இளங்கோ, நான் இதற்கு முன் பணி புரிந்த நிறுவனத்தில் என் திட்டப்பணித் தலைவர்(Project Leader). அவர் ரெம்ப நல்லர். நாங்கள் என்ன செய்தாலும் ஒன்றும் சொல்லமாட்டார். அவர் கோவப்பட்டு நாங்கள் பாத்ததே இல்லை.(ஆனால் ஐஸ் வைத்தே எல்லா வேலையும் வாங்கிடுவார்).
ஒரு நாள் திட்டப்பணி மேலாளரிடமிருந்து(Project manager) தொலைபேசி. வழக்கம் போல ஏதோ ஒரு பிரச்சனைய சரியாகப் புரிந்துகொள்ளாமல் இளங்கோவக் காய்ச்சி எடுத்துக் கொண்டு இருந்தார். இளங்கோவும் வழக்கம் போல பொறுமையா விளக்கி அவருக்குப் புரிய வைத்தார். அதுக்குப் பின் எங்களிடம் வந்து வாங்க டீ குடிக்கப் போகலாம்ன்னு கூப்பிட்டார். ("தேனீர் இடைவேளை" என்ற பெயரில் 1/2 மணி நேரம் தினமும் மொக்கை போடுவோம். அந்த மொக்கையில் இளங்கோவும் கலந்து கொள்வார். நான் தான் சொன்னேனே, "அவரு ரெம்ப நல்லவருன்னு")
அன்று பேசும்பொழுது அவரிடம் நான் கேட்டேன், "திட்டப்பணி மேலாளர்(Project manager) படுத்துற பாட்டை எல்லாம் கோவப்படாமல்இருப்பதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் எங்களுடட கிறுக்குத்தனங்களுக்குக் கூட கோவப் படமாமல் இருக்கிறீர்களே. அது ஏன்?" .
அதற்கு அவர் சொன்ன பதில்:
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பா னல்லிடத்துக்
காக்கினென் காவாக்கா லென்.
-திருக்குறள்(அதிகாரம்- 31(வெகுளாமை) ; குறள்-301)
(எங்கு தன் சினம் செல்லுமோ, அங்கு சினங்கொள்ளாதிருப்பவனே சினத்தைக் காப்பவனாவான். சினங்கொள்ள முடியாத இடத்தில் காத்தால்தான் என்ன; காவாக்கால் என்ன?)
ரெம்ப நாள் கழித்து தமிழ் எழுதத் தொடங்கியுள்ளேன். பிழைகள் இருந்தால் சுட்டிக் காட்டுங்கள். திருத்திக் கொள்கிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment