Monday, July 7, 2008

கோவியாருக்கு ஒரு கேள்வி!!

நானும் ஒரு தொடர் விளையாட்டு ஆரம்பிக்கப் போறேன்!!!!!!

இதற்கான விதிமுறைகள்:

1. யாராவது ஒரு பதிவருக்கு ஒரு கேள்வி கேட்க வேண்டும்.

2. கேள்வி அறிவியல் பூர்வமாகவும், அறிவுப் பூர்வமானதாகவும் இருக்க வேண்டும்.(எ.கா: கீழே நான் கேட்டிருக்கும் கேள்வி.)

3. இரண்டு நாட்களுக்குள் பதில் அளித்துவிட்டு, பிடித்த அல்லது பிடிக்காத ஒரு பதிவரிடம் கேள்வி கேட்கவேண்டும்

4. ஒரு கேள்வி மட்டுமே கேட்கவேண்டும்.

5. இந்தச் சங்கிலித் தொடர் தொடங்கிய இடத்திற்கு மீண்டும் வரக்கூடாது... (அதாவது என்னிடம் யாரும் கேள்வி கேட்கக் கூடாது.. :) )

6. கேள்வி எந்த அளவுக்கு அறிவுப் பூர்வமாக இருக்கிறதோ அந்த அளவு பதிலும் அறிவுப் பூர்வமாக இருக்க வேண்டும்

7. பதில் விரிவானதாகவும், 50 வரிகளுக்குக் குறையாமலும் இருக்க வேண்டும்..

இனி கோவி.கண்ணனுக்கு நான் கேட்கும் அறிவியல் பூர்வமான/ அறிவுப் பூர்வமான கேள்வி:

காக்காவை நாம காக்கான்னு கூப்பிடுவதால், காக்கா "கா கா" ன்னு கத்துதா இல்லை, காக்கா "கா கா" ன்னு கத்துறதால, நாம காக்காவை காக்கா ன்னு கூப்பிடுறோமா?


பாக்கியராஜ் பதில் சொல்லமுடியாத இந்தக் கேள்விக்கு அண்ணன் என்ன பதில் சொல்றாருன்னு பார்ப்போம்...

கோவியாரே, விரைவில் பதில் சொல்லிவிட்டு யாரிடமாவது அடுத்த கேள்வியைக் கேளுங்கள்..

11 comments:

said...

உள்ளேன் ஐயா,

அறிவியல் வல்லுனர்களிடம் ஆலோசித்துக் கொண்டு இருக்கிறேன். விரைவில் உங்கள் மூக்கு உடைபடும் அளவுக்கு பதில் சொல்லப்படும்.
:)

said...

கோவியாருக்குச் சரியான கேள்வி.

அவர் எவ்வளவுதான் ஆலோசித்தாலும் உங்கள் கேள்வியின் அளவுக்கு அறிவார்த்தமான /அறிவியல் பூர்வமான பதிலைத் தரவே முடியாது :)

said...

உடனடி பதிலுக்கு நன்றி கோவி.கண்ணன்!!
ஆனால், உங்கள் பதிலில் 7வது விதி பின்பற்றப் படவில்லை... முடிந்தால் பதிவைத் திருத்தி பதிலை இன்னும் விரிவாக 50 வரியில் மாற்றவும்...

said...

//
VIKNESHWARAN said...

;-)
//
வாங்க விக்னேஸ்வரன், சிரிப்பான் நம்ம மென்பொருள்ல போட்டதா?
:)

said...

//
ஜ்யோவ்ராம் சுந்தர் said...

கோவியாருக்குச் சரியான கேள்வி.

அவர் எவ்வளவுதான் ஆலோசித்தாலும் உங்கள் கேள்வியின் அளவுக்கு அறிவார்த்தமான /அறிவியல் பூர்வமான பதிலைத் தரவே முடியாது :)
//
முதல் வருகைக்கு நன்றி சுந்தர்...
:)
பதில் தந்துவிட்டார்...

said...

யோவ் உங்க இம்சை தாங்க முடியலை.. :-(((((((((((

said...

///கிரி said...

யோவ் உங்க இம்சை தாங்க முடியலை.. :-(((((((((((///


ரிப்பீட்டேய்....!

said...

///6. கேள்வி எந்த அளவுக்கு அறிவுப் பூர்வமாக இருக்கிறதோ அந்த அளவு பதிலும் அறிவுப் பூர்வமாக இருக்க வேண்டும்///


கேள்வியும் பதிலும் அறிவுப்பூர்வமா இருக்குதான்னு ஒரு நடுவர் குழு போட்டு ஆராயனும். என்ன சொல்லுறீங்க?

said...

அதுல நடுவரா யார் யாரை போடலாம்?

said...

சங்கலி தொடர் அனுப்பி விட்டு சந்தோசமாக இருக்கும் ஜெகதீசன் இதை சென்று பார்க்கும் படி கேட்டுக்கொள்கிறேன்

http://girirajnet.blogspot.com/2008/07/4.html

:-)))))))))))))))

Anonymous said...

இ-மெயில் ஐ.டி கொடுங்க ஜெகதீசன்.