Wednesday, October 14, 2009

யார் சொன்னது அங்கு அவலம் என்று?

ஆம்! அங்கு அவலம் ஏதும் இல்லை. பாலாறும், தேனாறும் பாய்ந்து ஓடுகிறது. இப்போது அங்கிருக்கும் ஒரே பிரச்சனை இந்த ஆறுகளில் இருந்து மொண்டு குடிக்கப் போதுமான அளவு சொம்புகள் இல்லை என்பதே!
வெளியிலிருப்பவர்கள் இந்த ஆறுகளில் இருந்து பாலும், தேனும் திருடிவிடக்கூடாது என்பதற்காகவும், இந்த ஆறுகள் வெளியே சென்றுவிடாமல் இருப்பதற்காகவும் பாதுகாப்புக்காக மட்டுமே முள்வேலி!

இந்தத் தமிழக இதழ்களுக்கு வேறு வேலையே இல்லை.
நல்ல வேளை நமது குழுவினர் அங்கு சென்று உண்மைகளை அறிந்து நமக்குத் தெரிவித்துள்ளனர். இல்லையெனில் இன்னும் இந்த இதழ்கள் சொல்வதையே நாம் நம்பிக்கொண்டிருந்திருப்போம். அவர்களுக்குக் கோடி நன்றிகள்!

சொம்பு பற்றாக்குறையை நீக்க தியாகத் திருவிளக்கும், இனத்தலைவரும் விரைவில் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பார்கள்.

மக்கள் எவ்வளவு மகிழ்வாய் இருக்கிறார்கள் தெரியுமா? பொழுது போவதற்காக, பாதுகாப்பிற்காக இருக்கும் ராணுவத்தினருடன் கபடியும் கில்லியும் விளையாடி மகிழ்கிறார்கள். இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம் ராணுவத்தினர் பழக எவ்வளவு இனிமையானவர்கள் என்று.

"************** *********************** ************************** *************************** *************************** ***** *****************************************
************** *********************** ************************** *************************** *************************** ***** *****************************************

************** *********************** ************************** *************************** *************************** ***** *****************************************"

"*******" இருக்கும் இடங்களில் உங்களுக்குப் பிடித்த சொற்களை நிரப்பி இந்தக் குழுவினரையும் அவர்களை அங்கு அனுப்பியவர்களையும் பாராட்டுங்கள்! (உங்களது பாராட்டுக்கள் 2000 சொற்களுக்கு மிகுந்து இருக்க வேண்டும். எவ்வளவு பாராட்டினாலும் உக்காந்து கேட்டுக்கிட்டே இருப்போம் நாங்க..)

இதற்கும் மேலும் அங்கு அவலம் என்று யாரேனும் சொன்னால், இந்தக் குழுவினரும், அவர்களை அங்கு அனுப்பிய தியாகத் திருவிளக்கும், இனத்தலைவரும் தங்கள் குடும்பங்களுடன் சென்று முகாம்களில் மக்களுடன் சேர்ந்து வாழ்வார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்!

18 comments:

said...

நானே முதலில்!

said...

//சொம்பு பற்றாக்குறையை நீக்க தியாகத் திருவிளக்கும், இனத்தலைவரும் விரைவில் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பார்கள்.//

:)

சொம்பு தூக்கி இ(ஈ)னத்தலைவருக்கு நான் சொம்பு ஸ்பான்சர் செய்கிறேன்

said...

// (உங்களது பாராட்டுக்கள் 2000 சொற்களுக்கு மிகுந்து இருக்க வேண்டும். எவ்வளவு பாராட்டினாலும் உக்காந்து கேட்டுக்கிட்டே இருப்போம் நாங்க..)
//
நடிகைகளின் குத்தாட்டம் உண்டா? பாராட்டு விழான்னாலே அது தானே முக்கியம்...

என்ன செய்ய இதெல்லாம் படித்து இரத்த அழுத்தத்தை ஏற்றிக்கொள்வதே வேலையாகிவிட்டது

said...

ஒற்றுமை இல்லாத எந்த இனத்துக்கும் அடிமை வாழ்க்கைதான் கடவுளால் அருளப்படும் தண்டனை

said...

சொம்பு கொடுத்து இனத்தைக் காத்த தலைவனுக்கு, என்ன பட்டம் வழங்குவது என்ற தலைப்பில் வாலி தலைமையில் கழக சொம்புகளும், கவிதை சொம்புகளும் கவிதைச் சொம்பரங்கம் நடத்துவார்கள், அந்நிகழ்ச்சியை தமிழினமே கண்டுகளித்து சோம்பலடையும் பொருட்டு கலைஞர் தொலைக்காட்சியில் சொம்பப்படும்.

said...

சொம்பு ! சொம்பு !

இஃகி ! இஃகி !

Anonymous said...

புலிக் கொடியை அறுத்து ஈழத்தமிழன் தலை மேல் சொம்பை ஏற்றி பன்றிக் கொடியை பறக்க விட்ட் இவன் சோழனா,பகுத்தறிவு பகலவனா?இருக்க முடியாது.சிற்றறிவு பல்லவன்.

said...

// ஆம்! அங்கு அவலம் ஏதும் இல்லை. பாலாறும், தேனாறும் பாய்ந்து ஓடுகிறது. //
என்ன அங்கனையும் கழக ஆட்சி வந்துருச்சா?
இத்தனை பெய்களை கழகம் தமிழகத்தில் சொன்னபோது மக்கள் மாக்களாக காமராஜரை தோற்கடித்தனர். இப்ப இலங்கையில் அப்ப கூட காங்கிரஸ் எம்பிக்களை திட்டும் நம் பதிவர்கள் கழகத்தை விமர்சிக்க மாட்டார்கள். ஏன் என்றால் தேசிய கொள்ளைக் கூட்டமும், திராவிடக் கொள்ளைக் கூட்டமும் ஒன்று அல்லவே.

said...

பித்தன் வாக்கு,
ஆரியக் கொள்ளைக்கூட்டத்தை விட திராவிடக் கொள்ளைக்கூட்டம் எவ்வளவோ பரவாயில்லை..
கழக ஆட்சியை பதிவர்கள் விமர்ச்சிக்கவில்லை என்பது எனக்குப் புதிய தகவல்.

ஆமாம், என்ன பதிவு போட்டாலும் அங்க வந்து திராவிடர்களைத் திட்டுறீங்களே ஏன்?

said...

//ராணுவத்தினருடன் கபடியும் கில்லியும் விளையாடி மகிழ்கிறார்கள்//

ஏன் ராணுவத்தினர் தமிழ் பெண்களோடு மட்டும் கபடி, கில்லி ஆடுகிறார்கள்?

said...

அ வெங்க போனதே இது போல பல காமெடிகளை தொடங்கிவைக்கத்தானே!

அப்பத்தான் அ வெங்க கடை யாவாரம் சூடு பிடிக்கும். ஆனா பாருங்க அந்தக் கடையில் சொரணை மட்டும் இருக்காது அல்லது கிடைக்காது.

நன்றாக யாவார அபிவிருத்தி செய்து பிழைத்து வாழட்டும்.

:(

said...

மின்வெட்டு மூலம் ஆற்காடு பலிகடா,

முல்லைப் பெரியாறு, பாலாறு துரைமுருகன் பலிகடா

கோ.சி.மணி எப்பவோ அம்பேல்,

இலங்கைக்கு அனுப்பி டி.ஆர்.பாலுவும் பலிகடா

இனி ரூட்டு கிளியர்!!!

அதுதானே இலக்கு...!?

நெடுமரம் அன்பழகனுக்குத்தான் முத்திப்போய்விட்டதே...! வயசத்தான் சொன்னேன்!

said...

:(((

said...

கூடவே அங்கே போர் நடக்கவில்லை என்ற உண்மையையும் எடுத்தியம்ப வேண்டுகிறோம்.

said...

கலைஞர், பெங்களூர் சென்று செல்வியக்கா வீட்டில் இருப்பது போல, அங்கே சென்று ஒரு கூடாரத்தில் ரெண்டு நாள் ரெஸ்ட் எடுப்பார்.

முள்வேலி முகாம்களுக்கு கூடாரத்துக்கு ஒன்று என்று இலவச டிவி வழங்கவும், அங்கே சன் டைரக்ட் கனக்ஷன் கொடுக்கப்படு, அதில் கலைஞர் டிவியில் மானாட மயிலாட ப்ரொக்கிராம் பார்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்...

ராகுல்ஜி அங்கே கூடாரத்தில் டீ வாங்கி சாப்பிட்டு ஒரு நைட்டு படுத்து தூங்குவார்.

said...

நீங்கள் *****************************************"
இருக்கும் இடங்களில் உங்களுக்குப் பிடித்த சொற்களை நிரப்பி இந்தக் குழுவினரையும் அவர்களை அங்கு அனுப்பியவர்களையும் பாராட்டுங்கனு சொல்லிட்டு ! (உங்களது பாராட்டுக்கள் 2000 சொற்களுக்கு மிகுந்து இருக்க வேண்டும் என்று கூறுகிறேர்கள். நான் எப்படி பாரட்ட வேண்டும் என்று நினைத்ததை, 21-10-2009 தினமணி நாள் இதழில் கட்டுரையாளர் ஐயா பழ.கருப்பையா அவர்கள் பாராட்டியுள்ளார். நீங்கள் கேட்ட சொற்களுக்கு மேல் பாராட்டியுள்ளார். உக்காந்து கேட்டுக்கிட்டே இருங்கள்.
சோ.ஞானசேகர்.