Thursday, January 3, 2008

குசும்பன் சொன்னது சரிதான் - கலைஞர் ஒப்புதல்

இப்பொழுதெல்லாம் அரசியல்வாதிகள் பதிவுகளைப் படிக்கிறார்களோ என சந்தேகம் வந்துள்ளது (சில மாதங்களுக்கு முன்கூட யாரோ இதைப் பற்றிப் பதிவு எழுதினார்கள்)...

கலைஞர் அவர்கள் நேற்று ஒரு கேள்வி-பதில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
முழு செய்தி இங்கே:
என்னுடைய பகுத்தறிவுக்கு வைகோ சான்றிதழ் தேவையில்லை-கருணாநிதி

இதில் விஜயகாந்துக்கு சொல்லியிருக்கும் பதில்:
கேள்வி: கடந்த முப்பதாண்டில் ஒரு தடவையாவது ஏழை மக்களுக்காக சோறு
போட்டிருக்கிறோம் என்று நிருபிக்கத் தயாரா என்று விஜயகாந்த் சவால்
விடுகிறாரே?

பதில்: சபாஷ் இவரும் சவாலா. விசேஷ காலம் போல ஒரு தடவையல்ல, ஒவ்வொரு நாளும் ஏழை
மக்கள் சோறு சாப்பிட வேண்டும் என்பதற்காக பதவிப் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே
ரூ.2க்கு ஒரு கிலோ அரிசி விற்கப்படும் என்று முதல் ஆணை நான் பிறப்பித்தேன். அந்த
ஆணை பிறப்பித்த பிறகு உதாரணமாக தமிழ்நாட்டில் வேளாண்மை பணிகளுக்கு நாற்று நட மகளிர்
கிடைப்பதில்லை என்ற ஒரு குறை உள்ளது.

ஏன் தெரியுமா, ஒரு பெண் இரண்டு நாள் வேலை
செய்தால், அந்த மாதத்திற்கு தேவையான அரிசியை இவர் இரண்டு நாளில் தான் பெறுகின்ற
கூலியிலிருந்து வாங்கி விட முடிகிறது. அந்த இரண்டு நாள் மட்டும் வேலை செய்து விட்டு
பிறகு வேலைக்கே வர மறுக்கிறார்கள்
. பட்டினியாக அல்ல.

இது குசும்பனின் இடுகை:
தமிழகம் முன்மாதிரி மாநிலமாக மாறுகிறதா?
.......ஏன் இப்படி என்று அப்பாவிடம் கேட்டேன் அவர் சொன்னார் இங்கு மட்டும் என்று
இல்லை எங்கேயும் இதுபோல் ஆட்கள் பிரச்சினை இருக்கிறது அரிசி கிலோ இரண்டு ரூபாய்கு
கிடைக்கும் பொழுது யாரும் வேலை செய்து சாப்பிட தயாராக இல்லை, கல் அறுக்க போனால் ஒரு
நாளைக்கு 200 வரை கிடைக்கிறது ஒரு வாரம் போகிறார்கள் ஒரு மாதம் வீட்டில் இருந்து
சாப்பிடுகிறார்கள் என்றார்
பின் அறுவடை அப்பொழுதும் இது போல் ஆட்கள் பிரச்சினை
இருந்ததாகவும் நிறைய பணம் நஷ்டம் என்றார்........

கலைஞரின் கேள்வி-பதில் அறிக்கை குசும்பன் சொன்னதை அப்படியே ஆமோதிப்பது போல இருக்கிறது....

ஒருவேளை அரசியல்வாதிகளும் பதிவுகளைப் படிக்க ஆரம்பிச்சுட்டாங்களோ?? :)))

47 comments:

said...

பாரி அரசு,

கொஞ்சம் ஜெகதீசனை கவணியுங்கள்...

ஜெகதீசன்,

பாரி அதுக்கு அன்பாக ஒரு பதில் பதிவு எழுதினாரே..அதையும் இனைத்திருக்கலாமே..

Anonymous said...

இதை வச்சி நான் ஒரு பதிவு போடலாமின்னு இருந்தேன்..

பரவாயில்லை..

said...

பாலாறும் தேனாறும் ஓடி தமிழகத்தில் ஈ தொல்லை அதிகம் ஆகப் போகிறது.
:))

said...

இடுகைக்கு சம்மந்தம் இல்லாத ஒரு வேண்டுகோள்:

என் கதை பிடித்திருந்தால் இங்கே போய் எனக்கு ஓட்டுப் போடவும்...

said...

//இரண்டு நாளில் தான் பெறுகின்ற
கூலியிலிருந்து வாங்கி விட முடிகிறது. அந்த இரண்டு நாள் மட்டும் வேலை செய்து விட்டு
பிறகு வேலைக்கே வர மறுக்கிறார்கள். பட்டினியாக அல்ல. //

ஜெ - மாதிரி காமடி செய்ய ஆரம்பித்துவிட்டார் கலைஞர்.
:))))))

Anonymous said...

நான் ஆட்சிக்கு வந்தால் படி அரிசி ஒத்த ரூபாய்தான்

Anonymous said...

நான் கேள்வி கேட்டதால் தான் கலைஞர் பீற்றிக் கொள்கிறார். இல்லை என்றால் இந்த நற்செய்தி தமிழகத்தை எட்டி இருக்காது. இதன் பெருமை தேமுதிக வையே சேரும்

Anonymous said...

தமிழக மக்களேஎ, இதிலிருந்து என்ன தெரிகிறது, இரண்டு நாள் வேலை செய்தால் தான் ஒரு மாததத்திற்கு தேவையான அரிசி கிடைக்கிறதாம். நான் ஆட்சிக்கு வந்தால் அந்த இரண்டூ நாள் வேலையும் செய்யாமல் இலவச அரிசி வழங்குவேன்.

வாழ்க புரட்சித்தலைவர் நாமம்

Anonymous said...

எங்கே குஜராத் போன்று தமிழகத்திலும் பிஜேபி ஆட்சி அமைத்துவிடும் என்ற அச்சத்தில் திமுக அரசு சாதனை என்று சொல்லி இதனை வெளியில் சொல்வதில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது, பிஜேபிதான் அடுத்த ஆட்சி, அத்வானிதான் அடுத்த பிரதமர்

Anonymous said...

இரண்டு ரூபாய்க்கு அரிசி கொடுத்தால் போதுமா ? ஏழை மாணவர்களுக்கு தலா இரண்டு சீட்டு மருத்துவ கல்லூரியிலும், பொறியியல் கல்லூரியிலும் கொடுக்க வேண்டாமா ?

Anonymous said...

அரிசி கொடுத்தார்களாம் அரிசி, பருப்பு, விறகு, மளிகை சாமான்களை யார் கொடுப்பது ?

Anonymous said...

சூப்பர்??

கலக்கல்??

Anonymous said...

இது திமுகவின் தனிப்பட்ட சாதனை அல்ல, காங்கிரஸ் கட்சி போராடியதால் 2 ரூபாய்க்கு அரிசி கிடைக்கிறது, இல்லை என்றால் 2 ரூபாய்க்கு ஒரு குடம் தண்ணீர் கூட கிடைத்திருக்காது

said...

சூப்பர்

கலக்கல்

Anonymous said...

அரிசு கொறச்சி கொடுத்துது ஓகே, ஆனா சினிமா டிக்கெட் கொறக்கப் கூடாது. நாங்கெல்லாம் கால் வலிச்சு ஆடுறோம்

said...

போதும்... ப்ளீஸ்.... அழுதுருவேன்...
அவ்வ்வ்வ்வ்வ்வ்

said...

மற்ற கமெண்டெல்லாம் உணவு இடைவேளைக்குப் பிறகு, முடிந்தால் நண்பர் டிபிசிடி அல்லது மங்களூர் சிவா அல்லது வவ்வால் தொடரவும். அப்படியும் இல்லை என்றால் சுபிதி வழியாக ஜெகதீசனே செய்யவும். இது அன்பு வேண்டுகோள்

சுபிதி - சுய பின்னூட்டத் திட்டம்

said...

இந்த விஷயத்தை ஒரு அரசியல்வாதியின் பார்வையில் இல்லாமல்... ஒரு நுகர்வோரின் பார்வையில் பார்த்தோமென்றால்... அரிசியின் மதிப்பு தெரியும்.... ஏழைகளின் வலி புரியும்

said...

மேலே பெயரில் இருக்கும் கமெண்ட் நான் போட்டது அல்ல!!!

///கூலியிலிருந்து வாங்கி விட முடிகிறது. அந்த இரண்டு நாள் மட்டும் வேலை செய்து விட்டு
பிறகு வேலைக்கே வர மறுக்கிறார்கள். பட்டினியாக அல்ல.////

இதை நாம சொன்னா லூசும்பாங்க:))))

said...

//
TBCD said...
பாரி அரசு,

கொஞ்சம் ஜெகதீசனை கவணியுங்கள்...

ஜெகதீசன்,

பாரி அதுக்கு அன்பாக ஒரு பதில் பதிவு எழுதினாரே..அதையும் இனைத்திருக்கலாமே..

//
அரசுக்கு வேற வேலை இருக்காம்... "******* சொல்லாடல்கள்" அடுத்த பகுதி எழுதனுமாம்... அதனால வரமாட்டார்..
:)
**********************
நன்றி!!
//
குசும்பன் said...
இதை வச்சி நான் ஒரு பதிவு போடலாமின்னு இருந்தேன்..

பரவாயில்லை..

//

said...

//
கோவி.கண்ணன் said...
பாலாறும் தேனாறும் ஓடி தமிழகத்தில் ஈ தொல்லை அதிகம் ஆகப் போகிறது.
:))
......
ஜெ - மாதிரி காமடி செய்ய ஆரம்பித்துவிட்டார் கலைஞர்.
:))))))
//
நன்றி...
கும்மி கமெண்ட் எல்லாம் நீங்க போடலைன்னு நம்புறேன்... அதுக்கும் நன்றி!!!! :P

said...

//
த.ம.பா.பி.போ.சங்கம் (இந்தியா) said...
சூப்பர்??

கலக்கல்??
............
மங்களூர் சிவா said...
சூப்பர்

கலக்கல்
//
வாங்க சிவா...
கும்மில உங்க பங்கும் இருக்கோ?
:P

said...

//
கோவி.கண்ணன் said...
மற்ற கமெண்டெல்லாம் உணவு இடைவேளைக்குப் பிறகு, முடிந்தால் நண்பர் டிபிசிடி அல்லது மங்களூர் சிவா அல்லது வவ்வால் தொடரவும். அப்படியும் இல்லை என்றால் சுபிதி வழியாக ஜெகதீசனே செய்யவும். இது அன்பு வேண்டுகோள்

சுபிதி - சுய பின்னூட்டத் திட்டம்

//
அடப் பாவிகளா... இத்தன பேர் சேந்தா கும்முனீங்க...
:((

said...

//
குசும்பன் said...
மேலே பெயரில் இருக்கும் கமெண்ட் நான் போட்டது அல்ல!!!

///கூலியிலிருந்து வாங்கி விட முடிகிறது. அந்த இரண்டு நாள் மட்டும் வேலை செய்து விட்டு
பிறகு வேலைக்கே வர மறுக்கிறார்கள். பட்டினியாக அல்ல.////

இதை நாம சொன்னா லூசும்பாங்க:))))

//
வாங்க குசும்பன்...

அந்தக் கமெண்ட் நீங்க போடலைன்னும் தெரியும்... யார் போட்டதுன்னும் தெரியும்.... :P

said...

//
maduraikkaran said...
இந்த விஷயத்தை ஒரு அரசியல்வாதியின் பார்வையில் இல்லாமல்... ஒரு நுகர்வோரின் பார்வையில் பார்த்தோமென்றால்... அரிசியின் மதிப்பு தெரியும்.... ஏழைகளின் வலி புரியும்

//
நன்றி மதுரைக்காரன்!

Anonymous said...

கலைஞர் எப்பவுமே காப்பி அடிப்பார்

Anonymous said...

//
மற்ற கமெண்டெல்லாம் உணவு இடைவேளைக்குப் பிறகு, முடிந்தால் நண்பர் டிபிசிடி அல்லது மங்களூர் சிவா அல்லது வவ்வால் தொடரவும். அப்படியும் இல்லை என்றால் சுபிதி வழியாக ஜெகதீசனே செய்யவும். இது அன்பு வேண்டுகோள்
//
அவங்க எதுக்கு? நான் பாத்துக்கிறேன்...

said...

////
Good Follower said...

கும்முறது கும்முறீங்க... http://surveysan.blogspot.com/2008/01/blog-post.html இங்க போய் எனக்கு ஒரு ஓட்டு போட்டுட்ட்டு வந்து கும்முங்க...

Anonymous said...

எவ்வளவோ பண்ணிட்டோம் இதப் பண்ண மாட்டோமா?? போட்டச்சு சார்...

Anonymous said...

//கும்முறது கும்முறீங்க... http://surveysan.blogspot.com/2008/01/blog-post.html இங்க போய் எனக்கு ஒரு ஓட்டு போட்டுட்ட்டு வந்து கும்முங்க...
//

எவ்வளவோ பண்ணிட்டோம் இதப் பண்ண மாட்டோமா?? போட்டச்சு சார்...

வீடு தேடி வந்து ஓட்டு கேப்பாங்க. நீங்க வீட்டுக்கு வந்தவன்கிட்ட ஓட்டு கேக்கிறீங்க.. பரவாயில்லை...

said...

//
எவ்வளவோ பண்ணிட்டோம் இதப் பண்ண மாட்டோமா?? போட்டச்சு சார்...

வீடு தேடி வந்து ஓட்டு கேப்பாங்க. நீங்க வீட்டுக்கு வந்தவன்கிட்ட ஓட்டு கேக்கிறீங்க.. பரவாயில்லை...
//
நன்றி!! அப்ரூவ் பண்ணீட்டீங்களா??
உங்க வீட்டு அட்ரஸ் தாங்க அங்கயும் வந்து கேக்குறேன்.... :)

Anonymous said...

//உங்க வீட்டு அட்ரஸ் தாங்க அங்கயும் வந்து கேக்குறேன்.... :)
//
சென்னை வரும் போது சொல்லுங்க...

Anonymous said...

//*வாக்காளன் said...
//கும்முறது கும்முறீங்க... http://surveysan.blogspot.com/2008/01/blog-post.html இங்க போய் எனக்கு ஒரு ஓட்டு போட்டுட்ட்டு வந்து கும்முங்க...
//

எவ்வளவோ பண்ணிட்டோம் இதப் பண்ண மாட்டோமா?? போட்டச்சு சார்...

வீடு தேடி வந்து ஓட்டு கேப்பாங்க. நீங்க வீட்டுக்கு வந்தவன்கிட்ட ஓட்டு கேக்கிறீங்க.. பரவாயில்லை...*//

வாக்களிக்கும் வயது வந்தாச்சா..

வாக்களிச்சா அதை மின்ஞ்சலில் ஆமோதிக்கனும்..

இவன்,
தலைமை தேர்தல் ஆனையாளர்

Anonymous said...

கலைஞர் ரூ.2 -க்கு அரிசி குடுத்ததால் நாட்டில் எல்லோரும் ஓவராக அரிசி உணவு சாப்பிட்டு தொப்பை பெருத்து திரிகிறார்கள்..

Anonymous said...

இந்த அன்புமணி என்னை கிண்டல் பண்றார். கலைஞர் ரு.2 -க்கு துணி குடுத்தா நா எல்லாத்தயும் மறச்சுப்பேன்...

Anonymous said...

///டாக்டர் அன்புமணி said...
கலைஞர் ரூ.2 -க்கு அரிசி குடுத்ததால் நாட்டில் எல்லோரும் ஓவராக அரிசி உணவு சாப்பிட்டு தொப்பை பெருத்து திரிகிறார்கள்..///

இதை அம்மையார் தான் சொல்லுவார்கள் என்று எதிர்ப்பார்த்தேன்.

இன்னமும், புலிகளுக்கு அரிசி கிடைக்கவே, ரூ.2க்கு அரிசி விற்கப்படுகிறது என்று சொல்லுவார் பாருங்கள்

Anonymous said...

எங்க அம்மா ஆட்சி வந்தால், ரூ.2க்கு ஜின் பாட்டிலும், ஆப்பிளும் தருவோம். அது தான் எங்கம்மா சாப்பிடுறாங்க.

Anonymous said...

//வாக்களிக்கும் வயது வந்தாச்சா..

வாக்களிச்சா அதை மின்ஞ்சலில் ஆமோதிக்கனும்..
//

ஆச்சு.. நாங்கள்ளாம் கில்லி...

Anonymous said...

எல்லோர்க்கும் ரூ.2 க்கு அரிசிக் கொடுத்து, வன்னியர்களுக்கு, படையாட்சிகளுக்கு கூலிக்கு வேலை செய்ய ஆள் கிடைக்காமல் தவிக்க விட்டார் கலைஞர் என்று நான் சொன்னால், விமர்சனம் செய்கிறேன் என்று சொல்லுவார்கள். நாங்கள் தான் உன்மையான எதிர்க்கட்சி.

Anonymous said...

//
நமீதா said...
இந்த அன்புமணி என்னை கிண்டல் பண்றார். கலைஞர் ரு.2 -க்கு துணி குடுத்தா நா எல்லாத்தயும் மறச்சுப்பேன்...
//
அப்படி ஒண்ணு நடந்தா அதுக்கப்புறம் ஒரு பய எனக்கு ஓட்டு போட மாட்டான்.

Anonymous said...

//நமீதா said...
இந்த அன்புமணி என்னை கிண்டல் பண்றார். கலைஞர் ரு.2 -க்கு துணி குடுத்தா நா எல்லாத்தயும் மறச்சுப்பேன்...
//

அப்படி ஒண்ணு நடந்தா அதுக்கப்புறம் ஒரு பய கலைஞர் டி.வி. பாக்கமாட்டான்.
உனக்கும் கலைஞர் டி.வி.ல வேல இல்லாம போயிடும்.

Anonymous said...

மு.க-ங்கறது 2 எழுத்து. அதனால தான் இவங்க 2 ரூபாய்க்கு அரிசி குடுக்குறாங்களே தவிர இதில் இவங்க மக்கள் பிரச்சினயப் பத்தி கவலப்பட்டு 2 ரூபாய்க்கு அரிசி குடுக்கிறதா எனக்கு தோணல.

Anonymous said...

திரு சோ அவர்கள் 1-க்கும் 3-க்கும் நடுவில் இருக்கும் 2 பற்றி சொல்லியிருப்பதால் தான் அவரை நான் நடுநிலைவாதி என்று இங்கு நிறுவ விரும்புகிறேன்.

Anonymous said...

என்னங்க ஒருத்தர் உணவு இடைவேளை போயிட்டு வரேன். அதுவர நீ கும்முன்னு சொல்லிட்டு போனாரு. போனவரை காணோமே. திரும்பி பாத்தா நான் மட்டும் இருக்கேன். ரொம்ப மோசம்.........

Anonymous said...

எனக்கு கவுண்டமணி சைக்கிள் தர மாட்டேங்கிறார். அதனால கலைஞர் 2 ரூபாய்க்கு சைக்கிள் குடுத்த நல்ல இருக்கும்..

Anonymous said...

if no one is working, who is cultivating the 2 rupees rice?

1. rice falling from sky.
2.rice is imported.
3.farms are automated.
4. magic.
5.mu.ka is lying?

said...

இப்போ எல்லாம் குசும்பன் எதிர்காலத்தில் நடப்பதை முன் கூட்டியே எழுதுகிறார். :))