"நட்புகளை உண்டாக்கிக் கொள்ளுதல் போன்ற சிறந்தது வேறு எதுவும் உலகில் இல்லை", என்கிறார் வள்ளுவர்.
நேற்று புதிய நண்பர்கள் இருவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த சந்திப்பின் போது பேசியவை/விவாதித்தவை பற்றி கோவி.கண்ணன் விரிவான பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவின் சுட்டி: பதிவர்கள் இருவருடன் ஒரு மினி சந்திப்பு
கோவி.கண்ணன் அவர்கள் சொல்ல மறந்த சில மட்டும் இங்கே...
பாரி.அரசு அவர்கள் பட்டயப் படிப்பு(diploma) முடித்து சிங்கைக்கு வேலைக்கு வர விரும்பும் இளைஞர்களுக்கு உதவும் வகையில் ஒரு புதிய வலைத்தளம் தொடங்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
அரசுவின் அனுபவம் மற்றும் திறமைக்கு அவர் இன்னும் அதிகமான மற்றும் தரமான இடுகைகள் இட்டிருக்கலாம் என GK அவர்கள் குறைப் பட்டுக்கொண்டார். அரசு இனி தரமான இடுகைகள் அதிகமாக இடுவதாகத் தெரிவித்துள்ளார்.
நேற்றய சந்திப்பு மிகவும் பயனுள்ளதாகவும், மகிழ்ச்சிகரமானதாகவும் இருந்தது.
டிஸ்கி:
//
சுமார் மூன்று மணி நேரம் நடந்த எங்கள் சந்திப்பில் இருமுறை காஃபி, ஒருமுறை குளிர்பானம், அதனுடன் மிக்சர் என நேரம் கடந்ததே தெரியவில்லை
//
GK யின் இடுகையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். உண்மையில் அங்கு சாப்பிட்டது "மிக்சர்" இல்லை "சீவல்":).
Tuesday, September 11, 2007
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
//GK யின் இடுகையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். உண்மையில் அங்கு சாப்பிட்டது "மிக்சர்" இல்லை "சீவல்":).//
ஜெகதீசன்,
"சீவல்" ? எங்க ஊரில் ஓலை பகோடானு சொல்லுவாங்க.
:)
diploma,pl correct it.
பதிவுக்கு நன்றி உ.பி.
//GK யின் இடுகையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். உண்மையில் அங்கு சாப்பிட்டது "மிக்சர்" இல்லை "சீவல்":).//
போண்டா சாப்பிட மறந்ததற்கு கண்டனங்கள்!!!
Post a Comment