Wednesday, August 5, 2009

ஆமத்தூர்

நம்ம இப்ப இருக்குறது விருதுநகர் பேருந்து நிலையம். இதோ வருது பாருங்க சிவகாசி போற 3ம் எண் பேருந்து... வாங்க ஏறலாம்.. ஏறியாச்சா.. ஜன்னல் சீட்டுல உக்காந்துக்கோங்க.... இன்னும் 15 நிமிசப் பயணத்துல ஊருக்குப் போய்ச் சேந்துரலாம்..

இதோ இது தான் குமாரலிங்கபுரம்.. இதைத் தாண்டினா 2 நிமிசத்துல கவலூர் வந்துரும்.
இதோ கவலூரைத் தாண்டீட்டோம். சாலையின் இரு புறத்திலும் ஒரு திடீர் மாற்றம் தெரியுதா... ஆமாம்... நம்ம இப்ப ஆமத்தூர் எல்லைக்கு வந்துட்டோம்...

சாலையின் இரு புறத்திலும் பச்சைப் பசேல் என்ற வயல் வெளிகள். பெரும்பாலும் நெற்பயிர்கள்.. இடையிடையே சில வயல்களில் பாசிப்பயறு, உளுந்து போன்ற தானியங்கள். சில வயல்களில் பருத்தி போன்ற பணப் பயிர்கள்.. சிலவற்றில் பூத்துக் குலுங்கும் சூரிய காந்தி. வயல்களில் பாடிக்கொண்டும் பேசிக்கொண்டும் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் இளம் பெண்டிரும் இளையரும்.

சாலையின் இடதுபுறத்தில் ஊரைஒட்டி ஒரு பெரிய குளம். குளக்கரையில் மிகப் பெரிய ஆலமரம் ஒன்று. குளத்தைச் சுற்றிலும் வேம்பு, புளி எனப் பலதரப்பட்ட மரங்கள். போனவாரம் பெய்த மழையில் குளம் நிரம்பி வழிகிறது. குளத்தில் பூத்துக் குலுங்கும் தாமரை மற்றும் அல்லி மலர்கள்.

குளத்தின் அருகே ஒரு நந்தவனம். நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் மலர்கள்.. முல்லை, மல்லி, நந்தியாவட்டை, பிச்சி, ரோஜா, கேந்தி, செவ்வந்தி, வாடாமல்லி எனப் பலதரப்பட்ட மலர்கள். நந்தவனத்தின் நடுவே ஒரு முருகன் கோயில்.

குளத்தில் நீந்தி விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்கள். குளக்கரையில் அமர்ந்து அறுவடை பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் பெரியவர்கள். அரசியல் அரட்டை அடித்துக்கொண்டிருக்கும் இளைஞர்கள்.

அந்த இளைஞர்களைக் கிண்டல் அடித்துக்கொண்டே குளக்கரையில் இருக்கும் அடி குழாயில் நீர் எடுக்க வந்து கொண்டிருக்கும் இளம் பெண்கள். இதைத் தெரிந்தும் தெரியாதது போல் ரசித்துக்கொண்டே தம் பேச்சுக்களைத் தொடரும் இளையர்கள்.

குளத்தை தாண்டியதும் சிறிது தூரத்தில் பேருந்து நிறுத்தம். பேருந்து நிறுத்தத்தை ஒட்டி ஒரு பெரிய கடைவீதி. கடை வீதியைத் தாண்டியதும் அகலமான தெருக்கள். வீடுகளின் முற்றத்தில் தானியங்களை உலர வைத்துக் கொண்டிருக்கும் பெண்டிர். தானியங்களைக் கொத்த வரும் பறவைகளை, பாவம் சாப்பிட்டுப் போகட்டும் என்று துரத்தாமல் விடும் பெண்டிர்."

ம்ம்ம்ம்ம்...... இப்படியெல்லாம் சொல்லனுமின்னு எனக்கும் ஆசைதான். ஆனா எங்க ஊரு ஒன்னும் தஞ்சாவூர் பக்கத்துல இல்லையே... பழைய ராமநாதபுரம் மாவட்டத்தில இல்ல இருக்கு. இருந்தாலும் "காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சு" ஆச்சே... அதனால எங்க ஊரைப் பத்தி சொல்லப் போறேன் இந்தத் தொடரில்.

அடுத்த பகுதி விரைவில்...

***********************************************************************************
ஒரு விளம்பரம்..

சிங்கை பதிவர்கள் அனைவரும் சேர்ந்து "பதிவர்களை டரியலாக்கும்" தலைப்புகளுடன் ஒரு கட்டுரைப் போட்டி நடத்துவது அனைவரும் அறிந்ததே... போட்டிக்கான உங்கள் ஆக்கங்களை அனுப்ப இறுதி நாள் ஆகஸ்டு-15. அதற்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ளது.. எனவே உங்கள் ஆக்கங்களை விரைவில் அனுப்பவும்.

நானும் ஒரு பரிசு அறிவிக்கலாமின்னு இருக்கேன்.. மணற்கேணி-2009 போட்டியில் வெல்லும் முதல் 3 நபர்களுக்கு, நான் ஒரு கிழமை(வாரம்) காலம் ஆமத்தூரைச் சுற்றிக் காட்டுகிறேன். பயணம், உணவு & உறைவிடச் செலவுகள் அனைத்தும் நான் ஏற்றுக் கொள்கிறேன்..

மணற்கேணி போட்டியில் வெற்றி பெறுவோர், தங்களது கடவுச்சீட்டு விவரங்களை எனக்கு அனுப்பினால் ஆமத்தூர் செல்ல விசா ஏற்பாடு செய்யப்படும்...

ஆமத்தூர் வர நீங்க செய்யவேண்டியதெல்லாம்....
"மணற்கேணி போட்டியில் கலந்துகொள்ளுங்கள் & வெல்லுங்கள்... போனசாக உங்களுக்கு ஒரு கிழமை சிங்கை பயணமும் கிடைக்குதே.... "

17 comments:

said...

அடேங்கப்பா...சிங்கப்பூரில் இருந்து ஆமத்தூர் கூட்டிப் போறியளா...? :-))

said...

ஆமத்தூர் பற்றிய டரியல் தொடரா.....!

வாழ்த்துகள்.

மணற்கேணி விதிமுறைப் படி சிங்கைப் பதிவர்கள் ஆமத்தூர் சுற்றுலா செல்ல இயலாதவர்கள்னு நினைச்சா......பேசாமல் சென்னையிலேயே வேலை பார்த்திருக்கலாம்னு தோணுது.

said...

//ஆமத்தூர் வர நீங்க செய்யவேண்டியதெல்லாம்.//

:)))))))))

said...

இது என்னடா இது விருதுநகர் மாவட்டத்துல நம்ம கிராமம் மாதிரி ஒரு ஊரான்னு யோசிச்சேன். நெற்பயிர்னு சொன்னதும் புரிஞ்சுருச்சு இது பச்சக்கிளி பாடும் ஊரு பாட்டுல வர்ற கனவு மாதிரி தான்னு.

எப்டியே நீங்க உங்க ஊரப்பத்தி சொல்லப் போறீங்க, வாழ்த்துக்கள்.

said...

இங்கிருந்தும் கூட்டிகிட்டு போவியளா???

said...

//குளத்தின் அருகே ஒரு நந்தவனம். நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் மலர்கள்.. முல்லை, மல்லி, நந்தியாவட்டை, பிச்சி, ரோஜா, கேந்தி, செவ்வந்தி, வாடாமல்லி எனப் பலதரப்பட்ட மலர்கள். நந்தவனத்தின் நடுவே ஒரு முருகன் கோயில்.//


எம்பெருமான் முருகனுக்கு இரண்டு பெட்டைகள் தானே...!

ஆமத்தூர் முருகனுக்கு அளவில்லா பெட்டைகளா?

said...

//மணற்கேணி போட்டியில் வெற்றி பெறுவோர், தங்களது கடவுச்சீட்டு விவரங்களை எனக்கு அனுப்பினால் ஆமத்தூர் செல்ல விசா ஏற்பாடு செய்யப்படும்...//

-:))))))

said...

நல்ல வேளை நான் சிங்கைல இருக்கேன். :))))))

said...

ஆமததூர்ல ஒரு வாரத்துக்கு மேட்டர் இருக்கா?

said...

//ஆமததூர்ல ஒரு வாரத்துக்கு மேட்டர் இருக்கா?//

அப்ப அது என்னா ”மேட்டர்” ஊரா?:)))))

said...

//அறிவிலி said...
ஆமததூர்ல ஒரு வாரத்துக்கு மேட்டர் இருக்கா?

August 5, 2009 10:18 PM


குசும்பன் said...
//ஆமததூர்ல ஒரு வாரத்துக்கு மேட்டர் இருக்கா?//

அப்ப அது என்னா ”மேட்டர்” ஊரா?:)))))
//

என்னங்கய்யா ஆளாளுக்கு என் தம்பியை கலாய்க்கிறிங்க.அண்ணன் உடையான் அவைக்கு அஞ்சான். சிங்கத்துக்கு சிக்கெடுக்க முயலாதிங்க.

said...

ஐயா ஜெகதீசன் உங்கள் ஊர் ஆமத்தூர மறக்க முடியுமா 80ல் பட்ட அனுபவங்களா சிவகாசி டூ விருதுநகர் படம் பார்த்துவிட்டு வரும் போது.. அதே டவுன் பஸ்தான்..

said...

ஐயா ஜெகதீசன் உங்கள் ஊர் ஆமத்தூர மறக்க முடியுமா 80ல் பட்ட அனுபவங்களா சிவகாசி டூ விருதுநகர் படம் பார்த்துவிட்டு வரும் போது.. அதே டவுன் பஸ்தான்..

said...

ஐயா ஜெகதீசன் உங்கள் ஊர் ஆமத்தூர மறக்க முடியுமா 80ல் பட்ட அனுபவங்களா சிவகாசி டூ விருதுநகர் படம் பார்த்துவிட்டு வரும் போது.. அதே டவுன் பஸ்தான்..

said...

//ம்ம்ம்ம்ம்...... இப்படியெல்லாம் சொல்லனுமின்னு எனக்கும் ஆசைதான். ஆனா எங்க ஊரு ஒன்னும் தஞ்சாவூர் பக்கத்துல இல்லையே... பழைய ராமநாதபுரம் மாவட்டத்தில இல்ல இருக்கு. இருந்தாலும் "காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சு" ஆச்சே... //

அருமை...

நன்பரே இந்த விவாதத்தில் நீங்களும் கலந்து கொள்ளுங்களேன்.

http://oviya-thamarai.blogspot.com/2009/08/2.html

நன்றி

said...

ஆமத்தூர் கம்மாய்ல குளிச்சிருக்கீங்களா? இப்பலாம் தண்ணீர் இருக்காதுனு நினைக்கிறேன்..;(

பேருந்து நிலையம் பக்கத்தில பச்சை கலர்ல பெரியவீடு.....அததாண்டி நேரா போன லைப்ரேரி.... ம்ம்ம்...

GNபட்டிக்கு நடந்து போன அனுபவத்தையும் சொல்லுவீங்கதான.. ;)

said...

நல்ல படங்கள் வரவேண்டுமென்று எங்களைப் போல உங்களுக்கும் ஆசை உண்டா?

அதற்காகவே கோலம் வீடு தேடி வரும் பட இயக்கத்தை தொடங்கியிருக்கிறோம்.

கோலம் இயக்கம், வருடத்துக்கு மூன்று முதல் ஐந்து முழு நீள வீடியோ படங்களைத் தயாரிக்க விரும்புகிறது. இது சாத்தியம்தானா ? நல்ல படங்கள் வரவேண்டுமென்று ஆசைப்படும் ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைப் படம் வருவதற்கு முன்பே அளித்தால் சாத்தியம்.

நீங்கள் செய்ய வேண்டியது என்ன ? முதல் படத்தின் டி.வி.டிக்கான முன்பதிவு தொகையாக ஐநூறு ரூபாய்களை செப்டம்பர் 15, 2009க்கு முன்னதாக எமக்கு அனுப்பவேண்டும். அக்டோபரில் படப்பிடிப்பைத் தொடங்குவோம். நவம்பரில் படம் முழுமையாகி அதன் ஒரிஜினல் டி.வி.டி உங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து சேரும்.

இதே போல மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சில ஆயிரம் பேர் ஆளுக்கு ஐநூறு ரூபாய் அனுப்பி டி.வி.டி முன்பதிவு செய்தால்..... தொடர்ந்து தமிழிலும் பிற மொழிகளிலும் உள்ள நல்ல நாவல்கள், சிறுகதைகள், இன்றைய சமூகத் தேவைக்கு உகந்த படைப்புகள், அவற்றை உருவாக்கக் கூடிய புதுப் புது படைப்பாளிகள், கலைஞர்கள் நம் வீட்டுக்குள்ளேயே வந்து டி.வி.டிகளாக நம்மை சந்திப்பார்கள். படைப்பாளியும பார்வையாளரும நேரடியாக உறவு கொள்ளும இயக்கமே கோலம். எண்ணற்ற புள்ளிகளாக பார்வையாளர்கள் இருக்கிறார்கள். இந்தப் புள்ளிகளை இணைத்து ஒரு கோலம் வரையும் படைப்பாளிகளின் அமைப்பு கோலம்.

இந்த முயற்சியைப் பற்றி உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் சொல்லுங்கள். ஒவ்வொருவரையும் முன்பதிவு செய்து இந்தக் கனவு மெய்ப்பட, உதவச் சொல்லுங்கள். முக்கியமானது காலத்தே செய்யும் உதவி. எனவே அடுத்த 24 மணி நேரத்துக்குள் உங்கள் முன்பதிவுத் தொகை எமக்கு வந்து எம்மை பிரமிக்கச் செய்யட்டும்.

முன்பதிவுத் தொகையை (இந்தியாவுக்குள்: ரூ 500/-& வெளிநாடுகள்: அமெரிக்க டாலர் 15) கேட்போலைகள், காசுக்கட்டளை அஞ்சல்கள் அனைத்தும் ‘கோலம்’ பெயரிட்டு அனுப்ப வேண்டிய முகவரி: கோலம். மே/பா, ஞாநி 39 அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 600078. செல்பேசி: 9444024947. மின்னஞ்சல்: kolamcinema@gmail.com நேரடியாக கோலம், a/c no. 007705013590 ICICI K.K.Nagar branch என்ற வங்கிக்கணக்கிலும் பணம் செலுத்தலாம். பதிவு செய்யும்போது உங்கள் பெயர், வயது, பாலினம், தொழில், முகவரி, தொலை¢பேசி, செல்பேசி, மின்னஞ்சல, முதலிய விவரங்களை எங்களுக்குத் தவறாமல் தெரிவியுங்கள்.