Thursday, June 26, 2008

பின்னூட்ட டெம்ப்ளேட்டுகள் விற்பனைக்கு!!!!

தினந்தோறும் வெளியாகும் நூற்றுக்கணக்கான பதிவுகளுக்குப் பின்னூட்ட முடியாமல் திணறும் பதிவர்களில் ஒருவரா நீங்கள்? இதோ உங்களுக்காகவே இந்த சேவை!!!

அன்மையில் வெளியான தசாவதார விமர்ச்சனப் பதிவுகளுக்குப் என்ன பின்னூட்டுவதென்றே தெரியாமல் பல பதிவுகளுக்கு நான் பின்னூட்டவில்லை. இந்த நிலை வேறு யாருக்கும் இனி வராமல் இருக்க என்ன செய்யவேண்டும் என இரவு பகலாக சிந்தித்ததில் உருவானதே இந்த "பின்னூட்ட டெம்ப்ளேட் மென்பொருள்!!"

  • சிரிப்பான் பின்னூட்ட டெம்ப்ளேட்டுகள்

  • திரைப்பட விமர்ச்சனங்களுக்கான டெம்ப்ளேட்டுகள்
    • படத்தினைத் திட்டி வெளிவரும் பதிவுகளை ஆதரிக்கும் பின்னூட்ட டெம்ப்ளேட்டுகள்.

    • படத்தினைத் திட்டி வெளிவரும் பதிவுகளை எதிர்க்கும் பின்னூட்ட டெம்ப்ளேட்டுகள்.

    • படத்தினைப் பாராட்டி வெளிவரும் பதிவுகளை ஆதரிக்கும் பின்னூட்ட டெம்ளேட்டுகள்.

    • படத்தினைப் பாராட்டி வெளிவரும் பதிவுகளை எதிர்க்கும் பின்னூட்ட டெம்ப்ளேட்டுகள்

  • திமுக, அதிமுக உட்பட அனைத்துக் கட்சிகளையும் ஆதரித்து/எதிர்த்து வரும் பதிவுகளுக்கு ஆதரவான/எதிரான பின்னூட்ட டெம்ப்ளேட்டுகள்

  • சிறு கதைகளுக்கான பின்னூட்ட டெம்ளேட்டுகள்

  • தொடர்கதைகளுக்கான பின்னூட்ட டெம்ப்ளேட்டுகள்

  • கவிதைகளுக்கான பின்னூட்ட டெம்ப்ளேட்டுகள்

  • கவுஜைகளுக்கான பின்னூட்ட டெம்ப்ளேட்டுகள்

  • கவிதை/கவுஜை மாதிரிகளுக்கான பின்னூட்ட டெம்ப்ளேட்டுகள்

  • இறை மறுப்பு ஆதரவு/ எதிர்ப்புப் பதிவுகளுக்கான பின்னூட்ட டெம்ப்ளேட்டுகள்

  • ஆரிய/திராவிடப் பதிவுகளுக்கான பின்னூட்ட டெம்ப்ளேட்டுகள்.

  • பின்னூட்ட பாலா/பாலச்சந்தர் பின்னூட்ட டெம்ப்ளேட்டுகள்

  • கேள்வி பதில் பதிவுகளுக்கான கேள்விப் பின்னூட்ட டெம்ப்ளேட்டுகள்

  • ஸ்டார் பதிவர்களின் பதிவுகளுக்கான பின்னூட்ட டெம்ப்ளேட்டுகள

உட்பட 1970 வகைப் பதிவுகளுக்கான 13452587 பின்னூட்ட டெம்ப்ளேட்டுகளை இந்த மென்பொருள் வழங்குகிறது.


இந்த மென்பொருளின் விலை 1234 சிங்கை வெள்ளிகள் மட்டுமே!! ஏதேனும் முக்கிய நிகழ்ச்சிகள் (எ.கா : குசேலன் வெளியீடு) நடக்கும்போது அதற்கான சிறப்புப் பின்னூட்டங்களும் இம்மென்பொருளை வாங்குவோருக்கு இலவசமாய் அளிக்கப்படும்..


இந்த மென்பொருளை வாங்க விரும்புவோர் SG$1234 காசோலை அல்லது வரவோலை அல்லது உங்களுக்குப் பிடித்த ஏதோ ஒரு ஓலையாக கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும். உடனே உங்களுக்கு இந்த மென்பொருள் அஞ்சலில் அனுப்பப்படும்.


முகவரி:

பின்னூட்ட சேவை மையம்,

#123-12345,

1456,சிங்கப்பூர் முதல் குறுக்குச்சந்து,

சிங்கப்பூர் பிரதான சாலை,

சிங்கப்பூர் -12345678.


குறைந்த அளவு குறுந்தகடுகளே இருப்பதால் விரைவில் அனுகவும்!!!!


இந்த மென்பொருளை வாங்குவோர் தங்களுக்குக் கீழ் 2 பேரை சேர்த்தால் 25% பணம் திரும்பக் கிடைத்துவிடும். அந்த இரண்டு பேர் அவர்களுக்குக் கீழ் தலா இரண்டு பேரை சேர்த்தால் மேலும் ஒரு 12.5% பணம் திரும்பக் கிடைத்துவிடும். இப்படியே உங்களுக்கீழ் 12345 பேரை சேர்க்கும் போது நீங்கள் கோடீஸ்வரர் ஆகிவிடலாம்... விரைவில் இத் திட்டத்தில் சேர்ந்தால் விரைவில் கோடீஸ்வரர் ஆகலாம்... முந்துவீர்!!!!!!!

குறிப்பு:
இந்தப் பின்னூட்ட மென்பொருள் மூலம் போடப் படும் பின்னூட்டங்கள் பின்னூட்டிகளின் கருத்துக்களாகவே பதிவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த டெம்ப்ளேட் மூலம் போடப்படும் பின்னூட்டங்களுக்கு நிர்வாகம் பொறுப்பேற்காது!!! பின்னூட்டிகள் பின்னூட்டத்தைப் போடும் முன் சரிபார்த்துக் கொள்ளவும்!!!

59 comments:

said...

பயனுள்ள தகவல்கள் !
(இதும் பதிவைப் பொறுத்து டெம்ப்ளேட் பின்னூட்டம் தான்)

Anonymous said...

யோவ், எங்களுக்கு போட்டியாக திட்டமா ?

கேஸ் (Gas அல்ல) போடுவோம் !

said...

கணிணியயைத் திறந்து, தமிழ்மணம் பார்த்து, தானே பின்னுட்டம் போடும்மா..

அப்ப எனக்கு ஒன்னு பொட்டலம்..கட்டுங்கப்பா...

said...

//தொடர்கதைகளுக்கான பின்னூட்ட டெம்ப்ளேட்டுகள்//

தொடர்ந்து தொடருங்கள்....
:)

//கவிதைகளுக்கான பின்னூட்ட டெம்ப்ளேட்டுகள்//

அருமையான கவிதை !

said...

எக்ஸ்லண்ட்... சூப்பர்ப்ப்்ப்ப்ப்்ப்்ப்்ப.....

said...

//இந்த மென்பொருளை வாங்குவோர் தங்களுக்குக் கீழ் 2 பேரை சேர்த்தால் 25% பணம் திரும்பக் கிடைத்துவிடும். அந்த இரண்டு பேர் அவர்களுக்குக் கீழ் தலா இரண்டு பேரை சேர்த்தால் மேலும் ஒரு 12.5% பணம் திரும்பக் கிடைத்துவிடும். இப்படியே உங்களுக்கீழ் 12345 பேரை சேர்க்கும் போது நீங்கள் கோடீஸ்வரர் ஆகிவிடலாம்... //

ஹா ஹா ஹா ஹா ஹா

அதெல்லாம் சரி..இதெல்லாம் எப்படி வேலை செய்யும்னு சொல்லவே இல்ல :-))))

said...

மங்களூர் சிவாவுக்கு கென கவர்ச்சி டெம்ப்ளேட்டுகள் எதுவும் இல்லாததால் இந்த மென்பொருளை நான் ரிஜெக்ட் செய்கிறேன்

said...

பதிவு அருமை,
தகவலுக்கு நன்றி,

(ஆஹா! மென்பொருள் நல்லா வேலை செய்துப்பா!)

Anonymous said...

இட்லிவடை டைப் பின்னூட்டங்கள் விற்பனைக்கு இருக்காண்ணே ?

said...

'உக்காந்து' யோசிக்கிறீங்க.....

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் நடக்கட்டும்:-)))))

said...

//
கோவி.கண்ணன் said...

பயனுள்ள தகவல்கள் !
(இதும் பதிவைப் பொறுத்து டெம்ப்ளேட் பின்னூட்டம் தான்)

//
ஓ.. அதுக்குள்ள மென்பொருளைப் பயன்படுத்த ஆரம்பிச்சுட்டீங்களா?...
உங்களுக்கு இந்த மென்பொருளை இலவசமாகத் தந்ததைப் பற்றி யாருக்கும் சொல்லிடாதீங்க... :P

said...

சிங்கப்பூர் சிட்டி ஹால் எம்.ஆர்.டி ஸ்டேஷன் ல உக்கார்ந்து யோசிசீங்களோ ? அருவியா வருது..ஐடியா க்களெல்லாம் ??

:))

அப்படியே ஆஸ்திரேலியா வுக்கு பார்சல்...

said...

சூப்பர்...

(நல்லா வேலை செய்கிறது.. தமிழ்நாட்டிற்க்கு ஏஜேண்ட் தேவையா?)

said...

இந்திய பெருங்குடி மக்களுக்கு சிறப்பு சலுகை உண்டா!!!!!!!

இங்க 10-15 தேவை

said...

இந்த மாதிரி வியாபார நோக்கப் பதிவுகளுக்கு பின்னூட்டம் போட டெம்ப் இருக்கா சாரே.. :)

said...

:-)

இந்த ஒரு லோகோ பேதும்... டெம்ப்ளேட்டாம் டெம்ப்ளேட்...

said...

//
TBCD said...

கணிணியயைத் திறந்து, தமிழ்மணம் பார்த்து, தானே பின்னுட்டம் போடும்மா..

அப்ப எனக்கு ஒன்னு பொட்டலம்..கட்டுங்கப்பா...

//
அடுத்த வெளியீட்டில் இந்த சேவை சேர்க்கப்படும்... :P

said...

வாங்க கிரி..
//
ஹா ஹா ஹா ஹா ஹா

அதெல்லாம் சரி..இதெல்லாம் எப்படி வேலை செய்யும்னு சொல்லவே இல்ல :-))))
//

அதெல்லாம் தொழில் ரகசியம்... :)

said...

//
பாரி.அரசு said...

எக்ஸ்லண்ட்... சூப்பர்ப்ப்்ப்ப்ப்்ப்்ப்்ப.....
//
அடடே... நீங்களும் இந்த மென்பொருளைப் பயன்படுத்த ஆரம்பிச்சுட்டீங்களா?
:)))

said...

//
கோவி.கண்ணன் said...

மங்களூர் சிவாவுக்கு கென கவர்ச்சி டெம்ப்ளேட்டுகள் எதுவும் இல்லாததால் இந்த மென்பொருளை நான் ரிஜெக்ட் செய்கிறேன்
//

இது போல பொய்யான தகவல்களைப் பரப்பாதீர்கள்!
நல்லாப் பாருங்க... பதிவு வகைகள் பட்டியலில் 456 வது வகையைத் தேர்ந்தெடுத்துப் பாருங்கள்... நூற்றுக்கணக்கான டெம்ப்ளேட்டுகள் இருக்கும்...

said...

:))))

said...

கோவி கண்ணன்,
நல்ல அருமையான பதிவு...

said...

மேற்கண்ட பின்னூட்டம் , உங்கள் மென்பொருளால் போடப்பட்டது..

“பக்” உள்ளது .. சரி செய்யவும்..

-

Anonymous said...

அய்யா எவ்வளவு செலவு ஆனாலும் சரி எனக்கொண்ணு வேணும்.

வேற எதுக்கு. இங்க உபயோகப்படுத்த தான்

said...

எப்படி, இப்படி? :-))))))))))
அருமை!

said...

//
மோகன் கந்தசாமி said...
பதிவு அருமை,
தகவலுக்கு நன்றி,

(ஆஹா! மென்பொருள் நல்லா வேலை செய்துப்பா!)
//
வாங்க மோகன் கந்தசாமி... நீங்க இன்னும் வரைவோலை அனுப்பலை.. விரைவில் அனுப்பவும். இல்லையென்றால் உங்களுக்கு அந்த சேவை தடைசெய்யப் படும்... :P

said...

//
துளசி கோபால் said...
'உக்காந்து' யோசிக்கிறீங்க.....

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் நடக்கட்டும்:-)))))
.........
கீ - வென் said...
சிங்கப்பூர் சிட்டி ஹால் எம்.ஆர்.டி ஸ்டேஷன் ல உக்கார்ந்து யோசிசீங்களோ ? அருவியா வருது..ஐடியா க்களெல்லாம் ??

:))

அப்படியே ஆஸ்திரேலியா வுக்கு பார்சல்...

//
வாங்க துளசி அம்மா & கீ - வென்,
என்ன செய்யுறது.. தமிழ்ப் பதிவுலகையும், பின்னூட்ட உலகையும் அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்ல இப்படியெல்லாம் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கிறது.... :P

said...

வாங்க கூடுதுறை & அதிஷா..

இந்தியாவுக்கு ஏற்கனவே ஏஜெண்ட் நியமித்தாகிவிட்டது...

அதிஷா, மொத்தமாக வாங்கும்போது 10% விலை குறைவாகத் தருவோம்..
:P

said...

எல்லா போஸ்ட்'லேயும் ஸ்மைலி போடுறமாதிரி ஏதாவது டெக்னாலாஜி இருக்கா.... :))

said...

//
SanJai said...
இந்த மாதிரி வியாபார நோக்கப் பதிவுகளுக்கு பின்னூட்டம் போட டெம்ப் இருக்கா சாரே.. :)

//
இருக்கு சாரே.... :))

said...

//
VIKNESHWARAN said...
:-)

இந்த ஒரு லோகோ பேதும்... டெம்ப்ளேட்டாம் டெம்ப்ளேட்...

//
என்ன விக்னேஸ்வரன் இப்படிச் சொல்லீட்டீங்க.. 1234 விதமான சிரிப்பான் டெம்ப்ளேட்டுகளும் இருக்கு...
:P

said...

//
ஜீவன் said...
கோவி கண்ணன்,
நல்ல அருமையான பதிவு...

June 26, 2008 2:09 PM


ஜீவன் said...
மேற்கண்ட பின்னூட்டம் , உங்கள் மென்பொருளால் போடப்பட்டது..

“பக்” உள்ளது .. சரி செய்யவும்..

-

June 26, 2008 2:11 PM

//
வாங்க ஜீவன்... அது bug இல்லை.. விரைவில் காசோலை அனுப்புங்கள்..
மென்பொருள் வாங்கிவிட்டு பணம் அனுப்பாதவர்களுக்கு இதுபோல் தவறான பின்னூட்டங்களைத் தரும்...
:P

said...

//
பொன்வண்டு said...
:))))

//
வாங்க பொன்வண்டு...

விக்னேஸ்வரன்... பொன்வண்டைப் பாருங்க.. டெம்ப்ளேட் பயன்படுத்தி எவ்வளவு சூப்பை ஸ்மைலி போட்டுருக்காருன்னு.... :P

said...

//பாரி.அரசு said...

எக்ஸ்லண்ட்... சூப்பர்ப்ப்்ப்ப்ப்்ப்்ப்்ப.....//


ரிப்பீட்டேய்....

said...

//
முகவை மைந்தன் said...
எப்படி, இப்படி? :-))))))))))
அருமை!
//
வாங்க முகவைக்காரரே.. மென்பொருள் எப்படி இருக்கு?

said...

ரிப்பீட்டு போடுவதற்கென்று தனியாக டெம்ப்ளேட் இல்லையா?

said...

//
இராம்/Raam said...
எல்லா போஸ்ட்'லேயும் ஸ்மைலி போடுறமாதிரி ஏதாவது டெக்னாலாஜி இருக்கா.... :))
//
வாங்க ராம்.. முதல் வருகை... வருகைக்கு நன்றி.
இந்த மென்பொருளின் அடுத்த வெளியீட்டில் எல்லாப் பதிவிலும் ஸ்மைலி போடும் சேவையையும் சேர்த்துவிடுவோம்...

said...

///கிரி said...
அதெல்லாம் சரி..இதெல்லாம் எப்படி வேலை செய்யும்னு சொல்லவே இல்ல :-))))///


காசை காட்டுங்கப்பு. தானா வேலைய காட்டும்:)

said...

//கோவி.கண்ணன் said...
மங்களூர் சிவாவுக்கு கென கவர்ச்சி டெம்ப்ளேட்டுகள் எதுவும் இல்லாததால் இந்த மென்பொருளை நான் ரிஜெக்ட் செய்கிறேன்//

ஹையோ ஹையோ உங்களுக்கு சேதி தெரியாதா? மங்களூரார் ஏற்கனவே தனிப்பட்ட முறையில் போனவாரம் ஜேக் கிட்ட பேசி காப்பி ரைட் சேர்த்து கவர்ச்சி பின்னூட்ட டெம்ப்ளேட் வாங்கிட்டாரு:))

said...

///SanJai said...

இந்த மாதிரி வியாபார நோக்கப் பதிவுகளுக்கு பின்னூட்டம் போட டெம்ப் இருக்கா சாரே.. :)///

இது தான் சூப்பர் பின்னூட்டம்:)

said...

//தினந்தோறும் வெளியாகும் நூற்றுக்கணக்கான பதிவுகளுக்குப் பின்னூட்ட முடியாமல் திணறும் பதிவர்களில் ஒருவரா நீங்கள்?//


பின்னூட்டத்தை விடுங்க. தினமும் பதிவு போடுற மாதிரி ஏதேனும் டெம்ப்ளேட் இருக்கா?

said...

///அன்மையில் வெளியான தசாவதார விமர்ச்சனப் பதிவுகளுக்குப் என்ன பின்னூட்டுவதென்றே தெரியாமல் பல பதிவுகளுக்கு நான் பின்னூட்டவில்லை.///

நீங்க எந்த பதிவையுமே படிக்கல. அப்புறமென்ன பின்னூட்டம் போட முடியலைன்னு புலம்பல்? சரி பதிவை படிக்காமலே ஆனா பதிவுல உள்ள நாலு வரியை காப்பி பண்ணி ஆஹா ஓஹோ ன்னு பின்னூட்டம் போடுற டெம்ப்ளேட் இருக்கா?

said...

ஒருத்தர் போடுற பின்னூட்டத்தை அப்படியே காப்பி பண்ணி தன்னோட பின்னூட்டமா போடுற டெம்ப்ளேட்(மங்களூர் சிவா டெம்ப்ளேட்) இருக்கா?

said...

///சிங்கப்பூர் -12345678.//

சிங்கப்பூர் போஸ்டல் கோட் ஆறு இலக்கம் தானே? இதுல எட்டு இலக்கம் இருக்கு. எப்படி நம்பி அனுப்புறது?

said...

/
முகவரி:

பின்னூட்ட சேவை மையம்,

#123-12345,

1456,சிங்கப்பூர் முதல் குறுக்குச்சந்து,

சிங்கப்பூர் பிரதான சாலை,

சிங்கப்பூர் -12345678.
/

"சிங்கப்பூர் பஸ்நிலையம் அருகில்"

அட்ரஸை கரெக்டா அடிங்க காசு அனுப்பறவங்க குழம்ப கூடாதில்ல

:))

said...

பயனுள்ள தகவல்கள் !

said...

/
TBCD said...

கணிணியயைத் திறந்து, தமிழ்மணம் பார்த்து, தானே பின்னுட்டம் போடும்மா..

அப்ப எனக்கு ஒன்னு பொட்டலம்..கட்டுங்கப்பா...
/

அந்த எக்ஸ்டா சேவைக்கு எக்ஸ்டா பணம் ஆகுமாம் பரவாயில்லையா???

said...

/
பாரி.அரசு said...

எக்ஸ்லண்ட்... சூப்பர்ப்ப்்ப்ப்ப்்ப்்ப்்ப.....
/

ஓ நீங்களும் ட்ரையல் வெர்ஷன் உபயோகிக்கிறீங்களா??

said...

/
கோவி.கண்ணன் said...

மங்களூர் சிவாவுக்கு கென கவர்ச்சி டெம்ப்ளேட்டுகள் எதுவும் இல்லாததால் இந்த மென்பொருளை நான் ரிஜெக்ட் செய்கிறேன்
/

அண்ணே உங்க அன்புக்கு மிக்க நன்றி!!

இருக்குன்னே இருக்கு!

முழுசா உபயோகிச்சி பாருங்க !!

said...

/
அதிஷா said...

இந்திய பெருங்குடி மக்களுக்கு சிறப்பு சலுகை உண்டா!!!!!!!

இங்க 10-15 தேவை
/

நாமல்லாம் சேர்ந்து ஒரு காப்பி வாங்கி அதை ஹாக் செஞ்சுக்கலாம்

:))))

said...

/
நிஜமா நல்லவன் said...

//பாரி.அரசு said...

எக்ஸ்லண்ட்... சூப்பர்ப்ப்்ப்ப்ப்்ப்்ப்்ப.....//


ரிப்பீட்டேய்....
/
ரிப்பீட்டேய்....

said...

//
மங்களூர் சிவா said...
/
அதிஷா said...

இந்திய பெருங்குடி மக்களுக்கு சிறப்பு சலுகை உண்டா!!!!!!!

இங்க 10-15 தேவை
/

நாமல்லாம் சேர்ந்து ஒரு காப்பி வாங்கி அதை ஹாக் செஞ்சுக்கலாம்

:))))

//
சிவா!!! இப்படி மட்டும் தப்புக்கணக்குப் போட்டுறாதீங்க...
ஹாக் பண்ணினால், ஜீவனுக்கு நேர்ந்த அதே கதி உங்களுக்கும் ஏற்படலாம்...
ஹாக் செய்தால் அப்புறம் மென்பொருள் தவறான பின்னூட்டங்களைத் தரும்.... ஜாக்கிரதை...
:P

said...

அழகான அருமையான பதிவு! :)

said...

நல்ல பதிவு வாழ்த்துக்கள் :)

said...

அண்ணே! மென்பொருள் சூப்பரா வேலை செய்யுது.... :)

said...

நான் இன்னும் பின்னூட்டமே போடலை. அதுக்குள்ள எம்பேர்ல ஒரு பின்னூட்டம் வெளியாயிருச்சு. உண்மையச் சொல்லுங்க. அவ்வளவு பின்னூட்டமும் உங்க மென்பொருளோட வேலை தானே? (ஆமான்னு சொல்லி சந்தை மதிப்ப கூட்டுங்கப்பு!)

said...

//நிஜமா நல்லவன்..

பின்னூட்டத்தை விடுங்க. தினமும் பதிவு போடுற மாதிரி ஏதேனும் டெம்ப்ளேட் இருக்கா? //

அது ஆயில்யன்கிட்ட இருக்கு.. கேட்டு வாங்கிக்கோங்க :P

said...

good info, thanks for sharing.

said...

எனக்கு ஒரு CD