Sunday, September 9, 2007

முரண்பாடு - பாவங்களும் இறைவனின் இருத்தலும்

இறைவன் இருப்பது உண்மை எனில்,

1. இறைவன் பாவங்களை அழிக்க நினைக்கிறான் ஆனால் முடியவில்லை.
அல்லது
2. அவனால் முடியும் ஆனால் செய்ய விரும்பவில்லை.
அல்லது
3. அவனால் முடியாது மற்றும் செய்யவும் விரும்பவில்லை.
அல்லது
4 கடைசியாக அவனால் முடியும் மற்றும் செய்யவும் விரும்புகிறான்.

............................

1. அவன் பாவங்களை அழிக்க நினைக்கிறான் ஆனால் முடியவில்லை எனில்,
அவன் "எல்லாம் வல்லவன்" இல்லை.

2. அவனால் முடியும் ஆனால் செய்ய விரும்பவில்லை எனில்,
அவன் "கருணையுள்ளவன்" இல்லை.

3. அவனால் முடியாது மற்றும் செய்யவும் விரும்பவில்லை எனில்,
அவன் "எல்லாம் வல்லவனும்" இல்லை, "கருணையுள்ளவனும்" இல்லை.

4. ஆனால் அவனால் முடியும் மற்றும் செய்யவும் விரும்புகிறான் எனில்,
பாவங்கள் எப்படி இருக்க முடியும்?

- கிரேக்கத் தத்துவ ஞானி எபிகுரஸ் (கி.மு 3ம் நூற்றாண்டு)

Either God wants to abolish evil and cannot,
or he can but does not want to,
or he cannot and does not want to,
or lastly he can and wants to.

If he wants to remove evil, and cannot,
he is not omnipotent;
If he can, but does not want to,
he is not benevolent;
If he neither can nor wants to,
he is neither omnipotent nor benevolent;
But if God can abolish evil and wants to,
how does evil exist?

-Greek philosopher Epicurus(3rd century BCE).

17 comments:

said...

நல்லது நடந்தால் இறைவனின் செயல் என்றும் கெடுதல் நடந்தால் விதிப்பயன் என்றும், தாழ்த்தப்பட்டவர் நிலை ஆண்டவனே அளித்ததும் என்றும் வெறும் இறை நம்பிக்கையில் மனிதம் மறப்பவர்களுக்கு இவை சரியான சொற்கள்.

எழுதிப்போட்ட உங்களுக்கு பாராட்டுக்கள்.

said...

//இறைவன் இருப்பது உண்மை எனில்,//

இந்த உலகத்தைப்பார், அதனில் உள்ள ஒவ்வொரு படைப்பின் சிறப்பைப் பற்றி உன் அறிவைக் கொண்டு சிந்தி. இவையெல்லாம் எப்படி சாத்தியம் என்பதற்காண விடையைக் காண முயற்சி செய். உன்னுடைய முயற்சி சரியான கோணத்தில் செல்லுமானால் அப்பொழுது உணர்வாய் - இறைவனை.

said...

கோவி.கண்ணன் அவர்களே,
உங்கள் பாராட்டுக்கு நன்றி.

said...

திரு. அப்துல் குத்தூஸ் அவர்களே,

இறைவன் இருக்கிறான் என்றே வைத்துக் கொள்வோம். எபிகுரஸின் கேள்விக்கு என்ன பதில்? இறைவன் பாவங்களை அழிக்க விரும்ப வில்லையா? இல்லை அவனால் முடியவில்லையா?

Anonymous said...

ஜெகதீசன் !

நன்கு எழுதினீரகள்;
மதவாதிகளால் தர்க்கரீதியான, அறிவு ஒப்புக்கொள்ளும் படியான (logical and analytical) பதிலை சொல்லவே முடியாது;
ஆனால் ஏதாவது சொல்ல முயற்சிப்பார்கள்;
தோல்வியே மிஞ்சும்.
அவர்கள் அப்படித்தான்!

உங்களுக்குப் பாராட்டுக்கள்.

said...

//
Anonymous said...

ஜெகதீசன் !

நன்கு எழுதினீரகள்;
மதவாதிகளால் தர்க்கரீதியான, அறிவு ஒப்புக்கொள்ளும் படியான (logical and analytical) பதிலை சொல்லவே முடியாது;
ஆனால் ஏதாவது சொல்ல முயற்சிப்பார்கள்;
தோல்வியே மிஞ்சும்.
அவர்கள் அப்படித்தான்!

உங்களுக்குப் பாராட்டுக்கள்.
//நன்றி அனானி.

said...

நன்றி

said...

//ஜெகதீசன் said...
திரு. அப்துல் குத்தூஸ் அவர்களே,

இறைவன் இருக்கிறான் என்றே வைத்துக் கொள்வோம். எபிகுரஸின் கேள்விக்கு என்ன பதில்? இறைவன் பாவங்களை அழிக்க விரும்ப வில்லையா? இல்லை அவனால் முடியவில்லையா?//

மன்னிக்கனும். எபிகுரஸின் கேள்வி எனக்கு தான் தோன்றி தனமானதாகப் படுகின்றது. எதையும் ஆராயாமல் கேட்கப்பட்ட கேள்வியாகும்.

இந்த விசயத்தில் எங்களுக்கு எந்தவித குழப்பமும் இல்லை. ஏனென்றால், 1400 ஆண்டுகளுக்கு முன்பே எங்களின் வேதத்தில் இறைவன் தெளிவாகக் கூறிவிட்டான். அதாவது , "இவ்வுலக வாழ்கையானது மனிதர்களுக்கு ஒரு சோதனைக் கூடமாகும்".

"நன்மையானதும் தெளிவாக்கப்பட்டுள்ளது, தீமையானதும் தெளிவாக்கப்பட்டுள்ளது" உங்களுக்கு வழங்கப்பட்ட காலங்கள் வரை நீங்கள் விரும்பியவாறு வாழ்ந்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு வழங்கப்பட்ட காலம் முடிவடைந்தவுடன் உங்கள் அனைவரையும் நாம் ஒன்று திரட்டுவோம். அப்பொழுது நீங்கள் எப்படி உங்களின் காலங்களை இவ்வுலகத்தில் செலவழிந்தீர்கள் என்ற கேள்விக்கு உட்படுத்தப்பட்டு அதன்பொருட்டு உங்களுக்கு தண்டனையோ அல்லது பரிசோ வழங்கப்படும். அன்றைய பொழுதில் யாருக்கும் அநீதி இழைக்கப்பட மாட்டாது.

ஆகவே, இறைவன் உலக வாழ்கையை உங்களுக்கு ஒரு சோதனைக் களம் என்கின்றான். பரிச்சை எழுதிக் கொண்டிருக்கும் போதே மார்க் போட முடியுமா? பொறுத்திருங்கள் தேர்வு முடியட்டும்.

said...

திரு. அப்துல் குத்தூஸ் அவர்களே,
உங்கள் விளக்கத்திற்கு நன்றி.
//
எபிகுரஸின் கேள்வி எனக்கு தான் தோன்றி தனமானதாகப் படுகின்றது. எதையும் ஆராயாமல் கேட்கப்பட்ட கேள்வியாகும்.

இந்த விசயத்தில் எங்களுக்கு எந்தவித குழப்பமும் இல்லை. ஏனென்றால், 1400 ஆண்டுகளுக்கு முன்பே எங்களின் வேதத்தில் இறைவன் தெளிவாகக் கூறிவிட்டான். அதாவது , "இவ்வுலக வாழ்கையானது மனிதர்களுக்கு ஒரு சோதனைக் கூடமாகும்".
//

எபிகுரஸ் சுமார் 2200(கிமு 3ம் நூற்றாண்டு) ஆண்டுகளுக்கு முற்பட்டவர். எனவே உங்கள் வேதத்தில் கூறப்பட்டது அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.

//
"நன்மையானதும் தெளிவாக்கப்பட்டுள்ளது, தீமையானதும் தெளிவாக்கப்பட்டுள்ளது" உங்களுக்கு வழங்கப்பட்ட காலங்கள் வரை நீங்கள் விரும்பியவாறு வாழ்ந்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு வழங்கப்பட்ட காலம் முடிவடைந்தவுடன் உங்கள் அனைவரையும் நாம் ஒன்று திரட்டுவோம். அப்பொழுது நீங்கள் எப்படி உங்களின் காலங்களை இவ்வுலகத்தில் செலவழிந்தீர்கள் என்ற கேள்விக்கு உட்படுத்தப்பட்டு அதன்பொருட்டு உங்களுக்கு தண்டனையோ அல்லது பரிசோ வழங்கப்படும். அன்றைய பொழுதில் யாருக்கும் அநீதி இழைக்கப்பட மாட்டாது.
//
நீங்கள் கூறியதை நான் இவ்வாறு புரிந்து கொண்டுள்ளேன்,
"என் வாழ்நாளில் நான் செய்யும் நல்லவை/கெட்டவை எதுவும் இறைவன் செயல் இல்லை. ஆனால் என் எல்லாச் செயல்களையும் அவன் பார்த்துக்கொண்டு இருக்கிறான். இறுதியில் பரிசு/தண்டனை தருவான்"

என் புரிதல் சரியா?

சரி என்றால்,
"எல்லாம் அவன் செயல்",
"அவனின்றி ஓர் அனுவும் அசையாது"
என்பது போன்ற கருத்துக்கள் எதுவும் உங்கள் மார்க்கத்தில் இல்லையா?
(எனக்கு இஸ்லாம் பற்றி அதிகம் தெரியாது. தெரிந்துகொள்ளவே கேட்கிறேன்.)

said...

//ஜெகதீசன் said...
எபிகுரஸ் சுமார் 2200(கிமு 3ம் நூற்றாண்டு) ஆண்டுகளுக்கு முற்பட்டவர். எனவே உங்கள் வேதத்தில் கூறப்பட்டது அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. ///

மன்னிக்கவும். எபிகுரஸ் கிமு 3ம் நூற்றாண்டு முற்பட்டவர் என்பதை அறியாததால் அவ்வாறு கூறினேன்.

அதன் பிறகு அவரைப்பற்றி விக்கிபீடியாவில் தேடியபோது கிடைக்கப்பெற்றது. (எனக்கு அவ்வளவாக ஆங்கிலம் விளங்காது). தாங்கள் கீழ் கண்டவற்றை விளக்க முடியுமா?

http://en.wikipedia.org/wiki/Problem_of_evil#Epicurus

"Either God wants to abolish evil, and cannot; or he can, but does not want to. If he wants to, but cannot, he is impotent. If he can, but does not want to, he is wicked. If God can abolish evil, and God really wants to do it, why is there evil in the world? — Epicurus, as quoted in 2000 Years of Disbelief

Epicurus himself did not leave any written form of this argument. It can be found in Lucretius's "De Rerum Natura" and in Christian theologian Lactantius's "Treatise on the Anger of God" where Lactantius critiques the argument."

நான் விளங்கிய வரை இக்கருத்துக்கு பொறுப்புதாரி எபிகுரஸ் இல்லை என்பதே. என்னுடைய புரிதல் சரியா?

said...

God, dharma, human logic, astrology and life ; Maughum's Razor's Edge, etc

To : Thiru Sujatha Rangarajan

Dear Sir,

Hindu concepts of transmigration of soul, rebirth
can be used to justify or rationalise the unfairness
of life on earth. God' dharma or ethics is
incomprehensible to our human logic. Good people
suffer needlessly while evil people flourish and die
peacefully. so it seems. In Astrology, the fifth house
denotes prevoius births or purva punya sthanam.
And our current life and events are based on tallying
the good/bad things we had done in prevoius births.

Only if we can understand or accept such logic can we
justify or rationalise life's contradictions and
unfairness.

Hope you must have read Razor's Edge by your favourite
author Somerset Maughaum, based on Ramanar and India.
It is his most important work. Pls re-read Larry's
experiences and inferences again. About Godliness
and human life and soul.

Also R.K.Narayan's auto-biography "My Days" and
semi-autobiographical novel "English Teacher" are
important books about tranmigration of soul. he says he
established contact with his late wife (who passed
away in 1939) ; and he is not unscientific.

Astrology, as in weekly predictions or sun-signs are
generalised and can be quite inaccurate. Only a
correct interpretation of horoscope can give accurate results
and analysis. The character of an individual, his
strenghts and weakness, biases , health, appearance
,etc can be predicted accurately in our Indian
methods. Pls try to meet Thiru.A.M.R of Kumudam
jodhidam for a discussion. Or you can enquire about
his merits and accomplishments with your contacts at
Kumudam office, etc. You may be in for a surprise.

I am from a DK background, but now an ametuer
astrologer ; and can understand many facets or life
and humans better now.

more later

Sincerely Yours
Athiyaman
Chennai

said...

Man created God in his image: intolerant, sexist, homophobic and violent. --Marie
இது போன்றதுதான் சோதனைக் களம், பரீட்சை, மார்க் எல்லாம். அப்படியே இது உண்மை என்றால் இந்த பரீட்சை, மார்க் எல்லாம் எதற்கு. இதனால் என்ன சாதிக்க நினைக்கிறான். அவன் குறிக்கோள் தான் என்ன?
//இந்த உலகத்தைப்பார், அதனில் உள்ள ஒவ்வொரு படைப்பின் சிறப்பைப் பற்றி உன் அறிவைக் கொண்டு சிந்தி. இவையெல்லாம் எப்படி சாத்தியம் என்பதற்காண விடையைக் காண முயற்சி செய். உன்னுடைய முயற்சி சரியான கோணத்தில் செல்லுமானால் அப்பொழுது உணர்வாய் - இறைவனை.
////
உலகம் எப்படி உருவானது என்பது பற்றி விஞ்ஞானிகள் சொல்வது நம்பும்படியாக உள்ளது. ஆனால் நீங்கள் சொல்வது நம்பும்படியாக இல்லையே. ஏன் எதையும் அறிவுப்பூர்வமாக யோசிக்க மறுக்கிறீர்கள். நம்பும்படியாகவோ logic-காகவோ எதையும் சொல்லாமல் சும்மா உணர்ந்து பார், ருசித்துப் பார் என்றால் காமடியாக இல்லை?

Anonymous said...

ஜீன்!
நன்றாகச் சொன்னீர்கள்.
காமெடிதான்.

ஏன் இவர்கள் இப்படி 'காமெடி' செய்கிறார்கள் என்பதை ஆராயும் அறிவியல் மற்றும் உளவியல் சார்ந்த விளக்கங்களைப் படியுங்கள்.

சுவாரசியமாக இருக்கும்.

said...

//
அதன் பிறகு அவரைப்பற்றி விக்கிபீடியாவில் தேடியபோது கிடைக்கப்பெற்றது. (எனக்கு அவ்வளவாக ஆங்கிலம் விளங்காது). தாங்கள் கீழ் கண்டவற்றை விளக்க முடியுமா?

http://en.wikipedia.org/wiki/Problem_of_evil#Epicurus

"Either God wants to abolish evil, and cannot; or he can, but does not want to. If he wants to, but cannot, he is impotent. If he can, but does not want to, he is wicked. If God can abolish evil, and God really wants to do it, why is there evil in the world? - Epicurus, as quoted in 2000 Years of Disbelief

Epicurus himself did not leave any written form of this argument. It can be found in Lucretius's "De Rerum Natura" and in Christian theologian Lactantius's "Treatise on the Anger of God" where Lactantius critiques the argument."

நான் விளங்கிய வரை இக்கருத்துக்கு பொறுப்புதாரி எபிகுரஸ் இல்லை என்பதே. என்னுடைய புரிதல் சரியா?
//

அப்துல் குத்தூஸ் அவர்களே,
மன்னிக்கவும். உங்கள் புரிதல் எனக்கு சரியாகத் தெரியவில்லை(எனக்கும் அவ்வளவாக ஆங்கிலம் விளங்காது).
இது அவரது வாதம் இல்லை என்று விக்கிபீடியாவில் கூறப்பட்டுள்ளதாக எனக்குத் தெரியவில்லை.

"இந்த விவாதத்தின் எழுத்து வடிவம் எதையும் அவர்(எபிகுரஸ்) விட்டுச் செல்லவில்லை. ஆனால் இதை Lucretius எழுதிய De Rerum Natura நூலிலும், Lactantius எழுதிய "Treatise on the Anger of God" நூலிலும் காணலாம். Lactantius இந்த வாதத்தை விமர்ச்சனம் செய்திருப்பார்."
இது தான் நான் புரிந்துகொண்டது.

மேலும் சில தகவல்கள்:
"இறைவன் மற்றும் பாவம்" பற்றிய இந்த வாதம் பொதுவாக "Epicurean paradox" or "the riddle of Epicurus." என்று அழைக்கப் படுகிறது.

Lucretius, எபிகுரஸின் சீடர். De Rerum Natura(லத்தீன்) அவரது கவிதை வடிவ நூல். இதில் அவர் இந்த வாதத்திற்கு ஆதரவாக எழுதியிருப்பார். Lucretius, கிமு. முதல் நூற்றாண்டைச் சார்ந்தவர்.

Lactantius, கி.பி. முதல் நூற்றாண்டைச் சார்ந்தவர். கிறித்துவம் பற்றிய பல நூல்கள் எழுதியவர். அவர் தனது "Treatise on the Anger of God" என்னும் நூலில் இந்த வாதத்திற்கு எதிராக வாதிட்டுள்ளார்.

சில சுட்டிகள்:

http://en.wikipedia.org/wiki/On_the_Nature_of_Things
http://en.wikipedia.org/wiki/Lucretius
http://en.wikipedia.org/wiki/Lactantius

நன்றி.

said...

அப்துல் குத்தூஸ் அவர்களே,
மனித வாழ்வைப் பற்றிய என் புரிதல் சரியா இல்லையா இன்னும் என்பதை நீங்கள் சொல்லவே இல்லை...

"எனக்கு இஸ்லாம் பற்றி அதிகம் தெரியாது" என்று சொன்னதை நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டீர்களோ என பயப்படுகிறேன். நான் சொன்னதன் பொருள் "நான் இதுவரை இஸ்லாம் பற்றிய நூல்கள் அதிகம் படித்ததில்லை. இறைவன் பற்றிய இஸ்லாமின் கருத்துக்கள் அதிகம் தெரியாது" என்பதே....

said...

// ஜெகதீசன் said...
சரி என்றால்,
"எல்லாம் அவன் செயல்",
"அவனின்றி ஓர் அனுவும் அசையாது" என்பது போன்ற கருத்துக்கள் எதுவும் உங்கள் மார்க்கத்தில் இல்லையா? //


இறைவன் இந்த உலகத்தை நமக்கு சோதனைக் கூடமாக ஆக்கியிருப்பதாக கூறியிருக்கின்றேன். அதிலேயே உங்களின் கேள்விகளுக்கும் விடை இருக்கின்றது அல்லவா சகோதரரே? - இது எல்லாம் அவன் செயல் என்ற கருத்து உள்ளடங்கியுள்ளதுதானே? அதனால் தானே ஏற்படுகின்ற தீமைகளை பார்த்துக் கொண்டிருக்கின்றான், அவன் நமக்கு அளித்த இறுதி நாள் வரும் வரை.

அருள்மறை குர்ஆன்7:183 (இவ்வுலகில்) நான் அவர்களுக்கு அவகாசம் கொடுக்கின்றேன்; நிச்சயமாக எனது திட்டம் மிகவும் உறுதியானது

said...

//
இறைவன் இந்த உலகத்தை நமக்கு சோதனைக் கூடமாக ஆக்கியிருப்பதாக கூறியிருக்கின்றேன். அதிலேயே உங்களின் கேள்விகளுக்கும் விடை இருக்கின்றது அல்லவா சகோதரரே? - இது எல்லாம் அவன் செயல் என்ற கருத்து உள்ளடங்கியுள்ளதுதானே? அதனால் தானே ஏற்படுகின்ற தீமைகளை பார்த்துக் கொண்டிருக்கின்றான், அவன் நமக்கு அளித்த இறுதி நாள் வரும் வரை.

அருள்மறை குர்ஆன்7:183 (இவ்வுலகில்) நான் அவர்களுக்கு அவகாசம் கொடுக்கின்றேன்; நிச்சயமாக எனது திட்டம் மிகவும் உறுதியானது
//

"எல்லாம் அவன் செயல்" என்றால் என் வாழ்நாளில் நான் செய்யும் எல்லாச் செயல்களும்(நல்லவை/ கெட்டவை) அவன் செயல்களா?