Tuesday, December 4, 2007

நச்சுனு ஒரு கதை - தப்பா நினைக்க மாட்டயே?

அந்தச் சீனப் பெண், என் பக்கத்து வீடு தான் என்றாலும் இது வரை அவளுடன் பேசியதில்லை. எப்போதாவது லிப்ட்டில் இருவரும் சந்திக்கும் போது ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொள்வோம். அவ்வளவுதான்.

எப்படியாவது அவளிடம் அந்த விசயத்தைப் பேசிவிடவேண்டும் என நினைத்தேன். எப்படித் தொடங்குவது என்று தெரியவில்லை. அவளுடன் அதிகப் பழக்கமும் இல்லை. அதனால் மெதுவாக அவளுடன் பழக ஆரம்பித்து நன்றாகப் பழகியபின் மெதுவாக விசயத்தை சொல்லலாம் என முடிவு செய்தேன்.

வேறு யாராவது முந்திவிடுவார்களோ பயமாக இருக்கிறது. எதிர் ப்ளாக்கில் இருக்கும் ஆனந்த் வேறு அடிக்கடி அவள் வீட்டு பால்கனியை நோட்டமிட்டுக் கொண்டே இருக்கிறான். ..

இப்பொழுதெல்லாம் அவள் இரவு வீட்டுக்குத் தாமதமாக வருகிறாள். அதனால் அவளை லிப்ட்டில் கூட சந்திக்க முடிவதில்லை. எப்படி அவளை சந்திப்பது என்றே தெரியவில்லை.

வேறு வழியே இல்லை, தினமும் 6 மணிக்கு எழுந்து அவள் ஜாகிங் போகும் போது பின்னாலே செல்ல வேண்டியது தான் என முடிவு செய்தேன்.

முதல் நாளில் அவள் வீட்டை விட்டு வெளியே வந்ததும் நானும் வெளியே வந்தேன். மெதுவாக அவளிடம் "hi" சொன்னேன். அவளும் பதிலுக்கு "hi" சொன்னாள். அதற்கு மேல் அவளிடம் பேசமுடிய வில்லை. இதேபோல் 3 நாட்கள் தொடர்ந்தது.

தினமும் ஜாகிங் செல்வதைப் பார்த்து அண்ணிக்கு, என்மேல் சந்தேகம் வந்துவிட்டது. என்னால் அவரிடம் விசயத்தை மறைக்க முடியவில்லை. முழுவதும் சொல்லிவிட்டேன். நான் வேண்டுமானால் பேசிப் பார்க்கட்டுமா என்று அண்ணி கேட்டார். இல்லை நானே பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டேன்.

இப்பொழுதெல்லாம் தினமும் அவளுடன் ஜாகிங் செல்கிறேன்...

இப்படியே நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாய் எங்கள் நட்பு வளர்ந்து வந்தது.. ஆனால் அந்த விசயத்தைப் பேச மட்டும் எனக்கு தைரியம் வரவில்லை..

அண்ணி வேறு அடிக்கடி பயமுறுத்துகிறார்.. "உடனே பேசிவிடு. இல்லைன்னா வேறு யாராவது முந்திவிடுவார்கள்" என்று.

எப்படியும் இன்று பேசிவிடவேண்டும் என முடிவு செய்துவிட்டேன். மெதூவாகப் பேசத் தொடங்கினேன்...

hi,

அவளும் பதிலுக்கு hi சொன்னாள்.

நான் உன்னிடம் ஒரு முக்கியமான விசயம் பேசனும்.

சொல்லு என்ன விசயம்..

ஒன்னும் தப்பா நினைக்க மாட்டயே?
இல்லை தப்பா நினைக்க மாட்டேன்.. சொல்லு.

இல்ல... அது வந்து...தப்பா நினைக்கக் கூடாது... உனக்குப் பிடிக்கலைன்னா விட்டுறுவோம்... ஒகேவா?

சரி......... சொல்லித் தொலை...
அது வந்து ... வந்து
................................
.....................................
..........................................
................................................
.....................................................
"PIT" போட்டில இந்த மாதம் தலைப்பு மலர்கள். அதுக்கு உன் வீட்டு பால்கனில இருக்குற பூக்களை போட்டோ எடுத்துக்கலாமா?'நச்சுனு ஒரு கதை' - போட்டியும், இதுவரை ஆட்டையில் உள்ள பதிவர்களும

பின்குறிப்பு:
இந்தக் கதையில் வரும் சம்பவங்களும் பாத்திரங்களும் முற்றிலும் கற்பனை... கற்பனை.... கற்பனையே!!!!(நேத்து நான் பக்கத்து வீட்டுப் பொண்ணு கிட்ட அவங்க வீட்டுல இருக்குற ரோஜாப்பூவை கிளிக்கிக்கிறலாமா என்று கேட்டதற்கும் அவள் கூடாது என்று சொல்லி என் மூக்கை உடைத்ததற்கும், இந்தக் கதைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை)

46 comments:

said...

:)))

சூப்பர்... ஆனாலும் மேட்டர் அதுவல்ல என்று இழுக்கும் போதே தெரிந்தது !

said...

//
கோவி.கண்ணன் said...

:)))

சூப்பர்... ஆனாலும் மேட்டர் அதுவல்ல என்று இழுக்கும் போதே தெரிந்தது !

//
மேட்டர் எதுவல்லன்னு தெரிஞ்சது?
:))

இது தான முதல் முயற்சி.. போகப்போக சரியாகிவிடும்....
:))))

said...

முதல் முயற்சியே நல்லாதான் வந்திருக்கு, அப்படியே அந்த பெண்கிட்ட, உங்கள் தொண்டைக்குள்ள உள்ள உண்மையையும் சொல்லிடுங்க.
:)

Anonymous said...

இது கதை இல்லை நிஜம் நிஜம் நிஜம்.
ஒரு போட்டோ எடுக்கவா இவ்வளவு சவுண்ட்?

said...

//இது தான முதல் முயற்சி.. போகப்போக சரியாகிவிடும்....
:))))//

இரண்டாம் முயற்சியிலாவது தயங்காமல் 'நச்சி'ன்னு 'அங்கே' சொல்லிடுங்க.

ரோஸலின் லிம் said...

ஹாய் ஜெகதீச்சன்,

உனக்கு பூதானே படம் புடிக்கனும், புடிச்சுக்கோ

said...

நச்சுன்னு ஒரு கதையின்னு சொல்லும் போதே..டிவிஸ்ட் எதிர்ப்பார்ப்போம்...

ஆனா,..இது எதிர்ப்பார்க்காத முடிவு தான்..வாழ்த்துக்கள்...

அவந்திகா said...

நான் ஒரு அத்தை பொண்ணு இங்கே ஆமத்தூர்ல காத்திருக்கேன், உனக்கு சீனச்சி கேட்குதா ?

வாடி...இங்கே தானே வருவே ?

அவந்திகா said...

ஆச வச்சேன் ஆச வச்சேன் உன்மேல

said...

//
துர்கா|thurgah said...

இது கதை இல்லை நிஜம் நிஜம் நிஜம்.
ஒரு போட்டோ எடுக்கவா இவ்வளவு சவுண்ட்?
//
ஆமாங்க... நிஜம் தான்...
ஆனால் கடைசியில் அவள் போட்டோ எடுக்கக் கூட அனுமதி தரவில்லை...
:(((

Anonymous said...

என்னமோ நடக்க போகுது :P
கோவி அண்ணா சொன்ன மாதிரி அந்த விஷயத்தை சீக்கிரமே சொல்லிடுங்க.ஹிஹி

மலாய்க்காரி said...

என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லாம்..கேட்டுப் பார்...படம் எடுக்கச் சொல்லுமே...

பாவனா said...

மிஸ்டர்,

'உம்' என்று ஒரு வார்த்தை சொல்லு, அம்புட்டு கால்சீட்டும் உனக்குத்தான்

தமிழ்க்காரி said...

நீயே ஒரு பூ மாதிரி இருக்கே அப்படின்னு நேத்து என்னைய படம் எடுத்தீங்களே...மச்சான்....ஏமாத்திப்புட்டீங்களே...என்..ஆமத்தூர் மச்சான்..

said...

//துர்கா|thurgah said...
என்னமோ நடக்க போகுது :P
கோவி அண்ணா சொன்ன மாதிரி அந்த விஷயத்தை சீக்கிரமே சொல்லிடுங்க.ஹிஹி
//
துர்கா,
அவரு சொல்லிடுவாரு, ஆனால் மத்த பிகருங்கெல்லாம் மனசொடுஞ்சிடுமேன்னு அச்சப்படுகிறார்.

ஆமத்தூர் ஆர்த்தி said...

என் மச்சான் எனக்குத்தான், ஒருத்தியாவது கிட்ட வந்திங்க, வாடி வந்து பாருடி

தங்கச்சி said...

அண்ணா, ஒனக்கே சரியா ?

'மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்' என்று பாடிட்டு என்ன போட்டோ எடுக்காமல், சீனச்சி வீட்டுல. போ அண்ணா :(

said...

இங்கு வந்து கும்மியடிக்கும் எ.ஏ.தி.க தலைவர் மதுரைப் புயலுக்கும், எ.ஏ.தி.க அகில உலகத் தலைவர் நாகை சிங்கத்திற்கும் என் நன்றி!!!!!!!

said...

என்னப்பா ஜெகதீசா,

ஏகப்பட்ட பார்டிங்க, ரவுண்டு கட்டி வர்றாங்க போல.

என்ஜாய் !
:)

மைலாப்'பூ'ர் மைதிலி said...

எங்காத்துலேயும் மல்லிப்பூ, கனகாம்பரமெல்லாம் இருக்கு, செத்த நன்னா போட்டோ எடுத்து தர்ரேளா ?

எங்காத்து காஃபி நன்னா இருக்கும், போட்டோ எடுத்து தந்தேள்னா ஒரு கப் கப்பி கிடைக்கும். வாங்கோ.

said...

//
கோவி.கண்ணன் said...

என்னப்பா ஜெகதீசா,

ஏகப்பட்ட பார்டிங்க, ரவுண்டு கட்டி வர்றாங்க போல.

என்ஜாய் !
:)
//
ஏன்? ஏன்? ஏன் இந்தக் கொலைவெறி என் மேல் உங்க 3 பேருக்கும்? இப்படி ரவுண்டு கட்டி அடிக்கிறீங்க????

said...

//
கோவி.கண்ணன் said...

முதல் முயற்சியே நல்லாதான் வந்திருக்கு, அப்படியே அந்த பெண்கிட்ட, உங்கள் தொண்டைக்குள்ள உள்ள உண்மையையும் சொல்லிடுங்க.
:)
//
என்ன சொல்லச் சொல்றீங்க? பக்கத்து வீட்டுல ஒரு தாத்தாவும், பாட்டியும்தான் இருக்காங்க... அவங்க கிட்ட என்ன சொல்ல?
:)

said...

//
TBCD said...

நச்சுன்னு ஒரு கதையின்னு சொல்லும் போதே..டிவிஸ்ட் எதிர்ப்பார்ப்போம்...

ஆனா,..இது எதிர்ப்பார்க்காத முடிவு தான்..வாழ்த்துக்கள்...
//
நன்றி TBCD, வாழ்த்துக்களுக்கும், NickNameஇல் போட்ட மற்ற கமெண்ட்டுகளுக்கும்...

said...

////////////
கோவி.கண்ணன் said...

//துர்கா|thurgah said...
என்னமோ நடக்க போகுது :P
கோவி அண்ணா சொன்ன மாதிரி அந்த விஷயத்தை சீக்கிரமே சொல்லிடுங்க.ஹிஹி
//
துர்கா,
அவரு சொல்லிடுவாரு, ஆனால் மத்த பிகருங்கெல்லாம் மனசொடுஞ்சிடுமேன்னு அச்சப்படுகிறார்.
//////

இது வேறயா.... ஆமா இங்க 100பேரு ரவுண்டு கட்டீட்டு நிக்கிறாங்களாக்கம் மனசொடியுறதுக்கு...
:P

Anonymous said...

//இது வேறயா.... ஆமா இங்க 100பேரு ரவுண்டு கட்டீட்டு நிக்கிறாங்களாக்கம் மனசொடியுறதுக்கு...
:P
//

அடி ஆத்தி..100 பேரா?கோவி அண்ணா ஜெகதீசனைக் காப்பாற்றவும்.100 பொண்ணுகளையும் எப்படி ஒத்த ஆளா சமாளிப்பார்?

said...

அடுத்த கதை.... விரைவில்... இதைவிடப் பெரிய திருப்பத்துடன்.....

said...

"நேத்து நான் பக்கத்து வீட்டுப் பொண்ணு கிட்ட அவங்க வீட்டுல இருக்குற ரோஜாப்பூவை கிளிக்கிக்கிறலாமா என்று கேட்டதற்கும் அவள் கூடாது என்று சொல்லி என் மூக்கை உடைத்ததற்கும், இந்தக் கதைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை"///

போய் ரோஜாவை கிள்ளி இருந்தா பிரச்சினை இல்லை, உன் கண்ணமும் ரோஜா போல சிவந்து இருக்கு என்று சொல்லி கிள்ளினா மூக்கு உடையாம வேற என்னா உடையுமாம்:)))

said...

/////
குசும்பன் said...

////
நான் ரோஜாவைக் "க்கிளிக்கிக்கிறலாமா" ன்னு தான கேட்டேன்???? ஒரு வேளை தப்பாப் புரிஞ்சுக்கிட்டுருப்பாளோ?

:))))

said...

ஜெகதீசன் said...

இது தான முதல் முயற்சி.. போகப்போக சரியாகிவிடும்....
:))))////

எதுக்கு முதல் முயற்சி??? (கதைக்கா அல்லது அந்த பெண்ணுக்கா), எது போக போக சரி ஆகிவிடும்? புரியவில்லை தயவு செய்து விளக்கவும்.

said...

ஜெகதீசன் said...
///
ஆமாங்க... நிஜம் தான்...
ஆனால் கடைசியில் அவள் போட்டோ எடுக்கக் கூட அனுமதி தரவில்லை...
:(((
///

பதிவில் எல்லாம் கற்பனை என்றார், இங்கு நிஜம் என்கிறார் அப்பொழுது ஏதோ? எங்கோ தப்பு நடந்திருக்கு? அவந்திக்கா அத்தை மகளே மாமாவை கொஞ்சம் கவனி...

said...

////////////////////////////
குசும்பன் said...

ஜெகதீசன் said...

இது தான முதல் முயற்சி.. போகப்போக சரியாகிவிடும்....
:))))////

எதுக்கு முதல் முயற்சி??? (கதைக்கா அல்லது அந்த பெண்ணுக்கா), எது போக போக சரி ஆகிவிடும்? புரியவில்லை தயவு செய்து விளக்கவும்
/////////////////////////////
:))))
இப்படியெல்லாம் ஏடாகூடமாக் கேக்கக்கூடாது...
அவ்வ்வ்...
:P

said...

//
குசும்பன் said...

ஜெகதீசன் said...
///
ஆமாங்க... நிஜம் தான்...
ஆனால் கடைசியில் அவள் போட்டோ எடுக்கக் கூட அனுமதி தரவில்லை...
:(((
///

பதிவில் எல்லாம் கற்பனை என்றார், இங்கு நிஜம் என்கிறார் அப்பொழுது ஏதோ? எங்கோ தப்பு நடந்திருக்கு? அவந்திக்கா அத்தை மகளே மாமாவை கொஞ்சம் கவனி...
//

அடுத்த கதையப் படிச்சுப் பாருங்க.. முழுசா விளங்கும்....
:))

said...

கதையின் முடிவு புன்னகைக்க வைத்தது.
தெளிவான நடை..

said...

//
பாச மலர் said...

கதையின் முடிவு புன்னகைக்க வைத்தது.
தெளிவான நடை..
//
நன்றி பாச மலர்... :)

ஜெகதீசன் said...

//
துர்கா|thurgah said...

என்னமோ நடக்க போகுது :P
கோவி அண்ணா சொன்ன மாதிரி அந்த விஷயத்தை சீக்கிரமே சொல்லிடுங்க.ஹிஹி

//
எந்த விசயத்தை?
:)

said...

//
மைலாப்'பூ'ர் மைதிலி said...

எங்காத்துலேயும் மல்லிப்பூ, கனகாம்பரமெல்லாம் இருக்கு, செத்த நன்னா போட்டோ எடுத்து தர்ரேளா ?

எங்காத்து காஃபி நன்னா இருக்கும், போட்டோ எடுத்து தந்தேள்னா ஒரு கப் கப்பி கிடைக்கும். வாங்கோ.
//
ஒரு காப்பிக்காக என்னால மைலாப்'பூ'ருக்கெல்லாம் வரமுடியாதே மாமி.... :)

said...

//
கோவி.கண்ணன் said...
முதல் முயற்சியே நல்லாதான் வந்திருக்கு, அப்படியே அந்த பெண்கிட்ட, உங்கள் தொண்டைக்குள்ள உள்ள உண்மையையும் சொல்லிடுங்க.

//
ரிப்பீட்டேய்

//
துர்கா|thurgah said...
இது கதை இல்லை நிஜம் நிஜம் நிஜம்.
ஒரு போட்டோ எடுக்கவா இவ்வளவு சவுண்ட்?

//
தேங்க் யூ துர்கா உண்மைய வெளிப்படுத்தினதுக்கு!!

said...

//
குசும்பன் said...

எதுக்கு முதல் முயற்சி??? (கதைக்கா அல்லது அந்த பெண்ணுக்கா), எது போக போக சரி ஆகிவிடும்? புரியவில்லை தயவு செய்து விளக்கவும்.
//
விளக்கவும்!!!!!!!

said...

//
மங்களூர் சிவா said...

ஏன் இந்த திடீர் கொலைவெறி?? tbcd எதாவது போட்டுக் கொடுத்துட்டாரா என்ன?
:P

said...

//
மங்களூர் சிவா said...
//
குசும்பன் said...

எதுக்கு முதல் முயற்சி??? (கதைக்கா அல்லது அந்த பெண்ணுக்கா), எது போக போக சரி ஆகிவிடும்? புரியவில்லை தயவு செய்து விளக்கவும்.
//
விளக்கவும்!!!!!!!

//
கதை எழுதுவது முதல் முயற்சி!!!!!!!!!!!

said...

பூக்களை படம் பிடிக்க வந்தேன்.
சீனத்து மலரே.
உன்னை படம் பிடித்துக் கொள்ளவா :)

said...

ஹாஹாஹா.. நல்லா இருக்கு. :-)

said...

//
அரை பிளேடு said...

பூக்களை படம் பிடிக்க வந்தேன்.
சீனத்து மலரே.
உன்னை படம் பிடித்துக் கொள்ளவா :)
//
நன்றி அரை பிளேடு...:)
...............................
//.:: மை ஃபிரண்ட் ::. said...

ஹாஹாஹா.. நல்லா இருக்கு. :-)

//
நன்றி!! :)

said...

முதல் முயற்சியே நல்லாதான் வந்திருக்கு,

said...

ஒரு போடோவுக்கே இவ்வளவு யோசிச்சீங்கனா, அப்ப "அவனா நீ"? "இதயம்" முரளி உங்க தூரத்து சொந்தமா?;) ஒரு லொள்ளு சபா பார்த்த மாதிரி இருந்தது. வெற்றி பெற வாழ்த்துக்கள்!

said...

டாப்-8க்கு வாழ்த்துக்கள்!

Click here to view results

just miss :)