சிங்கப்பூரில் எல்லா இடங்களிலும் தமிழ் இருக்கும். இதைப் பார்க்கும்போது எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது.
"தளமேடை இடைவெளியை கவனத்தில் கொள்ளுங்கள்", "விளக்கு மின்னும் போது உள்ளே நுழையாதீர்கள்" என்பது போன்ற வாக்கியங்களைப் பார்க்கும்போதும் கேட்கும்போதும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். இது போல அனைத்து இடங்களிலும் தமிழ் இருக்கும்.
ஒரு வேலையாக இந்தியத் தூதரகத்திற்கு சென்றேன். அங்கு தமிழ் இல்லை. ஆங்கிலமும், இந்தியும் மட்டுமே உள்ளது. சிங்கப்பூரின் எல்லா இடங்களிலும் தமிழ் இருக்கும் போது இந்தியத் தூதரகத்தில் மட்டும் இல்லாமல் இருப்பது நெருடலாக இருக்கிறது.
தமிழர்கள் அதிகம் வாழும் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் இந்திய அரசு ஏன் தமிழுக்கும் ஆதரவு தரக்கூடாது? இத் தூதரகங்களில் தமிழிலும் அலுவல்களை நடத்தலாமே?
Subscribe to:
Post Comments (Atom)
31 comments:
தமிழார்கள் அதிகமாக வாழும் இலங்கை,மலேசியா,சிங்கப்பூர் நாடுகளில் தமிழர்கள் இந்தியத் தூதுவர்களாக நியமிக்கப் படவேண்டும்.இது குறித்துத் தமிழகத்தில் குரல் எழுந்துள்ளது.
விரைவில் நிகழ்ட்டும்.
//ஒரு வேலையாக இந்தியத் தூதரகத்திற்கு சென்றேன். அங்கு தமிழ் இல்லை. ஆங்கிலமும், இந்தியும் மட்டுமே உள்ளது. சிங்கப்பூரின் எல்லா இடங்களிலும் தமிழ் இருக்கும் போது இந்தியத் தூதரகத்தில் மட்டும் இல்லாமல் இருப்பது//
விடை மிக எளிது, அங்கு 'உத்தி'யோகம் பார்பவர்கள் எவரும் தமிழர் இல்லை என்று நினைக்கிறேன்
வேதனை தரும் முரண். சரியா சுட்டிக் காட்டி இருக்கீங்க.
/"தூதரகங்களில் தமிழிலும் அலுவல்களை நடத்தலாமே"/
Excellent idea.
Rumya
இந்திய அரசின் போக்கு கண்டிக்க தக்கது தான், மத்திய அரசை பொறுத்தவரை ஹிந்தியர்கள் மட்டும் தானோ என்னவோ?
அவர்களுக்கு எழுதி பிரதியை பத்திரிகைகளுக்கும் அனுப்பவும்.
லண்டனில் பாகிஸ்தானியர் அதிகம் வசிக்கும் பகுதிக்குச் சென்ற போது
அங்கே உருது அறிவிப்புகள் கண்டேன்.
பிரான்சில் 'மார்சைய் 'எனும் இடத்தில் அரபு அறிவிப்பு உண்டு.அல்ஜீரிய,துனிசிய,மொறொக்கோ மக்களுக்காக.
:-))
I do agree with you! They should put tamil.
நல்ல கேள்வியைத்தான் கேட்டுருக்கீங்க.
அவுங்கதான் 'ஹிந்தி மட்டும்தான் இந்தியா'ன்னு நினைக்கிறாங்களே(-:
பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி.
இன்று இரவு விரிவாக பதில் தருகிறேன்
அன்புடன்
ஜெகதீசன்.
இந்த இடுகைக்கு சம்மந்தம் இல்லாத பின்னூட்டங்களை வெளியிட மாட்டேன்.
கிறுக்குத்தனமான பின்னூட்டம் இட்ட நண்பருக்கு நன்றி.(பின்னூட்டம் இட்டது அவரா அவரது போலியா என்பது பற்றி எனக்குக் கவலை இல்லை).
மிக முக்கியமான கேள்வி ஜெகதீசன், பதிவுக்கு நன்றி!
பொதுமக்களுக்கு பயன்படாத சட்டங்கள், மரபுகள் என்று இற்றுப்போன கூடாரமாகவே இந்திய அரசியலமைப்பு இருக்கிறது.
நீங்கள் இங்கே மொழி மட்டுமல்ல, வேறொன்றையும் கவனித்தீர்கள் என்றால்... சிங்கையில் அனைத்து அரசு சார்ந்த அலுவல்களும் பொதுமக்களிடம் மிகுந்த மரியாதையுடனும், சேவை நோக்குடனும் செயல்படுவார்கள். ஆனால் இந்திய தூதரகத்தில் நீங்கள் மிகுந்த அவமதிப்புடன் நடத்தபடுவீர்கள். எந்த கேள்வி கேட்டாலும் அலட்சியம், அவமரியாதையை தவிர எந்த முறையான நடவடிக்கையுமிருக்காது.
வேலைவாய்ப்பின்றி சிங்கைக்கு கூலி தொழிலாளர்களாக வருகிற தமிழ் சகோதரர்களை அவர்கள் நடத்துகிற முறை என்னை பலமுறை வேதனைக்குள்ளாக்கியிருக்கிறது.
பொதுமக்களுக்கு பயன்படாத எந்த சட்டமும், மரபும் தூக்கியெறிய பட வேண்டும். அதற்க்கு சிங்கை வாழ் தமிழர்கள் மிக கடுமையான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.
///ஆனால் இந்திய தூதரகத்தில் நீங்கள் மிகுந்த அவமதிப்புடன் நடத்தபடுவீர்கள். எந்த கேள்வி கேட்டாலும் அலட்சியம், அவமரியாதையை தவிர எந்த முறையான நடவடிக்கையுமிருக்காது.///
100% உண்மை
துபாய் தூதரகத்திலும் இக்குறை இருந்தது. அங்குள்ள தமிழ் அமைப்புகள் அனைத்தும் ஒட்டு மொத்தமாக குரல் எழுப்பி கோரிக்கை வைத்ததும் தற்போது தமிழ் ஒலிக்கிறது. ஆம் தொலைபேசியில் தமிழ் ஒலிக்கிறது
அங்கு தமிழ் மட்டுமல்ல, வேறு வசதி எதுவும் இல்லை. நகல் அல்லது படம் எடுக்க வேண்டுமானால், பத்து நிமிட தூரம் போக வேண்டும். அங்கு சிங்கை தமிழர்கள் உத்தியோகம் பார்க்கிறார்கள்.
//
Thamizhan said...
தமிழார்கள் அதிகமாக வாழும் இலங்கை,மலேசியா,சிங்கப்பூர் நாடுகளில் தமிழர்கள் இந்தியத் தூதுவர்களாக நியமிக்கப் படவேண்டும்.இது குறித்துத் தமிழகத்தில் குரல் எழுந்துள்ளது.
விரைவில் நிகழ்ட்டும்.
//
விரைவில் நிகழும் என நம்புவோம்..
// கோவி.கண்ணன் said...
விடை மிக எளிது, அங்கு 'உத்தி'யோகம் பார்பவர்கள் எவரும் தமிழர் இல்லை என்று நினைக்கிறேன் //
இருக்கலாம்....
ரவிசங்கர், அனானி(ரம்யா)
உங்கள் கருத்துக்கு நன்றி.
//
வவ்வால் said...
இந்திய அரசின் போக்கு கண்டிக்க தக்கது தான், மத்திய அரசை பொறுத்தவரை ஹிந்தியர்கள் மட்டும் தானோ என்னவோ?
//
அப்படித்தான் தெரிகிறது..
மத்திய அரசின் மொழிக் கொள்கையில் மாற்றம் தேவை..
//
லண்டனில் பாகிஸ்தானியர் அதிகம் வசிக்கும் பகுதிக்குச் சென்ற போது
அங்கே உருது அறிவிப்புகள் கண்டேன்.
பிரான்சில் 'மார்சைய் 'எனும் இடத்தில் அரபு அறிவிப்பு உண்டு.அல்ஜீரிய,துனிசிய,மொறொக்கோ மக்களுக்காக.
//
யோகன் பாரிஸ்,
இங்கும் மற்ற எல்லா இடங்களிலும் தமிழ், மலாய், சீனம் ஆகிய மூன்றிலும் அறிவிப்புகள் இருக்கும்.
//இந்திய தூதரகத்தில் நீங்கள் மிகுந்த அவமதிப்புடன் நடத்தபடுவீர்கள். எந்த கேள்வி கேட்டாலும் அலட்சியம், அவமரியாதையை தவிர எந்த முறையான நடவடிக்கையுமிருக்காது//
பாரி.அரசு,
இது முற்றிலும் உண்மை.
ப்ரசன்னா, m, அனானி,
உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி.
நல்ல பதிவு.
மிகவும் வேதனைக்குரிய விடயம்.
இலங்கையில் உள்ள உயர்தானிகர் அலுவலகத்தின் உள்ளே சென்றதில்லை ஆனால் வெளியே தமிழ், சிங்களம், ஹிந்தி மொழிகளில் கண்டதாக ஞாபகம்!!!!
//இலங்கையில் உள்ள உயர்தானிகர் அலுவலகத்தின் உள்ளே சென்றதில்லை ஆனால் வெளியே தமிழ், சிங்களம், ஹிந்தி மொழிகளில் கண்டதாக ஞாபகம்!!!!//
உள்ளே சிங்களமும் ஆங்கிலமும் தான் இருக்கின்றது. மருந்துக்கும் தமிழ் இல்லை. காரணம் நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. சிங்களவர்களை விட இந்திய உயர் ஸ்தானிகர் அலுவலகத்தில் பணியாற்றுபவர்களுக்கு ஈழத்தமிழரைப் பிடிக்காது. சிங்களவருக்கு கிடைக்கும் மரியாதை அங்கே தமிழருக்கு கிடைப்பதில்லை.
இது இந்திய அரசின் மெத்தனபோக்கு மற்றும் அலட்சியத்தைக்காட்டுகிறது.
தூதரகங்களில் இந்திய ஆட்சிமொழிகள் அனைத்திலும் அறிவிப்புகள் இருத்தல் அவசியம்.
க.வி
Yes, I called the Indian High Commission at Singapore and conveyed my(our) concern about the lack of Tamil usage at the High Commission. They replied that they "will look into it". If we can organize an online petition and submit the request through proper channels(?!), some thing positive might happen.
தமிழ் இந்தியாவின் தேசிய மொழி இல்லியே. என்ன சொன்னாலும் நாம் இன்னும் இந்தியாவில் மைனாரிட்டி மொழி பேசும் மக்கள்னு நினைக்கிற போது எரிச்சல் வந்தாலும், உண்மை அதுதாங்கிற நினைப்பு வரும்போது ஒன்னும் செய்ய முடிவதில்லை.
//
ILA(a)இளா said...
தமிழ் இந்தியாவின் தேசிய மொழி இல்லியே. என்ன சொன்னாலும் நாம் இன்னும் இந்தியாவில் மைனாரிட்டி மொழி பேசும் மக்கள்னு நினைக்கிற போது எரிச்சல் வந்தாலும், உண்மை அதுதாங்கிற நினைப்பு வரும்போது ஒன்னும் செய்ய முடிவதில்லை.
//
நன்றி இளா.. ஆனால் சிங்கை, மலேசியா போன்ற நாடுகளில் இருக்கும் இந்தியர்களில் "மெஜாரிட்டி" தமிழர்கள் தானே? இத் தூதரகங்களின் பணி இவர்களுக்காகத் தானே?
அதுதான் இந்த ... புத்தி. எல்லா இந்தியர்களுக்கும் இந்தி பேசத்தெரியும் என்பது பலரின் நினைப்பு.என்ன செய்ய. இது தலை விதி.
//
அதுதான் இந்த ... புத்தி. எல்லா இந்தியர்களுக்கும் இந்தி பேசத்தெரியும் என்பது பலரின் நினைப்பு.என்ன செய்ய. இது தலை விதி.
//
இங்கு வேலைக்கு வரும் தொழிலாளர்களில் பெரும்பாண்மை இந்தி மற்றும் தமிழ் இரண்டும் தெரியாதவர்கள் தான்.. இது "இந்தி"ய அரசுக்கு மட்டும் தான் தெரியவில்லை.....
ஏதேனும் நடந்ததா - தற்போதைய நிலை என்ன
//
cheena (சீனா) said...
ஏதேனும் நடந்ததா - தற்போதைய நிலை என்ன
//
சென்றவருடம் செப்டம்பர் மாதம் ஒரு வேலையாகச் சென்றேன்.. அதுவரை எந்த மாற்றமும் இல்லை..
இரண்டு வாரங்களுக்கு முன்னர் சென்றிருந்தேன். இன்னும் தமிழில் அறிவிப்புகள் எதுவும் அங்கு இல்லை.
இந்திய அரசு அலுவலகங்களுக்கே உரிய அதே பொறுப்பற்ற தனம். சிங்கையில் எல்லா அலுவலகங்களும் காலை 8 மணிக்க்கு ஆரம்பிக்கின்றதென்றால் இவர்கள் வேலை ஆரம்பிப்பது 9 மணிக்கு அதிலும் இவர்கள் எல்லாரும் வந்து அமர்ந்து வேலை செய்ய ஆரம்பிக்கையில் 9.30 கூட ஆகிவிடும். பிறப்பு சான்றிதழ் கேட்டு நாம் சென்றால் இன்று காலையில் நமது விண்ணப்பத்தை வாங்கி விட்டு வெற்று சான்றிதழ் ஒன்றை நம் கையில் கொடுத்து நம்மையே பூர்த்திசெய்ய சொல்கிறார்கள். ஆக பிறப்பு சான்றிதழில் இவர்கள் செய்வது ஒரு கையெழுத்தும், முத்திரையிடுவதும் தான். சரி அதையாவது உடனே செய்து கொடுக்கின்றார்களா என்றால் அதுதான் இல்லை. இன்று காலை 11.30 மணிக்குள் கொடுத்தால் நாளை மாலை 4.15 மணி முதல் 5.15 மணிக்குள் வாங்கிக்கொள்ள வேண்டும் எனும் நிலை.
பெரும்பாலான அலுவலகங்கள் காலை 8 அல்லது 8.30 மணிக்கே திறப்பதால் நாம் ஒரு மணிநேர அனுமதியில் எல்லாம் போய் வர முடியாது. குறைந்தது அரை நாள் விடுப்பு எடுக்க வேண்டியிருக்கும். அதே போல் சான்றிதழ் பெற மாலை 4.15 முதல் 5.15 மணிக்குள் தான் செல்ல வேண்டும் என்பதால் அதற்கும் அரை நாள் விடுப்பு எடுத்தால் தான் உண்டு.
சிங்கை அரசு அலுவலகங்கள் எல்லாம் சனிக்கிழமை அரைநாள் வேலை செய்வார்கள். ஆனால் இவர்களுக்கு 5 நாட்கள் தான் வேலை.
ஆனால் நம்புங்கள் இந்தியர்களே , 2020ல் இந்தியா வல்ரசாகிவிடும்.
ஆனா இப்ப வள் வள்னு விழுற வள்ளரசாத்தான் இருக்கு.
Post a Comment