விக்கிபீடியாவில் பீகாரைப் பற்றிப் பதிவாகியுள்ள ஒரு தவறான தகவலுக்கு என் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
தினமலர் ஒரு "தரமான நடுநிலை" நாளிதழ் என்பதும் அதில் வரும் செய்திகளில் எந்த ஒரு சிறு தவறும் இருக்காது என்பதும் அனைவரும் அறிந்ததுதான்.
தினமலரின் நேற்றய(நவம்பர்-14,2007) இந்த
வரம்பு மீறினாரா மேற்கு வங்க கவர்னர்?......
செய்தியில் 2004இல் பீகாரின் முதல்வர் "லாலு பிரசாத்" எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
ஆனால் விக்கிபீடியா அப்போது முதல்வர் "ரப்ரி தேவி" என்று தவறான தகவல் தந்துள்ளது.
தினமலரின் செய்தி எந்த விதத்திலும் தவறாக இருக்கமுடியாது. எனவே விக்கிபீடியாவில் இந்தத் தகவலைத் தவறாகப் பதிவு செய்தவருக்கு என் கடுமையான கண்டனங்கள்!
ஒருவேளை உண்மையிலேயே அப்போது ரப்ரிதான் முதல்வர் எனில், அவ்வாறு நடந்ததற்கு வரலாறு தினமலரிடம் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்கவேண்டும்.(ஏற்கனவே டைம்ஸ் ஆப்பு இந்தியாவிடம் கேட்டதைப் போல்.)
********************************************
தினமலரில் நவம்பர்-13, 2007 அன்று வந்த
http://manuneedhi.blogspot.com/2007/11/blog-post_13.htm இந்த செய்தியும் முழுக்க உண்மை என்பதையும், ஒன்றைப் பத்தாகவும், பத்தை நூறாகவும் ஆக்கும் தினமலரின் "கற்பனைத் திறன்" இதில் இல்லை என்பதையும் அனைவரும் நம்புமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்...(தினமலர் சுட்டி கிடைக்கவில்லை.. அதனால் தினமலரில் இருந்து "தமிழன்" என்னும் வலைப்பதிவில் copy & past செய்திருந்த லின்க் தந்துள்ளேன்.. )
நன்றி: தமிழன், தினமலர்
Thursday, November 15, 2007
Subscribe to:
Post Comments (Atom)
24 comments:
இதை..ஏ.ஏ.தி.க சார்பாக வழிமொழிகிறேன்..
இவன்,
தலைவர் (நேத்து சாயங்காலம் வரை )
ஏ.ஏ.தி.க,
ஏ.ஏ.தி.க கட்சி தலைமை அலுவலகம்.
//
TBCD said...
இதை..ஏ.ஏ.தி.க சார்பாக வழிமொழிகிறேன்..
இவன்,
தலைவர் (நேத்து சாயங்காலம் வரை )
ஏ.ஏ.தி.க,
ஏ.ஏ.தி.க கட்சி தலைமை அலுவலகம்.
//
யோவ்... கட்சி பேரத் தப்பா சொல்லாதீங்க... அது எ.ஏ.தி.க(எல்லாரையும் ஏமாற்றும் திராவிடக் கட்சி).
அது சரி...இன்னைக்கு நான் தான தலைவரா...அது யாராச்சு சொல்லுங்கப்பா..
இந்தத் தவறுக்கு வரலாறு நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறது...
ஜெகதீசன்,
தினமலர் சொன்னது சரி என்று தோன்றுகிறது.ரப்ரி தேவி official முதல்வர் என்றாலும், அப்போது defacto முதல்வர் லலு தான்;ரப்ரி தேவி ரப்பர் தேவி தான்.
வாங்க அனானி,
தினமலர் சொன்னது சரிதான் அனானி..
நான் தப்புன்னு சொல்லவே இல்லையே?
லாலுவுக்குப் பதில் ரப்ரிதேவிக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தது என் தவறு தான். அதற்காக தினமலரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.
வரலாற்றின் மன்னிப்பை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். வரலாற்றின் மீது வழக்குத் தொடர்வோம்...வழக்கைச் சந்திக்கத் தயாராக இருக்கவும்
இது வரலாறு செய்த மாபெரும் தவறு. இதற்கு எங்கள் கட்டுமையான கண்டனங்கள்!!!
வரலாறு செய்ததில் என்ன தவறு இருக்கிறது? இந்த விசயத்தில் நான் வரலாறுக்கு ஆதரவு தருகிறேன்.
மேலே "வரலாறு" என்ற பெயரில் வெளியாகியிருக்கும் கமெண்ட் நாங்கள் போட்டது இல்லை.
//
அது சரி...இன்னைக்கு நான் தான தலைவரா...அது யாராச்சு சொல்லுங்கப்பா..
//
இன்னைக்கு சாயங்காலம் பொதுக்குழு கூடுது.. அங்க தான் முடிவு பண்ணுவோம் நீங்க தலைவரா இல்லையான்னு... அதுவரைக்கும் நீங்கதான் தலைவர்(பொறுப்பு)..
இந்தப் பதிவிலே பின்னுட்டகயமை நடந்திருக்கும் போலிருக்கே...அ.மு.கவிலே..சொல்லுங்கப்பா..
//
இந்தப் பதிவிலே பின்னுட்டகயமை நடந்திருக்கும் போலிருக்கே...அ.மு.கவிலே..சொல்லுங்கப்பா..
//
நான் இந்தப் பதிவுல நடக்கவில்லை.. உக்காந்து கொண்டுதான் இருக்கிறேன்...
//
TBCD said...
இந்தப் பதிவிலே பின்னுட்டகயமை நடந்திருக்கும் போலிருக்கே...அ.மு.கவிலே..சொல்லுங்கப்பா..
//
ஓஹோ!! நீங்கதானா அது...மேல இருக்க கமெண்ட் எல்லாம் போட்டது...
:)))
தினமலர் எப்போதாவது சரியான செய்தியைத் தருகிறோம் என்று தன்னை விளம்பரப்படுத்தி உள்ளதா? அதுவே CLAIM செய்து கொள்ளாத தரத்தை அதனிடம் எதிர்பார்த்து நீங்கள் ஏமாந்தால் அதற்கு யார் பொறுப்பு?
//
RATHNESH said...
தினமலர் எப்போதாவது சரியான செய்தியைத் தருகிறோம் என்று தன்னை விளம்பரப்படுத்தி உள்ளதா? அதுவே CLAIM செய்து கொள்ளாத தரத்தை அதனிடம் எதிர்பார்த்து நீங்கள் ஏமாந்தால் அதற்கு யார் பொறுப்பு?
//
ரத்னேஷ் சார்,
நீங்க சொன்னால்லாம் நம்ப மாட்டோம்.. தினமலர் ரெம்ப தரமான நாளிதழ்(பேப்பர் குவாலிட்டி நல்லா இருக்கும்....)
:)
மன்னிக்கவும்.... மேலே கமெண்ட் போட்டது நான் தான்...
யாரோ சென்னார்கள் தினமலம் என்று (இதுக்கு காப்பிரைட் யார் வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை :))
என்னப்பா ஜெகதீசா! நேற்று ஓபிஸ்க்கு ஆட்டைய போட்டுட்டு மூதறிஞர் பற்றிய ஆய்வில் களப்பணியில் இருப்பதாக செய்திகள் வந்ததே :))
காலையில பார்த்தா தினமலத்தோட மல்லுக்கட்டிக்கிடடிருக்கிறீர் :))
இன்னா விசயம் :))
விடுங்க.. விடுங்க.. இதெல்லாம் வரலாறு பண்ணின சின்ன தப்புதான். அது பெரிய பெரிய தப்புகள் நிறைய பண்ணி இருக்கு. அதெல்லாம் தெரிஞ்சிக்கணும்னா பழைய தினமலர்-லாம் எடுத்து பாருங்க..
//
தி(ன்)ன மலர் said...
விடுங்க.. விடுங்க.. இதெல்லாம் வரலாறு பண்ணின சின்ன தப்புதான். அது பெரிய பெரிய தப்புகள் நிறைய பண்ணி இருக்கு. அதெல்லாம் தெரிஞ்சிக்கணும்னா பழைய தினமலர்-லாம் எடுத்து பாருங்க..
//
வாங்க தி(ன்)ன மலர்,
முதல் செய்தி வரலாற்றின் சிறிய தப்பு தான்... ஆனா கீழே கடைசியா கொடுத்திருக்க லின்க் பாருங்க...அதில் இருக்கும் "தினமலரின் ஆசை" நிறைவேறாமல் போகப்போவது வரலாற்றின் பெரிய தப்பல்லவா?
:)
வாங்க பாரி.அரசு...
//
என்னப்பா ஜெகதீசா! நேற்று ஓபிஸ்க்கு ஆட்டைய போட்டுட்டு :))
//
ஒபீஸ்க்கெல்லாம் ஆட்டயப் போடல.. வேல கொஞ்சம் அதிகமா இருந்ததால ஆன்லைன்ல வரலை... அவ்வளவுதான்...
//
மூதறிஞர் பற்றிய ஆய்வில் களப்பணியில் இருப்பதாக செய்திகள் வந்ததே
//
அத இன்னும் ஞாபகம் வச்சிக்கிட்டு இருக்கீங்களா? அந்த ஆய்வைக் கைவிட்டுவிட்டேன்.... :P
வர வர ஜெகதீசனார் இலைக்காரனாக மாறுகிறார்.
"திசைமாறிய ஜெகதீசன்" - புத்தகம் எழுதப்போகிறேன்.
//
வர வர ஜெகதீசனார் இலைக்காரனாக மாறுகிறார்.
//
சத்தமா சொல்லாதீங்க... லக்கி கோவிச்சுக்கப் போறார்... :))))))))))
//
"திசைமாறிய ஜெகதீசன்" - புத்தகம் எழுதப்போகிறேன்.
//
எழுதுங்க எழுதுங்க... அப்படியே அந்தப் புத்தகத்துக்கு அணிந்துரை, முன்னுரை ன்னு ஏதயாவது இலைக்காரனை எழுதச் சொல்லுங்க...
:))))
Post a Comment