தமிழக அரசின் வேண்டுகோளின்படி மத்தியஅரசு எடுத்த முயற்சிகளினால் ஐ.நா. மன்றம் அமெரிக்கா, பிரிட்டன், டோக்கியோ கூட்டமைப்பு நாடுகள் வெளியிட்டுள்ள கருத்துக்களுக்கு வரவேற்கிறேன்.
அதேநேரத்தில் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரின் அறிவிப்புகளும் வெளிவந்துள்ளன. அவற்றையும் வரவேற்கிறேன்.சூப்பரோ சூப்பர்!!!!
இலங்கை பிரச்சனையில் ஒற்றுமையாக இருப்போம்: கலைஞர்
இந்தப் பதிவுக்கும் இதே லேபிள்களை வைத்துக்கொள்ளவும்:
கலைஞர், கருணாநிதி, தமிழினத் தலைவர், அரசியல், சிங்கள ரத்னா, செயல்படாதகுழு, வெக்கங்கெட்ட அரசியல், மானங்கெட்ட அரசியல், பதவி வெறி, இன்னும் பல அன்பார்லிமெண்ட்டரி சொற்கள்
6 comments:
:-) ) )
என்ன கூத்து இது....?
நீங்க 1956-லேருந்து ஈழப்பிரச்ச்சனைக்குப் போராடுறத மதிக்கிறோம் கலைஞர் ஐயா.
அதே மாதிரி 1924 -லேருந்து(நீங்க பொறந்ததுலேருந்து) காவிரிப் பிரச்சனைக்குப் போராடுனதையும் மதிக்கிறோம்.
ஆனா பாருங்க உங்களுக்கு எல்லாத்துலயும் வெற்றி தானுங்க.
நீங்க தேர்தலில் மட்டும் எப்படி தோல்வியையே சந்திக்கிறீர்கள்? மக்கள் பணம் நமக்கு எதுக்கு என்கிற உயர்ந்த எண்ணம் உடையவர் நீங்கள், அப்படின்னு எடுத்துக் கொள்கிறோம்.
எப்படி? எப்படி? "ஈழப்பிரச்சனைக்காக யாரும் எம்.பி.பதவியை ராசினாமா செய்யாததால் திமுக எம்.பிக்களும் ராசினாமா செய்யவில்லை". இதுக்கே உங்களை வாழ்நாள் பூரா ஆட்சியில வைக்கலாம் சாமியோவ்! வயித்துல பால் வாத்தீங்க சாமியோவ்!!
இப்படியே அறிக்கை விடுங்க, கடிதம் எழுதுங்க. நாங்க படிக்கிறோம்.
புதுசு கண்ணா புதுசு!
;-) என்ன கொடும கலைஞரே, இதை விட உளியின் ஓசை மாதிரி நாலு படத்துக்கு வசனம் எழுதுங்களேன்
கலைஞரய்யா வாழ்க வாழ்க வாழ்கவே..
:-) ) )
உங்களை வழக்கொழிந்த சொற்கள் பதிவிற்கு அழைத்திருக்கிறேன்.
இந்தத் தொடுப்பில் சென்று பார்க்கவும்
http://jothibharathi.blogspot.com/2009/02/blog-post_14.html
Post a Comment