பிரபல தமிழ்ப் பத்திரிக்கைகளே பதிவர்களின் பதிவுகளை திருடி செய்தியாக வெளியிடுளியிடும் அளவுக்கு பதிவுலகம் அசுர வளர்ச்சியடைந்துள்ளது.சிறிது காலம் முன் வரை பதிவுலகை அவர்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்த மூத்த பதிவர்கள், இப்போது அவர்களின் இருப்பைக் காத்துக்கொள்வதற்காக ஆளுக்கொரு விருது வழங்கி தங்களை பல்கலைகழகத்தின் துணை வேந்தர்போல காட்டிக்கொள்கிறார்கள்.
கரப்பான்பூச்சி விருது, மூட்டைப்பூச்சி விருது எனப் பெயரிட்டு இவர்களே விருதுகளை வழங்குகின்றனர். இந்தப் போக்கை இப்படியே விடுவது ஆரோக்கியமானதல்ல. எனவே விருது வழங்குதலைக் ஒழுங்குபடுத்த ஒரு அமைப்பு ஏற்படுத்த வேண்டியது இன்றியமையாததாகின்றது.
இதற்காக அமைக்கப்பட்டது தான் "பதிவுலக விருது அங்கீகர ஆணையம்". இனி இந்த ஆணையத்தின் அங்கீகரம் பெற்ற அமைப்புகள் / பதிவர்கள் மட்டுமே இனி விருதுகள் வழங்க வேண்டும்! அங்கீகரம் பெறாதவர்கள் விருதுகள் வழங்குவது சட்ட விரோதமானது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இதில் பதிவர்களும் கொஞ்சம் பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும். விருது பெறும் முன் அந்த விருது ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டவரால் தரப்படும் விருதா என்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். அங்கீகரம் பெறாத விருதுகளைத் தங்கள் பதிவுகளில் இணைப்பதைத் தவிர்க்கவும்.
விரைவில்
1. தொடர் பதிவு அங்கீகர ஆணையம்
2. வலைப் போட்டிகள் அங்கீகர ஆணையம்
3. வலைத் திரட்டிகள் அங்கீகர ஆணையம்
எனப் பதிவுலகம் சார்ந்த அனைத்து செயல்களுக்கும் ஆணையங்கள் அமைக்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்!
இப்படிக்கு
பதிவுலக விருது அங்கீகர ஆணையம்
Showing posts with label பதிவர் வட்டம். Show all posts
Showing posts with label பதிவர் வட்டம். Show all posts
Friday, July 24, 2009
Wednesday, June 18, 2008
கண்ணைக் குத்தும் சாமியும், நக்சலைட் பதிவரும் - வலைக் கிசுகிசு
மலேசியமாரியாத்தா, அ(டி)ப்பாவிச் சிறுமி, அறுந்த வாலு எனப் பல பெயர்களில் அறியப்படுகிறார் சிங்கையில் உயிரித் தொழில்நுட்பம் படிக்கும் பிரபல மலேசியப் பெண் பதிவர் ஒருவர். இவரைப் போலவே இவரது பல் ஒன்று சொன்னபடி கேட்காமல் மேலிருந்து கீழாக வளராமல், இடமிருந்து வலமாக வளர்ந்து விட்டதாம். இதனால் கிருமித் தொற்று ஏற்பட்டுவிட்டதாம். மருத்துவர், அந்தப் பல்லை அறுவைசிகிச்சை செய்து அகற்ற வேண்டும் (ஏம்மா, பல்லுப் பிடுங்குறதுக்கு உங்க ஊர்ல அறுவைசிகிச்சைன்னு பேரா :P ) என்று கூறிவிட்டாராம். இதனால் விரைவில் இவருக்கு அறுவை சிகிச்சை நடக்கப் போகிறதாம். இவர் விரைவில் நலமடைய வாழ்த்துவோம்..
(இவரின் சாட்டிங், தொலை/அலைபேசி அறுவைகளைத் தாங்கமுடியாத, பொய்யாக் கெட்டவர் உள்ளிட்ட சில பதிவர்கள், "இவர் விரைவில் நலமடையட்டும். ஆனால், குறைந்தது ஒரு மாதத்திற்காவது சாட்டிங் செய்யாமால், தொலை/அலை பேசாமல் இருக்கவேண்டும் என மருத்துவர் இவருக்கு அறிவுறுத்த வேண்டும் " எனக் கடவுளை வேண்டுகிறார்களாம்)
தன் பதிவில் பகுத்தறிவுக் கருத்துகளைப் பதிவிட்டுவரும் மலேசியப் பதிவர் ஒருவரின் பதிவுகளைப் பற்றி அவரது மனைவி அவரின் அம்மா, அப்பாவிடம் போட்டுக் கொடுத்துவிட்டாராம். அவரது வீட்டில் இப்போது அவருக்கு "சாமி கண்ணைக் குத்திவிடும்" எனக் கடும் எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளதாம். பதிவர் ஆடிப்போய் இருக்கிறார். யாருக்கும் தெரியாமல் இணைய மையங்களுக்கு வந்து வீட்டுக்குத் தெரிந்துவிடுமோ எனப் பயந்து பயந்து பதிவிடுகிறாராம் இப்போது...
மூத்த சிங்கைப் பதிவர் ஒருவரின் வீட்டிலும் இதே பிரச்சனையாம். என்னை
நக்சலைட்டா எனக் கேட்கிறார்கள் என பதிவர் சந்திப்பில் இவர் புலம்பினாராம். இவரது அண்ணன் இவரின் பதிவைப் படித்துவிட்டு, வீட்டில் "இவன் நக்சலைட் மாதிரி எழுதுறான்" எனப் போட்டுக் கொடுத்துவிட்டாராம். சமீபத்தில் ஊருக்குச் சென்றிருந்த அவர் வீட்டில் தங்காமல் பதிவர்களைச் சந்திக்க ஊர் ஊராகச் சுற்றியதைக் கண்டு, "நக்சலைட் ஆகீட்டயா?" எனக்கேட்டு பதிவரின் அம்மா நச்சரிக்க ஆரம்பித்துவிட்டாராம். இனிமேல் இப்படியெல்லாம் எழுதக்கூடாது என எச்சரித்து அனுப்பியிருக்கிறார்கள். வீட்டில் சமைக்கும் நேரம் தவிர எந்தநேரமும் கணிப்பொறி முன்னரே அமர்ந்திருப்பதைக் கண்டு கடுப்பில் இருக்கும் அவரது மனைவியும் தாக்குதலைத் தொடங்கியுள்ளாராம். இருமுனைத் தாக்குதலையும் சமாளித்து ஒரு நாளுக்கு 2 பதிவுகளைப் போட்டுத் தள்ளுகிறார் பதிவர். இவரால் மட்டும் எப்படித்தான் முடிகிறதோ... :P
சிங்கைப் பதிவர் சந்திப்பு குறித்துப் பதிவிட்ட பதிவர்களில் சிலருக்கு
"ஏண்டா **** * *** ***********,உன்னை மாதிரி *****
ஒண்ணா சேர்ந்து * தின்னறதுக்கு
பெயர் சந்திப்பாடா,**:( "
என ஒரு மனநோயாளியிடமிருந்து பின்னூட்டம் வந்திருக்கிறதாம். அந்த மனநோயாளியின் மனநோய் விரைவில் குணமடைய வாழ்த்துவோம்!!!

Labels:
அறுந்த வாலு,
சாமி,
நக்சலைட்,
பதிவர் வட்டம்,
மன நோயாளி
Monday, June 16, 2008
மங்களூர் சிவா & நிஜமா நல்லவனுக்கு ஒரு சவால்
உங்க ரெண்டு பேருக்கும் இப்படி ஒரு பின்னூட்டம் போட எப்படி மனசு வந்தது?
காலைல அலுவலகம் வந்ததும்,
இத்தனை வேலைகளுக்கு நடுவில் ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு பதிவாவது போட்டுவிடுகிறேன்.. இது எவ்வளவு பெரிய காரியம்??
ஒரு நாளில் எத்தனை ":)" எத்தனை பின்னூட்டம் .... எத்தனை பின்னூட்டத்துக்கு பதில் .. எவ்வளவு tension... எத்தனை சாட்டிங் ..... எத்தனை email..
ஒரு நாள்... ஒரே நாள் நீங்க என் இடத்துல இருந்து பாருங்க.. அப்பத் தெரியும் என் சிரமங்கள் எல்லாம்..
சவாலுக்கு வறீங்களா?? ஒரு நாள் என்னோட இடத்துல இருந்து என்னோட வேலையெல்லாம் செஞ்சு பாருங்க.... அப்பத் தெரியும் பதிவு போடுறது எவ்வளவு சிரமம்ன்னு...
கடைசியா ஒன்னு சொல்லிக்கிறேன்.
நான் ஒரு பதிவு போட்டா..... அது 100 பதிவு போட்ட மாதிரி!!!!
நிஜமா நல்லவன் said...நான் என்ன உங்களை மாதிரி வெட்டியா உக்காந்துட்டு இருக்கேன்னு நினைச்சீங்களா?
///ஜெகதீசன் said...
//பல பதிவர்கள் எழுத்துக்களில்தான் அனல் பறக்கும்//
சிவா... நீங்க என்னை சொல்லலியே... :P///
நீங்க தான் எழுதுறதே இல்லையே. அப்புறம் என்ன கேள்வி:)
மங்களூர் சிவா said...
/
ஜெகதீசன் said...
//பல பதிவர்கள் எழுத்துக்களில்தான் அனல் பறக்கும்//
சிவா... நீங்க என்னை சொல்லலியே... :P
/
நீங்கதான் எழுதறதே இல்லியே ஜெகதீசன் அதனால உங்க பதிவுல தூசிதான் பறக்குதாம் :))))
காலைல அலுவலகம் வந்ததும்,
முதல்ல தட்ஸ் தமிழ் படிக்கனும்..
அப்புறமா தினமலர் படிக்கனும்..
அடுத்து தமிழ்மணத்தைத் திறந்து ஒவ்வொரு பதிவா நாள் முழுதும் படிக்கனும்.
பல பதிவுகளுக்கு ":)" பின்னூட்டம போடனும்.
பல பதிவுகளில் பின்னூட்டங்களுக்கு "வழிமொழிகிறேன்" போடனும்.
சில பதிவுகளுக்கு இரண்டு அல்லது 3 சொற்களில் பின்னூட்டம் போடனும்.
சில பதிவுகளுக்கு மூன்றுக்கு மேற்பட்ட சொற்களில் 4 அல்லது 5 பின்னூட்டங்கள் போட்டு கும்மனும்.
வரும் forwarded mailகள் எல்லாம் படிக்கனும்.
கொஞ்சம் மொக்கை mailகளுக்கு அதை விட மொக்கையா பதில் அனுப்பனும்..
இதற்கிடையில் அலுவலகத்தில் கொஞ்சம் ஆணியும் பிடுங்க வேண்டும்.
இத்தனை வேலைகளுக்கு நடுவில் ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு பதிவாவது போட்டுவிடுகிறேன்.. இது எவ்வளவு பெரிய காரியம்??
ஒரு நாளில் எத்தனை ":)" எத்தனை பின்னூட்டம் .... எத்தனை பின்னூட்டத்துக்கு பதில் .. எவ்வளவு tension... எத்தனை சாட்டிங் ..... எத்தனை email..
ஒரு நாள்... ஒரே நாள் நீங்க என் இடத்துல இருந்து பாருங்க.. அப்பத் தெரியும் என் சிரமங்கள் எல்லாம்..
சவாலுக்கு வறீங்களா?? ஒரு நாள் என்னோட இடத்துல இருந்து என்னோட வேலையெல்லாம் செஞ்சு பாருங்க.... அப்பத் தெரியும் பதிவு போடுறது எவ்வளவு சிரமம்ன்னு...
கடைசியா ஒன்னு சொல்லிக்கிறேன்.
நான் ஒரு பதிவு போட்டா..... அது 100 பதிவு போட்ட மாதிரி!!!!
Labels:
சவால்,
சிவா,
நிஜமா நல்லவன்,
பதிவர் வட்டம்
Subscribe to:
Posts (Atom)