அவள் இப்படி மறுத்துவிடுவாள் என நான் எதிர்பார்க்கவே இல்லை.
நான் அப்படியென்ன கேட்டுவிட்டேன்? அவள் வீட்டு பால்கனியில் இருக்கும் பூக்களைப் புகைப்படம் எடுத்துக் கொள்கிறேன் என்றுதானே கேட்டேன்? இதை ஏன் மறுக்க வேண்டும்?
அவள் ஜுராங் பறவைப் பூங்காவில் வேலை பார்க்கிறாளாம்.. பறவைகளுடன் தினமும் பழகும் அவள் பறவைகளைப் போல இனிய மனமுடையவளாக இருப்பாள் என்று நினைத்துத் தானே அவளுடன் பழகினேன்? அவள் இவ்வளவு கல்நெஞ்சக்காரியாக இருப்பாள் என சற்றும் எதிர்பார்க்கவில்லை.
அந்த நிகழ்ச்சி நடந்த நாள் முதல் அவளை சந்திப்பதையே முற்றிலும் தவிர்த்துவிட்டேன். அவளுடன் ஜாகிங் போவதையும் நிறுத்திவிட்டேன்.
அண்ணி கூட சமாதானப் படுத்தினாள், "சீனர்களின் செண்டிமெண்ட்டுகள் உனக்குத் தெரியாததா.. பூக்களைப் படம் எடுக்கக் கூடாதென ஏதாவது செண்டிமெண்ட் இருக்குமோ என்னவோ" என்று.. ஆனாலும் என் மனம் சமாதானமடையவில்லை.
அவள் தினமும் காலையில் ஜாகிங் செல்லும்போது என் வீட்டு ஜன்னல் வழியாக நான் வருகிறேனா எனப் பார்ப்பது எனக்குத் தெரிந்தது..ஆனாலும் என் முடிவை மாற்றிக் கொள்ள விரும்பவில்லை.
அடுத்த நாள் மாலையில் வீட்டில் ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது. அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்ததும் அண்ணி ஒரு கிப்ட் பேக்கை அவள் என்னிடம் கொடுக்கச் சொன்னதாகத் தந்தாள்..
அந்தப் பேக்கில் ஒரு கடிதமும் ஒரு சிடியும் இருந்தது.
டியர் ஸ்வீட் ஹார்ட்,
என் மேல் என்ன கோவம் உனக்கு?
என் வீட்டில் இருக்கும் பூக்கள் அவ்வளவாக நன்றாக இல்லை. அதனால் தான் வேண்டாம் என்று சொன்னேன்.
நேற்று புங்கோல் பார்க்குக்கு சென்ற போது எடுத்த அழகிய மலர்கள் இந்த சிடியில் இருக்கிறது. அவற்றைப் போட்டிக்குப் பயன்படுத்திக்கொள். அத்துடன் பேர்ட்ஸ் பார்க்கில் எடுத்த பறவைகள் படங்களும் இருக்கிறது அதை எப்போழுதாவது "பறவைகள்" என்ற தலைப்பில் போட்டி வந்தால் பயன்படுத்திக்கொள்..
நாளை காலையில் ஜாகிங்கிற்கு உன்னை எதிர்பார்க்கிறேன்...
எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.. இவளைப்போய் தப்பாக நினைத்துவிட்டோமே என்று.. மறுநாள் காலையில் 6 மணிக்கே எழுந்து அவளுடன் ஜாகிங் கிளம்பிவிட்டேன்..
என்னைப் பார்த்ததும் புன்னகைத்தாள்..
சாரி... உன் நல்ல மனசைப் புரிஞ்சுக்காமத் தப்பா நினைச்சுட்டேன்...
இட்ஸ் ஒகே.. ஸ்வீட் ஹார்ட்..
என் மேல கோவம் இல்லையே?
நோ மை சைல்ட்... நீயும் என் மகன் மாதிரிதானே.. நான் எப்படி உன்மேல் கோவப்படுவேன்?
தேங்க்யூ ஆண்டி....
என் அம்மாவின் வயதிருக்கும் அந்தச் சீனப் பெண் என் மீது வைத்திருக்கும் பாசத்தைப் பார்த்து மனம் நெகிழ்ந்தவாறு ஜாகிங் முடித்து வீட்டுக்குக் கிளம்பினேன். இனிமேல் தினமும் அவளுடன் ஜாகிங் செல்வேன்....
இந்தக் கதையை இங்கும் படிக்கலாம்.....
49 comments:
அருமை... அருமை..அருமை....
களையா இருக்கான் மடக்கிடலாமின்னு நினைச்சேன்...சே...
அப்படியே என்ன மறந்திட்டீங்களோன்னு பயந்துப் போனேன்..
ஏன்டா உருப்படியா நாலு காசு சேர்த்துட்டு வாடான்னா...சீனாக்கார், மைனாக்காரிக்கூட உனக்கு என்ன வெட்டிப் பேச்சு...
//
TBCD said...
அருமை... அருமை..அருமை....
//
ஹிஹிஹி... பொய் தான சொல்றீங்க...
:P
"என் அம்மாவின் வயதிருக்கும் அந்தச் சீனப் பெண்"
வயதானவங்களை எப்படி அவள் இவள் என்று சொல்லலாம்!!!!இது ஆணிய மனபோக்கையே காட்டுகிறது!!!
//ஜெகதீசன் said...
//
TBCD said...
அருமை... அருமை..அருமை....
//
ஹிஹிஹி... பொய் தான சொல்றீங்க...
:P
//
நான்ன் உண்மையை சொல்கிறேன்.
அருமை அருமை !
//தேங்க்யூ ஆண்டி....//
டார்லிங், எப்போ எங்க வீட்டுக்கு மருமகனாக வரப்போறிங்க, பூவெல்லாம் வாடுது.
//என் மேல கோவம் இல்லையே?
நோ மை சைல்ட்... நீயும் என் மகன் மாதிரிதானே.. நான் எப்படி உன்மேல் கோவப்படுவேன்?//
என் மச்சான் எனக்கு கிடைக்கப் போகிறார்.
அடியே வசந்தி, அப்படி விட்டுக் கொடுத்துடுவேனா ? மச்சான் எனக்குத்தான்
//குசும்பன் said...
"என் அம்மாவின் வயதிருக்கும் அந்தச் சீனப் பெண்"
வயதானவங்களை எப்படி அவள் இவள் என்று சொல்லலாம்!!!!இது ஆணிய மனபோக்கையே காட்டுகிறது!!!
//
அந்த ஆண்டி 'மை சைல்ட்' என்று சொன்னதன் பிறகுதான் வயசை கேட்டு 'ஷாக்' ஆகிட்டாராம், இவர் நினைத்திருந்ததைவிட 40 வயது அதிகமாம்.
//
குசும்பன் said...
"என் அம்மாவின் வயதிருக்கும் அந்தச் சீனப் பெண்"
வயதானவங்களை எப்படி அவள் இவள் என்று சொல்லலாம்!!!!இது ஆணிய மனபோக்கையே காட்டுகிறது!!!
//
இந்தக் கதையின் நாயகனின் ஆணீய மனப்போக்கை நானும் கடுமையாகக் கண்டிக்கிறேன்...
:P
//
கோவி.கண்ணன் said...
//ஜெகதீசன் said...
//
TBCD said...
அருமை... அருமை..அருமை....
//
ஹிஹிஹி... பொய் தான சொல்றீங்க...
:P
//
நான்ன் உண்மையை சொல்கிறேன்.
அருமை அருமை !
//
நன்றி!!!
//////
கோவி.கண்ணன் said...
//குசும்பன் said...
"என் அம்மாவின் வயதிருக்கும் அந்தச் சீனப் பெண்"
வயதானவங்களை எப்படி அவள் இவள் என்று சொல்லலாம்!!!!இது ஆணிய மனபோக்கையே காட்டுகிறது!!!
//
அந்த ஆண்டி 'மை சைல்ட்' என்று சொன்னதன் பிறகுதான் வயசை கேட்டு 'ஷாக்' ஆகிட்டாராம், இவர் நினைத்திருந்ததைவிட 40 வயது அதிகமாம்.
//////
:P
ஆமா, என் மேல அப்படி என்ன கொலை வெறி??? இந்தக் கும்மு கும்முறீங்க?
இந்தக் கதையின் இரட்டைத் திருப்பங்களும் நிஜமாகவே அருமை.
(அந்தப் பெண் உங்களுக்காக நல்ல படம் தந்ததும், அவள் வயதும்).
இருந்தாலும் அவள் தங்கள் புகைப்படத் 'திறமை'யை இவ்வளவு துல்லியமாகக் கண்டுபிடித்து (அவள் வீட்டின் சுமார் பூக்களைப் போட்டிக்கு அனுப்ப நினைத்த தங்கள் ஆசையிலேயே கண்டு கொண்டிருந்திருப்பாள் தங்கள் கலைத் திறமையை என்று நினைக்கிறேன்) உங்களை திருவிளையாடல் தருமி ரேஞ்சுக்கு இறக்கி இரவல் படங்கள் தந்து விட்டாளே! படிக்கும் போதே தமிழ் ரத்தம் சூடாகிறது!
1) எதிர் பாராத முடிவு:) அருமை
2) நல்ல திரும்பம்:) எதிர் பார்கவே இல்லை.
3) சின்ன கதையாக இருந்தாலும் சிறப்பாக இருக்கிறது.
4) //தேங்க்யூ ஆண்டி....// இந்த வரி மிக அருமை
5) சமீபத்தில் படிச்சதில் இந்த கதை மிக சிறப்பாக இருக்கிறது.
6) ஆனந்தவிகடனுக்கு அனுப்பலாம்!
1) வாழ்த்துக்கள்
2) போட்டியில் வெற்றி பெற அட்வான்ஸ் வாழ்த்துக்கள்
3) நிச்சயம் வெற்றி பெற போகும் கதை.
4) கலக்கல் கதை வெற்றி நிச்சயம்.
5) இப்படி எல்லாம் கதை எழுதினா நாங்க எல்லாம் போட்டியில் கலந்துக்க முடியாது போலவே!!!
6):))) அருமை
கதை போல் இல்லை சொந்த அனுபவமோ!!!
"ஜெகதீசன் said...
///:P
ஆமா, என் மேல அப்படி என்ன கொலை வெறி??? இந்தக் கும்மு கும்முறீங்க?///
நீங்க அழகா இருப்பதால் எல்லோருக்கும் பொறாமையாக இருக்கும்!
(இதை வைத்தும் யாராவது கும்மலாம்)
//
டெம்ப்ளேட் உபயோகிப்பவன் said..
..........
.........
.........
//
வேண்டாம்... விட்டுறுங்க அழுதுருவேன்...
அவ்வ்வ்வ்
////////
குசும்பன் said...
"ஜெகதீசன் said...
///:P
ஆமா, என் மேல அப்படி என்ன கொலை வெறி??? இந்தக் கும்மு கும்முறீங்க?///
நீங்க அழகா இருப்பதால் எல்லோருக்கும் பொறாமையாக இருக்கும்!
(இதை வைத்தும் யாராவது கும்மலாம்)
///////
முன்னப் பின்ன என் மொகரக்கட்டயப் பாத்துருக்கீங்களா?
:P
///குசும்பன் said...
"ஜெகதீசன் said...
///:P
ஆமா, என் மேல அப்படி என்ன கொலை வெறி??? இந்தக் கும்மு கும்முறீங்க?///
நீங்க அழகா இருப்பதால் எல்லோருக்கும் பொறாமையாக இருக்கும்!
(இதை வைத்தும் யாராவது கும்மலாம்)
///
ஆமா, தாங்கள் தான் டெம்ப்ளேட் உபயோகிக்கிறவரோ???
டெம்ப்ளேட் உபயோகிப்பவன் said...
கதை போல் இல்லை சொந்த அனுபவமோ!!!///
யப்பா டெம்ளேட் உபயோகிப்பவரே!!! நல்லாதான் உபயோக்கிறீர், ஆனா கரேக்டா நான் கமெண்ட் போட்ட பிறகு உபயோகிச்சு இருந்தால் என்னை அல்லவா நல்ல உள்ளம் படைத்த ஜெகதீசன் தப்பாக நினைப்பார்!!!
ஜெகதீசன் said...
///////
முன்னப் பின்ன என் மொகரக்கட்டயப் பாத்துருக்கீங்களா?
:P
///
நீங்க TBCD போட்டோவை அனுப்பியது போல் அவர் உங்க போட்டோவை அனுப்பிவைத்தார்:))) (அப்பா வந்த வேலை முடிந்தது!!!!)
ஜெகதீசன் said...
////
ஆமா, தாங்கள் தான் டெம்ப்ளேட் உபயோகிக்கிறவரோ???////
சத்தியமாக நான் இல்லை, நான் என்றால் நிச்சயம் ஒத்துப்பேன்.
//
இந்தக் கதையின் இரட்டைத் திருப்பங்களும் நிஜமாகவே அருமை.
(அந்தப் பெண் உங்களுக்காக நல்ல படம் தந்ததும், அவள் வயதும்).
இருந்தாலும் அவள் தங்கள் புகைப்படத் 'திறமை'யை இவ்வளவு துல்லியமாகக் கண்டுபிடித்து (அவள் வீட்டின் சுமார் பூக்களைப் போட்டிக்கு அனுப்ப நினைத்த தங்கள் ஆசையிலேயே கண்டு கொண்டிருந்திருப்பாள் தங்கள் கலைத் திறமையை என்று நினைக்கிறேன்) உங்களை திருவிளையாடல் தருமி ரேஞ்சுக்கு இறக்கி இரவல் படங்கள் தந்து விட்டாளே! படிக்கும் போதே தமிழ் ரத்தம் சூடாகிறது!
//
:)))
நன்றி....
கடிதத்தின் சில வரிகளை சென்சார் செய்துவிட்டேன்... அந்த வரிகளை உங்களுக்காக இப்ப வெளியிடுகிறேன்:
"நான் எடுத்த படங்களைத் தான் போட்டிக்குப் பயன்படுத்துவேன். உன் படங்களைப் பயன்படுத்த மாட்டேன்" என நீ சொல்வாய் என எனக்குத் தெரியும்..
நீ வேறு நான் வேறு இல்லை.. அதனால் இந்தப் படங்களை நீ எடுத்ததாகவே நினைத்துக் கொண்டு போட்டியில் கலந்துகொள் மகனே..
இதில் மகனே என்ற வார்த்தை இருந்ததால் சென்சார் செய்யவேண்டியதாயிற்று.... :)
//சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய்//
இந்த வரி மிக அருமை
முந்தைய பாகங்களை தேடி தேடி படித்தேன் அந்த அளவுக்கு சிறப்பாக இருக்கிறது உங்கள் தொடர்
//
டெம்ப்ளேட் உபயோகிப்பவன் said...
முந்தைய பாகங்களை தேடி தேடி படித்தேன் அந்த அளவுக்கு சிறப்பாக இருக்கிறது உங்கள் தொடர்
//
யாரோ எவரோ தெரியல... நல்லா இருப்பா சாமி... :(
//
ஜெகதீசன் said...
///////
முன்னப் பின்ன என் மொகரக்கட்டயப் பாத்துருக்கீங்களா?
:P
///
நீங்க TBCD போட்டோவை அனுப்பியது போல் அவர் உங்க போட்டோவை அனுப்பிவைத்தார்:))) (அப்பா வந்த வேலை முடிந்தது!!!!)
//
அந்த மூஞ்சியப் பாத்தப் பிறகுமா இப்படி ஒரு கமெண்ட் போட்டீங்க?
:))
நான் குசும்பனிடம் இருக்கவே மாட்டேன்..அவர் ரொம்ப மோசம்... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
எவண்டா அது என் மகன் போன்ற ஜெகதீசனை கலாய்ப்பது...அவனுக்கு என் அண்ணன் பொண்ணை பாத்து வச்சியிருக்கேன்..அவப் பேரு...சுன் மின் தான்
யோவ் கருத்த மச்சான்..என்னைய மறந்துடாதே..உனக்கான படம் எல்லாம்..அவங்க சொல்லி நான் எடுத்தது..
பதிவருக்கான பதில் கமாண்ட் டெம்பிளேட்
ஜெகதீசன் அவர்களே தங்கள் வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி
இல்ல ஜக்கு மச்சான் எனக்குத்தான்
//யாரோ எவரோ தெரியல... நல்லா இருப்பா சாமி... :(
//
ரிப்பீட்டேய்
ரிப்பீட்டேய்
ரிப்பீட்டேய்
என்ன மச்சான் டென்சன் ஆயி கடைய மூடிட்டு போயிட்டியா??
//
டெம்ப்ளேட் உபயோகிப்பவன் said...
பதிவருக்கான பதில் கமாண்ட் டெம்பிளேட்
ஜெகதீசன் அவர்களே தங்கள் வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி
//
ஓஹோ.. நீங்க தானா அது... என்ன கொஞ்ச நாளாப் பதிவயே காணோம்... :)
என் டெம்ளேட்டை உபயோக்கிக்கும் நல்லவரே அவரிடம் சொல்லிடுங்க. என்னை தப்பாக நினைக்கிறார்!
நான் அவன் இல்லை....
ஆனால் உங்களுடன் அங்கே கும்மியடிப்பவன்
//
டெம்ப்ளேட் உபயோகிப்பவன் said...
நான் அவன் இல்லை....
ஆனால் உங்களுடன் அங்கே கும்மியடிப்பவன்
//
புரியவில்லை... நீங்கள் யார் இல்லை????
நான் எங்கும் கும்மியடிப்பதில்லையே?
:)
இதுக்கு மேல நல்ல சம்பந்தம் கிடைக்காது...
பேசி முடிச்சிடுவோம்...
//***யுவாங் சுவாங் பேத்தி said...
இல்ல ஜக்கு மச்சான் எனக்குத்தான***//
சீரிய பதிவு. சிந்திக்க வேண்டிய விசயம்!!
(அப்புறம் என்ன ABCD சொல்ல சொன்னீங்க)
சரி மறந்துட்டேன்
//
(அப்புறம் என்ன ABCD சொல்ல சொன்னீங்க)
//
யாருங்க அந்த ABCD?
:))
//
ஜெகதீசன் said...
யாருங்க அந்த ABCD?
:))
//
சீரிய பதிவு. சிந்திக்க வேண்டிய விசயம்!!
எல்லாம் சொன்னாரேப்பா அவரேதான்!!!
இன்னும்கூட என்னென்னமோ சொன்னார் ஆனா எனக்குதான் மறந்து போச்சு!!
கொஞ்சம் அசந்தா பத்த வைக்க நிறைய பேரு வெயிட்டிங்க் லிஸ்டிலே இருப்பானுங்க போல...
//
ABCD said...
கொஞ்சம் அசந்தா பத்த வைக்க நிறைய பேரு வெயிட்டிங்க் லிஸ்டிலே இருப்பானுங்க போல...
//
ஆமாங்க கொஞ்சம் ஈரமாயிருச்சு பத்த மாட்டிக்கிது பெட்ரோல் கொஞ்சம் வாங்கி குடுங்க கொளுத்திருவோம்!!
Post a Comment