Sunday, January 18, 2009

இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எச்சரிக்கை!

இலங்கை நமது முக்கிய நட்பு நாடு என்பது தாங்கள் அறிந்ததே...
இலங்கைத் துடுப்பாட்ட அணி வெற்றி பெற நாம் உதவாவிட்டால், பாகிஸ்தான், சீனா உட்பட்ட நமது எதிரி நாடுகளின் உதவியை இலங்கை அணுகக்கூடும். எனவே இலங்கை அணி வெற்றிபெற நாம் கட்டாயம் உதவியாகவேண்டும் என்பதை நினைவில் கொண்டு துடுப்பாட்டம் ஆடவும்...

இலங்கை நமது நட்பு நாடு என்பதால், இலங்கை அணி அடையும் தோல்விகள் நமது தோல்வியாகவே நாம் கருத வேண்டும். அதே போல் இலங்கை அணியின் வெற்றி நமக்கும் வெற்றியே. எனவே, நீங்கள் இலங்கையில் விளையாடப் போகும் அனைத்து ஆட்டங்களிலும் தோல்வியடையவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இலங்கை அணியின் தோல்வி நமது தோல்வி என்பதை நினைவில் கொண்டு ஆடவேண்டும் என எச்சரிக்கிறேன்!

பதிவுக்கான லேபிள்கள் : அரசியல், துடுப்பாட்டம், இதுக்குமேல லேபிள் போடச் சொன்னா எதாவது திட்டிருவேன்..

39 comments:

said...

நான் தான் முதலா..?

said...

அதெல்லாம் கவலை வேண்டாம்..இந்தியா தோற்றுக் கொடுக்கும்..:-)

said...

முதுகில் இருந்து இடுப்பு வரை ஒடிச்சவர்களோடு, எதுக்கு சாமி உங்களுக்குத் துடுப்பாட்டம்.

said...

//
ஜோதிபாரதி said...

முதுகில் இருந்து இடுப்பு வரை ஒடிச்சவர்களோடு, எதுக்கு சாமி உங்களுக்குத் துடுப்பாட்டம்.

//
இது போல் பிரிவினைவாதத்தைத் தூண்டுவது போலான கருத்துக்களைத் தெரிவிப்பது தேசவிரோதச் செயல் என்பது உங்களுக்குத் தெரியாதா?

இது போன்ற தேச விரோதக் கருத்துக்களை நீங்கள் தொடர்ந்தால்,எதாவது ஒரு காங்கிரஸ் கோஸ்டித் தலைவரின் தலைமையில் உங்களை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் உள்ளே தூக்கிப் போடுமாறு போராட வேண்டியது வரும் என எச்சரிக்கை விடுகிறேன்!

said...

:))

said...

என்னை அச்சுறுத்தும் ஒரு தமிழனின் குரல் வலை ________.

said...

///
நிஜமா நல்லவன் said...

:))

TBCD said...

:)
ச்சின்னப் பையன் said...

:-))))

///
எல்லாரும் ஏன் சிரிக்கிறீங்க... புதசெவி...
எதுக்கும் நானும் சிரிச்சுக்குறேன்... :)

said...

:-)))))))))

said...

அட ஏங்க,
இப்பத்தான் இந்தியா நல்ல வெற்றிப் பெற ஆரம்பிச்சுருக்கு. ஆனாலும் நீங்க சொல்றது சரி தான், சீனா, பாகிஸ்தான் நாடுகளோட தலையீட்ட தவிர்க்க கட்டாயம் இந்தியா உதவியே ஆகணும்.
சச்சினுக்கு சனத் ஜெயசூர்யா பனிய போட்டுவிட்டு இலங்கைக்காக ஆட சொல்லணும், பேட்டிங் பண்றப்ப, பந்துவீசுபவர் பக்கம் இருக்கும் ஆட்டக்காரரும் பீல்டிங்ல உதவி செய்யணும். அடிச்சுட்டு ரன் எடுக்க ரொம்ப வேகமால்லாம் நம்மாட்கள் ஓடக் கூடாது. அடிக்கிறதே எதிரணிக்காரர்கள் கைகளில கிடைக்கிற மாதிரிதான் அடிக்கணும். முக்கியமா இலங்கையில் நம்ம அணி இருக்க வரைக்கும் நம்ம பயிற்சியாளர் கிறிஸ்டன், இலங்கை அணிக்கு தான் பயிற்சியளிக்கனும். இல்லன்னா சீனால இருந்தோ அல்லது பாகிஸ்தான்ல இருந்தோ பயிற்சியாளர் வர வாய்ப்பிருக்கு. அப்றம் நம்ம ஆட்கள் அவங்களுக்கு பேட், பந்து போன்ற உபகரணங்களையும் கொடுக்கனும்.
நம்ம வீரர்கள விளையாட்டின் போது இலங்கை வீரர்கள் திட்டுனாலோ, அவமானப்படுத்துனாலோ எதுவும் எதிர்த்துப் பேசக்கூடாது. அவங்க அடிச்சாக்கூட வாங்கிக்கிட்டு சத்தமே போடாம வரணும். டோனி அவங்களுக்கு கேப்டனாதான் செயல்படணுமே ஒழிய நம்ம அணிக்கு அல்ல.
இதையெல்லாம் சொல்லித்தான் நம்ம அணிய அங்க அனுப்பணும்.

Anonymous said...

Athai polaஅதை போலவே சச்சின் ஆறு நன்கு ஓட்டங்கள் எடுக்கலாம் என்று தலைவர் தங்கபளுவிடம் கேட்டக வேண்டும் அவர் மேலிடத்தில் கேட்டு பதில் சொல்லுவர்.

said...

ஹா..ஹா..ஹா....:-)))))))))))))))

said...

மகேல தமிழ் தெரிந்து உங்கள் பதிவு வாசித்தால் ஆனந்தக் கண்ணீர் விடுவார்.. ;)
ஆனால் அடுத்து இலங்கை நாளைய தினம் பாகிஸ்தானுடன் விளையாடுதே. எஅதாவது உதவி கிடைக்குமா? ;)

said...

தோல் குடுக்காதவர்கள்

தோற்றால் என்ன - ஜெயி ...

said...

பிந்திக் கிடைத்த தகவல்களின் படி.. இந்தியத் துடுப்பாட்ட முன்னணி வீரர்களில் சிலரை இலங்கை அணிக்காய் அவர்கள் தோற்கலாம் என அஞ்சப்படும் சில களங்களில் உரு மறைப்பு செய்து அந்த அணி வீரர்கள் போலவே விளையாடி அவர்களுக்கு வெற்றி பெற்றுக் கொடுத்து விட்டே திரும்பும்படி பிரதான கட்டுப்பாட்டுச் செயலகம் உத்தரவிட்டுள்ளது எனத் தெரிய வருகிறது.. மேலும் இடையில் திரும்பும் வீரர்கள் தற்கால பணிநீக்கம் செய்யப் படுவார்கள் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

said...

இந்திய அணியில் ஒரு சில தமிழக வீரர்கள் இருப்பின் அவர்கள் இந்தியாவிற்காக விளையாடுவார்கள்(விளையாடித் தோல்வி அடைவார்கள்) என்றும், மற்ற தமிழரல்லாத, வடநாட்டு வீரர்கள் மாறுவேடமிட்டுக் கொண்டு இலங்கை அணிக்காக ரன் குவித்து விக்கெட்டுகளை வீழ்த்துவார்கள் என்று ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன. அவர்கள் வீழ்த்தும் ஒவ்வொரு விக்கெட்டும் தமிழ் விக்கெட் என்பதையும் அது மேலும் அறியத் தருகிறது. இடையிடையே ஓட்டம் பிடித்து அதிக ஓட்டங்களையும் இலங்கை வீரர்களே(மாறுவேடமிட்ட இந்திய வீரர்களையும் சேர்த்துதான்) எடுப்பார்கள் என்று இந்திய தூதர் தெரிவித்ததாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலதிக தகவல்கள் எதிர்பாக்கப் படுகின்றன.

said...

//
’டொன்’ லீ said...

அதெல்லாம் கவலை வேண்டாம்..இந்தியா தோற்றுக் கொடுக்கும்..:-)

//
வாங்க டொன்லீ...

தமிழகத்தைச் சேர்ந்த பிரிவினை வாதிகள் எதாவது போராட்டம் நடத்தி, பிரதமரைச் சந்தித்து பிரனாப்பை அனுப்புங்கள் அது இது என்று எதாவது பிரச்சனையைக் கிளப்பாமல் இருக்கவேண்டும்....
:P

said...

//
LOSHAN said...

மகேல தமிழ் தெரிந்து உங்கள் பதிவு வாசித்தால் ஆனந்தக் கண்ணீர் விடுவார்.. ;)
ஆனால் அடுத்து இலங்கை நாளைய தினம் பாகிஸ்தானுடன் விளையாடுதே. எஅதாவது உதவி கிடைக்குமா? ;)

//
வாங்க லோசன்...


இலங்கைக்குப் போயிருந்த இலங்கைக்கான இந்திய வெளிவிவகாரத்துறைச் செயலாலர் மேதகு மேனன் அவர்கள் இது குறித்து இலங்கைத் துடுப்பாட்ட வாரியத்துடன் பேச்சு நடத்தியதாகவும், பாகிஸ்தானுடனான போட்டிகளில் இலங்கை வெல்லத் தேவையான உதவிகள் அனைத்தும் செய்யப்படும் என உறுதியளித்ததாகவும் உறுதிப்படுத்தப்படாத ஆனால் நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன...
இலங்கையிலிருந்து திரும்பியதும், மேனன் இந்தியத் துடுப்பாட்ட வாரிய அதிகாரிகளிடம், இலங்கை வெல்ல என்னென்ன உதவிகள் செய்யலாம் என்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் அந்த உறுதிப்படுத்தப் படாத நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன...
:P

said...

ஐயா நிப்பாட்டுங்க.. வேணாம்.. தாங்க முடியல.. யாரவது காப்பாத்துங்களேன்.. இரத்தம் கண்ணால வடியுது.. ;)

said...

:))

said...

இது தவிர காயமடைந்த வீரர்களை (விளையாட்டு) உடனடியாக களத்திலிருந்து அகற்றி அவர்களை வானூர்தி மூலம் கொழும்பு (தேவைப்படின் இந்தியா/சிங்கப்பூர்) அனுப்பி சிகிச்சை அளிக்க தேவையான வசதிகளையும் இந்திய துடுப்பாட்ட வாரியம் செய்துள்ளது... ஆனால் இவ்வசதியை சிலர் களநிலவரங்களை வேவுபார்க்க தவறாகப் பயன்படுத்தினால் அதற்க்கு தாம் எவ்விதத்திலும் பொறுப்பாளிகள் அல்லர் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது...

(பின் குறிப்பு : இந்தியாவின் இந்த தவறான அணுகுமுறையினாலேயே களத்தில் காயமடையும் வீரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாக JVP குற்றம் சாட்டியுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன)

said...

நானும் சிரிச்சுக்குறேன்... :)

said...

ஹய்யோ.. ஹய்யோ.. :))

said...

ஆரம்பிச்சுட்டிங்களா உங்க அலம்பல.. நடத்துங்க

said...

//
uuuuuuuuuuuuuuuuuu said...

ஆரம்பிச்சுட்டிங்களா உங்க அலம்பல.. நடத்துங்க

//
நீங்க யாருஉஉஉஉஉஉஉஉஉஉ???
:P

said...

சூடான இடுகையில் உங்கள் பதிவு!

said...

முறையற்ற பந்துகளாயினும் அவை விக்கட்டை நோக்கி வீசப்படுவதால் நடுவர்கள் கண் மூடி இருப்பார்களாம். தேவையேற்படின் ICC ஒரு அறிக்கையில் கவலை தெரிவிக்குமாம்.

said...

ஹா ஹா!

தமிழ்மணம் பரிந்துரையில் உங்கள் பதிவு. இளையராஜா,கமலகாசன்,சங்கர் மாதிரி!
பதிவு எழுதுறதுக்கு முன்னாடியே அதோட வால்யு உங்களுக்குத் தெரிஞ்சிடுமா?

said...

இலங்கை அணி துடுப்பாட்டம் செய்யும் பொது பிட்சில் விக்கட்டுகள் காணப்படாது. அம்பயர்கள் ஏர்டெல்லில் கடலை போட்டுக் கொண்டு இருப்பார்கள்.

இப்படி பல மதீயூக வியூகங்கள் வகுக்கப் பட்டதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன..

said...

@ Gowri
தங்களது மேலான கருத்துக்களுக்கு மிக்க நன்றி! உங்களது ஆலோசனைகளை இந்திய வெளியுறவுத்துறையும் பிசிசிஐயும் பரிசீலிக்கும்..
:P

@முகவை மைந்தன்...
என்ன இவ்வளவு பெரிய சிரிப்பு...
எவ்வளவு முக்கியமான விடயம் குறித்து விவாதித்துக்கொண்டு இருக்கோம்.... இங்கயெல்லாம் இப்படி சிரிக்கக் கூடாது... :P

said...

//
SanJaiGan:-Dhi said...

ஹய்யோ.. ஹய்யோ.. :))
//
அடடே... இது நிசந்தானா... காங்கிரஸ் தலைவரெல்லாம் நம்ம பதிவுப்பக்கம் வந்துருக்காரே....
நன்றி தலைவரே....

said...

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் பிரதமர், கிரிக்கெட் முதல்வரான தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வுக்குழுத் தலைவரும் சந்தித்தபோது கிரிக்கெட் வாரியத் தலைமை, தமிழகத்தைச் சேர்ந்த தேர்வுக்குழுத் தலைவரிடம் உங்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்கிறேன் என்பதையும், தேர்வுக்குழுத் தலைவர் ரசிகர்களிடம் இன்னும் பொறுத்திருங்கள், என்னை பதவியை விட்டு தூக்க முயற்சிக்காதீர்கள் என்று வெளிப்படையாகக் கூறுவது எதைக் காட்டுகிறது?

said...

//ஜெகதீசன் said...
//
SanJaiGan:-Dhi said...

ஹய்யோ.. ஹய்யோ.. :))
//
அடடே... இது நிசந்தானா... காங்கிரஸ் தலைவரெல்லாம் நம்ம பதிவுப்பக்கம் வந்துருக்காரே....
நன்றி தலைவரே....
//

தேசிய வாத காங்கிரஸ் தலைவர்களே வர்றாங்க, பிராந்திய தலைவர்கள் வரமாட்டார்களா?

said...

//பதிவுக்கான லேபிள்கள் : அரசியல், துடுப்பாட்டம், இதுக்குமேல லேபிள் போடச் சொன்னா எதாவது திட்டிருவேன்.. //

நீ எழுதினதிலே சூப்பர் பதிவு இதுதாண்டா தம்பி !

said...

//Your comment has been saved and will be visible after blog owner approval. //

கண்டபடிக்கு கண்டனம் !

said...

//தேசிய வாத காங்கிரஸ் தலைவர்களே வர்றாங்க,//

உள்குத்து. பிரிச்சு படிச்சேன்

தேசிய "வாதம்" !

வெளிச்சப் பதிவர் உள்குத்து பதிவர் !

Anonymous said...

:)

Anonymous said...

இந்தியா... அரசியலை சிம்பிளா விளக்கிட்டிங்க பாஸு

said...

//இன்னும் பொறுத்திருங்கள், என்னை பதவியை விட்டு தூக்க முயற்சிக்காதீர்கள் என்று வெளிப்படையாகக் கூறுவது எதைக் காட்டுகிறது?//

வேற என்னத்தைங்க.. எல்லாம் வாழையடி வாழையா நாட்காலில அமரனும்கிற ஆசைதான் ....

said...

//கண்டபடிக்கு கண்டனம் ! //
நானும் வழி மொழிகிறேன்..