Sunday, September 23, 2007

வேதாந்தியைக் கைவிட்ட வேதாந்தம்.....

முதல்வர் கருணாநிதிக்கு கொலை மிரட்டல் விடுத்து வி.எச்.பியைச் சேர்ந்த சாமியார் வேதாந்தி பேசியிருப்பதற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று பாஜகவும், வி.எச்.பியும் கூறியுள்ளன.

முதல்வர் குறித்துக் கூட அயோத்தியைச் சேர்ந்த யாரோ ஒருவர் இதுபோன்ற வார்த்தைகளைப் பிரயோகித்தது கூட நான் அறிந்தேன். அவருக்கும், பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவரது கருத்துக்கள் பாஜகவின் கருத்துக்களும் அல்ல. அதை பாஜக வன்மையாக கண்டிக்கிறது.
-இல.கணேசன்.


பாஜக சார்பில் இருமுறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், சில நாடாளுமன்றக் குழுக்களின் உறுப்பினராகவும் இருந்தவர், திடீரென்று பாஜகவுக்கு சம்பந்தமில்லாத யாரோ ஒருவரானது எப்படி?

இதுகுறித்துக் கூறுகையில், வேதாந்தி வி.எச்.பி. அமைப்பில் உறுப்பினராகக் கூட இல்லை. அவரது கருத்து வி.எச்.பியின் கருத்து கிடையாது, அது அவரது சொந்தக் கருத்து.
-வி.எச்.பி. அமைப்பின் அகில உலக செயல் தலைவர் வேதாந்தம்


வி.எச்.பி யின் ஒரு மண்டலத் தலைவர் திடீரென்று அந்த அமைப்பில் உறுப்பினராகக் கூட இல்லாமல் போனது எப்படி?

நன்றி- தட்ஸ் தமிழ்.

முழு செய்திக்கு -வேதாந்தியின் மிரட்டல் பேச்சு எங்களுக்குச் சம்பந்தமில்லை - பாஜக, வி.எச்.பி.

வேதாந்தியின் பல்டி: நான் ஃபாத்வா விதிக்கவில்லை - வேதாந்தி பல்டி

5 comments:

said...

இவ்வளவு சிக்கலாகுமென எதிர்பார்க்கவில்லைப் போலும்..

said...

இறைநம்பிக்கை உடையவர்கள் 'சாது'வானர்களாம். இல்லாதவர்கள் எதற்கும் துனிந்தவர்களாம்... நிறைய மடையகள் சொல்கிறார்கள்.
:))

said...

இவனுங்களை தூக்கிப்போட்டு டைட்கொ ல மிதிச்ச சம்மந்தம் இருக்க இல்லையான்னு தெரியும்.

இந்த பிரச்சினையில் திமுகவின் எதிர்வினை 100% சரியே

said...

//
கோவி.கண்ணன் said...
இறைநம்பிக்கை உடையவர்கள் 'சாது'வானர்களாம். இல்லாதவர்கள் எதற்கும் துனிந்தவர்களாம்... நிறைய மடையகள் சொல்கிறார்கள்.
:))
//
வாங்க கோவி.கண்ணன்..
பாபர் மசூதியை இடித்த காட்டுமிராண்டிகள் எல்லாம் மிகவும் சாதுக்கள் தான்..

said...

//
வரவனையான் said...
இவனுங்களை தூக்கிப்போட்டு டைட்கொ ல மிதிச்ச சம்மந்தம் இருக்க இல்லையான்னு தெரியும்.

இந்த பிரச்சினையில் திமுகவின் எதிர்வினை 100% சரியே
//
அந்த "எதிர்வினை"யைப் பார்த்துத் தானே திடீரென்று பல்டி அடித்து விட்டார்கள்...