Wednesday, July 30, 2008

குசேலன்! - சின்ன ரஜினி "கிரி" அவர்களுக்காக!!

இந்த இடுகை சின்னக்கோடம்பாக்கத்தின் சிங்கம், சின்ன ரஜினி "கிரி" அவர்களுக்காக!!
விரைவில் குசேலன் வெளிவரவுள்ளதால் அனைவரையும் பற்றிக்கொண்டுள்ள குசேலன் பரபரப்பு என்னையும் தொற்றிக்கொண்டுவிட்டதால், குசேலன் ஜோதியில் கலந்துகொள்ள என் முதல் குசேலன் இடுகை!!!!!!
***************************

குசேலனின் இயற்பெயர் சுதாமா. இவர் ஏழ்மையின் காரணமாக எந்நேரமும் கந்தலாடைகளையே அணிந்திருந்ததால் இவருக்குக் குசேலன் என்ற பட்டப் பெயர் வந்தது. அனைவரும் இவரைக் குசேலன் என்றே அழைத்து வந்தனர்.

சாந்தீபனி முனிவரிடம் கண்ணன், குசேலன் இருவரும் கல்வி கற்றனர். அப்போதிருந்து இருவரும் நல்ல நண்பர்கள்.

இவரது மனைவி சுசீலை. இவர்களுக்கு 27 குழந்தைகள். இவரது குடும்பத்தில் வறுமை தாண்டவமாடியது. தினந்தோரும் காட்டிற்குச் சென்று குசேலர் தானியங்கள் சேகரித்து எடுத்து வருவார். அதை வைத்து கஞ்சி சமைத்து குழந்தைகளுக்குத் தருவார். அது அவர்களுக்குக் கால் வயிற்றுக்குக் கூட இருக்காது.

குழந்தைகளின் பசியைப் பொறுக்காத சுசீலை, குசேலரிடம் கண்ணனிடம் சென்று உதவி கேட்குமாறு வேண்டினாள். குசேலரும் வேறு வழியின்றி ஒத்துக்கொண்டார்.

அன்றிலிருந்து அடுத்த சில நாட்கள் குசேலர் காட்டிலிருந்து சேகரித்துவரும் தானியத்தில் தன் பகுதியை அப்படியே சேகரித்து வைத்தாள் சுசீலை. அந்தத் தானியங்கள் கொண்டு கண்ணனுக்குத் தர, அவல் தயார்செய்து குசேலனிடம் தந்து அனுப்பினாள்.

பல மலைகளும் பல கடல்களும் கடந்து துவாரகை சென்றடைந்தார் குசேலர். குசேலர் வந்த செய்தி கேட்டு ஓடோடி வந்து வரவேற்று உபச்சாரம் செய்தார். குசேலன் தான் கொண்டு வந்த அவலை அவருக்குத் தந்தார். ஒரு பிடி அவலை எடுத்து கண்ணன் சுவைத்தார். அந்த ஒரு பிடி அவலுக்கே குசேலனுக்கு உலகம் கொள்ளாத செல்வம் சேர்ந்துவிட்டது.

கண்ணனிடம் உதவி கேக்க மனமின்றி, கண்ண்னிடம் கேட்காமலேயே விடைபெற்றுத் திரும்பினார். அவர் அவரது ஊருக்குத் திரும்பும் வழியில் திடீரென்று அவரது கந்தலாடைகள் விலையுயர்ந்த ஆடையாக மாறியது. உடலெங்கும் நகைகள் பளபளத்தன. கிழிந்த வஸ்திரம் பட்டு வஸ்திரமானது.
அவரது குடிசை இருந்த இடத்தில் மாளிகை இருந்தது. அந்த மாளிகையில் சுசீலை அவரை வரவேற்றார்.

இவ்வளவு செல்வத்தைப் பார்த்து குசேலருக்கு உள்ளுற ஒரு பயம் வந்தது. ஒரு நாள் யாரும் இல்லாத வேளையிலே, ஒர் அறையில் நுழைந்து இறைவனை மனமுருக வேண்டினார்.

திருமால் குசேலரின் முன் காட்சியளித்தார். குசேலன் அவரிடம், "செல்வத்தைக் காட்டி என் சிந்தையை மயக்காதே. செல்வம் எனக்கு வேண்டாம். உன் திருவடியே வேண்டும்" என வேண்டினார்.

இதற்கு திருமால், "குசேலா! செல்வத்தைப் பழிக்காதே. உன்னைப் போன்றோர் எந்த நிலையிலும் என்னை மறக்க மாட்டார்கள். மன்னுலகில் சில் காலம் மகிழ்ச்சியுடன் இருந்துவிட்டு ஒரு நாள் என் திருவடிகளை அடைவாயாக!" என்று வரமளித்து மறைந்தார்.

அவ்வாறே குசேலர் சிலகாலம் செல்வத்தோடும், ஆண்டவனை மறவாச் சிந்தையோடும் வாழ்ந்திருந்து ஒருநாள் இவ்வுலக வாழ்வு நீத்து திருமாலின் திருவடி சேர்ந்தார்.
*****************************************
இதுதான் குசேலனின் கதை!!!!
நன்றி : குசேலர் கதை (ஆசிரியர்: அசுரதாசன்.)
(ஹிஹிஹி... இதுக்காக நூலகம் சென்று சிறுவர்கதையெல்லாம் தேடி இந்தப் புத்தகத்தை எடுத்தேன்....)

*****************************************

17 comments:

said...

//அந்தத் தானியங்கள் கொண்டு கண்ணனுக்குத் தர, அவல் தயார்செய்து குசேலனிடம் தந்து அனுப்பினாள்.//

நான் படிச்ச கதையில் பக்கத்து வீட்டில் கடன் வாங்கிச் செல்வதாகத்தான் இருந்தது. இராமாயணம் போல குசேலனிலும் பல கதைகள், திரித்தல்கள் உண்டு போல

said...

//சின்ன ரஜினி "கிரி" அவர்களுக்காக//

நான் தமிழ்நாடு தான்..சிங்கப்பூர் ல இருக்கேன்னு என்னை தமிழர் இல்லைன்னு சொல்லி பதிவர் சந்திப்பில் போட்டு கும்மி விடாதீங்க..அவ்வ்வ்வ்வ்வ்

//குசேலன் ஜோதியில் கலந்துகொள்ள என் முதல் குசேலன் இடுகை!!!!!!//

அப்ப இன்னும் பலது இருக்கா..:-((((((((

இந்த பதிவ போட்டு நாலு பேரு என்னை திட்ட மறைமுகமா திட்டம் தீட்டிட்டீங்க.. இருக்கட்டும் .

நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான் ஆனா கை விட மாட்டான்.. இதுக்கு மேல சொல்ல மாட்டேன் ஹி ஹி ஹி

said...

//இதுக்காக நூலகம் சென்று சிறுவர்கதையெல்லாம் தேடி இந்தப் புத்தகத்தை எடுத்தேன்//

என்ன கொடுமை இது...

இக்கதையை நான் முதல் முறை படிக்கிறேன். அளித்தமைக்கு நன்றி... ஆரம்பத்தில் கிரியை இழுத்துவிட்டிருக்கும் சூட்சமம் என்ன?

said...

//
VIKNESHWARAN said...

வாங்க விக்னேஸ்வரன்...
இது உங்களுக்குத் தெரியாதா.. வலையுலகில் "குசேலன்னா கிரி... கிரின்னா குசேலன்"
:P

said...

இந்த கதையில் 5 பாட்டு, 5 ஃபைட் எங்க வருது தெளிவில்லாம சொல்லியிருக்கீங்க :(

கண்டனம்

said...

/
இவரது மனைவி சுசீலை. இவர்களுக்கு 27 குழந்தைகள். இவரது குடும்பத்தில் வறுமை தாண்டவமாடியது.
/

இத்தனை பிள்ளைங்க என்றால் வறுமை தாண்டவம் என்ன ராப், டிஸ்கோ எல்லாமே ஆடுமே !!

said...

/
ஜெகதீசன் said...

இது உங்களுக்குத் தெரியாதா.. வலையுலகில் "குசேலன்னா கிரி... கிரின்னா குசேலன்"
/

யாரும் சொல்லவே இல்லை
:))))))))

said...

//
(ஹிஹிஹி... இதுக்காக நூலகம் சென்று சிறுவர்கதையெல்லாம் தேடி இந்தப் புத்தகத்தை எடுத்தேன்....)
//

சும்மா கதை விடாதீங்க. ஏதோ காப்பி பேஸ்ட் மாதிரி இருக்கு:)

said...

ஜெகதீசன் said...
வாங்க விக்னேஸ்வரன்...
இது உங்களுக்குத் தெரியாதா.. வலையுலகில் "குசேலன்னா கிரி... கிரின்னா குசேலன்"

//

ஜெகதீசனாரே வேண்டாம். அப்புறம் கிரி கமலோட அடுத்த படம் ரிலீஸ் ஆகிறப்போ உங்களுக்காக ஒரு பதிவு போட்டு வலையுலகில் ''மர்மயோகின்னா ஜெகதீசன்....ஜெகதீசன்னா மர்மயோகி'' ன்னு சொன்னாலும் சொல்லுவார்:)

Anonymous said...

http:vinavu.wordpress.com

said...

//இதுக்காக நூலகம் சென்று சிறுவர்கதையெல்லாம் தேடி இந்தப் புத்தகத்தை எடுத்தேன்

உங்க கடமை உணர்ச்சி என்னை புல்லரிக்க வைக்குது....

said...

///
கோவி.கண்ணன் said...

//அந்தத் தானியங்கள் கொண்டு கண்ணனுக்குத் தர, அவல் தயார்செய்து குசேலனிடம் தந்து அனுப்பினாள்.//

நான் படிச்ச கதையில் பக்கத்து வீட்டில் கடன் வாங்கிச் செல்வதாகத்தான் இருந்தது. இராமாயணம் போல குசேலனிலும் பல கதைகள், திரித்தல்கள் உண்டு போல

///
நீங்கள் படித்த கதை தவறானதாக இருக்கலாம். சுசீலை வறுமையிலும் செம்மையான வாழ்க்கை வாழ்ந்தவர்..
அவர் யார்வீட்டிலும் கடனோ/யாசகமோ பெற்றிருக்கமாட்டார்..
:P

said...

////
//சின்ன ரஜினி "கிரி" அவர்களுக்காக//

நான் தமிழ்நாடு தான்..சிங்கப்பூர் ல இருக்கேன்னு என்னை தமிழர் இல்லைன்னு சொல்லி பதிவர் சந்திப்பில் போட்டு கும்மி விடாதீங்க..அவ்வ்வ்வ்வ்வ்

//குசேலன் ஜோதியில் கலந்துகொள்ள என் முதல் குசேலன் இடுகை!!!!!!//

அப்ப இன்னும் பலது இருக்கா..:-((((((((

இந்த பதிவ போட்டு நாலு பேரு என்னை திட்ட மறைமுகமா திட்டம் தீட்டிட்டீங்க.. இருக்கட்டும் .

நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான் ஆனா கை விட மாட்டான்.. இதுக்கு மேல சொல்ல மாட்டேன் ஹி ஹி ஹி
////

வாங்க சின்ன சூப்பர்ஸ்டார்... :)
நீங்கதான் கோபி மண்ணின் மைந்தர்ன்னு எல்லாருக்குமே தெரியுமே... :P

Anonymous said...

//பல மலைகளும் பல கடல்களும் கடந்து துவாரகை சென்றடைந்தார் குசேலர்//

ஏன் பல கடல்களைக் கடக்க வேண்டும். குசேலர் என்ன அமெரிக்கா இல்ல அவுஸ்திரேலியாவுலயா இருந்தார்?

Anonymous said...

அங்க வறுமை மட்டுமா தாண்டவமாடியிருக்கு?

Anonymous said...

//இத்தனை பிள்ளைங்க என்றால் வறுமை தாண்டவம் என்ன ராப், டிஸ்கோ எல்லாமே ஆடுமே !!//

சிவா,

ஒரு தோல்விப்பட பதிவிற்கு இடப்படும் பின்னூட்டத்தில், தேவையில்லமல் எங்கள் jkr அகில உலக சங்கத் தலைவி ராப் பெயரை இழுத்த்தில் உள்ள நோக்கம் என்ன?. எங்கள் தல jkr படமும் இது போல் தோல்வியடைய வேண்டுமென்பதுதானே உங்கள் நோக்கம்?

எங்கள் தல படம் ரிலீசகும தினமே எல்லோருக்கும் இலவச dvd கொடுத்தாவது ஓடவைப்போம். ரஜினி ரசிகர்கள் மாதிரி கை விட மாட்டோஒம்.

said...

நான் கேட்ட கதை:
பாமாவோ, ருக்மணியோ ஓடி வந்து கிருஷ்ணனிடம் எல்லா அவலையும் நீங்களே சாப்பிட்டுவிடாதீர்கள், எனக்கும் ஒரு வாய் தாருங்கள் என்றாளாம்.

அந்த ஒரு பிடி அவலை இன்று எத்தனை பேர் மென்று கொண்டிருக்கிறார்கள்.

சகாதேவன்