Sunday, September 28, 2008

காளான் குழம்பு! - செய்முறை

காளான் குழம்பு! - செய்முறை

தேவையான பொருட்கள்:

சிறிது சிறிதாக அல்லது நடுத்தரமாக அல்லது பெரிதாக வெட்டிய காளான் - 1பாக்கட்.


பொடிப் பொடியாக நறுக்கிய தக்காளி - 2


பொடிப் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1


நறுக்கிய வெள்ளைப்பூண்டு -1


மிளகாய்ப் பொடி அல்லது மீன் மசாலா அல்லது கோழி மசாலா - தேவையான அளவு


மக்காச்சோள எண்ணை - தேவையான அளவு


உப்பு, கறிவேப்பிலை, மஞ்சள்பொடி - தேவையான அளவு

செய்முறை
குக்கரில்(ப்ரஸ்ஸர் பேனின் விசில் தேடி எடுக்கமுடிந்தால் ப்ரஸ்ஸர் பேன் பயன்படுத்தலாம்) கொஞ்சம் எண்ணை விட்டு ஸ்டவ்வில் வைக்கவும்.

எண்ணெய் சூடானதும், கடுகு தாளிக்கவும். கடுகு வெடித்து முடிந்ததும் கறிவேப்பிலை போடவும்.

கறிவேப்பிலை வெடித்து முடித்ததும் வெங்காயம் போட்டு வதக்கவும்.


வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், தக்காளி சேர்த்து வதக்கவும்.


தக்காளி வதங்கியதும் காளான் சேர்த்து ஒரு 2 நிமிடம் வதக்கவும்.
பின் மிளகாய்ப்பொடி, மஞ்சள், உப்பு சேர்த்து மசால் வாசம் போகும்வரை வதக்கவும்.

மசால் வாசம் போகும்வரை வதக்கியதும், 1/2 டம்ளர் நீர் சேர்த்து குக்கரை மூடி, 3 விசில் வரும் வரை வைக்கவும்.


இடைப்பட்ட நேரத்தில் எலக்ட்ரிக் குக்கரில் 1 டம்ளர் அரிசி வைக்கவும்.

3 விசில் வந்ததும் ஸ்ட்டவ்வை அனைத்துவிட்டு, ஆவி முழுதும் வெளியேறும் வரை காத்திருந்து குக்கரைத் திறந்தால் காளான் குழம்பு தயார்.



சோறு தயாராக எப்படியும் ஒரு 15 நிமிடம் ஆகும்.. அதற்குள் குளித்து முடித்துவிட்டு வந்துவிடவும்.

இன்று மாலை முஸ்தபாவில் வாங்கப் போகும் பில்ஸ்பெரி ரெடிமேட் சப்பாத்திக்கும் இந்தக் குழம்பு நன்றாக இருக்கும்!

குறிப்புகள் சில:

குழம்பு நன்றாக இருந்தால் 2 நாட்கள் வைத்திருந்து சாப்பிடவும். நன்றாக இல்லையெனில், கோவியார், பாரி.அரசு போன்ற நல்லவர்களைக் கூப்பிட்டு சாப்பாடு போட்டு உடனே குழம்பைக் காலி செய்துவிடவும்.

இந்த இடுகையை யார் வேண்டுமானாலும் மீள் பதிவு செய்து கொள்ளலாம். மீள் பதிவு செய்வோர் தயவு செய்து எங்கும் என் பெயரையோ அல்லது இந்த இடுகைக்கான தொடுப்பையோ சேர்த்துவிட வேண்டாம்..

இந்தக் குழம்பை யார் வேண்டுமானாலும் செய்து பார்க்கலாம். ஆனால் செய்யத் தொடங்கும் முன் இங்கு வந்து நன்றி சொல்லிப் பின்னூட்டமிட்டுச் செல்லவேண்டும்

நீங்கள் சமைத்த குழம்பு நன்றாக இருந்தால் அதற்குறிய பாராட்டுக்கள் அனைத்தும் எனக்கே. ஆனால் நன்றாக இல்லையெனில், அது உங்களின் கவனக்குறைவால் மட்டுமே இருக்கும். எனவே விழும் திட்டுக்கள் அனைத்தும் உங்களுக்கே!

இந்த இடுகையில் இருக்கும் நுண்ணரசியல் என்ன என்பதைக் கண்டுபிடிப்போருக்கு ஒரு மாதத்திற்குத் தேவையான காளான் குழம்பு பரிசாக வழங்கப் படும்.

35 comments:

said...

மீ த பஸ்ட்டூ

said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :(

இன்னைக்கு ஆன்லைன் வந்து இன்னும் மெயில் கூட பாக்காம மொதல்ல இதை தான் படிச்சேன்.... எதோ மெய்யாலுமே சமயல்னு நெனச்சேன்.. :(((

said...

எனக்கு புரியவே புரியாத சமையலைக் குறித்து தொடர் பதிவுகள் எழுதிக் கொல்லும் ஜெகுவை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

said...

நிறுத்தனும், உடனே நிறுத்தனும்.
இப்படி சமையல் குறிப்புகள் எழுதி எல்லாரையும் கொல்ற இந்த வேலைய உடனே நிறுத்தனும்.

Anonymous said...

அலோ யாரு ஜெகதீசனுங்களா,
உங்க குறிப்ப பார்த்துட்டு எல்லாரும் காளான் சமைக்கனும்னு கிளம்பிட்டாய்ங்களாம். உங்க அட்ரஸ் அனுப்புங்க. இங்க நேத்து பெய்ஞ்ச மழையில நிறைய காளான் முளைச்சுருக்கு, எல்லாத்தையும் புடுங்கி ஒரு கப்பல்ல அனுப்பிடுறேன்.

இப்படிக்கு,
கருப்பு சாமி
நிர்வாக இயக்குநர்.
க‌.சா. கா.பு.க.
( கருப்பு சாமி காளான் புடுங்கும் கம்பெனி)

எங்களுக்கு ஆமத்தூரை தவிர வேறெங்கும் கிளைகள் இல்லை.

said...

இதில ஏதோ உள்குத்து இருக்கு...வீட்டில உங்களுக்கு ஏதாவது நடந்ததா.. ஜெகதீஸன் அண்ணே...? அல்லது கெதியில ஏதாவது நடக்கப்போகிறதா..?

said...

அடங்கொய்யால...:)

said...

என்ன கொடுமை ஆமத்தூராரே இது?????

said...

/ஜெகதீசன் said...
மீ த பஸ்ட்டூ/

பின்னூட்டகயமைவாதி லிஸ்ட்ல நீங்க தான் அண்ணே முதல் இடத்தில் இருக்கீங்க.....:)

said...

//
குழம்பு நன்றாக இருந்தால் 2 நாட்கள் வைத்திருந்து சாப்பிடவும். நன்றாக இல்லையெனில், கோவியார், பாரி.அரசு போன்ற நல்லவர்களைக் கூப்பிட்டு சாப்பாடு போட்டு உடனே குழம்பைக் காலி செய்துவிடவும்.
//

என்ன கொடுமை இது???
:(((
நிஜமா நல்லவன், ஜோசப் உட்பட பல நல்லவர்களைச் சாப்பிடக் கூப்பிட்டும் யாரும் வரமாட்டேன்னுறாங்களே.....

said...

/ஜோசப் பால்ராஜ் said...
நிறுத்தனும், உடனே நிறுத்தனும்.
இப்படி சமையல் குறிப்புகள் எழுதி எல்லாரையும் கொல்ற இந்த வேலைய உடனே நிறுத்தனும்./

ஆமாண்ணே....வாங்கண்ணே.....நாமும் பின்னூட்டம் போடுவதை நிறுத்திவிட்டு ஆமத்தூராரை கண்டித்து பதிவு போட்டு தமிழ்மணத்துக்கு அனுப்புவோம்....:)

said...

too oily dude.

not good for heart :)

said...

//
SurveySan said...

too oily dude.

not good for heart :)

//
வாங்க சர்வேசன்,
மொத்தமே 2 டீஸ்பூன் தான் எண்ணை சேர்த்தேன்...
;)
மீதம் எல்லாம் தண்ணி தான்...

said...

சொந்த பந்தங்ககளை துணைக்கண்டத்திற்கு அனுப்பி வைத்துவிட்டு தனியொரு மனிதனாக தினமும் விதவிதமாக சமையல் செய்து மூக்கு முட்ட சாப்பிட்டுவிட்டு கும்மியடித்து திரியும் ஆமத்தூர் அண்ணன் ஜெகதீசனாருக்கு எனது கடும் கண்டனங்கள்...!

said...

:-)))...

Anonymous said...

ஜெகதீசன்,
என்ன இது யாரோ ஒரு கருப்பு சாமி உங்களுக்கு காளான் அனுப்புறேன்னு சொல்றாரு? அப்ப நீங்க எங்கிட்ட போட்ட கான்ட்ராக் என்னாச்சு?
நாங்க முந்தா நாளு பெய்ஞ்ச மழையில முளைச்ச காளான எல்லாம் புடுங்கி வைச்சுருக்கோமே? கோவியார் சொல்லித்தானே உங்க கிட்ட விக்கிறதுக்கு அக்ரிமெண்ட் போட்டோம்? கோவியாருக்கு நீங்க தர்ற மரியாதை இவ்வளவு தானா?

இப்படிக்கு
நாகை மாவட்ட காளான் புடுங்குபவர்கள் சங்கம்.

( உலகிலேயே சிறந்த காளான் நாகை காளான் மட்டுமே)

Anonymous said...

அண்ணாச்சி,
மலேசிய நாட்டிலே ஈப்போ எனும் ஊரிலே மலையோரங்கள் எங்கும் பரந்து விரிந்த புல்வெளிகளிலே முளைத்த முதல் தர காளான்களை வாங்க எங்களை உடனே அணுகவும்.

ஈப்போ காளான் சங்கம்
தலைவர், பொருளாளர், செயலாளர்

குக்ணேஸ்வரன்.

எங்கள் சங்கத்தில் வேறு எந்த உறுப்பினரும் இல்லை.

Anonymous said...

என்ன கொடுமை இது ?
எத்தனை காளான்கள் வந்தாலும் பட்டுக்கோட்டை காளானுக்கு ஈடாகுமா?
எங்க ஊரு வைக்கோல் போர்களின் ஓரங்களில் வளரும் காளானுக்கு ஆமத்தூர், நாகை , ஈப்போ காளான்கள் ஈடாகுமா? என்னக் கொடுமை இது?

இப்படிக்கு,
பட்டுக்கோட்டை கவர்மெண்ட்

said...

ஜோசப் அண்ணனை குழம்பு கெட்டு போன பின்பு அழைத்து சாப்பிடச் சொல்லவும்

Anonymous said...

கோவியாரையும், பாரி.அரசையும் இந்த காளான் குழம்பு கூப்பிட்டி கொலை செய்ய முயற்சி செய்வதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

கோவி பாரி பேர‌வை.

said...

சொந்த பந்தங்ககளை துணைக்கண்டத்திற்கு அனுப்பி வைத்துவிட்டு தனியொரு மனிதனாக தினமும் விதவிதமாக சமையல் செய்து மூக்கு முட்ட சாப்பிட்டுவிட்டு கும்மியடித்து திரியும் ஆமத்தூர் அண்ணன் ஜெகதீசனாருக்கு எனது கடும் கண்டனங்கள்...!

//

ஆமா ஆமா

Anonymous said...

காளான் குழம்பு வைத்து கொல்வது எப்படி என்று எங்களுக்கு ஒரு எளிய கொலை முறையை சொல்லிக்கொடுத்த ஜெகதீசன் அவர்களை அனைத்துல கொலைப் படைகளின் ஆலோசகராக நியமித்து உத்தரவிடுகிறோம்.

கொலைப் படை தலைமையகம்,
ஆமாத்தூர்.

எங்களுக்கு எல்லா ஊர்களிலும் கிளைகள் உண்டு.

said...

அண்ணா நிஜமா நல்லவரே....வீட்ல அண்ணி இல்லையோ...... இங்க வந்து கூலா கும்மிக்கிட்டு இருக்கீங்க :)

Anonymous said...

//நிஜமா நல்லவன் said...
சொந்த பந்தங்ககளை துணைக்கண்டத்திற்கு அனுப்பி வைத்துவிட்டு தனியொரு மனிதனாக தினமும் விதவிதமாக சமையல் செய்து மூக்கு முட்ட சாப்பிட்டுவிட்டு கும்மியடித்து திரியும் ஆமத்தூர் அண்ணன் ஜெகதீசனாருக்கு எனது கடும் கண்டனங்கள்...! //

மனைவியார் சிங்கைக்கு வந்துவிட்டதால் சோகத்தில் இருக்கும் நிஜமா நல்லவன் அவர்களை இப்படியெல்லாம் வெறுப்பேத்தும் ஜெகதீசனை வன்மையாக கண்டிக்கிறோம்.
இதையெல்லாம் படித்து விட்டு ஷிப்யார்டில் நிஜமா நல்லவன் அவர்கள், வலிக்குதுதுதுது, அழுதுருவேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் என்று சொல்லிக்கொண்டு அழுது கொண்டே இருப்பதால் சிங்கை கடல் நீர் மட்டம் 2 மீட்டர் உயர வாய்ப்பிருப்பதாக சற்று முன் சென்னை வானிலை ஆய்வுமையம் கண்டறிந்துள்ளது.

said...

//கொலைப் படை தலைமையகம், க.சா.கா.பு.க‌ said... //

சொந்த பெயரில் வராமல் இப்படி மறைமுகமாக வரும் அண்னன் ஜோசபின் வீரத்தை பாராட்டி இந்த பின்னூட்ட மாலையை மலர்மாலையாக அணிவிக்கிறோம்

:))))))))

Anonymous said...

சிங்கை கடல் நீர் மட்டத்தை உயர்தி சுனாமியை உருவாக்கும் எங்கள் ஜெகதீசா உனை வரலாறு சுனாமி தீசன் என்று அழைக்கும்.


அவைப் புலவர்கள்.
23 ஆம் புலிக்கேசி பேரவை

Anonymous said...

இங்கு வீரன் ஜோசப் எனும் போது நான் பாட வேன்டியது அரசனை அல்ல..... இந்த தஞ்சை வீரனை

said...

இது என்ன சாமி கொடுமை? ஞாயிற்றுக்கிழமைகளில் எனக்கு விடிவதே மதியம் 2 மணிக்கு தான், எழுந்திரிச்சு அருமையான மீன் குழம்பு, மீன் வருவல் சாப்பிட்டுட்டு, சாப்பிட்ட களைப்புல மறுபடியும் தூங்கிட்டேன். இதுல என்னைய வேற போட்டு கும்முறீங்க?

மீன் குழம்பு இருக்கப்ப காளான் குழம்பப்பத்தி கவலைப்படுவேனா நானு ?

அப்துல்லா அண்ணா, நோன்பு முடிச்சுட்டு வாங்க, உங்களுக்குன்னு ஒரு ஸ்பெசல் சாம்பார் வைக்கச் சொல்றேன் ஜெகுவ.

said...

//உங்களுக்கு ஏதாவது நடந்ததா.. ஜெகதீஸன் அண்ணே...?//

ஒரு கிழமைய அன்ன லக்ஷ்மில ஆர்டர் பண்ணி போர் அடிச்சுட்டுதாம் அது தான் போல சொந்தமா கிளம்பியிருக்கிறார்.. எங்களுக்கும் பாத்து கட்டிட்டு வரலாம் தானே..

Anonymous said...

:)

said...

//
Thooya said...

:)

//
கிகிகிகிகி....
:P

said...

இன்னும் 23 நாள் இருக்காம் இவரு ஊருக்கு போறதுக்கு, இன்னெரு சமையல் பதிவு போடு நீயி, அப்றம் டொன்லீ தலைமையில், விஜய் ஆனந்த் முன்னிலையில் அனைத்து சிங்கப்பூர் பதிவர்களையும்( தமிழ், மான்ட்ரின், மலாய் பதிவர்களையும் சேர்த்து) திரட்டி ஒரு மாபெரும் படையோட வந்து உன் வீட்டு கிச்சனைப் பூட்டும் போராட்டம் நடத்துவேன்.

said...

//அப்றம் டொன்லீ தலைமையில், விஜய் ஆனந்த் முன்னிலையில் அனைத்து சிங்கப்பூர் பதிவர்களையும்( தமிழ், மான்ட்ரின், மலாய் பதிவர்களையும் சேர்த்து) திரட்டி ஒரு மாபெரும் படையோட வந்து உன் வீட்டு கிச்சனைப் பூட்டும் போராட்டம் நடத்துவேன்//

அது....எல்லாத்தையும் நிறுத்தனும்...இல்லாட்டி நிறுத்த வைப்பம்...

Anonymous said...

தம்பி, குழம்பு என்று சொல்லக் கூடாது, குளம்பி என்று சொல்வதே சரியான சொல், சங்க இலக்கியத்தில் புறநானூற்றில் ஒரு வரி வருகிறது, நினைவு படுத்தி பிறகு பின்னூட்டம் இடுகிறேன்

Anonymous said...

அந்த குழம்பில் இரண்டு டீ ஸ்பூன் ஒயினோ அல்லது பியரோ சேர்த்துப் பாருங்கள், அதன் பிறகு சுவையே தனி.