Saturday, September 8, 2007

ஆமணக்கு புதிர் - தாத்தா சொன்னது

நாங்கள் சிறு வயதில் இருக்கும்போது எங்கள் தாத்த்தா தினமும் இரவு ஏதேனும் புதிர் அல்லது விடுகதை சொல்வார். அந்தப் புதிர்களில் ஒன்று:

இரு விவசாயிகள், அவர்களின் தோட்டத்தில் விளைந்த ஆமணக்கு விதைகளை விற்ப்பதற்க்காக வியாபாரி ஒருவரிடம் கொண்டு சென்றனர். இருவரிடமும் தலா 30 கிலோ ஆமணக்கு விதைகள் இருந்தது. ஒருவரிடம் இருந்த விதைகள் தரமானதாகவும், அடுத்தவரிடம் இருந்த விதைகள் சற்று தரம் குறைந்ததாகவும் இருந்தது.

வியாபாரி தரமான விதைகளை 2 கிலோ 10 ரூபாய்க்கும், தரம் குறைவாக இருந்த விதைகளை 3 கிலோ 10 ரூபாய்க்கும் வாங்கிக்கொள்ள சம்மதித்தார்.

வியாபாரி, "தரமற்ற விதைகளைத் தனியாக என்னால் விற்க முடியாது. எனவே முதலில் இரண்டு விதைகளையும் கலந்த்து கொள்ளலாம் பின் ஒவ்வொரு 5 கிலோவாக நிறுத்துக்கொண்டு 20 ரூபாய்(2கிலோ நல்ல விதைக்கு 10ரூபாய் + 3 கிலோ தரம் குறைந்த விதைக்கு 10 ரூபாய்) தந்துவிடுகிறேன். நீங்கள் உங்களுக்குள் பிரித்துக் கொள்ளுங்கள்." என்று கூறினார். இதை இரு விவசாயிகளும் ஏற்றுக் கொண்டனர்.

மொத்தமுள்ள 60 கிலோ விதைகளையும் 12 தடவைகளில் ஒரு முறைக்கு 5 கிலோ வீதம் அளந்து விட்டு ரூ.240(12*20) விவசாயிகளிடம் கொடுத்து பிரித்துக்கொள்ளச் சொல்லிவிட்டார்.

தரமான விதை கொண்டு வந்த விவசாயிக்கு 30 கிலோவுக்கு ரூ.150(15*10), தரம் குறைவான விதை கொண்டு வந்த விவசாயிக்கு 30 கிலோவுக்கு ரூ.100 ஆகமொத்தம் ரூ.250 இருக்கவேண்டும். மீதம் ரூ10 என்ன ஆயிற்று?


"தெரியல தாத்தா. நீங்களே சொல்லிடுங்க", என்று அவரிடம் கேட்டால் அவர் சொல்லும் ஒரே பதில் "அதுதான் அந்த வியாபாரியின் தந்திரம்".

அந்தத் தந்திரம் என்ன என்பதை கண்டுபிடித்துப் பின்னூட்டம் இடுங்கள்....

6 comments:

said...

தந்திரம் என்னவென்று யோசித்து சொல்கிறேன்.

நீங்கள் ஜெயசீலனின் அண்ணனா? ஜெயசீலன் என் நண்பனின் நண்பன் தான்..

:)

said...

//
நீங்கள் ஜெயசீலனின் அண்ணனா?
//
ஆமாங்க பொன்வண்டு.. நீங்க PSR கல்லூரி மாணவரா?

said...

இல்லை .. இங்கே பெங்களூரில்தான் பழக்கம்.. என் அறையிலிருக்கும் நண்பன் PSR கல்லூரி மாணவர்.. அவன் ஜெயசீலனின் நண்பன்.. அவனை வைத்து ஜெயசீலனை எனக்குத் தெரியும்.. இங்கு எங்கள் இருவரின் வீடுகளும் மிக அருகில் தான் உள்ளன. என் பெயர் யோகேஸ். கேட்டுப்பாருங்கள் நினைவிருக்கும்.

said...

தரமான விதைகளை மட்டும் 2 கிலோ 10 ரூபாய்க்கு விற்கும்போது, 30 கிலோவையும் விற்று முடிக்க 15 தடவைகள் வேண்டும்.
தரமற்ற விதைகளை மட்டும் 3 கிலோ 10 ரூபாய்க்கு விற்கும்போது, 30 கிலோவையும் விற்று முடிக்க 10 தடவைகள் வேண்டும்.
தரமான மற்றும் தரமற்ற விதைகளைக் கலந்து, 5 கிலோ 20 ரூபாய்க்கு விற்கும்போது 12 தடவைகள் வேண்டும். ஆனால், 10வது தடவையிலேயே அனைத்து தரமற்ற விதைகளும் முடிந்து போயிருக்கும். மீதமுள்ள 10 கிலோவும் தரமான விதைகளே. எனவே அவற்றின் உண்மை விலை = 10 * 2 = 20 ரூபாய். ஆனால் விற்கப்பட்ட விலை = 10 * 3 = 30 ரூபாய். இப்படித்தான் 10 ரூபாய் காணாமல் போனது.

சரியா?

-ஞானசேகர்

said...

ஞானசேகர்.. சரிதாங்க :)

said...

அருமையான புதிர்... யோசிக்க அவகாசம் எடுத்துக் கொள்வதற்குள் J.S.ஞானசேகர் அவர்களின் விடையை படித்தாகிவிட்டது.

ம் அடுத்து புதிர் போட்டீர்கள் என்றால் பின்னூட்டத்தில் சரியான விடை இருந்தால். சரியான விடை கூறிய பதிவரின் பெயரை குறிப்பிட்டு பின்னூட்டம் போடுங்கள். எல்லோரும் முயற்சி செய்தபின் சரியான விடை உள்ள பின்னூட்டங்களை வெளியிடுங்கள்.