Sunday, June 15, 2008

கழுத்தறுத்த கோவி.கண்ணன்... :P

பதிவர் சந்திப்பு சில துளிகள்..

கோவி.கண்ணன்.. பதிவர் சந்திப்பின் முக்கிய இலக்கணங்களில் ஒன்று போண்டாவுடன் சந்திப்பை முடிப்பது என்பது அனைவரும் அறிந்ததே. ஏதோ சில நொண்டிச்சாக்குகளைச்(கடையில் போண்டா இல்லை)சொல்லி போண்டா வாங்கித் தராத கோவியாருக்கு அனைவரும் உங்கள் கடும் கண்டனங்களைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.. :P

கிரி.. ரெம்ப நல்லவரா இருக்கார்.. 4:30க்கு வாங்கன்னா, சரியா 4:30க்கே வந்து நிற்கிறார். இவர் நேரம் தவறாமை பற்றி ரெம்பக் கற்றுக்கொள்ளவேண்டும்.[யாரோ இங்கிருந்து பேருந்தில் 20 நிமிடத்தில் பெடாக் சென்று விடலாம் என்று சொன்னதை நம்பி 4:00 மணிக்குக் கிளம்பினேன்.. பேருந்து அங்கு சென்று சேர 40 நிமிடம் ஆகிவிட்டது...:(]. ஈழத்தமிழர் விவகாரம் குறித்து பாரி.அரசுவிடம் சில விடயங்கள் கேட்டுத் தெளிவு பெற்றார் இவர்.

பாரி.அரசு.. கோவி.கண்ணன் நேற்று காலை அழைத்து பதிவர் சந்திப்பைப் பற்றி, பாரி.அரசுவைக் கலாய்த்து பதிவு எழுதச் சொல்லிக் கேட்டுக்கொண்டார். மன்னிக்கவும் கோவியாரே, அரசு நல்லவர்.. வல்லவர்... நாலுந்தெரிஞ்சவர்...கள அனுபவம் நிறைய உள்ளவர்.. அதனால் அவரை என்னால் கலாய்க்க முடியாது. ஆனாலும் இவர்தான் நேற்றய சந்திப்பின் கதாநாயகன்.. அவரது கள அனுபவங்களை அனைவருக்கும் விளக்கினார்.

செந்தில்(சிங்கை நாதன்).. இவரும் ரெம்ப நல்லவரு.. 5 மணிக்கே கடற்கரைக்கு வந்து காத்திருந்தார்..இவர் கொண்டுவந்திருந்த அல்வாவும், கேழ்வரகு முறுக்கும் சுவையாக இருந்தது. இவர் பதிவர் சந்திப்புகள் பல கடந்த மூத்த பதிவராம்.. ஆனால் இவரது பதிவு எது என்பதைத் தான் தங்கமலை ரகசியம் போல வெளியே சொல்லாமல் இருக்கிறார்.. இவரது பதிவைக் கண்டுபிடித்துத் தருவோருக்கு பின்னூட்ட நாயகன் இடுகைக்கு 1000 பின்னூட்டங்கள் வெகுமதியாகத் தருவதாக அறிவித்துள்ளார்...

வடுவூர் குமார்.. சந்திப்புக்கு வந்த எல்லாப் பதிவர்களையும் போல இவரும் பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். விரைவில் துபாய் செல்கிறார் இவர். அனைவருக்கும் இரவு உணவு இவர்தான் அளித்தார். தமிழ்99 தட்டச்சு முறையின் தேவை குறித்து பாரி.அரசுவிடம் சந்தேகங்கள் கேட்டு அவரிடம் விளக்கங்கள் பெற்றுக்கொண்டார்..

முகவை மைந்தன்.. முகவை குமாரின் பேக்கரிக்குப் பக்கத்து வீட்டுக்காரர்.:).. தமிழ்மணத்துடன் போராடி இப்போது தான் தன் பதிவைத் தமிழ்மணத்தில் இணைத்திருக்கிறார்.சுதந்திரம், கட்டுப்படுத்தப்பட்ட சுதந்திரம் பற்றி பாரி.அரசுவுடன் நல்ல விவாதம் புரிந்தார்.. முகவை குமாருக்குப் போட்டியாக விரைவில் ஒரு திரைக்காவியம் இவரே தயாரித்து, இயக்கி, பாடல் எழுதி, பாடி, கதாநாயகனாகவும் நடிக்கப் போவதாக ஒரு உறுதி செய்யப்படாத தகவல்... :P

சிவராம் முருகன்.. வலைப் பதிவு தொடங்கி, தமிழ்மணத்துடன் இணைத்ததுடன் சரியாம். அதன்பிறகு எதுவும் எழுதவில்லையாம்.. எழுதவே பயமாக இருக்கிறதாம் இவருக்கு.. கிரியிடம் சில ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டார் பாதுகாப்பாகப் பதிவு எழுதுவது எப்படி என்பது குறித்து...விரைவில் எழுதத் தொடங்குவதாக உறுதியளித்துள்ளார். ஒயின் பாட்டிலைத் திறப்பது எப்படி என்பது குறித்து இவருக்கு விளக்க வகுப்பு எடுக்கப் பட்டது. இது குறித்து அவர் விரைவில் பதிவார்..

நான்... ஹிஹிஹி... இரும்படிக்குற இடத்துல "ஈ"க்கு என்ன வேலை.. அனுபவசாலிகள் தங்கள் அனுபவங்களையெல்லாம் பகிர்ந்து கொண்டார்கள்.. நான் முறுக்கு மற்றும் அல்வாவை சுவைத்துக் கொண்டே அவர்களது விவாதங்களை கவனித்துக் கொண்டிருந்தேன்..:P

மொத்தத்தில் சந்திப்பு பயனுள்ளதாகவும், இனிமையானதாகவும், புதிய அறிமுகங்களைப் பெற்றுத் தருவதாகவும் இருந்தது.. நான்கு மணி நேரம், ஏதோ அரைமணி நேரம் போல விரைவில் கடந்துவிட்டது. இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் நன்றாக இருக்குமே என்ற ஏக்கத்துடனே கலைந்தது போல் இருந்தது அனைவரும்.. அடுத்த முறை சந்திப்பு ஏற்பாடு செய்யும் போது மாலை ஒரு 4 மணிக்கே தொடங்குவது போல் ஏற்பாடு செய்தால் ஒரு 2 மணி நேரம் அதிகம் செலவழிக்கலாம்...

மதி ஊருக்குச் சென்றபிறகு, சிங்கையில் இருந்த ஒவ்வொரு வார இறுதியும் ஏன் தான் வருகிறதோ என நினைக்கும் அளவுக்கு சிரமமாகவே இருந்திருக்கிறது எனக்கு, தனிமையின் காரணமாக. ஆனால் மற்ற வார இறுதிகள் போல் இல்லாமல்,

இந்தவார இறுதியை இனியதாக்கிய நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!!!!!!

சந்திப்பு குறித்த மற்ற பதிவுகள்:
சிங்கை சிங்கங்களின் சந்திப்பு !
கலகலப்பாக சென்ற சிங்கை வலைப்பதிவர் சந்திப்பு - கிரி

43 comments:

Anonymous said...

சோதனை...(வேதனை இல்லை)

Anonymous said...

போண்டாவுக்கு பதிலா அல்வா முறுக்குன்னு முழுங்கியாச்சு இல்ல.பின்ன என்ன கோவி அண்ணாவை வம்பு பண்ணுறீங்க?அதுவும் எனக்கு கொடுக்காம தனியா சாப்பிட்டீங்க :(
இதுதான் சகோதர பாசமா

Anonymous said...

//.[யாரோ இங்கிருந்து பேருந்தில் 20 நிமிடத்தில் பெடாக் சென்று விடலாம் என்று சொன்னதை நம்பி 4:00 மணிக்குக் கிளம்பினேன்.. //
யாரு சொன்னது.இதுக்குதான் தங்கச்சிக்கிட்ட கேட்கனும்ன்னு சொல்லுறது

Anonymous said...

//நான்... ஹிஹிஹி... இரும்படிக்குற இடத்துல "ஈ"க்கு என்ன வேலை.. அனுபவசாலிகள் தங்கள் அனுபவங்களையெல்லாம் பகிர்ந்து கொண்டார்கள்.. நான் முறுக்கு மற்றும் அல்வாவை சுவைத்துக் கொண்டே அவர்களது விவாதங்களை கவனித்துக் கொண்டிருந்தேன்..:P//

நீங்க எவ்வளவு பெரிய்ய்ய்யா அறிவாளி.இவ்வளவு தன்னடக்கம் நல்லது இல்லை அண்ணா :D

said...

//எழுதவே பயமாக இருக்கிறதாம் இவருக்கு.. கிரியிடம் சில ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டார் //

இதுல உள்குத்து எதுவும் இல்லையே

//நான்கு மணி நேரம், ஏதோ அரைமணி நேரம் போல விரைவில் கடந்துவிட்டது. இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் நன்றாக இருக்குமே என்ற ஏக்கத்துடனே கலைந்தது போல் இருந்தது//

உண்மையாகவே ..கோவி கண்ணன் கூறிய பிறகே நானும் கவனித்தேன்.

//இந்தவார இறுதியை இனியதாக்கிய நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!!!!!!//

நானும் சொல்றேங்கோ :-)

said...

/
தனக்குத் தானே said...

சோதனை...(வேதனை இல்லை)
/

வேதனை

said...

ம். நல்லா என்ஜாய் பண்ணீங்களா?

நிஜமா நல்லவரை ஏன் விட்டுபுட்டீங்க இப்ப அவர்தான் எல்லார் வலைப்பூவிலும் செல்லப்பிள்ளை

:))))

said...

அவர் வந்து கும்மலைனா எல்லாரும் ரூம் போட்டு அழுவறாங்களாம்

:)))

said...

///துர்கா said...
போண்டாவுக்கு பதிலா அல்வா முறுக்குன்னு முழுங்கியாச்சு இல்ல.பின்ன என்ன கோவி அண்ணாவை வம்பு பண்ணுறீங்க?அதுவும் எனக்கு கொடுக்காம தனியா சாப்பிட்டீங்க :(
இதுதான் சகோதர பாசமா///

நல்லா கேளு தாயி!!

said...

///துர்கா said...
//.[யாரோ இங்கிருந்து பேருந்தில் 20 நிமிடத்தில் பெடாக் சென்று விடலாம் என்று சொன்னதை நம்பி 4:00 மணிக்குக் கிளம்பினேன்.. //
யாரு சொன்னது.இதுக்குதான் தங்கச்சிக்கிட்ட கேட்கனும்ன்னு சொல்லுறது///

உன்கிட்ட வழி கேட்டா வுட்பிரிஜ் தான் போகணும்.

said...

///
மங்களூர் சிவா said...
ம். நல்லா என்ஜாய் பண்ணீங்களா?

நிஜமா நல்லவரை ஏன் விட்டுபுட்டீங்க இப்ப அவர்தான் எல்லார் வலைப்பூவிலும் செல்லப்பிள்ளை

:))))

///
அவரெல்லாம் பெரிய்ய்ய்ய்ய்ய ஆளு சிவா... இந்த மாதிரி சின்ன சந்திப்புக்கெல்லாம் அவரு வரமாட்டார்...
:)

said...

///துர்கா said...
//நான்... ஹிஹிஹி... இரும்படிக்குற இடத்துல "ஈ"க்கு என்ன வேலை.. அனுபவசாலிகள் தங்கள் அனுபவங்களையெல்லாம் பகிர்ந்து கொண்டார்கள்.. நான் முறுக்கு மற்றும் அல்வாவை சுவைத்துக் கொண்டே அவர்களது விவாதங்களை கவனித்துக் கொண்டிருந்தேன்..:P//

நீங்க எவ்வளவு பெரிய்ய்ய்யா அறிவாளி.இவ்வளவு தன்னடக்கம் நல்லது இல்லை அண்ணா :D///

அது தன்னடக்கம் இல்ல. வயிறு அடங்கல போல. அதான் நல்லா முழுங்கி இருக்கார். கொஞ்சம் உனக்கு அனுப்பி இருக்கலாம் துர்கா.

said...

///ஜெகதீசன் said...
///
மங்களூர் சிவா said...
ம். நல்லா என்ஜாய் பண்ணீங்களா?

நிஜமா நல்லவரை ஏன் விட்டுபுட்டீங்க இப்ப அவர்தான் எல்லார் வலைப்பூவிலும் செல்லப்பிள்ளை

:))))

///
அவரெல்லாம் பெரிய்ய்ய்ய்ய்ய ஆளு சிவா... இந்த மாதிரி சின்ன சந்திப்புக்கெல்லாம் அவரு வரமாட்டார்...////

ஏனிந்த கொலை வெறி????????????????

said...

///மங்களூர் சிவா said...
அவர் வந்து கும்மலைனா எல்லாரும் ரூம் போட்டு அழுவறாங்களாம்

:)))///

எல்லோருமே கொலை வெறில அலையுறாங்களே?

said...

///"கழுத்தறுத்த கோவி.கண்ணன்... :P"///

அறுத்த அல்லது அறுபட்ட ஏதோ ஒண்ணு ஆனா எது நடந்து இருந்தாலும் நான் ஜெகதீசன் தான் பொறுப்பு.

said...

///கோவி.கண்ணன்.. பதிவர் சந்திப்பின் முக்கிய இலக்கணங்களில் ஒன்று போண்டாவுடன் சந்திப்பை முடிப்பது என்பது அனைவரும் அறிந்ததே. ஏதோ சில நொண்டிச்சாக்குகளைச்(கடையில் போண்டா இல்லை)சொல்லி போண்டா வாங்கித் தராத கோவியாருக்கு அனைவரும் உங்கள் கடும் கண்டனங்களைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.. :P///

ஏன் நீங்க வாங்கி கொடுக்க வேண்டியது தானே? நீங்களும் சேர்ந்து தானே அழைச்சீங்க? மொத்தத்துல எல்லோருக்கும் என்னோட கண்டனங்கள்.

said...

//மொத்தத்தில் சந்திப்பு பயனுள்ளதாகவும், இனிமையானதாகவும், புதிய அறிமுகங்களைப் பெற்றுத் தருவதாகவும் இருந்தது.. நான்கு மணி நேரம், ஏதோ அரைமணி நேரம் போல விரைவில் கடந்துவிட்டது. இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் நன்றாக இருக்குமே என்ற ஏக்கத்துடனே கலைந்தது போல் இருந்தது அனைவரும்.. அடுத்த முறை சந்திப்பு ஏற்பாடு செய்யும் போது மாலை ஒரு 4 மணிக்கே தொடங்குவது போல் ஏற்பாடு செய்தால் ஒரு 2 மணி நேரம் அதிகம் செலவழிக்கலாம்...//

அருமை,

அந்த எண்ணம் எல்லோருக்கும் ஏற்பட்டு இருக்கும். அடுத்த முறை வீட்டில் இருந்தே போண்டா செய்து எடுத்துவருகிறேன்.
:)

said...

///கிரி.. ரெம்ப நல்லவரா இருக்கார்.. ///

அச்சச்சோ என்ன மாதிரி இன்னொருத்தரா? கூடாது. கூடவே கூடாது. ஏதாவது செய்யணுமே? என்ன செய்யாலாம்?

said...

///கோவி.கண்ணன் நேற்று காலை அழைத்து பதிவர் சந்திப்பைப் பற்றி, பாரி.அரசுவைக் கலாய்த்து பதிவு எழுதச் சொல்லிக் கேட்டுக்கொண்டார்.///

இப்படி வேற நடக்குதா? நல்ல வேலை நான் அந்த பக்கம் வரலை.

said...

///அரசு நல்லவர்.. வல்லவர்... நாலுந்தெரிஞ்சவர்...கள அனுபவம் நிறைய உள்ளவர்..///

என்ன எல்லோரும் நல்லவரா இருக்காங்க?

said...

///செந்தில்(சிங்கை நாதன்).. இவரும் ரெம்ப நல்லவரு.. ///

அண்ணே அத்தனை நல்லவங்க? இதுக்கு நீங்க பேசாம ''நல்லவங்க கழுத்தறுத்த கோவி.கண்ணன்'' அப்படின்னு தலைப்பு வச்சி இருக்கலாம்:)

said...

///வடுவூர் குமார்.. சந்திப்புக்கு வந்த எல்லாப் பதிவர்களையும் போல இவரும் பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். ///

அப்ப வராதவங்க எல்லாம் எப்படி? பழகுவதற்கு கசப்பானவங்களா?

said...

///முகவை குமாருக்குப் போட்டியாக விரைவில் ஒரு திரைக்காவியம் இவரே தயாரித்து, இயக்கி, பாடல் எழுதி, பாடி, கதாநாயகனாகவும் நடிக்கப் போவதாக ஒரு உறுதி செய்யப்படாத தகவல்... :P///

உங்களை கதாநாயகனா வச்சி யாரோ படம் தயாரிக்க போறதா சொன்னாங்க? அது என்ன ஆச்சு?

said...

//
நிஜமா நல்லவன் said...
///வடுவூர் குமார்.. சந்திப்புக்கு வந்த எல்லாப் பதிவர்களையும் போல இவரும் பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். ///

அப்ப வராதவங்க எல்லாம் எப்படி? பழகுவதற்கு கசப்பானவங்களா?

//
இந்த மாதிரி எல்லாம் ஏடாகூடமா கேள்வி கேட்டு மாட்டி விடக்கூடாது... :P

said...

///ஒயின் பாட்டிலைத் திறப்பது எப்படி என்பது குறித்து இவருக்கு விளக்க வகுப்பு எடுக்கப் பட்டது///

அதானே பார்த்தேன். நைட் பத்து மணிவரைக்கும் சந்திப்பு நீண்டதுக்கு இதுதான் காரணமா?

said...

///ஹிஹிஹி... இரும்படிக்குற இடத்துல "ஈ"க்கு என்ன வேலை.. //

சும்மா அப்படி இப்படி பறக்கவேண்டியது தான்.

said...

சரி நான் கிளம்புறேன். ஜெகதீசன் திட்டுறாரு. இப்படி கூப்பிட்டு வச்சி திட்டுனா நாளைக்கு எப்படி வர்றது???????

said...

நல்லவரே... தொடரட்டும் உங்கள் சேவை!!!
பின்னூட்ட சுனாமின்னுறதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறீங்க... :P

said...

//
சரி நான் கிளம்புறேன்.
//
நன்றி... மீண்டும் வருக...

said...

//துர்கா said...

போண்டாவுக்கு பதிலா அல்வா முறுக்குன்னு முழுங்கியாச்சு இல்ல.பின்ன என்ன கோவி அண்ணாவை வம்பு பண்ணுறீங்க?அதுவும் எனக்கு கொடுக்காம தனியா சாப்பிட்டீங்க :(
இதுதான் சகோதர பாசமா
//

இதுக்கு மட்டும் சரியா வந்துடுவியே.. :P

.. ஹ்ம்ம்ம்ம்.. எல்லோரும் ஜாலி பன்றாங்கப்பா.. :))

said...

//
துர்கா said...

//.[யாரோ இங்கிருந்து பேருந்தில் 20 நிமிடத்தில் பெடாக் சென்று விடலாம் என்று சொன்னதை நம்பி 4:00 மணிக்குக் கிளம்பினேன்.. //
யாரு சொன்னது.இதுக்குதான் தங்கச்சிக்கிட்ட கேட்கனும்ன்னு சொல்லுறது

//
உங்கிட்ட வழி கேட்டா 2 நாள் கழிச்சு தான் போய் சேர முடியும்...

said...

//
கிரி said...

//எழுதவே பயமாக இருக்கிறதாம் இவருக்கு.. கிரியிடம் சில ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டார் //

இதுல உள்குத்து எதுவும் இல்லையே

//நான்கு மணி நேரம், ஏதோ அரைமணி நேரம் போல விரைவில் கடந்துவிட்டது. இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் நன்றாக இருக்குமே என்ற ஏக்கத்துடனே கலைந்தது போல் இருந்தது//

உண்மையாகவே ..கோவி கண்ணன் கூறிய பிறகே நானும் கவனித்தேன்.

//இந்தவார இறுதியை இனியதாக்கிய நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!!!!!!//

நானும் சொல்றேங்கோ :-)
//

வாங்க கிரி... நன்றி!! :)

said...

//
மங்களூர் சிவா said...

அவர் வந்து கும்மலைனா எல்லாரும் ரூம் போட்டு அழுவறாங்களாம்

:)))
//
ஆமாங்க சிவா... அவர் வரலைன்னுறதாலதான் மாரியாத்தா கூட சந்திப்புக்கு வரமாட்டேன்னு சொல்லீட்டாங்க... :P

said...

//
அருமை,

அந்த எண்ணம் எல்லோருக்கும் ஏற்பட்டு இருக்கும்.
:)
//
உங்க மனசுல ஒரு ஓரத்துல, "இவ்வளவு லேட் ஆயிடுச்சே, வீட்டுல பூரிக்கட்டை ரெடியா இருக்குமே"ன்னு பயம் இருந்ததையும் பார்த்துட்டுதான் இருந்தேன்..... :)

//
அடுத்த முறை வீட்டில் இருந்தே போண்டா செய்து எடுத்துவருகிறேன்.
//
அடுத்த முறையும் ஏமாத்தீறாதீங்க... :P

Anonymous said...

@நிஜமா நல்லவன்
//
உன்கிட்ட வழி கேட்டா வுட்பிரிஜ் தான் போகணும்.//

என்கிட்ட வழி கேட்ட எல்லாம் வுட்பிர்ஜ் போக மாட்டாங்க.உங்ககிட்ட பேசினாலே அங்கேதான் போய் சேரனும் ;)

Anonymous said...

////
உங்கிட்ட வழி கேட்டா 2 நாள் கழிச்சு தான் போய் சேர முடியும்.....//
.கோவி அண்ணாகிட்டதான் வழி கேட்டால் 2 வாரம் ஆகும் ;)இனிமேல் நீங்க அவருகிட்டேயே வழி கேளுங்க

said...

//
துர்கா said...

@நிஜமா நல்லவன்
//
உன்கிட்ட வழி கேட்டா வுட்பிரிஜ் தான் போகணும்.//

என்கிட்ட வழி கேட்ட எல்லாம் வுட்பிர்ஜ் போக மாட்டாங்க.உங்ககிட்ட பேசினாலே அங்கேதான் போய் சேரனும் ;)
//
நீயே நேத்து தான் அங்க இருந்து டிஸ்சார்ஜ் ஆன மாதிரிதான் இருக்க...:P

Anonymous said...

//நீயே நேத்து தான் அங்க இருந்து டிஸ்சார்ஜ் ஆன மாதிரிதான் இருக்க...:P///

நீங்க அங்கேயே தானே குடித்தனம் பண்ணுறீங்க ;)
அதான் எல்லாருமே அங்கே இருந்து வந்தவங்க மாதிரி உங்களுக்குத் தோனுது.கூடிய விரைவில் நீங்க டிஸ்சார்ஜ் ஆக கடவுளை வேண்டிக்கிறேன் அண்ணா

said...

// துர்கா said...

//நீயே நேத்து தான் அங்க இருந்து டிஸ்சார்ஜ் ஆன மாதிரிதான் இருக்க...:P///

நீங்க அங்கேயே தானே குடித்தனம் பண்ணுறீங்க ;)
அதான் எல்லாருமே அங்கே இருந்து வந்தவங்க மாதிரி உங்களுக்குத் தோனுது.கூடிய விரைவில் நீங்க டிஸ்சார்ஜ் ஆக கடவுளை வேண்டிக்கிறேன் அண்ணா//
சபாஷ் சரியான போட்டி :)))

Anonymous said...

உள்ளேன் ஐய்யா
அன்புடன்
சிங்கை நாதன்

said...

சிங்கப்பூரின் கீழ்பாக்கமா வுட்ப்ரிஜ்????

துர்காவும் நல்லவரும் அங்கதான் இருக்காங்களா??

பு.த.செ.விளக்கவும்

:)

said...

//
மங்களூர் சிவா said...

சிங்கப்பூரின் கீழ்பாக்கமா வுட்ப்ரிஜ்????

துர்காவும் நல்லவரும் அங்கதான் இருக்காங்களா??
//
க.க.க.போ!
:)

said...

//
Anonymous said...

உள்ளேன் ஐய்யா
அன்புடன்
சிங்கை நாதன்

//
வாங்க செந்தில்..
அந்த தங்கமலை ரகசியத்தை எனக்கு மட்டும் சொல்லிருங்களேன்.... :)