உங்கள் தமிழார்வத்தை நான் பாராட்டுகிறேன். நானும் இனிமேல் என் பதிவுகளில்(எப்போதாவது எழுதினால்... :) ) தமிழ் தவிர மற்ற மொழி சொற்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க முடிவு செய்திருக்கிறேன்..
அப்படியே உங்களுக்கு ஒரு சிறு விண்ணப்பம்...
இனி வரும் பதிவுகளில் ஒற்று எங்கு மிகும், எங்கு மிகாது எனக் கவனித்து எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன்....
உங்கள் பதிவுகளில் தவறாக ஒற்று மிகுந்துள்ள/ மிகாத சில இடங்கள்:
என்பதுப் போலவும் (என்பது போலவும்)
என்றுச் சொல்ல (என்று சொல்ல)
கலைஞரை சாடியவர்(கலைஞரைச் சாடியவர்)
.......
........
க, ச, த, ப - ஒற்று மிகாத இடங்கள்
1) அகர ஈற்றுப் பெயரெச்சம்
தின்றன காளைகள்
2) வினைமுற்று தொடர்
வாழ்க திலகர்
3) எட்டாம் வேற்றுமை, விளிவேற்றுமை
அம்மா கொடு
4) று, து, டு, - ஈற்றெழுத்து எனின் மிகாது
சென்று கண்டான்(வந்து, கண்டு)
5) ஆ, ஏ, ஓ, யா - வினா முன் மிகாது
ராமனா செய்தான்
முழுதும் பார்க்க:http://www.thamizham.net/innov/innov155.htm
(பின் குறிப்பு: இது மொக்கை மட்டுமே... :) )
10 comments:
மொக்கை என்பது தமிழ்ச் சொல்லா ?
அருள் கூர்ந்து விளக்கவும்.
மலராத மொட்டினை மொக்கு எனச் சிலர் எழுதக்கண்டிருக்கிறேன்.
ஆனால் மொக்கை என்ன என விளங்கவில்லை.
சுப்புரத்தினம்.
தஞ்சை.
http://arthamullavalaipathivugal.blogspot.com
http://vazhvuneri.blogspot.com
ஜெகதீசன்,
நீங்கள் பயன்படுத்திய வடசொற்களுக்கு மாற்றாக,
சமீபத்திய - அண்மைய
பிரம்மிக்க - வியப்படைய
வார்த்தைகளைப் - சொற்களைப்
:)
என்னால் முடிந்தது !
பிரம்மிக்க = பிரமிக்க
//
கோவி.கண்ணன் said...
ஜெகதீசன்,
நீங்கள் பயன்படுத்திய வடசொற்களுக்கு மாற்றாக,
சமீபத்திய - அண்மைய
பிரம்மிக்க - வியப்படைய
வார்த்தைகளைப் - சொற்களைப்
:)
என்னால் முடிந்தது !
rravish said...
பிரம்மிக்க = பிரமிக்க
//
நன்றி!! மாற்றிவிட்டேன்... :)
ஜெகதீசனரே,
பாடங்கள் அருமை..
சிறிது சிறிதாகவேனும், கற்றுக் கொண்டு, பிழை இல்லாமல் எழுத முயற்சிக்கிறேன். :P
முடியல....
முடியல..........
தமிழய்யா! வணக்கம்.
(நண்பர் டிபிசிடி ஏற்கெனவே தன்னுடைய பதிவினை வறுவல் / பொரியல் பதிவாக ஆக்கி விட்டதால்), தாங்களும் கோவி.கண்ணனும் சேர்ந்து ஏன் ஒரு கூட்டுப் பதிவு (தமிழ்ச் சேவைக்கு) ஆரம்பித்துத் தொடரக் கூடாது? எதிர்கால சந்ததிக்கான சேவையாக அது இருக்குமே!
ஒற்று மிகா இடங்கள் விளக்கம் சிலிர்க்க வைத்தது.
//
RATHNESH said...

வாருங்கள் ரத்னேஷ்.. நான் 2090 ஆம் ஆண்டு மீண்டும் பதிவு எழுத வரும்போது இந்தக் குழுப்பதிவைத் தொடங்குகிறேன்...
:)
இந்த 2090, ஆங்கில ஆண்டா, திருவள்ளுவர் ஆண்டா, புதுத் தமிழ் ஆண்டா, பழைய தமிழ் ஆண்டா?
பு.த.செ.வி.
(ஆனால் என்னுடைய முந்தைய பின்னூட்டம் நீங்கள் சீரியஸாகவே கன்சிடர் செய்வதற்காக எழுதப்பட்டது. அட்லீஸ்ட், சீரியஸாக - தீவிரமாக, கன்சிடர் - பரிசீலனை என்றாவது ஆரம்பியுங்களேன்)

நன்றி ரத்னேஷ்!!! ஆனால் இப்படி எதும் செய்ய முயலும் முன் முதலில் தமிழில், பிழையின்றி/ பிற மொழிக் கலகப்பின்றி எழுத நான் பழகவேண்டும்...
ஆனால் கோவி.கண்ணன் இதைச் செய்யலாம்... அவர் இதைப் பரிசீலனை செய்வார் என நம்புகிறேன்...
Post a Comment