கோவி.கண்ணன் நாளை சிங்கையில் பதிவர் சந்திப்பு ஏற்பாடு செய்துள்ளார். சிங்கைப் பதிவர்கள் அனைவரும் கட்டாயம் கலந்துகொள்ளவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
இடம் : கிழக்குக் கடற்கரைப் பூங்கா (ECP), கோமளாஸ்/மெக்டொணால்ட் உணவகங்களுக்குப் பின்னால்.
(கிழக்குக் கடற்கரைப் பூங்க 2கி.மீட்டருக்கும் அதிக நீளமுள்ளது என்பதால் சரியான பேருந்து நிறுத்தத்தில் இறங்கவும். வாடகைக்கார்/ சொந்தக் காரில் வருவோர் ஓட்டுனரிடம் மெக்டொனால்ட் உணவகம் அருகில் இறக்கிவிடச் சொல்லவும்..)
...................
மலேசிய மாரியாத்தா வரப்போவதில்லை என்று சொல்லிவிட்டதால், வீணை மழை எதுவும் இருக்காது என்றாலும், வான் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக முன்னுரைக்கப்பட்டுள்ளதால் அனைவரும் கட்டாயம் குடைகளுடன் வரவும்...
...................
என்ன பேசலாம்?எதைப்பற்றி வேண்டுமானாலும் பேசலாம்.. ஆனால் சில விடயங்கள் முக்கியமாக விவாதிக்கப் படும் எனத் தெரிகிறது.
**கோவியார் வலையுலகில் இருந்து ஓய்வு பெறும் முடிவை சந்திப்பின் போது அறிவிப்பார் எனத் தெரிகிறது.(இதுவரை ஒரு நாளைக்கு 10 பதிவுகள் எழுதியவர், ஓய்வுக்குப் பிறகு 1 அல்லது 2பதிவுகள் மட்டும் எழுதுவார் எனத் தெரிகிறது) அத்துடன் தனது வலையுலக வாரிசாகப் பதிவர் பாரி.அரசுவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப் படுகிறது. வாரிசாகத் தன்னை அறிவிக்கவில்லை என்ற கோபத்தில் தான் டிபிசிடி மலேசியாவில் இருந்து இந்தியா திரும்பிவிட்டார் என்றும் தெரிகிறது.
**கோவியார் எடுத்த முதல் படம் சுமாராக ஓடிவிட்டதால் பாரி.அரசுவைக் கதாநாயகனாகக் கொண்டு(எவ்வளவோ பார்த்துட்டோம்.. இதையும் பார்க்கமாட்டமா என்ன...:P ) புதிய படம் எடுக்க முடிவு செய்துள்ளார். இந்தப் படம் முழுக்க முழுக்க சிங்கை மற்றும் மலேசியாவில் படமாக்கப் படும். பெயர் தெரியாத மலேசிய இந்தியர் ஒருவர் கதாநாயகி. கோவியாரும் இதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் எனத் தெரிகிறது. இதற்கான கதை விவாதமும் நடக்கும் எனத் தெரிகிறது..
**பாரி.அரசு தனது "பீல்டு" அனுபவங்களை அனைவருக்கும் விளக்குவார் எனவும் தெரிகிறது..
.................
கோவியார் தனது தொலைபேசி எண்ணை(65 9876 7586) அவரது பதிவில் தந்திருக்கிறார். சந்திப்பு நடக்கும் இடத்திற்கு வர வழி தெரியாதவர்கள் அவரைத் தொடர்பு கொள்ளவும்.. எனது தொலைபேசி எண்ணும்(65 9002 6527) தந்திருக்கிறார். ஆனால் 1/2 மணி நேரத்தில் வந்து சேர்ந்துவிடக்கூடிய இடத்திற்கு என்னிடம் வழிகேட்டு வந்தால் 3 மணி நேரம் ஆகிவிடக்கூடிய வாய்ப்பு இருப்பதால் என்னிடம் வழிகேட்பதைத் தவிர்க்கவும்.. :)
எப்படியும் சந்திப்பு இனியதாக இருக்கும் என்பதற்கு என்னால் உத்திரவாதம் தரமுடியும். எனவே அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளவும்!!
Friday, June 13, 2008
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
test
//கோவி.கண்ணன் நாளை சிங்கையில் பதிவர் சந்திப்பு ஏற்பாடு செய்துள்ளார். //
நாமெல்லாம் சேர்ந்துதான் செய்தோம். கோவி.கண்ணம் மட்டும் அல்ல.
//கோவியார் வலையுலகில் இருந்து ஓய்வு பெறும் முடிவை சந்திப்பின் போது அறிவிப்பார் எனத் தெரிகிறது.(//
இப்படியெல்லாம் போட்டு ஒடைப்பாங்களா. ஒரு அறிவிப்பை மனசோடு வச்சிக்க மாட்டீங்களே.
//வாரிசாகத் தன்னை அறிவிக்கவில்லை என்ற கோபத்தில் தான் டிபிசிடி மலேசியாவில் இருந்து இந்தியா திரும்பிவிட்டார் //
இனிமே ப்ளாக் எழுதினால் கையை உடைத்து அடுப்பில் வைத்துவிடுவேன் என்று மிரட்டல் வருதாம். வீட்டில் இருந்துதான். :)
அவரை வாரிசாக்கினாலும் பதவி விலகிடுவார்.
//பாரி.அரசுவைக் கதாநாயகனாகக் கொண்டு(எவ்வளவோ பார்த்துட்டோம்.. இதையும் பார்க்கமாட்டமா என்ன...:P )//
அவருக்கென்ன குறச்சல் ?
உங்களுக்கு ஏன் கொடச்சல் ?
அவரு மிலிடெரி சார்ட்ஸில் அட்டகாசமாக இருப்பார் தெரியுமா ?
//எப்படியும் சந்திப்பு இனியதாக இருக்கும் என்பதற்கு என்னால் உத்திரவாதம் தரமுடியும். //
கார போண்டாவுக்கு பதிலாக இனிப்பு போண்டா வழங்கப்படும் என்று சொல்கிறீர்கள்.
:)
//என்ன பேசலாம்?எதைப்பற்றி வேண்டுமானாலும் பேசலாம்.. ஆனால் சில விடயங்கள் முக்கியமாக விவாதிக்கப் படும் எனத் தெரிகிறது//
அப்படி என்னையா முக்கியமான விஷயம் :-?
//கோவியார் எடுத்த முதல் படம் சுமாராக ஓடிவிட்டதால் //
நாங்க பார்க்கலையே... நாங்க தினமும் வலைப்பதிவில் வேற படம் தான் பார்த்துட்டு இருக்கோம் ;-)
கோவிக்கண்ணன் மறக்காம பெடோக் ல என்ன பிக் அப் பண்ணிக்குங்க :-)
வாங்க கிரி!!!
அவர் ஏன் உங்களை பெடாக்கில் பிக்கப் செய்யனும்?? தேம்பனீஸிலேயே பிக்கப் பண்ணலாமே?
//பாரி.அரசுவைக் கதாநாயகனாகக் கொண்டு(எவ்வளவோ பார்த்துட்டோம்.. இதையும் பார்க்கமாட்டமா என்ன...:P )//
ஏனிந்த கொலவெறி! :(
//
//பாரி.அரசுவைக் கதாநாயகனாகக் கொண்டு(எவ்வளவோ பார்த்துட்டோம்.. இதையும் பார்க்கமாட்டமா என்ன...:P )//
அவருக்கென்ன குறச்சல் ?
உங்களுக்கு ஏன் கொடச்சல் ?
அவரு மிலிடெரி சார்ட்ஸில் அட்டகாசமாக இருப்பார் தெரியுமா ?
//
அதானே! :)
//அவர் ஏன் உங்களை பெடாக்கில் பிக்கப் செய்யனும்?? தேம்பனீஸிலேயே பிக்கப் பண்ணலாமே?//
இல்லங்க அவர் எதோ பஸ் நம்பர் சொன்னார்.. நான் தேம்பாநீஸ் க்கு வருவதை விட பெடோக் தான் சுலபம். எனா.. அவர் அங்கே இருந்து தான் பஸ் ஏறனும்னு கூறினார்.
Post a Comment