Monday, March 24, 2008

கொஞ்சம் அரசு நிலமாம்...

நம்ம கேப்டன் விசயகாந்த் அய்யாவுக்கு, 28 ஏக்கர் நிலம் கொஞ்சம் அரசு நிலமாம்....
நான் மொத்தமாக வாங்கிய நிலத்தில் சிறிது அரசு நிலம் இருந்துள்ளது. அதை எடுத்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டேன். நான் ஆக்கிமிப்பு ஏதும் செய்யவில்லை என தேமுதிக தலைவர் விஜய்காந்த் கூறினார்.

மதுராந்தகம் அருகே விஜயகாந்த் 28 ஏக்கர் வரை அரசு நிலத்தை 'ஸ்வாகா' செய்துவிட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து அவர் போட்டிருந்த வேலிகளை பிடுங்கி எறிந்துவிட்டு நிலத்தை மீட்டனர் அதிகாரிகள். இதைத் தான் கொஞ்சம் அரசு நிலம் என்று கூறியுள்ளார் விஜய்காந்த்.

அந்த நிலத்திற்கான பத்திர பதிவின் போது அரசு நிலம் இருப்பதை யாரும் கூறவில்லை. இப்போது பிரச்சினையை ஏற்படுத்துகிறார்கள்.

http://thatstamil.oneindia.in/news/2008/03/24/tn-vijaykanth-accepts-encroaching-govt-land.html


பொதுவா எல்லாரும் 1 ஏக்கர் நிலம் வாங்கினாலும், அதைப் பற்றி முழுதாக விசாரித்துத் தான்
வாங்குவாங்க.. இவர் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் வாங்கும்போது விசாரிக்காம வாங்கீட்டாருன்னு சொல்லுவாராம், இதை எல்லாரும் நம்பவேண்டுமாம்...

அது சரி, ஊர்ல இவர் தவிர வேறு யாரும் அரசு நிலத்தை ஆக்ரமிப்பு செய்யவில்லையா என்ன? அரசின் கண்ணுக்கு இவரோட ஆக்ரமிப்பு மட்டும் தெரிவதேன்? இதே போல அதிரடியாய் மற்ற எல்லாரிடமும் இருக்கும் புறம்போக்கு நிலங்களையும் மீட்கலாமே?

3 comments:

said...

நல்ல யோசனை...

என்னமோ அவங்களுக்கெல்லாம் தெரியாத மாதிரி.

அரசியலுக்கு விஜய காந்த் புதுசு. அதுனாலே மாட்டிக்கிறார்..

பழைய ஆள் என்றால், சுவடுகளை அழகாக மறைத்திருப்பர்கள்..

said...

அவருக்கு இருக்கும் சொத்து மதிப்பை வைத்து ஒப்பிடும் போது இது அளவு அளவிட முடியாத அளவுக்கு சின்னது போல, அதனால் தான் கொஞ்சம் என்று குறிப்பிட்டு இருக்கார்.

சொத்தெல்லாம் யாருக்கு சேர்க்கிறார், நாளையே முதல்வரானால் எல்லாம் 'தமிளர்'களுக்கு பிரிச்சு கொடுக்கப் போறார். அதற்குள் குட்டையை குழப்பி ஏழைகளுக்கு கிடைக்கப் போகும் நலனை தடுத்து நிறுத்தனுமா ?

திமுக அரசு ஒழிக !
:)

said...

அறிவு கெட்ட அனானி, மீண்டும் உன் பின்னூட்டம் குப்பைக்குப் போய்விட்டது.. உன் பாராட்டை நான் உனக்கே திரும்பித் தருகிறேன். வைத்துக்கொள்.....