இப்பொழுதெல்லாம் தொலைக்காட்சிகளில் அதிக நடன நிகழ்ச்சிகள் வந்துவிட்டதால் நடுவர்களுக்கு கொஞ்சம் தட்டுப்பாடு இருப்பதாகத் தெரிகிறது.. இந்தப் பதிவின் நோக்கம் நல்ல நடுவர்களை உருவாக்குவதே..
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வரும் நடுவர்களின் சில முக்கியமான பணிகள்:
1.பங்கேற்பவர்களைப் பாராட்டுவது.
2.பங்கேற்பவர்களைத் திட்டுவது.
3.பங்கேற்பவர்கள் அல்லது தொகுப்பாளர்களுடன் சண்டை போடுவது
இவற்றில் ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்..
பாராட்டுதல்:
உங்களுக்கு ஒருவரது நடனம் பிடித்திருந்தால் அல்லது நிகழ்ச்சி தொடங்கும் முன் அந்தப் பங்கேற்பாளர் உங்கள் மணம் குளிரும் அளவுக்கு உங்களுக்கு ஐஸ் வைத்திருந்தால் நீங்கள் அவரது நடனம் முடிந்ததும் அவரைப் பாராட்ட வேண்டியது மிகவும் அவசியம்.. இதற்கு சில ஆங்கில வார்த்தைகள் தெரிந்து கொண்டிருப்பது மிகவும் அவசியம்..
1. Excellent : உங்களுக்கு எத்தனை தடவை வேண்டுமோ அத்தனை தடவை சொல்லலாம் இதை... ரெம்பப் பிடிச்சிருந்தால் Excellent! Excellent!! Excellent!!! (நன்றி: சுந்தரம்) அப்படின்னு 3 தரம் சொல்லலாம்...
awesome!! great!! Superb போன்ற வார்த்தைகளையும் உபயோகப் படுத்தலாம்..
2.Mind Blowing: (நன்றி: உயிர் சங்கீதா) இது எல்லாஇதை நீங்கள் ஒரு எபிசோடுக்கு ஒருமுறையாவது கட்டாயம் பயன்படுத்தியிருக்கவேண்டும்..
3. செம செம செம / கம கம கம / தம தம தம : இப்படி எதாவது ஒரு புதிய வார்த்தைகள் உங்கள் நிகழ்ச்சியை மற்ற நிகழ்ச்சிகளில் இருந்து தனியாகக் காட்டும்படி வைத்துக் கொள்ளலாம்.. நடனம் எவ்வளவு நன்றாக இருக்கிறதோ அத்தனை முறை சொல்லலாம் (எ.கா: செம / செம செம/ செம செம செம செம.......)
4. உங்க பெர்பாமன்ஸ்லயே இது தான் டாப்..
திட்டுதல் / குறை சொல்தல்
1 நல்லா இருந்தது.. ஆனா.... :
கோடிட்ட இடத்தில் இதில் எதை வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளலாம்
-> பிடிக்கலை..
-> உங்ககிட்ட இன்னும் ரெம்ப எதிர்பாக்குறோம்
-> But, Something is missing... ஆனா என்னன்னு தெரியலை.. சாரி
2. அவங்க performance நல்லா இருந்தது: ஜோடியில் யாராவது ஒருவர் பெயரைக் குறிப்பிட்டு அவரோட performance நல்லா இருந்தது. ஆனா நீங்க சரியாப் பண்ணலை அப்படின்னு சொல்லி ஜோடிக்கு இடையில் சண்டை மூட்டி விடனும்.
3. choreography: உங்க performance நல்லாதான் இருந்தது.. ஆனா choreography சரியில்லை
4. group dancers: நீங்க நல்லாத் தான் ஆடுனீங்க ஆனால் க்ரூப் டான்சர்ஸ் சரியில்லை..
5. Hero மாதிரி ஆடுங்க: நீங்க உயிரைக் கொடுத்து ஆடுறீங்க.. நல்லா இருக்கு. ஆனால் டான்சர் மாதிரி ஆடுறீங்க.. கொஞ்சம் மாத்திக்கோங்க. ஹீரோ மாதிரி ஆடனும்..
6. Expressions: நல்லா இருந்தது... ஆனா expressions missing...
7. Eye contact: உங்க ரெண்டு பேருக்கு இடையில் eye contact ஏ இல்லை...
8. Lip movement: Lip movementஏ இல்லை/ சரியில்லை / female voice க்கும் சேர்த்து movement தறீங்க.....
9. Chemistry: ஜோடி நடன நிகழ்ச்சிகளில் மிகவும் முக்கியமான வார்த்தை இது.. இதை நீங்கள் கட்டாயம் ஒரு 4 முறையாவது ஒரு எபிசோடில் பயன்படுத்தியிருக்கவேண்டும். இல்லையென்றால் உங்களை நல்ல நடுவராக ஏற்றுக் கொள்ள முடியாது..
எ.கா:
chemistry நல்லா workout அயிருக்கு/ஆகலை..
நல்லாத்தான் ஆடுனீங்க... but chemistry is missing..
பங்கேற்பவர்கள் அல்லது தொகுப்பாளர்களுடன் சண்டை போடுவது:
நிகழ்ச்சி கொஞ்சம் சரியாகப் போகாதது போல் தெரிந்தால் உடனே இயக்குனர் உங்களை யாராவது பங்கேற்பாளருடன் சண்டை போடச் சொல்லுவார்.. அந்தப் பங்கேற்பாளருக்கும் இதைப் பற்றி ஏற்கனவே அறிவித்து அவருக்கும் பயிற்சி ஏற்கனவே அளிக்கப்பட்டிருக்கும்.. உங்களுக்கும் நிகழ்ச்சிக்கு முன்னரே தகுந்த பயிற்சி அளிக்கப்படும்...
ஆனால் நடிக்கும் போது கவனமாக இருக்க வேண்டும்.. கொஞ்ச்சம் தப்பினாலும் வெளியே தெரிந்துவிடும்..
1. பங்கேற்பாளருடன் சண்டை:
எனக்குப் பிடிக்கலை உங்க பெர்பாமன்ஸ்... இதுக்கு மேல நீங்க ஒன்னும் சொல்லக்கூடாது.. உடனே ஏன் பிடிக்கலைன்னு பங்கேற்பாளர் கேப்பார்.. உடனே நீங்க அழுக ஆரம்பிக்கனும்... எனக்கு நடிக்கத் தெரியாது அது இதுன்னு.. அப்படியே டாடா சொல்லீட்டு வெளிய போயிறனும்.. எல்லாரும் வந்து கெஞ்சுவாங்க.. அப்புறமா பிகு பண்ணிட்டு திரும்ப வந்துரனும்.. அந்த பங்கேற்பாளர் அதோட விலகிக்கொள்வார்... (எ.கா: சிம்பு - ப்ரித்திவ் )
ஜோடிகள் இருவரில் யாராவது ஒருவர் மட்டும் நல்லாப் பண்ணுறார்ன்னு நீங்க சொல்லனும்... உடனே மற்றவர் நான் விலக்கிறேன்னு போயிடுவார். அடுத்து ஜோடியைப் பிரித்து புதுசா ஒருத்தருடன் செர்த்துவிடனும்.. (எ.கா: s.j.சூர்யா - ஜீவா)
2. தொகுப்பாளருடன் சண்டை
இந்த மாதிரி எதும் சண்டை போட வாய்ப்புக் கிடைக்காத போது தொகுப்பாளருடன் சண்டை போட்டுட்டு கேரவனுக்குள்ள போயிடனும்..பின்னாடியே வற்ற கேமராமேனை விரட்டனும்.. கொஞ்சம் கூட பிரைவசி இல்லையா.. ரியாலிட்டி சோ(??) ன்னாலே இது தான் பிரச்சனை அப்படின்னு கத்தனும் (எ.கா: சிம்ரன் - விஜய் ஆதிராஜ்)
இதுபோக இன்னும் சில குறிப்புகள்:
உங்களுடன் சேர்ந்து இன்னும் 2 நடுவர்கள் இருப்பாங்க.. அவர்களில் ஒருவர் பெரிய நடன இயக்குனரா இருப்பார்.. அவருக்கு பயங்கர மரியாதை தர மாதிரி நடிக்கனும்...
உங்ககூட இருக்கும் உங்கள் வயது நடுவருக்கு முடிந்த வர ஜால்ரா போட வேண்டும்....
******************************
இன்னும் எதாவது இருந்தா பின்னூட்டத்துல சொல்லுங்கப்பா.... :))
Monday, June 9, 2008
நல்ல நடுவராவது எப்படி? - Guide for dummies
Labels:
கேடி நம்பர் 2,
கொடுமை,
சன்,
டப்பா நிகழ்ச்சிகள்,
டூப்பர் டான்சர்,
விஜய்
Subscribe to:
Post Comments (Atom)
18 comments:
சிம்பு : எனக்கு நடிக்கவே தெரியாது
பார்வையாளர் : உங்க அப்பனுக்கும் தான்.
டான்சர் : கெமிஸ்டிரி ஒர்க் அவுட் ஆகலை என்றால் என்ன ? பிசிக்ஸ், பயலஜி இதெல்லாம் சரியாகத்தானே இருக்கு
மேடைக்கு போய் பாராட்ட வேண்டும் இதை நீங்க சொல்லவே இல்லையே.. அப்பதானே எல்லோரும் சொல்லுவாங்க அவங்க மேடைக்கே போய் பாரட்டுனாங்கப்பா ..
அப்புறம் .001 % குறையுது ..பக்குதுல இருக்கிறவங்க எனக்கும் அதே..ஆனா வேற ஜோடி
அப்புறம் அதிகமா பாராட்டாம இருக்கணும்..அப்புறம் திடீர்னு பாராட்டனும்..ஆகா பாரட்டாதவங்களே பாராட்டிட்டாங்க னு சொல்வாங்க :-)
ஜெகதீசன், கோவி கண்ணன் நீங்க குறைவா பதிவு போடறீங்கன்னு சொன்னதுனால் பொங்கி எழுந்து போட்டு தாக்கறீங்களா? :-))
நல்ல நடுவர் சங்கீதாதான். அவதான் நடுவில இருந்தாள்
உங்க பாணியிலே சொல்லிடுறன்...!
நல்லாத்தான் இருக்கு.....! ஆனா........... இன்னும் கொஞ்சம் நல்லா இருந்திருக்கலாமோ?
நல்ல நடுவராவதற்கு முதலில் நாற்று பறிக்க தெரிந்திருக்க வேண்டும்
Super appadinu sollanum 6 markku kodukkanum. Sumaar appaidinu sollanum 9 markku kodukkanum. This is very important qualification
\\நன்றி: ராஜீ சுந்தரம்\\
சொன்னது அவங்கப்பா சுந்தரம்
ஒரு மேடை நாடகத்தை ஜோடி நம்பர் 1 என்று மேடையேற்றுகிறார்கள் கேடிகள்.
ஹாஹா...
"சூப்பர் சூப்பர் சூப்பர்" என்ற வார்த்தையை பயன்படுத்தவேண்டும்!
அப்பரம் நடுவர் மேடைக்குபோய் கட்டிபிடிக்க வேண்டும் பங்கேற்பாளர்களை.(ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி)
//
முரளிகண்ணன் said...
\\நன்றி: ராஜீ சுந்தரம்\\
சொன்னது அவங்கப்பா சுந்தரம்
//
ஹிஹிஹி... இப்ப மாத்திடுறேன்... :)
//
டொன் லீ said...
உங்க பாணியிலே சொல்லிடுறன்...!
நல்லாத்தான் இருக்கு.....! ஆனா........... இன்னும் கொஞ்சம் நல்லா இருந்திருக்கலாமோ?
//
வாங்க டொன் லீ.. ஆமாங்க..
நல்லாத்தான் இருக்கு.. ஆனால் something is missing. என்னன்னு தான் தெரியலை...
:)
//
கிரி said...
மேடைக்கு போய் பாராட்ட வேண்டும் இதை நீங்க சொல்லவே இல்லையே.. அப்பதானே எல்லோரும் சொல்லுவாங்க அவங்க மேடைக்கே போய் பாரட்டுனாங்கப்பா ..
//
ஆமாங்க கிரி... இதை எப்படியோ மறந்துட்டேன்.
அதோட நல்லா ஆடுற யாரையாவது குறிப்பிட்டு, உங்களோட இந்த நிகழ்ச்சி முடியும் முன்னாடி ஒரு தடவையாவது டான்ஸ் பண்ணுவேன் அப்படின்னும் சொல்லனும்
Thamizhmaangani, கோவி அண்ணன்..
வாங்க.. பின்னூட்டத்திற்கு நன்றி..
:))
நடுவர் 1: இரண்டு பேரையும் எலிமினேட் பண்ணப் போறோம்..!
பிண்ணனி இசை...!
அந்த செட்டில் இருக்குன் எல்லார் முஞ்சியும் போகஸ் செய்யப்படும்...!
சிறிது நேரத்துக்கு பிறகு..
நடுவர் 2: உங்க இரண்டு பேரையும் அடுத்த ரவுண்டுக்கு அனுப்பிறோம்..
முடிவு: பாக்கிறவா எல்லாம் கேனையங்க...!
இதில இருந்து ஒரு ஷோ விடாம பாக்குறீங்கன்னு தெரியுது
:)
நல்லாத்தான் இருக்கு பதிவு.....! ஆனா........... இன்னும் நிறைய எதிர்பாக்கிறோம் ஜெகதீசன் உங்ககிட்ட!!!!!
/
கோவி.கண்ணன் said...
சிம்பு : எனக்கு நடிக்கவே தெரியாது
பார்வையாளர் : உங்க அப்பனுக்கும் தான்.
/
/
டான்சர் : கெமிஸ்டிரி ஒர்க் அவுட் ஆகலை என்றால் என்ன ? பிசிக்ஸ், பயலஜி இதெல்லாம் சரியாகத்தானே இருக்கு
/
என்ன இருந்தாலும் மூத்த பதிவர் மூத்த பதிவர்தான்னு நிரூபிக்கிறார் பாருங்க!!
:))))
Post a Comment