Tuesday, October 16, 2007

மீன் வேண்டாம். மீன் பிடிக்கக் கற்றுத் தாருங்கள்!

பசி என்று வரும் ஒருவனுக்கு சாப்பிட மீன் தருவதை விட அவருக்கு மீன் பிடிக்கக் கற்றுத் தருவது சிறந்தது.
பசியைப் போக்க மீன் தந்துவிட்டு அடுத்த வேளை சாப்பாட்டுக்கு மீன் பிடிக்கக் கற்றுத் தருவது அதை விட சிறந்தது.


தமிழக அரசின் "இலவசங்கள்" இது போன்ற பசியைப் போக்க மீன் தருவது போலவே ஆகும். ஆனால் மீன் பிடிக்கக் கற்றுத் தரும் திட்டங்கள் மிகக் குறைவாகவே உள்ளன.(சென்ற அரசு மீனும் தரவில்லை, மீன் பிடிக்கக் கற்றும் தரவில்லை என்பது வேறு விசயம்...)

இப்படிப் பட்ட திட்டங்களில் ஒன்று தான் கலைஞர் அவர்களின்
"ஆதி திராவிட மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்கு விமான பணிப் பெண் பயிற்சி" தரும் திட்டம்.

இது குறித்த தட்ஸ்தமிழ் செய்தி இங்கே
இது குறித்து பதிவர் உடன்பிறப்பு அவர்களின் இடுகை இங்கே

தமிழகத்துக்குத் தேவை "இலவசங்கள்" அல்ல. இது போன்ற திட்டங்கள் தான்.

எடுத்துக்காட்டாக,
அனைத்து விவசாயிகளின் கூட்டுறவுக் கடன்களைத் தள்ளுபடி செய்ததில் அரசுக்கு இழப்பு ரூ6866 கோடி. இதில் ஏழை விவசாயிகளின் கடன்களை மட்டும் தள்ளுபடி செய்திருக்கலாம். பணக்கார விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்ததற்குப் பதில் அந்தப் பணத்தில் இனிமேல் விவசாயிகளுக்கு நட்டம் வராமல் தடுக்கும் முறைகளை ஆராய்வதற்குப் பயன்படுத்தியிருக்கலாம்.


வேலையில்லா இளைஞர்களுக்கு மாத உதவித்தொகை வழங்குவதற்குப் பதில் அவர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் சுயதொழில் தொடங்கவும் திட்டங்கள் தீட்டலாம்.(உதவித்தொகை பசிக்கு மீன் தருவது போல் தான். அது மட்டும் போதாது)

"விமான பணிப் பெண் பயிற்சி" திட்டம் போல மீன் பிடிக்கக் கற்றுத்தரும் வகையான திட்டங்கள் பல கலைஞர் அவர்கள் தருவார் என நம்புவோம்.

12 comments:

Anonymous said...

அய்யா,

//பசி என்று வரும் ஒருவனுக்கு சாப்பிட மீன் தருவதை விட அவருக்கு மீன் பிடிக்கக் கற்றுத் தருவது சிறந்தது//

பசின்னு வர்ரவனுக்கு மீனத்தான் குடுக்கனும். ஆனா வேலைன்னு கேட்டு வர்ரவனுக்கும் மத்த எல்லாருக்கும் மீனப்புடிக்க கத்து கொடுக்கனும்.

Anonymous said...

//பசி என்று வரும் ஒருவனுக்கு சாப்பிட மீன் தருவதை விட அவருக்கு மீன் பிடிக்கக் கற்றுத் தருவது சிறந்தது.
பசியைப் போக்க மீன் தந்துவிட்டு அடுத்த வேளை சாப்பாட்டுக்கு மீன் பிடிக்கக் கற்றுத் தருவது அதை விட சிறந்தது.//

சரியாப்பாக்காம பின்னூட்டிட்டேன். ஐயாம் சாரி.

said...

அனானி, உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி.

said...

//மீன் வேண்டாம். மீன் பிடிக்கக் கற்றுத் தாருங்கள்! //

ஜெகதீசன்,

இது விவேகநந்தரின் சொற்றொடர் !

said...

//
ஜெகதீசன்,

இது விவேகநந்தரின் சொற்றொடர் !
//
நன்றி கோவி.கண்ணன் அவர்களே..

said...

//இதில் ஏழை விவசாயிகளின் கடன்களை மட்டும் தள்ளுபடி செய்திருக்கலாம்//

ஏழை திராட்சை விவசாயி அன்னை ஜெயலலிதா அவர்களுக்கு தான் ஏழை விவசாயியின் பிரச்சனை புரியும்.

//சென்ற அரசு மீனும் தரவில்லை, மீன் பிடிக்கக் கற்றும் தரவில்லை என்பது வேறு விசயம்...)//

மலிவு விலையில் மது கொடுப்பதோடு நின்று விடாமல்,இளைஞர்களுக்கு மது கடையில்(TASMAC) வேலை கொடுத்தது யார்?

said...

வாங்க சாணக்கியன்,
வருகைக்கு நன்றி.

Anonymous said...

2007 அக்டோபர் மாத ரீடர்ஸ் டைஜெஸ்ட் இதழில் வந்த ஒரு துணுக்கு :
When Momofuku Ando passed away recently, he left behind one of the great modern inventions: ramen noodles. According to New York Times, he also left us a great motto live by: "Teach a man to fish and you feed him for a lifetime. Give him ramen noodles, and you don't have to teach him anything."
:-)

said...

நன்றி அனானி.....

said...

ஜெகதீசன் சார்,

தாங்கள் சிவப்பு நிறத்தில் குறிப்பிட்டுள்ள எண்ணங்கள் மிகவும் சரியானவையே. ஆனால், அரசின் இலவசத் திட்டங்கள் தவிர்க்க இயலாதவை. இந்தக் கருத்தினை வலியுறுத்தி நான் முன்பு எழுதிய பதிவு ஒன்றினை மீண்டும் வெளியிட்டிருக்கிறேன். எனக்கு லிங்க் ஏற்படுத்தத் தெரியாது என்பதால் தனிப்பதிவாக வெளியிட்டிருக்கிறேன். நேரம் ஒத்துழைத்தால் படித்துப் பாருங்கள்.

நன்றி.

said...

உங்களின் சமூக அக்கறைக்கு எனது வாழ்த்துக்கள்.

முதலில் மீன் பிடிகக்க குளம் வெட்ட வேண்டும். வெட்டிய குளத்தில் மீன் வளர்க்க வேண்டும். இதெல்லாம் செய்ய மக்கள்மீது அக்கறை வேண்டும். எளிமையானவழி.. மக்களுக்கு மயக்க மருந்து கொடுப்பதுதான். தவிரவும், இந்நலத்திட்டங்களை ஊக்கவிப்பது உலக நிதி அமைப்புகள். நீங்கள் குளம் வெட்டினால் அவர்கள் மீனை கொண்டு வந்து போட்டு வளர்த்து அவர்களே எடுத்து போவார்கள்.

டைடல் பார்க்கை பாருங்களேன். சுரா மீன வளர்க்கும் திட்டம் அது..

said...

வருகைக்கு நன்றி ரத்னேஷ்..

நன்றி ஜமாலன்.. முதல் முறையாக வந்திருக்கிறீர்கள்...