பில்ஸ்பெரி ரொட்டி - செய்முறை
தேவையான பொருட்கள்:
பில்ஸ்பெரி ரெடிமேட் ரொட்டி - 3
வடு மாங்காய் ஊறுகாய் - தேவையான அளவு
செய்முறை:
ப்ரீஸரில் இருந்து 3 ரொட்டிகளை எடுத்து ஒரு 30 நொடிகள் வெளியே வைக்கவும்.
மைக்ரவேவ் அவனை ஆன் செய்து
ஒரு ரொட்டி எனில் 20 நொடி
2 ரொட்டி எனில் 30 நொடி
3 ரொட்டி எனில் 45 நொடி
4 ரொட்டி எனில் 60 நொடி
செட் செய்து ரொட்டிகளை உள்ளே வைக்கவும்.
மைக்ரவேவ் அவனில் கீகீ என்று சத்தம் வந்ததும் அவனை ஆப் செய்துவிட்டு ரொட்டியை வெளியே எடுக்கவும்.
தேவையான அளவு வடுமாங்காய் ஊறுகாயை பாட்டிலில் இருந்து எடுத்து தட்டில் போட்டுக்கொள்ளவும்.
வேற என்ன... டீவி ல சூப்பர் சிங்கர் வைச்சிப் பாத்துக்கிட்டே சாப்பிடுங்க!
குறிப்புகள் சில:
இந்த இடுகையை யார் வேண்டுமானாலும் மீள் பதிவு செய்து கொள்ளலாம். மீள் பதிவு செய்வோர் தயவு செய்து எங்கும் என் பெயரையோ அல்லது இந்த இடுகைக்கான தொடுப்பையோ சேர்த்துவிட வேண்டாம்..
இந்தக் ரொட்டியை யார் வேண்டுமானாலும் செய்து பார்க்கலாம். ஆனால் செய்யத் தொடங்கும் முன் இங்கு வந்து நன்றி சொல்லிப் பின்னூட்டமிட்டுச் செல்லவேண்டும்
நீங்கள் சமைத்த ரொட்டி நன்றாக இருந்தால் அதற்குறிய பாராட்டுக்கள் அனைத்தும் எனக்கே. ஆனால் நன்றாக இல்லையெனில், அதற்கு நான் பொறுப்பல்ல. அதற்கான பொறுப்பை நீங்கள் அல்லது பில்ஸ்பெரி நிறுவனம் ஏற்றுக்கொள்ளவேண்டும்!
இந்த இடுகையில் இருக்கும் நுண்ணரசியல் என்ன என்பதைக் கண்டுபிடிப்போருக்கு ஒரு மாதத்திற்குத் தேவையான பில்ஸ்பெரி ரொட்டி வித் வடுமாங்காய் ஊறுகாய் பரிசாக வழங்கப் படும்.
Subscribe to:
Post Comments (Atom)
28 comments:
மீ த பஸ்ட்டூ!
5 என்றால் என்ன செய்வது என்பதை கொஞ்சம் விளக்கமாகக் கூறவும்.
:-))))...
தலைவா... மெனு-க்கு போட்ட டைம்டேபிள, இப்படி பதிவா போட்டு கலாய்க்குறீங்களே...
தயவு செஞ்சு அந்த நுண்ணரசியல் என்னன்னு சொல்லிடுங்க ப்ளீஸ் (ஃபோன்லயாவது?????)..முடியல...அழுதுடுவேன்...
அடங்க மாட்டீங்களா?????
மீ த தேர்டூ & ஃபோர்த்தூ!!!
/மைக்ரவேவ் அவனில்/
அவன் இவன் என்ற ஏக வசனம் வேண்டாம்....:)
//
தமிழ் பிரியன் said...
5 என்றால் என்ன செய்வது என்பதை கொஞ்சம் விளக்கமாகக் கூறவும்.
//
நல்ல கேள்வி!
முதல் மூன்று ரொட்டிகளை 45 நொடிகள் வைத்து எடுத்து விட்டு, அடுத்த 2 ரொட்டிகளைத் தனியாக 30 நொடிகள் வைக்கவும்!
இது சரிப்பட்டு வராது...நாளை ஜெகதீஸன் வீட்டு கிச்சன் அடைப்பு போராட்டம் சிங்கை பதிவர்கள் சார்பில் நடத்தப்படும்...இது பற்றி யோசப் அண்ணர் விரிவான பதிவு எழுதுவார். அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்..!
சிங்கை வாழ் பதிவர்களே,
உடனே அணி திரண்டு வாருங்கள். மலாய், மாண்டரின் பதிவர்களே நீங்களும் உடனே வாருங்கள். ஜெகதீசனின் கிச்சனை இழுத்து பூட்டிவிட்டு, அவர் கையில் இருக்கும் கேமெரா வைத்த செல்போனையும் பிடுங்கி வருவோம்
இதை சாப்பிட்டு எனக்கு வயிறு சரி இல்லாமல் போச்சி...
//
நீங்கள் சமைத்த ரொட்டி நன்றாக இருந்தால் அதற்குறிய பாராட்டுக்கள் அனைத்தும் எனக்கே. ஆனால் நன்றாக இல்லையெனில், அதற்கு நான் பொறுப்பல்ல. அதற்கான பொறுப்பை நீங்கள் அல்லது பில்ஸ்பெரி நிறுவனம் ஏற்றுக்கொள்ளவேண்டும்!
//
கலக்கல்
:))))))))
//
ஜெகதீசன் said...
//
தமிழ் பிரியன் said...
5 என்றால் என்ன செய்வது என்பதை கொஞ்சம் விளக்கமாகக் கூறவும்.
//
நல்ல கேள்வி!
முதல் மூன்று ரொட்டிகளை 45 நொடிகள் வைத்து எடுத்து விட்டு, அடுத்த 2 ரொட்டிகளைத் தனியாக 30 நொடிகள் வைக்கவும்!
//
2945745694530535 என்றால் என்ன செய்வது என்பதை கொஞ்சம் விளக்கமாகக் கூறவும்.
//
VIKNESHWARAN said...
இதை சாப்பிட்டு எனக்கு வயிறு சரி இல்லாமல் போச்சி...
//
இதுக்கு ஜெகதீசந்தான் காரணம்!!
:)))))))))
:-)))))))))))
:-))))))))))))))
:-)))))))))))))))))))
:-)))))))))))))))))))))))
//கீகீ என்று சத்தம் வந்ததும் அவனை ஆப் செய்துவிட்டு ரொட்டியை
உங்கள் விளக்கத்தில் சொற்குற்றம் உள்ளது..:-)) கீகீ என்று சத்தம் வந்தாலே அவன் ஆப் ஆகிவிட்டது என்றுதானே பொருள்...
//
Jags said...
//கீகீ என்று சத்தம் வந்ததும் அவனை ஆப் செய்துவிட்டு ரொட்டியை
உங்கள் விளக்கத்தில் சொற்குற்றம் உள்ளது..:-)) கீகீ என்று சத்தம் வந்தாலே அவன் ஆப் ஆகிவிட்டது என்றுதானே பொருள்...
//
நாங்கள்ளாம் கரண்ட்டு கிட்ட விளையாட மாட்டோம்..
ஒரு 4 தடவை ஸ்ட்டாப் பட்டனை அமுக்கிட்டு அதுக்கப்புறம் மேல அவன் சுவிட்சை ஆப் பண்ணீட்டுத் தான் அவனையே திறப்போம்...
:P
தம்பி, மைக்ரோ வேவ் மேல் ப்ளாஸ்டிக் பொருள்களை வைக்கக் கூடாது
அடுத்து ருசி ஊறுகாய் பாட்டிலை திறப்பது என்ற பதிவை விரைவில் எதிர்ப்பார்க்கிறேன்.
//நுண்ணரசியல் -3 பில்ஸ்பெரி ரொட்டி//
இப்பதான் பில்ஸ்பரி ரொட்டி சாப்பிட்டேன்.
அதுசரி...
பில்ஸ்பரி ரொட்டி சாப்பிட்டால் பில் உண்டா என்ன?(அதுலயேதான் இருக்கே) சொல்லவே இல்லை.
அடுத்தது,
காபி(குழம்பி) சமைப்பது எப்படி? குழம்பாம செய்முறை எழுதுங்கள்...!
ஃஃஃஃ
இந்த இடுகையில் இருக்கும் நுண்ணரசியல் என்ன என்பதைக் கண்டுபிடிப்போருக்கு ஒரு மாதத்திற்குத் தேவையான பில்ஸ்பெரி ரொட்டி வித் வடுமாங்காய் ஊறுகாய் பரிசாக வழங்கப் படும்.ஃஃஃஃ
எஸ்க்அகப்ப்ப்ப்ப்ப்ப
//
மங்களூர் சிவா said...
//
ஜெகதீசன் said...
//
தமிழ் பிரியன் said...
5 என்றால் என்ன செய்வது என்பதை கொஞ்சம் விளக்கமாகக் கூறவும்.
//
நல்ல கேள்வி!
முதல் மூன்று ரொட்டிகளை 45 நொடிகள் வைத்து எடுத்து விட்டு, அடுத்த 2 ரொட்டிகளைத் தனியாக 30 நொடிகள் வைக்கவும்!
//
2945745694530535 என்றால் என்ன செய்வது என்பதை கொஞ்சம் விளக்கமாகக் கூறவும்.
//
இதற்கு பதில் சொல்லாத ஜெகதீசனை ப்ளாகர் சமூகம் வன்மையாக கண்டிக்கிறது!!
என்னமோ சொல்ல வாறிங்களா?
இருந்தாலும் எங்கள் சமையல் குழுமத்தில் சேரும் அனைத்து தகுதிகளும் உங்களுக்கு உண்டு என இப்பதிவு காட்டுகின்றது ;)
:))
கோவி.கண்ணன் said...
\\
தம்பி, மைக்ரோ வேவ் மேல் ப்ளாஸ்டிக் பொருள்களை வைக்கக் கூடாது
\\
இது சூப்பரு...:)
Thooya said...
\\
என்னமோ சொல்ல வாறிங்களா?
இருந்தாலும் எங்கள் சமையல் குழுமத்தில் சேரும் அனைத்து தகுதிகளும் உங்களுக்கு உண்டு என இப்பதிவு காட்டுகின்றது ;)
\\
ஆஹா chef,சொல்லிட்டாங்க...:)
இந்த சமையலதான் காலங்காலமா செய்யுறேன், பதிவா போடனும்னு தோனலியே. ஒருவேளை பீரு போதையில மற்ந்திட்டேன் போல
ரொம்ப கஸ்டப்பட்டு சமைச்சிருக்கீங்க
:-))
Post a Comment