கம் போராட்டத்தின் போது பெரியாரை ஒழித்துக்கட்ட சத்ரு சம்ஹார யாகங்கள் செய்தார்களாம். ஆனால் அது திசைமாறி அரசனை ஆட்கொண்டுவிட்டது. :-). அது போலேதும் ஆகாது இருந்தால் சரித்தான்

said...

G.Ragavan, முத்துகுமரன்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....

said...

யாகத்தை பற்றி தப்பா பேசாதிங்கோ. தெய்வ குத்தம் ஆயிடும்.

said...

//
சாணக்கியன் said...

யாகத்தை பற்றி தப்பா பேசாதிங்கோ. தெய்வ குத்தம் ஆயிடும்.
//

ஏதோ தெரியாமப் பேசிட்டேன்..
பரிகாரம் ஏதாவது இருந்தா சொல்லுங்கோ.. செய்துடுறேன்..

said...

//ஏதோ தெரியாமப் பேசிட்டேன்..
பரிகாரம் ஏதாவது இருந்தா சொல்லுங்கோ.. செய்துடுறேன்..//

அதற்கும் ஒரு யாகம் இல்லாமலா இருக்கும்? அணுக வேண்டியவர்களை அணுகிப் பாருங்கள்.

நல்ல பதிவு. எப்படி என் பார்வைக்குத் தப்பியதென்று தெரியவில்லை.

said...

//
அதற்கும் ஒரு யாகம் இல்லாமலா இருக்கும்? அணுக வேண்டியவர்களை அணுகிப் பாருங்கள்.

நல்ல பதிவு. எப்படி என் பார்வைக்குத் தப்பியதென்று தெரியவில்லை.
//
நன்றி ரத்னேஷ்..
நான் பெரும்பாலும் என் பதிவுகளை ஞாயிற்றுக்கிழமை மாலை வேளைகலில் இடுகிறேன். அவை மறுநாள் காலைக்குள் தமிழ்மணம் "அண்மையில் எழுதப்பட்டவை" பட்டியலில் இருந்து வெளியேறிவிடுகிறது. இதனால் உங்கள் பார்வையில் இருந்து தப்பியிருக்கலாம்..